அந்தி என்னடி அந்தி..
முந்தி வந்து நெஞ்சில் நீ துஞ்ச..
ஆசுவாசமாய் இதழ்கள் கொஞ்ச..
அஹிம்சை போர் புரியுமடி வானும் வயிரெறிந்து..
செந்நிற சிவப்பில்..
❣️ கேடி
எனக்கவளை பிடிக்கும்!
ஏனோ நேற்று வரை சொன்னதில்லை!
காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை!
பிடித்தம் அவள் என்பதை காட்டிலும்..
அவள் பெயரே!
அழகான பெயர்!
புனைவுதான்!
ஆனால், அழகு!
இல்லை!
ரம்மியம்!
அவள் கெத்தானவள்!
துடுக்குத்தனம் கொண்டவள்!
அவ்வளவு நெருக்கமெல்லாம் ஒன்றுமில்லை!
இருந்தும்..
அவ்வப்போது...
எனை நெருங்கும் ஒவ்வொருத்தியும் ஏதோ ஒரு விதத்தில் காயம்பட்டே போகிறாள்கள்!
தவறென்று ஏதுமில்லை.
சரியென்றும் எதுவுமில்லை.
குற்ற உணர்ச்சி கொண்டு கலங்கி போவதெல்லாம் அவள்கள்தான்!
மொத்த பழியையும் ஏற்றுக் கொள்வது நான்தான்!
ஊரோடு ஒட்டாது தனித்திருப்பதும் இதனால்தான்!
கேடி எழுத ஆரம்பித்தால் நில்லா...
யாரடி நீ?
நீயாக வந்தாய்!
எதற்கோ வந்து, எதையோ பேசி, இப்படி ஆக்கி விட்டாயே!
எனக்கு உன்னை எவ்வளவு பிடித்திருக்கிறதென்று உனக்கு புரியவில்லையடி!
உன்னை சொல்லி குற்றமில்லை!
உனக்கு என்னை பற்றி எதுவும் தெரியாது!
ஆனால், என்னை அறிந்தோருக்கு தெரியும்!
ஏன், எனக்கே தெரியும்.
கணக்கில்லா ஆச்சரியமே...