What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
509
அத்தியாயம் நூற்றி இருபத்தி ஏழு

சிரித்த முகமாய் அறையிலிருந்து வெளியேறிய ரீசனோ வரவேற்பறையை தாண்டி வெளி வாசல் போக பூந்தோட்டத்தில் தெரிந்தது நிழலொன்று.

பதுங்கி போன களவானியை கையும் களவுமாய் பிடிக்க நினைத்த ரீசனோ முன்னோக்கி பின் நிறுத்தினான் அவன் கையில் ஆயுதங்கள் ஏதுமில்லாததால்.

சுற்றி முற்றி பார்வைகளை ஓட விட்ட குஞ்சரி புருஷனின் கண்ணிலோ சிக்கின காலையில் புதிதாய் நட்ட ரோஜா பூ செடி பாசிகள்.

அப்பக்கம் போனவனோ ஆபத்துக்கு பாவமில்லை என்ற கணக்கில் ஒற்றை காலால் பாசியை அழுத்தி செடியின் முள் கொண்ட கிளையை அவன் ஆடையோடு சேர்த்து மூடி கொத்தாய் புடுங்கி போட்டான் வெள்ளை ரோஜா செடியை மண்ணோடு மண்ணாக ஓரத்தில்.

அடிகளை துரிதப்படுத்தி வேகங்கொண்டான் ரீசன் கையில் காலியான பூ பாசியோடு நிழலை விரட்டி சத்தமின்றி. உருவமோ குடுகுடுவென சுவரோரம் பதுங்க, சுவரோரம் ஒட்டி நின்றவனோ ஒளிந்த உருவத்தின் நிழலை உடும்பு பிடியாய் ஒரே இழுப்பில் முன்னிழுக்க,

''daddy!!''
(அப்பா!!)

என்றலறலில் ஆடிப்போனான் தீனரீசனவன்.

''daddy!! what are you doing here!''
(அப்பா!! நீங்க இங்கே என்ன பண்றீங்க!)

மகளின் கை இன்னும் அப்பனின் பிடியிலிருக்க,

''அதை நான் கேட்கணும் கீத்து! நீ இங்க என்ன பண்றே!''

என்றவனின் காட்டமான தொனியில்,

''well.. dad can we just go inside and have a talk.. it's not really safe outside here.. some more I can't bear this chillness.. please dad.. shall we..)
(அப்பா.. நாமே உள்ளே போய் பேசலாமா.. இங்க வெளியே அவ்வளவு பாதுகாப்பா இல்லே.. என்னாலே இந்த குளிரே தாங்க முடியலே.. தயவு செஞ்சுப்பா.. போகலாமா..)

என்றவளோ தலையாட்டியவனின் ஆமோதிப்பில் பங்களுக்குள் அடியெடுத்து வைத்தாள்.

ரீசனோ கையிலிருந்த பூ பாசியை தூக்கி ஓரமாய் போட்டு மாளிகையை விழிகளால் ஒரு ரவுண்டடித்தான் கரங்கள் ரெண்டும் இடையை இறுக்கியிருக்க.

''dad!! why there is no ice water!''
(அப்பா!! ஏன் இங்கே ஐஸ் தண்ணீ இல்லே!)

என்ற மகளின் குரல் கேட்டு மனைக்குள் நுழைந்தான் ரீசன்.

''மினரல் வாட்டர்தான் இருக்கு!''

என்றவனோ பெட்டியிலிருந்து வெளியிலெடுத்த ஒரு போத்தலை தூக்கி மகள் நோக்கி வீசினான்.

''daddy.. are you alone here..''
(அப்பா.. நீங்க இங்க தனியாவா இருக்கீங்க..)

நீரை பருகிக் கொண்டே வினவிய மகளிடத்தில் இல்லையென்று தலையாட்டியவனோ நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டியப்படி கிட்சன் கேபினெட்டின் விளிம்பில் சாய்ந்து நின்றிருந்தான்.

''is that mummy is here..''
(அம்மா இங்கே இருக்காங்களா..)

''upstairs..''
(மேல் மாடியிலே..)

என்றவனின் பதிலில் மேல் மாடிக்கு விரைய பார்த்த மகளை நிறுத்தினான் ரீசன்.

''Stop Keethu! First tell me what you are doing here at this time..''
(நில்லு கீத்து! இந்த நேரத்தில் நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே அதை முதல்லே சொல்லு!)

''ஓஹ் அதுவா டேடி.. நான் செண்டர்லருந்து வெளியானதுலருந்தே என்னே ஒரு கார் ஃபோலோ பண்ணிக்கிட்டே வந்தது! கண்டிப்பா ஏதாவது ஸ்டால்கிங் குரூப்பாத்தான் இருக்கும்னு நினைச்சு நான் இந்த பங்களாக்குள்ள சேவ்ட்டியா (safety) இருக்க எண்டர் (enter) ஆகிட்டேன்.. கீரன் அங்கிளுக்கு ட்ரை பண்ணேன் அவர் எடுக்கலே.. சரின்னு வீர் அங்கிளுக்கு ட்ரை பண்ணேன் அவர் போன் ரிங் போனது பட் எடுக்கலே.. உங்களுக்கு கூட கோல் பண்ணேன் டேடி லைன் கிடைக்கலே..''

என்றவளின் பதிலில் அப்போதுதான் தாய்லாந்திலிருந்து தாய் நாட்டிக்கு திரும்பியிருந்த ரீசனோ அவனின் அலைபேசி இன்னும் ரோமிங்கில் இருப்பதை நினைவுக்கூர்ந்தான்.

''சோரிடா டேடி போன்லே டவர் இல்லப்போலே.. அது சரி இந்த லேட் நைட்லே உங்களுக்கு வெளியிலே என்னே வேலை மேடம்!''

''what else dad other than hockey training!''
(ஹாக்கி ட்ரெயினிங் தவிர வேறு என்னப்பா இருக்க போகுது..''

''இத்தனை மணிக்கா..''

''வேறே என்னே டேடி பண்ண சொல்லறீங்க.. தாத்தா என்னே ஹோக்கி ஸ்டிக்கையே தொட விட மாட்டறாரு! எப்போ பார்த்தாலும் படி! படி! படின்னு! சும்மா டைம்பாஸ்கு அனுப்புறாரு ட்ரெயினிங் செண்டருக்கு! எனக்கு நான் ஹோக்கிலே வேர்ல்ட் டாப்லே வரணும் டேடி! அதுக்கு நான் இப்படித்தான் பிரக்டீஸ் பண்ணியாகணும்!''

கீத்து தாத்தாவின் கெடுபிடிகளை பற்றி சொல்ல அவன் தந்தையின் குணம் அறிந்தவனோ மகளின் ஆசைக்கு தாத்தாவின் குறுக்கீடு புரிந்தது.

''ஓகே பேபி எல்லாமே சரிதான்.. ஆனா.. இப்படி யாருக்கும் சொல்லாமே லேட் நைட் வீட்டுலருந்து வெளியாகி பிரக்டீஸ் பண்ணிட்டு திரும்ப வீட்டுக்கு போறதுலாம் அவ்ளோ சேவ் இல்லே கீத்து.. அதுவும் இந்த காலத்துலே பொம்பளே புள்ளே இப்படி யார் பாதுகாப்பும் இல்லாமே யாருக்கிட்டையும் சொல்லாமே ஒரு இடத்துக்கு போறது சரியான விஷயமும் இல்லே..''

மகளின் தோள் மீது கைப்போட்டுக் கொண்டு அவளோடு படிக்கட்டினில் நடந்திட ஆரம்பித்தான் ரீசன்.

''no worries dad! I'm a karate kid!! Anyway sorry daddy! I wont repeat it and at least will inform you! is that ok daddy..''
(கவலப்படாதீங்கப்பா நான் கராத்தே தெரிஞ்சே பொண்ணு! மன்னிசிருங்கப்பா! இனி நான் இப்படி பண்ணே மாட்டேன்! அடுத்த தடவே கண்டிப்பா உங்கக்கிட்டையாவது சொல்லிட்டுதான் போவேன்! இது ஓகேத்தானே டேடி!)

என்ற மகளின் சிரிப்பை புன்முறுவலோடு எதிர்கொண்டவனோ நேராய் கீத்துவை அவளுக்கான அறைக்கு அழைத்து சென்றான்.

''நான் மம்மி கூட்டிக்கிட்டு வறேன்.. அது வரைக்கும் என் பேபி கேர்ள் இந்த ஸ்டிக் பிடிச்சிருக்கான்னு பார்த்து வைங்க..''

என்றவனோ மகள் கீத்துவின் கையில் கொடுத்தான் புதிதாய் அவளுக்காக வாங்கிய ஹாக்கி மட்டையை.

''wow! daddy! its so stunning!''
(வாவ்! அப்பா எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கு!)

என்ற கீத்துவோ ஹாக்கி மட்டையில் லயித்து போனாள். ரீசனோ மகளை அங்கேயே விட்டு அவனின் அறைக்கு திரும்பினான் குஞ்சரியை கூட்டி வர.

பாவம் கீத்து அவளால்தான் அவள் டேடியின் உயிர் போக போகிறதென்பதை முன்கூட்டியே அறிந்திருந்தால் நிச்சயமாய் அம்மாளிகைக்குள் நுழைந்திருக்கவே மாட்டாள்.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 127
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top