- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
அத்தியாயம் நூற்றி இருபத்தி ஒன்று
தீனரீசனின் உயிர் போனதோடு சரி. கீரனை தவிர வேறு யாரும் சம்பவம் நடந்த பங்களா பக்கம் வருவதில்லை.
ஆன்ட்டி ஹீரோ கூட கேஸ் விசாரணையில் இருக்கும் பொழுதில்தான் இங்கு வந்து போனானே தவிர அதற்கு பிறகு அவனின் சுவடுகளும் நண்பன் மரித்த பெரிய இடத்தை எட்டி பார்த்திடவில்லை.
யாரும் இல்லாதவனை நிந்தித்து நொந்த மனதை மேலும் காயமாக்கி கொள்ள விரும்பவில்லை. அதுவும் கீரனுக்கு சொல்லவே வேண்டாம் நெருங்கிய தோழனையல்லவா எமனிடத்தில் கொடுத்திருக்கிறான். வலிக்காதா பின்னே.
ஆனால், யாரும் அறிந்திடாமல் இவ்விடத்திற்கு வரும் ஒரே ஒரு ஜீவன் கீத்து ஒருத்தியே. அவ்வவ்போது பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் ஒரு எட்டு இம்மாளிகையின் முன் நெஞ்சுக்கு குறுக்கே கைகளை காட்டியப்படி நின்று வெறித்திடுவாள் லேடி ரீசனவள் சிறுமியின் செல்ல டேடியின் உயிரை காவு வாங்கிய வீட்டை.
நிமிடங்கள் கடக்க இமைக்காது வெறிக்கொண்டு நோக்குபவள் அப்பெரிய பங்களாவை பார்வைகளால் கொன்று புதைத்து மீண்டும் வீடு திரும்பிடுவாள் அடங்காத வஞ்சம் கொண்டு.
அழுத்தமாய் மூடியிருந்த அம்பகங்களை திறந்த குஞ்சரியோ நிதானம் கொண்டு அடிகளை வைத்தாள் போலீஸ் டேப் கொண்டு சூழப்பட்ட படிக்கட்டுகளை.
இனம் புரியா சிலிர்ப்பொன்று சுந்தரியவள் மேனி கொள்ள பட்டு விரல்களால் போலீஸ் டேப்பில் கை வைக்க முன்னேறிய அருணியின் விழிகளோ மெதுவாய் கலங்கிட ஆரம்பித்தது.
அன்றைக்கு இதே படிக்கட்டில் ரீசனின் கையில் தேவகுஞ்சரி கனக்கா சுமையாய் தவழ்ந்திருக்க,
''ரீசன்.. குஞ்சரிக்கு.. குட்டி ரீசன் வேணும்..''
என்ற மணவாட்டியோ கணவனின் தோளில் கரங்களை வளைத்திருக்கியப்படி ரகசிய தொனி கொள்ள,
''சீனியர் கேட்டு ஜூனியர் நோ சொல்வேனா..''
என்றவனோ நாணி சிவந்து நயனங்கள் மூடி ஆணவனின் நெஞ்சுக்குள் முகம் ஒளித்தவளை மேலும் இறுக்கினான் இதழ்களில் வெட்க சிரிப்பொன்று இழைந்தோட.
மூன்று வருடங்களுக்கு பிறகு இம்மாளிகைக்கு அன்றைக்கு வந்த தம்பதிகளின் நிறைவேறாத பேச்சு இப்போதும் மலர்ச்சி குறையாது கேட்டது அளகவளின் செவிகளில்.
விரல்கள் கிடுகிடுக்க கண்ணீர் பொலபொலக்க அபலையவளோ தடுமாறிக் கொண்டிருக்க உருவமில்லா உணர்வொன்று தயங்கி நின்றவளின் கரத்தை நம்பிக்கையோடு பற்றி கூட்டிப் போனது ரீசனின் குஞ்சரியை ஆளானவன் உயிர் விட்ட மனைக்குள்.
வரவேற்பறையை கடந்து மெது மெதுவாய் அடிகளை மாடிப்படி நோக்கி வைத்தாள் குஞ்சரி.
ரெண்டு படியை கூட முழுதாய் ஏறிடவில்லை உடைந்து கதறியது காந்தாரியின் மனது.
அன்றைக்கும் இப்படித்தான் குஞ்சரி விரும்பி கேட்க தூக்கி வந்தவளை படிக்கட்டினில் அமர்த்தி அவள் கைவிரல்களை மென்மையாய் பற்றியவனின் கன்னங்களை கிறக்கமாய் வருடி,
''ஏன்டா ஜூனியர் என்னே இவ்ளோ லவ் பண்றே..''
''லேடி பீஸ்ட்டே அன்பாலே அடக்கி ஆழ ஒரு பிக் போஸ் வேணாவா சீனியர்..''
என்றவனின் முகிழ்நகையில் இருவரின் மூச்சும் ஒன்றென கலக்க கணவனவன் இதழோடு அவளிதழ் ஒத்தினாள் குஞ்சரி.
பழசெல்லாம் இன்னும் பத்திரமாய் மனசுக்குள் உயிர் கொண்டிருக்க இல்லாதவனின் அழுத்தமான முத்தியை கண்ணீர் பட்டு ஈரமாகிக் கிடந்த அதரங்களில் உணர்ந்தாள் குஞ்சரி இன்றைக்கும் அவனில்லாத பசலையில்.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...

Author: KD
Article Title: அத்தியாயம்: 121
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.