- Joined
- Jul 10, 2024
- Messages
- 509
அத்தியாயம் நூற்றி இருபத்தி ஆறு
பங்களா பளபளவென்றிருந்தது.
குஞ்சரி சொல்ல ரீசன்தான் ஆன்ட்டி ஹீரோ கீரனின் மூலம் ஆட்களை வரவழைத்து சுத்தம் செய்திருந்தான்.
தம்பதிகள் இருவரும் பூஜை அறையில் வீற்றியிருந்தனர். கீரனுக்கு பெரிய சிலைதான் வைக்க வேண்டும் அப்பெரிய மாளிகையை நண்பனுக்காக பக்கவாய் ரெடி செய்து கொடுத்ததற்கு.
குஞ்சரி குளித்து கல்யாண புடவை கட்டியிருந்தாள். கணவனவன்தான் பொஞ்சாதியவளை குளிப்பாட்டி மணவாட்டி அவள் கேட்க அவர்களின் திருமண புடவையை அணிவித்து விட்டிருந்தான்.
அவனுமே ஜம்மென்றுதான் இருந்தான் பட்டு வேஷ்டி சட்டையில். முழங்கை வரை மடக்கி விட்டிருந்த கையால் குஞ்சரியின் முன் மண்டியிட்டப்படி அமர்ந்திருந்தவனோ குங்குமத்தை அவளின் தாலியில் வைத்து முகிழ்நகை கொண்டான்.
''போலாமா ஜூனியர் பெட்ரூம்க்கு..''
என்றவள் அடக்கிய சிரிப்போடு கேட்க,
''ஆஹ் ஹான்.. முதல்லே படியிலே ஏத்தினே போதையே இன்னும் இறங்கலையே சீனியர்!''
என்றவனோ நக்கல் குறையாது மணவாளியவளை மேல் தளத்திற்கு கையிலேந்தி போனான்.
''நாளைக்கு லிப்ட் செய்யறவங்களே வர சொல்லிடறேன் சீனியர்.. டிசைன்ஸ் பார்த்திடலாம் சரியா..''
என்றவனோ துணைவியவளை மஞ்சத்தில் இறக்கி விட்டு ஓடோடி போய் கீழ் தளத்திலிருந்து எடுத்து வந்தான் குஞ்சரியின் நவீன வீல் சேரை.
''அதை அப்பறம் பார்த்துக்கலாம்.. இங்க வா..''
என்ற குஞ்சரியோ பிடித்திழுத்தாள் மானினியவளின் வீல் சேரை செட் செய்து கொண்டிருந்த கணவனின் கையை.
''தோ முடிஞ்சது.. அவ்ளோதான்..''
என்றவனோ பஞ்சணையில் அமர,
''சீனியர் என்ன கொஞ்சம் உன் மடி மேலே தூக்கி உட்கார வைக்கிறியா..''
என்றவள் கேட்க,
''ஓகேவா.. கம்ஃபர்ட்டா இருக்கா..''
என்றவனோ இல்லாள் அவளின் இடையை வளைத்துக் கொண்டான் கச்சிதமாய் அவனுக்கு வசதியாய்.
''ரீசன்.. நீ மட்டும் இல்லன்னா நான் எப்பவோ போய் சேர்ந்திருப்பேன்டா..''
என்றவளோ மெதுவாய் வருடினாள் ரீசனின் முன் கேசத்தை விரல்களால்.
''தெரிஞ்சோ தெரியாமலோ பல தப்பு பண்ணிட்டேன்.. நிறைய பேர் உயிர் போக நான் காரணமாகிட்டேன்.. அதுக்கெல்லாம் மொத்தமா சேர்த்துதான் கடவுள் எனக்கு தண்டனை கொடுத்திட்டாரு..''
என்றவள் நயனங்கள் மூடி ரீசனின் நிடலத்தோடு அவள் நெற்றி ஒட்டிக்கொள்ள,
''சீனியர்.. நாமே இதப்பத்தி பேச மாட்டோம்னு ஏற்கனவே பேசியாச்சு..''
என்றவனோ ஊடையவளின் முகத்தை மேல் தூக்க,
''இதான் கடைசி.. இதுக்கு மேலே ஒன்னுமில்லே! அதான்.. நீயும் உன் காதலும் இந்த குஞ்சரியே நரகத்துலருந்து கூட்டிக்கிட்டு வந்துட்டிங்களே.. வேறென்னே இருக்கு.. இதைவிட பெருசா.. இனி நம்ப வாழ போறே வாழ்க்கை சொர்கம்..''
என்றவளோ புருஷனின் கன்னங்களை வருடி கண்களை குளமாக்க,
''ஐ லவ் யூ குஞ்சாய்.. தேவையான நேரத்துலே அரவணைச்சுகறதே தவிர வேறென்ன பெரிசா வேலே இருந்திட போகுது இந்த அன்பு செலுத்துறே மனசுக்கு..''
என்றவனோ இதழ் ஒத்தினான் சீமாட்டியின் குங்கும வகிட்டில்.
''இன்னையிலிருந்து நாமே ஒரு புது வாழ்க்கையே ஆரம்பிக்க போறோம் ரீசன்.. அதான் இந்த கல்யாண கோலமெல்லாம்..''
என்றவளோ நாணி சிரிக்க,
''ரொம்ப அழகா இருக்கீங்க சீனியர்..''
என்ற ரீசனின் விரல்களோ குஞ்சரியின் ஜாக்கெட் கொக்கியில் தொலைத்ததை தேடியது.
கணவனின் ஆர்வத்தை கண்டு வெட்கத்தில் சிரித்தவளோ,
''ஒரே ஒரு நிமிஷம் ஜூனியர்.. உங்களுக்காக நான் ஒரு கிஃப்ட் வெச்சிருக்கேன்.. நீங்க ரொம்ப நாளா கேட்ட ஒன்னு.. அது என்னன்னு முதல்லே சொல்லிடறேன்.. அப்பறமா இந்த ஆராய்ச்சியெல்லாம் வெச்சிக்கலாம்.. சரியா..''
என்றவளோ ஆளானவன் நாசியை விரல்களால் பிடித்தாட்டி தொடர்ந்தாள்.
''நான்.. முடிவு பண்ணிட்டேன் ரீசன்.. ஸ்பைனல் கோர்ட் இம்பிளாண்ட் பண்ணிக்க.. டாக்டர்கிட்டே பேசி டேட் விக்ஸ் பண்ணுங்க..''
என்றவளின் இமைகளை இமைக்காது வெறித்தவனின் திட்டிகளோ லைட்டாய் கலங்க,
''உங்களுக்காகத்தான் ரீசன்.. உங்களுக்காக மட்டும்தான்..''
என்றவளை மெதுவாய் பின்னோக்கி சாய்த்தான் ரீசன்.
''சீனியர் நிஜமாவே இது உங்களுக்கு ஓகே வா.. பிரச்சனையேதும் இல்லையே..''
என்றவனின் நெஞ்சில் கரம் பதித்தவளோ,
''நான் உணர முடியாத இந்த ரெயின்போதான் என் வாழ்நாள்ளையே நான் மறக்காத ஒன்னா இருக்கணும்.. உணர்ச்சிகள் வந்தாலுமே இதுதான் நம்பளோட பெஸ்ட்டா இருக்கணும்..''
என்ற குஞ்சரியின் அம்பகங்களோ மெது மெதுவாய் சொருகியது ரீசனின் தேகம் விருந்தனையை நெருங்கி நேத்திரங்களால் அவளை நாண வைக்க.
''ஐ லவ் யூ குஞ்சரி..''
என்றவனின் கனல் காற்றோடு கூடிய இதழ்கள் நவரசமாய் படர ஆரம்பித்தது ஆயந்தியவளின் மேனியில் மூன்று வருடங்களுக்கு பிறகு.
அருங்காட்சியகமாய் இருந்த தேவகுஞ்சரியை சிறுபிஞ்சாய் கலைத்திருந்தான் தீனரீசன்.
பிக் போஸின் தீண்டலில் முனகி முயங்கல் களைத்த லேடி பீஸ்ட்டோ புருஷனின் நெஞ்சில் நிம்மதியாய் கண்ணயர்ந்திருக்க, தடபுடா சத்தத்தில் பட்டென விலோசனங்கள் திறந்தான் ரீசன்.
காதை கூர்மையாய் தீட்டி தலைக்கு மேலிருந்த கையை விலக்கி எழ பார்த்தவன் மார்பில் துஞ்சிக் கிடந்தவளை பஞ்சணையில் படுக்க வைக்க அது நடவாது துயில் கலைந்தாள் குலியவள்.
''என்னாச்சு ரீசன்.. எங்க போறே..''
''ஒன்னுமில்லம்மா.. இங்கதான்.. கீழே ஏதோ சத்தம் கேட்டது.. நான் போய் பார்த்திட்டு வந்துடறேன்.. நீ படுத்துக்கோ..''
''என்ன சத்தம்.. யாரு.. ஒருவேளை திருடனுங்களா..''
பதறி வினவினாள் தம்பிராட்டியவள்.
''சே! சே! அப்படியெல்லாம் எதுவும் இருக்காது.. ஏதாவது எலியாத்தான் இருக்கும்.. நான் பார்த்திட்டு வந்துடறேன்மா.. நீ படு..''
என்றவன் புதிய டி- ஷர்ட் ஒன்றை எடுத்து மாட்டிக்கொள்ள,
''ரீசன்..''
என்றழைத்தவளை அறையின் வாசல் வரைக்கும் போனவன் திரும்பி பார்த்தான்.
''பார்த்து..''
என்ற குஞ்சரியோ போர்வையை போர்த்தி படுத்துக் கொண்டாள் அவன் முகம் பார்த்தவாறே.
கனவிலும் நினைக்கவில்லை வல்லபியவள் இதுவே அவளின் இறுதி இரவு காதல் கணவன் தீனரீசனோடு என்று.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...

Author: KD
Article Title: அத்தியாயம்: 126
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.