What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498

அத்தியாயம் நூற்றி பதினைந்து


காரை பங்களாவின் வாசலில் பார்க் செய்து கீழிறங்கினாள் குஞ்சரி.

கண நிமிட யோசனையில் நீண்டதொரு பெருமூச்சுக் கொண்டவள், முஷ்டி கரங்களை அழுத்தமாய் இறுக்கி ஆர்ப்பரித்த கண்ணீரைக் கண்டுக்காது தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள்.

ஒரு வருடம் பட்டாம்பூச்சியாய் பறந்து விட்டிருந்தது குஞ்சரிக்கு சர்ஜரி நடந்து.

அழுது ஆர்ப்பாட்டம் செய்த குஞ்சரிக்கு மயக்க ஊசியைப் போட்டு நியூரோசர்ஜன் ஒன் ஹவரில் வேலையை முடித்திருந்தார்.

குஞ்சரியின் முதுகெலும்பு தண்டுவடத்திற்கும் அதன் சவ்வு பகுதிக்குமான இடையில் (vertebrae spinal cord epidural) வயர்லசிலான பதினாறு மின்முனை (wireless 16 electrode) கம்பிகள் பொருத்தப்பட்டன. இதை மெடிக்கல் பாஷையில் ஸ்பைனல் கார்ட் ஸ்டிமுலேஷன் (spinal cord stimulation) என்றழைப்பர்.

பெரும்பாலும் இப்படியான ஆப்ரேஷன்களை வலி நிவாரணம் பொருட்டு நோயாளிகள் செய்துக்கொள்வர். அதாவது தீராத முதுகுவலி, இதய வலி, நரம்பு வலி, புற்றுநோய் தொடர்பான வலி மற்றும் உள்ளுறுப்பு வயிற்று வலி கொண்டவர்கள் ஆவர்.

ஆயிழையவளின் பின்புட்டத்தின் தோலுக்கு அடியிலோ ரீசார்ஜபிள் பல்ஸ் ஜெனரேட்டர் (rechargeable pulse generator) பொருத்தப்பட்டது. ஜெனரேட்டரானது அதன் உள்ளேயே பேட்டரியைக் (battery) கொண்டிருக்கும். இதை பேஸ்மேக்கர் (pacemaker) என்று பொதுவாக குறிப்பிடுவதும் உண்டு.

மின்முனையின் மின்னோட்டங்களைத் தண்டுவடத்திலிருந்து கடத்தி வயர்லஸ் முறையில் பல்ஸ் ஜெனரேட்டர் மூலம், கடமையை ஆற்றுவதுதான் இவைகளின் தலையாய கடமையாகும்.

மின் தூண்டுதல்களை ஸ்பைனல் கார்ட்டுக்கு (spinal cord) அனுப்புவதன் மூலம் வலி சமிக்ஞைகள் மூளையை எட்டும்முன், சம்பந்தப்பட்ட நோயாளியின் வலியினைக் குறைக்கவோ அல்லது அதில் மாற்றங்களையோ பல்ஸ் ஜெனரேட்டர் ஏற்படுத்திடும்.

இவ்வகையான ஜெனரேட்டர்கள் ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்டவைகளாகும். இவைகளை ஏறக்குறைய ஏழு தொடங்கி பத்து ஆண்டுகள் வரை உபயோகப்படுத்திடலாம்.

எப்படி அலைபேசியை சார்ஜ் செய்வோமோ அதே மெத்தட்தான் (method) பல்ஸ் ஜெனரேட்டருக்கும்.

சார்ஜர் (charger) அதற்கான போர்ட் (port), சார்ஜிங் பிளக் (charging plug) மற்றும் ரிமோட் கன்ட்ரோல் (remote control) என்று, ஒரு செட்டாகவே குஞ்சரிக்கு அனைத்தும் மருத்துவமனையிலேக் கொடுக்கப்பட்டன.

அது மட்டுமல்லாது சார்ஜிங் பெல்ட் (charging belt) ஒன்றும் கொடுக்கப்பட்டது. அதுவும் குஞ்சரியின் இடைக்கு ஏத்த அளவில். அட்ஜஸ்ட் (adjust) செய்துக் கொள்ளும்படியான துணியிலான பெல்ட்தான் அது.

சார்ஜரை அதற்கான கவருக்குள் அமர்த்தி சார்ஜிங் செய்திட வேண்டும். பச்சை நிறமென்றால் ஃபுல் சார்ஜிங் கம்ப்ளீட் (full charging complete) என்றும் மஞ்சள் கலந்த வெளிர் பழுப்பு நிறமென்றால் குறைவான சார்ஜிங்கில் உள்ளதென்றும் அர்த்தமாகும்.

சார்ஜரோ முழு சார்ஜ் ஏறி முடிக்க அதிலிருக்கும் பவர் பொத்தானை (power button) அழுத்த மறுபடியும் பச்சை நிறத்தையேக் காண்பித்திடும். அதன் பின்னர் சார்ஜரானது பீப் (beep) என்ற ஓசையை எழுப்பும் அதன் ஸ்டிமுலேட்டரை தேடி.

பீப் சவுண்டானது சார்ஜர் கொண்ட பெல்ட்டை இடையில் அணிவித்து பேட்டரி இருக்கின்ற இடத்தினில் சரியாக இருத்திட அடங்கிப் போகும். ஒருகால் அது சரியான நிலையில் இல்லையென்றால் பீப் சத்தமானது எழும்பும்.

சார்ஜிங் பேட்டரி குறைவாக இருக்கும் பட்சத்தில் பீப் சத்தம் மெதுவாய் கேட்கும். இது பெல்ட் எந்த நிலையில் இருந்தாலுமே சரி.

ஸ்டிமுலேட்டரானது (stimulator) முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் பீப் ஓசையானது இருமுறை அறுபது வினாடிகளுக்கு இடைவிடாது கேட்கும். அதே வேளையில் சார்ஜர் லைட்கூட அணைந்து போகும்.

இடை பெல்ட்டிலோ பவுச் பேக் (pouch bag) போன்றதொரு சிறிய இடமொன்று இருக்கும். அதில்தான் சார்ஜரை வைத்திட வேண்டும். அதுவும் சார்ஜரின் பச்சை ஒளியானதை வெளிப்பக்கமாய் பார்க்கும்படிதான் வைத்திட வேண்டும்.

இதை சுலபமாக்குவதற்குத்தான் பவுச் பேக் போலான இடத்தினை, வலை போல் துளைகள் கொண்டு டிசைன் செய்திருகின்றனர் டிவைய்ஸ் (device) விநியோகிஸ்தர்கள்.

முழுமையான சார்ஜிங்கிற்கு பின்னாடி பெல்ட்டிலிருந்து சார்ஜரை பிரித்தெடுத்து அதை ஆஃப் செய்ய வேண்டும். பிறகு மீண்டும் அதை அதன் கவரிலேயே போட்டு வைத்திட வேண்டும். தப்பி தவறிக்கூட தண்ணீர் மற்றும் சூடான இடங்களில் சார்ஜரை வைக்கக்கூடாது.

ரிமோட் கண்ட்ரோலை கொண்டு பேட்டரியின் நிலையை அறிந்து கொள்ளலாம். இருந்தும் அதை சார்ஜிங் நேரத்தில் தெரிந்துக் கொள்ள முடியாது. ஆகவே பெல்ட்டை இடை நீக்கம் செய்த பிறகே, பேட்டரி லெவலை (battery level) அறிந்து கொள்ள முடியும்.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்❤️
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 115
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top