What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498
அத்தியாயம் நூற்றி இருபத்தி ஒன்பது

குஞ்சரியின் குழலை விரல்களில் சுழற்றி விளையாடியப்படி குழந்தையாய் நித்திரை கொண்டிருப்பவளை இமைக்காது பார்த்தான் ரீசன்.

மனசென்னவோ அவளை விட்டு போக போவதாகவே உணர்ந்தது. கண்ணீர் ஆணவன் மூக்கிறங்கி மனைவியின் தலையில் சொட்டியது.

''குஞ்சரி நான் இருந்தாலும் இல்லன்னாலும் ரீசன் எப்போதுமே உனக்குள்ளத்தான்.. ஐ லவ் யூ சீனியர்..''

என்றவனோ உறக்கத்தில் இருப்பவளின் காதில் ரகசியமாய் உள்ளம் கொண்ட காதலை சொல்லி மெதுவாய் கண்கள் மூடினான்.

விளக்குகள் எல்லாம் முழுதாய் அடைந்து பங்களா இருட்டு கொண்ட அடுத்த அரைமணி நேரத்தில் கீத்துவின் அலறல் கேட்டது.

''டேடி!!''

தெரித்தெழுந்தவனோ ஓட்டமாய் ஓட மகளவள் அறைக்கு, பெற்றவளோ தூக்கம் கலைந்து எழுந்தாலும் வீல் சேருக்கு போக முடியாது மஞ்சத்திலேயே அமர்ந்தாற்படி அலறினாள்.

''கீத்து! கீத்து என்னாச்சு கீத்து! ரீசன்!! ரீ..ஆர்ர்ஹ்ஹ்ஹ..''

அவ்வளவுதான் கட்டிலின் விளிம்பில் படாரென்று சாத்தப்பட்டது குஞ்சரியின் தலை.

ரீசன் அந்தப்பக்கம் போக, இந்தப்பக்கமாய் நுழைந்து விட்டான் கயவனவன்.

''டே.. ய்! விட்.. றா! வி..டு! விடு என்..னே! ரீ.. ரீ.. ரீ..சன்!!''

மயக்கத்தில் நெற்றியோர ரத்தத்தில் அலசினாள் குஞ்சரி தள்ளாடி. அது அவளுக்கு பரிட்சியமான முகம். இருமுறை கற்பழிப்பிலும் அம்முகத்தை கண்டிருக்கிறாள்.

''உன்னலாம் விட்டு வைச்சதே தப்புடி! அன்னைக்கே போட்ருக்கணும்! என்னைக்காவது ஒருநாள் தேவைப்படுவேன்னு விட்டு வெச்சதுதான் நாங்க பண்ண பெரிய தப்பு!''

என்றவனோ குத்தினான் ஓங்கி ஒரு குத்து குஞ்சரியின் கன்னத்தில்.

''டே.. டே..! வே.. ண்.. ணா! ரீசன்! ரீ..சன்!''

என்றவளோ மறுபடியும் கைகால்கள் கட்டப்பட்ட அவலம் கொள்ள,

''உன் புருஷன் என்னே பெரிய இவனா! எங்களையே போட பார்த்தான்லே! இருக்குடி அவனுக்கு! அவன் கண்ணு முன்னுக்கே உன்னே சிதைச்சாத்தாண்டி அவன் கொட்டம் அடங்கும்!''

என்றவனோ அங்கிருந்து நகர்ந்தான் ரீசனை தேடி.

''கீத்து!! கீத்து!!''

என்றலறி ஓடி வந்த தகப்பனோ ஆடிப்போனான் மகளின் அறைக்குள் இரு கயவர்கள் ஜம்பமாய் நிற்க.

அப்போதே அவனுக்கு தெரிந்து விட்டது. இவ்வளவு நேரமும் அவன் மனதை போட்டு உருட்டி பிரட்டி கொண்டிருந்த சலனம் இதுதானென்று.

புரிந்து விட்டது ஆணவனுக்கு அவன் உயிர் போவது இன்றைக்கு நிச்சயமென்று. ஆனால், அதற்குள் எப்படியாவது கீத்துவையும் குஞ்சரியையும் காப்பாற்றிட வேண்டும். அது மட்டுமே அவன் மனசில் வேரூன்றி நின்ற எண்ணமாய் இருந்தது.

''டேடி!! டேடி!!''

என்ற கீத்துவோ தகப்பனையே அழைக்க,

''டேய் என்னடா பண்றீங்க என் பொண்ணே! விடுங்கடா அவளே!''

என்று அறைக்குள் நுழைய பார்த்தவனை பின்னாலிருந்து தாக்கினான் ஒருவன்.

''இழு! நல்லா இழு!''

என்றவனில் ஒருவனோ உள்ளங்கையில் நிரம்பிய போதைத்தூளை கீத்துவின் நாசியில் வைத்து தேய்க்க,

''வேண்டாம்! என்ன விடுங்க! டேடி!''

என்று திமிறியவளின் தலைமுடியை கொத்தாக பிடித்தவனோ அவளின் முகத்தில் உள்ளகையை வைத்து அழுத்தி சிறுமி அவளை திக்குமுக்காட வைத்தான்.

ரீசனோ படியில் ஒருத்தனோடு கட்டிப்பிடி சண்டையில் துரிதமாய் ஈடுப்பட்டிருக்க,

''எங்கடா விஜய்!!''

என்றவனோ எழுந்து மேல் மாடி நோக்க பார்த்த ரீசனின் காலை வாரி இழுத்து அவனிடையே பற்றினான்.

''ஆர்ஹ்ஹ்ஹ.. ஆஆஆ.. ர்ர்ர்ர்ர்ர்..''

என்ற ரீசனின் திட்டிகளோ பிதுங்கின வஞ்சகன் அவன் குஞ்சரி புருஷனின் கழுத்தை படியின் விளிம்பில் வைத்து அழுத்த.

''சொல்லுடா விஜய் எங்கே! என்ன பண்ணே!!''

என்றவனோ மேலும் பிடியில் அழுத்தம் கொடுக்க,

''ஆர்ர்ர்ஹ்ஹ்ஹ.. க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்..''

என்று திணறிய ரீசனோ கைக்கு எட்டிய கம்பியிலான அழகு பொருளை படிக்கு அப்பால் எக்கி எடுத்து பின்னோக்கி அடித்தான் அவன் உயிரை சூறையாட பார்த்த கேடுகெட்டவனின் தலையை.

வலியோடு கூடிய ரத்தம் பின் மண்டையிலிருந்து பீறிட காயம்பட்டவனோ ரீசனின் கந்தர பிடியை விட்டு,

''ஆர்ர்ர்ஹ்ஹ்ஹ!!! டேய்!! தீனரீசா!!!''

என்ற அலறலோடு நயவஞ்சகனவன் தலையை பிடித்தாற்படி படியில் அடிகளை பின்னோக்கி வைத்து தரையை அடைந்தான் தள்ளாட்டத்தோடு.

ரீசனோ நேத்திரங்கள் ரெண்டும் சிவந்திருக்க வாயிலிருந்து அவனறியாது ஊற்றிய எச்சிலோடு நோக்கினான் இரும்பல் கொண்டவாறே வரவேற்பறையில் கேப்ரேட் ஷோ நடத்துபவனை.

''என் மேலே கை வைக்கறே அளவுக்கு தைரியம் வந்துருச்சா தீனரீசா! இப்போ பாரு என்னே பண்றேன்னு!!''

ரணத்தை ஈடுக்கட்ட நினைத்த கெட்டவனோ அவன் பாக்கெட்டிலிருந்த போதை தூளை எடுத்து வாயில் கொட்டிய நேரம்,

''ஈவிரக்கம் பார்க்காமே ஒரேடியா போட்டிருக்கணும்டா உங்களே! மெல்ல மெல்ல போய் சேர டைம் கொடுத்தேன் பாரு அதான்! அதான் நான் பண்ணே முட்டாள்தனம்!''

என்ற ரீசனோ அவன் கையிலிருந்த கம்பியை கொண்டு நயப்புடைத்தான் சாவை மாவு வழி தேடிக்கொள்ள பார்த்தவனுக்கு உதவும் பொருட்டு.

''ஆர்ஹ்ஹ்ஹ!! வேணா!! டேய்! வேணா! விட்டுடு! தீனரீசா தப்பு பண்றே!! வேணா!! ஆர்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ!!''

கம்பி கொண்ட வலியில் துடித்தவனோ ஒருபுறம் கபாலம் மறுபுறம் உடம்பு என்று சமாளிக்க முடியாது திண்டாடினான்.

ரீசன் விடாது சாத்தியதில் ஏற்கனவே கயங்கொண்டவனின் மண்டையோ கரகாட்டம் ஆட, பாடியோ (body) உள்ளே போன மாவால் கோலாட்டம் கொள்ள தரை சரிந்தான் போதை கண்களை மறைக்க நயவஞ்சகனவன்.

இதற்கு மேலும் இந்த கூட்டத்தை விட்டு வைப்பது நல்லதில்லை. மகளையும் குஞ்சரியையும் காப்பாற்றி உயிரை விட்டாலும் சரி இவர்களை கொன்று ஜெயிலுக்கு போனாலும் சரி.

என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என்ற ஆவேசம் குறையாத ரீசனோ தரையில் கிடந்தவன் மீதேறி அமர்ந்தான்.

குஞ்சரியின் ஒவ்வொரு நாள் கதறலும் அலறலும் வேதனையும் கண் முன் வந்து போனது கணவனுக்கு. ரீசனின் கோபமெல்லாம் கண்ணீராய் கன்னம் வழிய,

''ஏன்டா! ஏன்! ஏன் அப்படி பண்ணீங்க! சொல்லு! ஏன்! ஏன்! அப்படி பண்ணீங்க! என்னே அளவுக்கு அதிகமா காதலிச்சதாலே தானே அவளே அந்த பாடுப்படுத்தி எடுத்தீங்க!! அவளுக்காக நான் இதைக்கூட பண்ண மாட்டேனா!!''

என்றவனோ மேலும் பொறுக்காது கையிலிருந்த கம்பியினாலேயே தீயவனை குத்தி குத்தி கொன்றே குருதியை காட்டாறாய் பளிங்குத் தரையில் பரவ விட்டான்.

தலை தொடங்கி கையெல்லாம் செம்புனல் குளியல் கொண்ட ரீசனோ எழுந்தான் மூச்சு வாங்க,

''என்ன கேட்டே!! விஜயே என்ன பண்ணேன்னா! நான் என்னடா பண்ணிட முடியும் பெருசா அவனே! !''

என்றவனோ மரித்தவனை வெறித்தான் வெறிகொண்டு கம்பியிலான கரங்கொண்டு.

''I'm just a common man who wants to protect my family from assholes like you!!''
(உன்னே மாதிரியான தீயவங்கக்கிட்டருந்து என் குடும்பத்தை பாதுகாக்க நினைக்கிறே ஒரு சாதாரண மனுஷன்டா நானு!'')

என்றவனோ செத்தவனை ஓங்கி ஒரு உதை உதைத்து மேல் மாடி நோக்கினான் மகளையும் குஞ்சரியையும் காப்பாற்ற.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 129
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top