- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
அத்தியாயம் நூற்றி பதினொன்று
“குஞ்சரி…”
என்ற ப்ரீதனின் அழைப்பில் திரும்பிடாதவளோ பால்கனி கதவோரம் சென்று நிறுத்தினாள் அவளின் வீல்சேரை.
பேபி சிட்டரோ கதவைச் சாத்திட குஞ்சரியோ பால்கனி திரைச்சீலையை ஓரந்தள்ளினாள்.
“ஸ்பைனல் கார்ட் இம்பிளான்ட் பண்ணிக்கோங்க.” என்றவன் சொல்ல மௌனியாக இருந்தவளின் விலோசனங்களோ கண்ணீரை வழியவிட ஆரம்பித்தன.
“பணம் ஒரு மேட்டரே இல்லன்னு எனக்குத் தெரியும். நீங்க வெளிநாடு போக முடியாட்டியும் டாக்டர்ஸை இங்க வர வைக்க முடியும். ஆனா, எல்லாத்துக்குமே நீங்க மனசு வைக்கணும்.”
என்ற ப்ரீதனின் வார்த்தைகளைக் கேட்டவளோ ஏதும் பேசாது குனிந்த தலையை நிமிர்த்திடாமலே இருந்தாள்.
“உங்களுக்காக நீங்க இதை பண்ணித்தான் ஆகணும். கீத்து எப்படியும் இன்னும் ஐஞ்சாறு வருஷத்துலே படிக்க போயிடுவா. எந்நேரமும் அவளே எதிர்பார்க்க முடியாது. அவளுக்கின்னு வாழ்க்கை இருக்கு. மத்த பிள்ளைங்க மாதிரி அவளும் ஓடியாடி விளையாடணும். அதுக்கு நீங்க மனசு வைக்கணும்.”
ப்ரீதன் வாக்கியத்தை நிறுத்த, எங்கிருந்தோ வந்த எவனோ ஒருவன் கீத்துவின் எதிர்காலத்தில் இவ்வளவு அக்கறைக்கொள்ள, தடைக்கல்லாய் நிற்கும் சுயநலமான குஞ்சரிக்கோ சுருக்கென்றது நெஞ்சம்.
“ஹாக்கி பிளேயராகறது ட்ரீம்னு சொன்னா, அதுக்கு தினமும் ஏறக்குறைய வாரத்துல மூனு டூ அஞ்சு நாள், பதினைஞ்சு டூ இருபது ஹவர்ஸ் ஹெவியா பிரக்டிஸ் பண்ணணும்.”
என்ற ப்ரீதனோ நெஞ்சுக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டேத் தொடர்ந்தான்.
“கை, கால், மெண்டல், ஹெல்த் ஸ்ட்ரென்த்ன்னு (strength) ஒவ்வொன்னுக்கும் தனி தனியா டைம் எடுத்து ட்ரெயினிங் பண்ணணும். வேர்ல்ட் லெவல்லே (world level) விளையாட கவனம் ஹாக்கிலே மட்டும்தான் இருக்கணும்...” என்றவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
“புஷ் பாஸ், பேக் பாஸ், பிளைண்ட் பாஸ், டபுள் சீம் பாஸ், ஃபிளாட் பாஸ், ஃபிலிப் பாஸ், ஹேண்ட் பாஸ், பாஸ் அண்ட் கோ, டூ லைன் பாஸ், ட்ரைவ்ஸ், ஸ்வீப்ஸ், ஃபுளோர் ஸ்லேப்பிங்.”
(Push pass, back pass, blind pass, double seam pass, flat pass, flip pass, hand pass, pass and go, twoline pass, drives, sweeps, floor slapping)
என்று அடுக்கிக் கொண்டே போனாள் குஞ்சரி அழுத்தமான குரலோடு வரிசையாய் ஹாக்கி விளையாட்டின் மிக முக்கியமான பொசிஷன்களின் பெயரை.
ப்ரீதனோ வியப்பாய் பார்த்தான் குஞ்சரியை.
“கண்ணு பார்க்க கை அடிக்கணும். தலே கீழே இறங்கவோ குனியவோ கூடாது. அடிக்கறே ஒவ்வொரு அடியும் வெறிப்புடுச்ச மாதிரி இருக்கணும். ஸ்டிக்லே (stick) க்ரிப் (grip) இருக்கணும். அதுக்கு அதுலே டேப் (tape) இருக்கணும். ஸ்டிக் (stick) புடிக்கறே ஸ்டைல் சொல்லணும் பெஸ்ட் யாருன்னு...!”
என்ற திருமதி ரீசனோ பால்கனி கண்ணாடியில் உள்ளங்கையைப் பதித்தாள், குஞ்சரியின் காதல் அவளை சிரித்த முகமாய் வெறிக்க.
“குஞ்சரி நீங்க ஹாக்கி பிளேயரா?” அசந்திருந்தவன் ஆச்சரியமாய் கேட்டான்.
“ரீசன்... என் ரீசன்... அவனுக்கு ரொம்ப பிடிக்... கும் ஹாக்கி." என்று விசும்பியவளோ மூக்குறுஞ்சி தொடர்ந்தாள்.
"அவுங்க அப்பாக்கு எப்போதுமே படிப்புதான், பாக்கெட் மணிலே ஸ்டிக் வாங்கி பிளே பண்ணுவான். வீட்டுலே தெரிஞ்சு அடி பிச்சு, ஸ்டிக் உடைச்சு ஆசையே போச்சு சொல்லுவான். ஆனா எப்போ கேட்டாலும் ஒன்னு விடாமே அழகா சொல்லுவான்.”
என்ற மங்கையோ கதறினாள் கண்ணாடிக் கதவிலிருந்த உள்ளங்கையில் தலைப் பதித்து.
ப்ரீதனுக்கோ அழுபவளை எப்படி சமாதானம் சொல்லி தேத்துவதென்றே தெரியவில்லை. வேடிக்கை மட்டும் பார்த்தான், ஒருகால் இப்படி அழுதாவது அவளின் சுமைகள் குறையட்டும் என்று.
“நான்கூட புரிஞ்சிக்காமே அவனே வோலி பால், போலிங் விளையாட சொன்னேனேத் தவிரே, அவனுக்கு பிடிச்சதே விளையாட சொல்லலே. ரொம்ப நல்லா விளையாடுவான்னு வெட்டிங்க்கு வந்த அவன் ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்க. அப்போக்கூட நான் அதை பெருசா கேர் (care) பண்ணிக்கலே.” என்றவளின் கண்ணீரோ நிற்காது கொட்ட,
“அழாதீங்க குஞ்சரி! ரீசனோட கனவு கீத்துவோட லட்சியம்! கண்டிப்பா கீத்து பெரியாளா வருவா! அவுங்க அப்பா இருந்து என்ன பண்ணுவாரோ, அதை சித்தப்பா நான் பண்ணுவேன். விசா உங்களுக்கு தங்கச்சியா இருந்தாலும் இல்லாட்டியும்...”
என்றவனோ எப்படியாவது சிறுமி கீத்துவின் கனவை நனவாக்குவதில் உறுதி கொண்டான்.
“சர்ஜரிக்கு நான் ரெடி!”
என்ற குஞ்சரியோ ஏறெடுத்து நோக்கினாள் பால்கனி கதவில் தெரிந்த ப்ரீதனின் முகத்தை.
“தேங்க் யூ.” என்றவனோ அறையிலிருந்து வெளியேற முனைய,
“என் ரீசன் போறதுக்கு முன்னாடி, அந்த நாள் என்கிட்ட சிரிச்சு பேசுன கடைசி நிமிஷத்துலே கேட்ட விஷயம் இது. அவனுக்காகத்தான்! அவனுக்காக மட்டுந்தான்!”
என்றவளோ குலுங்காமல் அலுங்காமல் அழுகைக் கொண்டாள் மரக்கட்டையாய்.
ப்ரீதனோ வந்த வழியே அறையிலிருந்து வெளியேறினான் ஏதும் போசாது உள்ளம் கனக்க.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்❤️
Author: KD
Article Title: அத்தியாயம்: 111
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம்: 111
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.