What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
509
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி ஒன்று

கற்பழிப்பு அவலங்களில் சிக்கி தவித்த குஞ்சரி கொஞ்சங் கொஞ்சமாய் நலம் பெற இருப்பிடத்தையே அவளுக்காக மாற்றியிருந்த ரீசனோ மணவாட்டியவளோடு நிம்மதியாகவே வாழ்ந்து வந்தான் வாழ்க்கையை அவன் உண்டு அவனின் முள்ளங்கி உண்டென்று.

அப்படியான காலக்கட்டம் ஒன்றில் ஒரு நாள் நாளிதழின் முன் பக்கத்தில் கண்ட செய்தியால் அமைதியின் சொரூபமாய் இருந்த குஞ்சரி மறுபடியும் புயலாய் பொங்கி ஆவேசம் கொண்டாள் கத்தி கதறி.

காரணம் புரியாத புருஷனோ மணவாளியை சமாதானம் செய்திட முடியாது தவிக்க கடைசியாய் மயக்க ஊசியை பயன்படுத்திடும் நிலைக்கு கணவனவனை கொண்டு வந்து விட்ட குலியவளோ நீண்டதொரு நித்திரை கலைந்த பிறகே விழிப்பு கொண்டாள்.

அதற்குள் ரீசனோ பாரியாள் அவளின் முகத்தில் கொண்ட கீறல்களுக்கு மருந்திட்டிருந்தான். உடல்களில் கொண்ட வீக்கங்களுக்கு சுடுநீர் ஒத்தடம் கூட கொடுத்து ஓரளவுக்கு கன்றிய இடங்களை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சித்திருந்தான்.

''சோரி ஜூனியர்.. நான் இப்படி பண்ணிருக்கக்கூடாது.. என்னாலே முடியலே.. என்னே அறியாமே.. ஒரு வித வெறுப்பு.. என் மேலேயே.. கோபம்னு கூட சொல்லலாம்..''

என்றவளோ அவளின் முந்தைய செயலுக்கு விளக்கம் கொடுத்து ரீசனின் நெஞ்சில் சாய்ந்தாள் அழுகையோடு.

''விடுங்க சீனியர்.. அதான் இப்போ ஓகே ஆகிட்டிங்களே..''

என்றவனோ அவளின் தோளை ஆறுதலாய் நீவினான் நிஜத்தில் குஞ்சரியை அப்படி பொங்கிட வைத்த சங்கதிதான் என்னெவென்று தெரியாது.

''என் டேடியே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜூனியர்.. நான்தான் அவருக்கு எல்லாமே.. எனக்காக அவர் இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கலே!''

என்றவளோ மெதுவாய் ரீசனின் நெஞ்சிலிருந்து விலகி கட்டிலின் விளிம்பில் முதுகு சாய்த்தாள்.

''உனக்கு தெரியுமா ரீசன்.. நான் பெரிய பெண்ணாகி ஒரு டூ த்ரீ டேய்ஸ் (two three days) இருக்கும்.. டேடித்தான் எனக்கு எல்லாமே சொல்லி கொடுத்தாரு.. அவர்தான் என் பக்கத்துலையே இருந்து என்னே பார்த்துக்கிட்டாரு.. வயிறு ரொம்ப வலிக்கும் போதெல்லாம் அவர்தான் தைலம் போட்டு விடுவாரு.. அடிக்கடி பேட் (pad) மாத்த சொல்லி ரீமைண்ட் (remind) பண்ணிக்கிட்டே இருப்பாரு..''

என்ற குஞ்சரியோ மரித்து போன அவளின் தந்தையை எண்ணி கண்ணோரம் வழிந்த சூடான கண்ணீரை கைகளால் துடைத்துக் கொண்டாள்.

''எனக்கு இன்னர்ஸ் (inners) கூட சரியா வாங்க தெரியாது ரீசன்.. டேடித்தான் வாங்குவாரு.. எனக்கு இன்னமும் நல்லா ஞாபகம் இருக்கு.. ஒரு தடவே நானே இன்னர்ஸ் வாங்கறேன்னு சொல்லி டேடியோட ஒரு ஷோப் (shop) போயிருந்தேன்..''

என்றவளோ எச்சில் விழுங்கினாள் சொல்ல வந்ததை நிறுத்தி.

''அப்போ.. அங்க இருந்தே.. ஒரு சேல்ஸ்மேன் என்னே தப்பா டச் (touch) பண்ணதே நான் ரியலாய்ஸ் (realize) பண்ணலே.. ஆனா.. டேடி அதை நோட்டிஸ் (notice) பண்ணிட்டாரு.. அவனே புடுச்சு.. அடிச்சு உதைச்சு.. அங்கே பெரிய ரகளையே நடந்துருச்சு..''

என்றவளோ இதுவரை விட்டத்தை பார்த்திருந்த தலையை கீழே குனித்துக் இருக்கரங்களாலும் பெட்ஷிட்டை இறுக்கி தொடர்ந்தாள் சொல்ல வந்த கதையை அழுகையோடு,

''அப்போ சொன்னாரு ரீசன்.. என் டேடி.. அவர் இருக்கறே வரைக்கும் என்னே யாரும் தப்பா தொட இல்லே.. நினைக்க கூட அவர் அலாவ்ட் (allowed) பண்ணே மாட்டாருன்னு! அப்படி யாராவது என்கிட்டே மெஸ் அவுட் (mess out) பண்ணே யோசிச்சாலே அந்த பெர்சனே (person) இருக்கறே இடந்தெரியாமே காணா பொணமாக்கிடுவாருன்னு!''

என்ற பத்தினியோ குலுங்கி கதறிட,

''குஞ்சரி.. இங்கப்பாரு.. குஞ்சரி.. என்னே பாரு.. பாரு இங்கே..''

என்ற ரீசனோ முகத்தை மூடி ஒப்பாரி வைத்த நாச்சியின் கரங்களை விலக்கி அவள் வதனத்தை மேல் தூக்கிட முயற்சித்தான்.

''அந்த வெர்டிங்ஸ்சே (wording) எப்போதுமே என்னே மனசுலே வெச்சுக்க சொல்லுவாரு ரீசன் என் டேடி! ஐ மிஸ் ஹிம் லோட் (I miss him lot)! ஐ மிஸ் மை டேடி லோட் லைக் ஹெல்!! (I miss my daddy lot like hell!!)''

என்று சத்தம் போட்டு அலறி அழுத தம்பிராட்டியவளை மார்போடு சேர்த்தணைக்குக் கொண்டான் ரீசன்.

''அவர் சொல்லி நான் கேட்காதே ஒரே விஷயம் நீ மட்டுந்தாண்டா ஜூனியர்! ஏன் எதுக்கின்னு தெரியலே! ஆனா.. டேடியே பொறுத்த வரைக்கும் யூ ஆர் நோட் டிசர்வ் மீ (you are not deserve me)! கடைசி வரைக்கும் அந்த ஸ்டாண்டே (stand) மட்டும் டேடி மாத்திக்கவே இல்லே! நம்ப கல்யாணம் கூட என் சந்தோஷத்துக்காகத்தான் ரீசன்!''

என்றவளோ கணவனின் முகத்தை இருக்கரங்களுக்குள் இறுக்கி சொன்னாள் கண்ணீர் வெள்ளமாய் பெருக்கெடுக்க ஏற்கனவே ரீசன் அறிந்த விடயத்தை.

''ஈவன் (even) எனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்ததுக்கு கூட டேடி சொன்ன ஒரே காரணம்.. கீத்துக்கு வேணும்னா நீ நல்லா அப்பாவா இருப்பியாம் அண்ட் ஹி நெவர் ஹவ் டவுட் ஒன் இட் (and he never have doubt on it)! பட்.. அவர் பொண்ணு தேவகுஞ்சரியே எப்போதுமே தீனரீசன் நல்லா பார்த்துப்பாங்கறே நம்பிக்கை மட்டும் அவருக்கு இல்லையாம்! ஹி சேய் யூ காண்ட் ப்ரோடேக் மீ பிகோஸ் ஐம் நோட் யூர் பிரின்சஸ் அண்ட் யூ நோட் தெ ரியல் கிங்! (he say you can't protect me because I'm not your princess and you are not the real king!)''

என்ற குடும்பினியோ ஆணவனின் முகத்தை அவளின் பத்து விரல்களாலும் மறைத்து கதறினாள்.

''ஒரு அப்பாவா அதை அவர்னாலே ரொம்ப நல்லாவே உணர முடியுதுண்ணு நீ என்னே உள்ளங்கையிலே வெச்சு தாங்கறதே பார்த்த பிறகும் டேடி சொல்லிக்கிட்டேத்தான் இருந்தாரு ரீசன்! செத்து போறே வரைக்கும்! அது ஒன்னுதாண்டா எனக்கு புரியவே இல்லே.. ஏன்னு!''

என்றவளோ புருஷனின் ஆடையற்ற நெஞ்சில் முகம் புதைக்க,

''ஹி வாஸ் ரைட்!! நம்பிராஜாவோட பொண்ணு தேவகுஞ்சரியோட லவ்வுக்கும் நம்பிக்கைக்கும் இந்த ரீசன் கொஞ்சமும் தகுதியில்லாதவன்தான்! ஒரு அப்பாக்கு மட்டும்தான் தெரியும் எந்த ஆம்பளே கடைசி வரைக்கும் தன் பொண்ணே அவனே போலவே பத்திரமா பார்த்துப்பான்னு!''

என்றவன் வாய் மொழிந்த வார்த்தைகளை கேட்க குஞ்சரிக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை.

ஆயிழையவள் அழுத களைப்பில் தூங்கியிருந்தாள் ரீசனின் மடியிலேயே படுத்து.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 141
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top