What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498

அத்தியாயம் நூற்றி பதிமூன்று


சுற்றி ஆட்கள் இருந்தும் ரீசனில்லா குஞ்சரி அனாதையே... தனிமையில் தன்னவனை நினைத்துப் பெண்ணவள் கடத்திய நாட்கள், எத்துணை ரணமானதென்று இருந்ததை தொலைத்தவர்களால் மட்டுமே உணர முடியும்.

கீத்து என்னதான் வாய் நிறைய சீனியர் என்றழைத்து சேவகம் செய்தாலும், கணவன் கொண்ட காதலும் கவனிப்பும் மகளிடத்தில் கண்டிட முடியா துரதிர்ஷ்டமே.

ரீசன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் கண் மூடிய இரவுகள் எல்லாம், இப்போது விறலியவளைத் தூங்கவிடாது மிரட்டியது.

திறந்திருக்கும் அறைக் கதவோரம் புருஷனின் வாசனை நுகர, கொண்ட நிம்மதி பெருமூச்செல்லாம் இன்றைக்கு விக்கித்து நிற்க, ஒவ்வொரு விடியலும் ஏன் உதிக்கிறதென்று யுவதியவள் மனம் அரும்பாடுபட்டது.

திரைச்சீலை விலக்கி கனலோன் கீற்றில் நேசமிகு வருடல்கள் கொண்ட கதகதப்பில், ரீசனின் இளமார்பில் இல்லாள் குஞ்சரி பதித்த பற்தடங்கள் அல்லா பொற்தடங்கள் எல்லாம், இன்றைக்கும் அன்றைக்கு போலவே பசலைக் கொண்டு காத்திருக்கப், பூத்தவளைப் பூஜிக்க ஆணவன் இங்கில்லை என்ற மெய்யோ தம்பதிகளின் அறையைக் கிலியாய் பிடித்துக்கொண்டது.

கத்திக் கதறி அழுதவளைத் தாயாய் மடியில் போட்டு தாலாட்டி உறங்க வைத்த ரீசன், இன்றில்லாது போக சோகம்கூட சுந்தரியவளை சூதானமாகவே சூழ்ந்து கொண்டது.

“ரீசன் எனக்கு ப்ராமிஸ் பண்ணு, நீ எனக்கு முன்னாடி செத்து போயிடே மாட்டன்னு! நீ மட்டும் இல்லன்னா நான் அனாதையாயிடுவேன்டா! ப்ளீஸ் ரீசன்! என்னே விட்டுட்டு போயிடாதே! நீ இல்லன்னா சத்தியமா நான் செத்...”

குஞ்சரி முடிக்கும் முன் அவளின் இதழ்கள் ரீசனின் அதரங்களோடு பின்னிப் பிணைய ஆரம்பித்திருந்தன, காரிகையின் கண்ணீர் இடையிடையே எச்சில் வறட்சிக்கு தோதாய் தண்ணீர் பாய்ச்ச.

“குஞ்சாய், நான் இருக்கறே வரைக்கும் உன்னை போகவிட மாட்டேன். என்னே விட்டாவது உன்னே புடிச்சிடுவேன், ஏன்னா நான் எப்போதுமே உனக்குள்ளத்தான்!”

என்றவனின் குரல் அன்றைக்கு சொன்ன வார்த்தைகளை இன்றைக்கும் இயமானியவள் காதுகளில் ஒலிக்க வைத்தது.

கண்ணீர் வழிந்திறங்க ஆள் உயரக் கண்ணாடி கொண்ட ட்ரஸிங் டேபிளில் இருக்கர உள்ளங்கைகளையும் அழுத்தமாய் பதித்து, நின்றிருந்த குஞ்சரி கண்கள் திறந்தாள்.

வீல்சேர் இல்லை, கைத்தடி இல்லை. ஏன் துணைக்குகூட பக்கத்தில் யாருமில்லை. தனியாளாய் தன்னிச்சையாக நின்றிருந்தாள் ரீசனின் குஞ்சரியவள்.

சொன்னவன் சொன்னதைப் போலவே அவன் உயிர் துறந்து குஞ்சரிக்குள் இரண்டறக் கலந்துவிட்டான்.

அணிந்திருந்த முழுநீள கருப்பு லாங் ஸ்லீவின் கையை சுயமாக மடித்துவிட்ட குஞ்சரியின் நெற்றியில் பொட்டிருந்தது. ஆனால், முகத்திலோ பொலிவில்லை.

தனிமைப் பிடியில் சிக்கியவள் கடந்த ஒரு வருடத்தில், மற்றவர்களோடு பேசிய வார்த்தைகளின் ஆக மொத்த எண்ணிக்கையே வெறும் நூறு, இருநூறாகத்தான் இருக்கும். தலையாட்டல்களே குஞ்சரியின் பாஷையாகி போனது.

முதுகெலும்பு ஆப்ரேஷனுக்கு பெண்டு அவள் ஓகே சொல்ல, ஒரே வாரத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செவ்வென செய்தான் வீர்.

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வெறும் ஒரு மணி நேரத்துக்குள் செய்து முடிக்கப்படும் ஸ்பைனல் கார்ட் இம்பிளாண்ட் சர்ஜரி பற்றி குஞ்சரியவளிடத்தில் சின்னதாய் விளக்க, காதில் விழுந்தவரின் வார்த்தைகள் ஏனோ மானினியின் மண்டையில் ஏறவில்லை.

பீதியிலான பயமொன்று அரிவையவளைத் தொத்திக் கொண்டது. கீத்துவை சுமந்திருந்த சமயத்திலேயே பலமுறை பிரசவ நேரத்தில் செத்திடுவேனா, என்று கேட்டு ரீசனைப் படுத்தி எடுத்த விருந்தனையவள், இப்போது அவனின்றி சர்ஜரி அறையில் தனியே இருக்க, விவரிக்க முடியா நடுக்கமும் கலக்கமும் கொண்டு கதிகலங்கிப் போயிருந்தாள்.

வீராப்பாய் அன்றைக்கு சர்ஜரிக்கு ஓகே சொன்னவள்தான், இருந்தும் அவளறியா ஞொளுக்கு காரணம் காரிகையின் பக்கத்தில் ரீசனில்லை, அதுவொன்றே குறைச்சல்.

பொத்துக்கொண்டு வந்த கண்ணீரை ஆர்ப்பரிக்க விடாது தலையைக் குனித்துக் கொண்டவளின் மனமோ, செத்தவனை நிந்தித்தது.

ஒருமுறையேனும் வந்திடமாட்டானா? வந்தவளைக் கையிலேந்தி அங்கிருந்து ஓடிடமாட்டானா என்று கிடந்து தவித்தது.

குஞ்சரியை மீறி விழிகள் நீரைக் கொட்டின இனம் புரியா அச்சத்தில், மருத்துவரோ அவளைச் சாந்தமாகிட சொல்லிக் கேட்டார், இல்லையேல் சர்ஜரியை சரிவர நிகழ்த்திட முடியாதென்ற தகவலோடு.

மல்லாக்க கிடந்த பேஷண்ட் குஞ்சரியோ தலையணையில் ஒருக்களித்து சாய்ந்து ஒப்பாரிக் கொண்டாள்.

“சீனியர்!” என்ற குரலில் பட்டென தலை தூக்கியவள், முன்னோ கீத்து நின்றிருந்தாள்.

“நான் இருக்கேன் சீனியர்! பயப்படாமே சர்ஜரி பண்ணிக்கோங்க.” என்றவளோ ஓடோடி வந்து அம்மா குஞ்சரி படுத்திருந்த கட்டிலின் மீதேறி அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள் மண்டியிட்டபடி.

“எனக்கு பயமா இருக்கு, வேண்டாம்...” என்றவளின் முகத்தை ரீசனைப் போலவே கைகளில் தாங்கிய கீத்துவோ,

“என்ன சீனியர் நீங்க? இதுக்கெல்லாம் யாராவது போய் பயப்படுவாங்களா? சொடக்கு போடறே நேரத்துலே ஆப்ரேஷன் முடிஞ்சிடும், அப்பறம் கொஞ்ச நாள்லே என் சீனியர் எல்லார் மாறியும் நடக்கலாம், ஓடலாம், ஆடலாம்...”

மகளோ தாயின் கண்ணீரை அவளின் பட்டுவிரல்களால் துடைத்து சமாதானம் சொல்ல,

“இல்லே வேண்டாம், நான் இப்படியே இருந்திடறேன். எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம், நிறுத்த சொல்லு ரீசன். நிறுத்த சொல்லு...”

என்ற குஞ்சரியோ மிழிகள் முன் ரீசனைக் கண்டதாகவே உணர்ந்தாள் ஊரைக் கூட்டும் அழுகையில் தலைகுனிந்தாற்படி.

இருப்பினும், அதே அறையிலிருந்த தாதியர்கள் யாரும் எதையும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் குஞ்சரியின் மெடிக்கல் சரித்திரம் அவர்கள் அறிந்ததே.

ரீசனின் ஊடையவள் ஏற்கனவே மேல்மாடியில் கொஞ்சம் பிரச்சனை கொண்ட கிராக்கி என்றறிந்ததால், அவளை சமாதானம் செய்து ஆப்ரேஷனுக்கு உட்படுத்துவது கஷ்டம் என்றால், நோ அதர் சாய்ஸ். தென் அனஸ்தீசியாதான் என்ற நிலைக்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

“வேண்டாம்! எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம்! வேண்டாம் ரீசன்!”

என்றவளோ தலையைப் பைத்தியக்காரியைப் போல் ஆட்டி அழிச்சாட்டியம் செய்ய,

“ப்ளீஸ் சீனியர் அழாதீங்க சீனியர்! ஆப்ரேஷன் பண்ணிக்கோங்க சீனியர். பிளீஸ்...”

என்ற கீத்துவோ கதறிய தாயவள் தலையைப் பலங்கொண்டு அழுத்தமாய் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள்.

சுருக்கென்றொரு வலி உடலுக்குள் ஊடுருவி வஞ்சியவள் கண்கள் சோபை போக,

“நான் இருக்கேன் குஞ்சரி! ரீசன் நான் இருக்கேன்! இருப்பேன்...”

என்றவள் காதுகளில் கேட்டது மகளுருவில் ரீசனின் குரலோடு சேர்ந்த இதயத்துடிப்பொன்று.

மயக்கம் விலோசனங்களை எட்டிப்பார்க்க மெதுவாய் பின்னோக்கிய, குஞ்சரியின் நெற்றியில் இதழ் பதித்தாள் கீத்து.

“ஐ லவ் யூ மம்மி!”

என்றவள் அவள் கன்னங்களை நனைத்த கண்ணீரை கைகளால் துடைத்துக்கொண்டு தலையை இல்லையென்றாட்டி,

“சீனியர்!” என்றுச் சொல்லி தாயின் விரல் பிடிகளை முழுதாய் விட்டாள்.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்❤️
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 113
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top