What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498

அத்தியாயம் நூற்றி பதினான்கு


நீ என்பதே நான்தானடி

நான் என்பதே நாம் தானடி

ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி பாா்த்துக்

கொண்டே பிாிந்திருந்தோம்

சோ்த்து வைக்க காத்திருந்தோம்...

பாடல் வெளியிலிருந்து கேட்டது. பால்கனி விளிம்பினை வெறும் ஒருகையால் பற்றியபடி இயற்கைக்கு புறமுதுகு காண்பித்து நின்றிருந்தாள் குஞ்சரி.

ரீசனுக்கு மிக பிடித்த பாடல், ஏன் வரிகள்கூட... உதடுகள் துடிக்க உயிர் கொண்டிருந்த கோமகளின் கால்களோ அங்கிருந்து ஓடிட பார்த்தது. எங்கிருந்தோ வந்த இன்னிசை நுண்ணிடையாளின் மனதைக் குத்திக் கிழித்தது.

பரிதவிப்பின் வெளிப்பாட்டில் வெறும் வேதனையை மட்டுமே சுமக்க தகுதிக்கொண்ட யுவதியோ ரீசனுக்கு இழைத்த துரோகத்தையும், அவனோடு போய் சேர முடியாது கடவுள் அவளை நிர்கதியாய் நிற்க வைத்த நிராகரிப்பையும் ஏற்க முடியாது, அனுதினமும் அழுது செத்தாள் கண்ணீரெல்லாம் வற்றிபோக.

ரீசன் இறந்து போவதற்கு முந்தைய ஆண்டு போய் சேர்ந்த சுந்தரியவள், அப்பா தொடங்கி தெரிவையின் சொந்தங்கள் அனைவருக்கும் பிடிக்கா முகமாய் அமைந்த தீனரீசன் என்ற ஒருத்தனின் வதனமே, வசந்தம் வீசிட வைத்தது வஞ்சியவளின் நெஞ்சுக்குள்.

விசனப்பட்டது விறலியவளின் மனது ஏன் அன்றைய சாவு அவளுக்கு வரவில்லையென்று.

தவறுகள் பல இழைத்து பாவங்கள் கணக்கின்றி புரிந்து சிறு பிஞ்சென்றும் பாராது அதன் உயிரெடுத்து, கூடவே வாழவேண்டிய ஜோடிகளை கொன்று பேரன், பேத்தி பார்க்க காத்திருந்த தம்பதிகள் மானத்தை வாங்கி, இப்படி ஒட்டு மொத்தமாய் சொல்லிலடங்கா காரியங்களைச் செய்தவள், அவளின்பால் நிகழ்ந்த அத்துமீறல்களைக் கர்மவினையாக ஏற்றுக்கொண்டாள்.

ஆனால், காதல் கணவன் ரீசனின் இழப்பை மட்டும் மங்கையவளால் ஜீரணிக்க முடியவில்லை ஓராண்டுகள் கடந்த பின்னும்.

உள்ளங்கையில் விரல் நகங்கள் குத்திட அழுத்தம் கொண்டவளின் பிடியோ, மொத்தமாய் அதைவிட்டு சென்று முகம் புதைத்துக் கொண்டது அறைக்குள்ளிருந்த பால்கனி கதவில்.

குலுங்கினாள் குஞ்சரி! கதறினாள் ரீசனின் பத்தினி!

இரண்டும் கை கோா்த்து

சோ்ந்தது இடையில் பொய்பூட்டு

போனது

வாசல் தள்ளாடுதே

திண்டாடுதே கொண்டாடுதே...

மறுபடியும் வரிகளில் மரித்த பிணமாய் பாவையவள் நெஞ்சைக் கண்ணீர் நனைக்க,

“எவ்ளோ அழுதாலும் எவ்ளோ கதறினாலும் நீ வர போறதில்லே... நானும் நிறுத்த போறதில்லே... ஏன்னா எனக்குள்ளே மட்டும் நீ இல்லே ரீசன், உனக்குள்ளத்தான் நானும்! நீ போனே அன்னைக்கே நானும் போயிட்டேன்டா ஜூனியர்! செத்தப்பிணம் எனக்கு எதுக்கு அலங்காரம்? அகங்காரம்?” என்றவளோ பால்கனி கதவில் முதுகொட்டி தரையில் சரிய,

“பாரமான சந்தோஷம் நீ!” என்ற ரீசனின் குரல் கேட்டது விசும்பலில் விம்மிக் கொண்டிருந்த நாயகியின் காதுகளில்.

அடிக்கடி சொல்லிடுவான் ரீசன் கற்பழிப்புக்கு பின்னாடியான நாட்களில், பொங்கிபோடும் புருஷனுக்கு தேவையற்ற சுமையவள் என்று பொஞ்சாதியவள் கதறிடும் பொழுதுகளிலெல்லாம்.

“ஆமா, உனக்கு மட்டும்தான் நான் சந்தோஷம்! மத்தவங்களுக்கெல்லாம் வெறும் பாரம்தான்! அதான் நீ கேட்டே மாதிரி ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டேன் ரீசன்! என்ன லேட்டா பண்ணிக்கிட்டேன் பார்க்க நீயில்லே...”

என்றவளோ கணவனின் டவலை எடுத்து முகத்தில் ஒற்றிக்கொண்டு, அவன் வாசத்தில் விழிகள் மூடி மௌனக்கதறல் கொண்டாள்.

“ஒருவேளை நீ சொல்லும்போதே பண்ணிருந்தா அன்னைக்கு உன்னே போக விட்டிருக்கே மாட்டேன்லே... சாரிடா ரீசன்! நீ சொன்ன எதையுமே நான் கேட்கலடா... அதான் என்னே விட்டுட்டு போயிட்டியா? கோபமா என் மேலே? இதுக்கு நீ என்னே டிவோர்ஸ்சே பண்ணிருக்கலாமேடா! உயிரோடையாவது இருந்திருப்பல்லே...”

என்றவளோ முகத்தை நீரடித்துக் கழுவி குளியலறைக் கண்ணாடியில் சோககீதம் கொண்டாள்.

“நீ எப்போதுமே சொல்லுவே ரீசன், மெத்தையிலே எப்படி ரொம்ப இன்னசண்ட் கேர்ள் மாதிரி இருப்பேனோ, அப்படி என்ன பார்க்கணும் நார்மல் டேஸ்லன்னு. இப்போ நான் அப்படித்தான்டா இருக்கேன்.”

என்றவளோ கண்ணாடிக்கு முதுகை காண்பித்து வாஷ் பேஷனின் விளிம்புகளை விரல்களால் அழுத்திப் பற்றி கதறினாள், மூக்கு சளியெல்லாம் உதட்டில் இறங்க சட்டை கொண்ட நெஞ்செல்லாம் ஈரத்தில் குளித்திருக்க.

“வாடா ரீசன்! வா! வாடா ஜூனியர்! வந்து உன் குஞ்சரியே பாரு! குனிஞ்ச தலை நிமிராமே, எக்ஸ்ட்ரா ஒரு வார்த்தை பேசாமே, சிரிக்க மறந்து கொடுக்கறதே வீணாக்காமே சாப்பிட்டு, அடுத்தவங்களே நோகடிக்காமே, எரிஞ்சி விழாமே, தப்பா பேசாமே, பிடிவாதம் பிடிக்காமே, அதிகாரம் பண்ணாமே, ஆணவம் இல்லாமே, முழுசா உன்னோட குஞ்சாயா நிக்கிறேன்டா தீனரீசா! வாடா! வா! வந்து என்ன இழுத்தணைச்சு மூச்சு முட்ட முட்ட முத்தங்கொடுடா.”

என்றவளோ வாஷ்பேஷனை இறுக்கிப் பிடித்தாற்படியே பளிங்கு தரையில் பிட்டம் பதித்தாள்.

“உன்னே கொஞ்சணும், பேச விட்டு பார்க்கணும், நீ ஹாக்கி விளையாட கைத்தட்டி ரசிக்கணும், தூங்கும்போது உன் தலை கோதணும், காதைக் கடிச்சு சிரிக்கணும், கால் விரல்லே சொடக்கெடுக்கணும், நீ போதும் போதும்னு சொல்றே அளவுக்கு உனக்கு சமைச்சு போடணும், உன்னே அப்படியே அள்ள குறையாமே கட்டிக்கணும், உன் நெஞ்சுலே சாஞ்சு என் வலி போக அழணும், தோள் தொட்டு கண் பார்க்கணும்,

பார்த்துக்கிட்டே இருக்கணும், சிரிச்சா விழறே குழியிலே தொலையணும், வெட்டி போடறே நகமெல்லாம் சேர்க்கணும், கிட்சன்லே ரெயின்போ பார்க்கணும், விசிலடிக்க ஓடி வரணும், உன் நெருக்கத்துலே நொறுங்கணும், லாக் பண்னே வாஷ்ரூம்லே லிப் லாக் பண்ணணும்.”

என்றவளோ தலையில் அடித்துக் கொண்டு கதறி தொடர்ந்தாள் நிறைவேறா ஆசைகளைக் குமுறியபடி.

“ஐயோ! ஐயோ! ஐயோ! எப்படியெல்லாம் வாழ இப்போ தோணுது! ஆனா என் ரீசன் நீயில்லையே என் பக்கத்துலே! நானே உன்னே கொன்னுட்டேனே! பொண்டாட்டி என் பாவம் அத்தனையும் உன் உசுரே எடுத்திருச்சே! நீ போய் நான் இருக்கத்தான் அன்னைக்கே சாக போனே என்னே பொழைக்க வெச்சு செத்து செத்து வாழுன்னு கடவுள் என் தலையிலே எழுதிட்டாரா?”

என்ற குஞ்சரியோ வீங்கிய முகத்தோடு சிவந்த விழிப்படலங்கள் மூடிட, சர்ஜரியினால் ஏற்பட்ட ஒற்றைத் தலைவலி தாளாது வாஷ் பேஷனுக்கு கீழேயே மயங்கி விழுந்தாள்.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்❤️
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 114
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top