- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
அத்தியாயம் நூற்றி பனிரெண்டு
என்றைக்கு அம்மணி குஞ்சரி இடைக்கு கீழ் முற்றும் துறந்தவள் ஆனாளோ, அன்றுத்தொட்டே மன்றாடி வேண்டினான் ரீசன், கட்டியவளை முதுகுத்தண்டு ஆப்ரேஷன் செய்ய சொல்லிக் கேட்டு.
ஆனால், சண்டைக்காரியோ விசாவோடு கொண்ட சர்ச்சையில் முடியாதென்று அவனை அவளோடு இருத்திக் கொண்டாள்.
கோளாறு கொண்ட கோமகளின் மூளையோ குழப்பி விட்டது கோதையவளை எங்கே கை, கால் மீண்டும் பழையபடி நன்றாகி விட்டால், ரீசன் வதுகையவளைத் தனியே தவிக்கவிட்டு அவன் வேலையைப் பார்த்திட போயிடுவானோ என்று.
ஆகவே, ஆயிழையவளோ சீக்குப்பிடித்த சிந்தை சொல் கேட்டு பிடிவாதம் கொண்டாள் சர்ஜரி வேண்டாமென்று, ரீசன் பலமுறை கெஞ்சியும்.
ஒருக்கட்டத்தில் கணவனவன் அதிகமாய் பெண்ணவளை அறுவை சிகிச்சை செய்ய சொல்லி வற்புறுத்த, அதுவே அவன் அன்பைக் கேள்விக்குறியாக்கும் விபரீதமாகி போனது.
பிடிவாதத்தின் மறுபெயர் கொண்ட குஞ்சரியோ வாய் திறந்தே கேட்டுவிட்டாள் காதலித்து, கைப்பிடித்து, குழந்தைப் பெத்தவனிடத்தில், குறையான பொண்டாட்டிக்கு சேவகம் செய்ய கசக்குதோ என்று.
உடைந்து போனவன் எடுத்துரைக்க முனைய ஆவேசத்தில் மதியிழந்தவளோ, மலங்கொண்ட டையாப்பரை மாற்றவிடாது நாற்றமடித்து இருநாட்களுக்கு, வெட்டி வீராப்பிலான போராட்டம் கொண்டாள்.
புருஷனவனோ இனி எக்காரணத்தைக் கொண்டும் சர்ஜரி என்று வாய் திறவேன் குஞ்சரியே, என்று பொஞ்சாதியின் தலையில் அடித்து சத்தியம் செய்ய, மனமிறங்கிய மாயோளோ ரீசனைக் கட்டியணைத்து யுத்தத்தை முடித்துக்கொண்டாள் சிறியதொரு சிரிப்போடு.
கொஞ்சலும் மிஞ்சலும் அதிகமாய் ரீசனிடத்தில் வாசம் செய்ய, ஒரு கட்டத்தில் பொட்டி பாம்பாய் அவன் மகுடிக்கு அடங்கிப் போனாள், அந்திகையவள் கற்பழிப்பு சம்பவத்திற்குப் பிறகு.
அக்கொடூரத்திற்கு பிறகுகூட ஒருமுறை ரீசன் சர்ஜரி பற்றி வாய் திறக்க, வேண்டாமென்றவளோ அவனை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் இனி அவன்தான் அவளின் கால்களென்று.
துணைவியின் அவ்வார்த்தைகளில் இனி வாழப்போகும் மொத்த வாழ்க்கையும் அவளுக்கே என்றவன், கீத்துவை அவன் பெற்றோர்களின் பாதுகாப்பில் விட்டு, மதுக்கூடங்களை நம்பிக்கையான ஆட்களின் மேற்பார்வையில் விட்டு, இருபத்து நான்கு மணி நேரமும் வல்லபியோடே ஒட்டிக்கிடந்தான்.
கடைசியாய் வெளிநாடு சென்று செட்டிலாக நினைத்தவன் தலையில் குண்டு விழுந்தது, குஞ்சரியவள் இரண்டாவது முறையாக கொடூரமாய் பலாத்காரம் செய்யப்பட ஜனித்த சிசு மரித்துப் போக.
பாடையில் போனவன் சொர்க்கத்தில் மகனோடு ஜாலியாய் இருப்பான் என்ற எண்ணத்தில்தான், பூலோக நாட்களை நரகமாய் கழிக்கிறாள் குஞ்சரி. இல்லாது போனவன் ஒரேடியாய் போகாது ஜெராக்ஸ் காப்பியிலான கீத்துவை விட்டுப்போக வீட்டாளுக்கு துணையாய்.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்❤️
Author: KD
Article Title: அத்தியாயம்: 112
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம்: 112
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.