What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
509
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி இரண்டு

மாலை நேரத்தில் மழை வேறு சோவென்று பொழிந்தது விடாது விடிந்ததிலிருந்தே.

ஜன்னலோரம் நின்று வெளியிலிருந்த ரோஜா பூ செடிகளை இமைக்காது பார்த்திருந்த குஞ்சரியோ மெதுவாய் கண்களை மூடி நிந்தித்தாள் அவளின் ரீசனை.

இல்லாது போனவனின் உஷ்ணம் விறலியவள் மட்டுமே உணர பின்னாலிருந்து வந்தது ஓரணைப்பு வதனியின் உடல் ஜன்னலோடு ஒட்டிட.

செத்தவனின் சேட்டைகள் கொண்ட கைவிரல்களோ சொந்தமானவளின் தேகத்தில் உத்தரவின்றி உலா வர கம்பிகளை இறுக பற்றினாள் பாவையவள் மரித்த கணவனின் ஸ்பரிசத்தை இன்னமும் அவளில் உணர்ந்து.

''ஐ லவ் யூ சீனியர்..''

என்றவனின் குரல் காதோரம் கேட்டு கழுத்தோரம் கிறங்கடிக்க,

''மணியாச்சு சீனியர்.. எல்லாரும் வெயிட்டிங்..''

என்றவனின் குரலோ வல்லபியவளை தெளிய வைத்தது.

ரீசன் என்னதான் உலகை விட்டு போயிருந்தாலும் குஞ்சரியை பொறுத்தமட்டில் அவன் இன்னும் அவளுக்குள் உயிரோடுதான் வாழ்கிறான். அவ்வப்போது அவனை நினைக்கையில் இப்படியான கிறுக்குத்தனங்களில் சில நேரங்கள் நாயகியவள் லயித்திருப்பாள்.

நிஜமெது நிழலெது என்று நன்கறிந்தவள் தெரிந்தே இப்பைத்தியக்கார ஊடலில் சின்னதாய் ஒரு மனநிம்மதி கொள்வாள்.

தீனரீசனின் ஒரு வருட நினைவஞ்சலி நல்லப்படியாகவே நடந்து முடிந்தது. ஆணவனின் நெருங்கிய நண்பன் கீரன் தொடங்கி நல்லிணக்கம் அல்லாத ப்ரீதன் வரைக்கும் அனைவரும் வந்து கலந்துக் கொண்டனர்.

குட்டி ரீசனை எவ்வித சங்கடமுமின்றி தூக்கி கொஞ்சினாள் குஞ்சரி. விசாவும் முடிந்தளவுக்கு அவளின் குற்ற உணர்ச்சியை மறந்து குஞ்சரியிடம் உறவை வளர்த்திட முயன்றாள்.

லல்லி வழக்கம் போல் அங்கு வந்தும் வீரை உண்டில்லை என்றாக்கி வீம்புக்கு முகத்தை தூக்கி வைத்து செல்ல ஊடல் கொண்டாள்.

ரீசனின் பெற்றோர்களோ மகனுக்கு பதில் மகள் கிடைத்திருப்பதாய் சொல்லி வந்திருப்போரிடம் அளவளாவினர்.

குறிப்பிட்ட தொகை ஒன்று வருகின்ற முக்கிய அக்கவுண்டை விசாரித்த வீரோ அதன் மெயின் சோர்ஸை கண்டறிய முடியவில்லை என்று கையை விரித்தான் நினைவஞ்சலிக்கு கூடியிருந்த பொழுதினிலே.

குஞ்சரியோ அப்பணத்தை அப்படியே ரீசனின் பெயரில் ஹோக்கி ட்ரட்ஸ் ஒன்று ஆரம்பிக்க உபயோகிக்க சொல்லி அதற்கான பொறுப்பைகளை அவனிடத்திலேயே விட்டு விட்டாள்.

நம்பிராஜனின் மறைவிற்கு பின்னாடி குஞ்சரி அவரின் பிஸ்னஸ் பொறுப்பில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் முதன்மையான ஷேர் ஹோல்டர் என்ற இடத்தில் கீத்துவின் பெயரே இருந்தது.

ஆகவே, இப்போது எழுந்து நடக்க முடிந்த குஞ்சரியோ அவள் டேடியின் கம்பெனிக்கு புதிய முதலாளியாக பொறுப்பேற்றிருந்தாள். ரீசனும் அவளும் மூன்றாண்டுகளாக வாழ்ந்த நகரை தாண்டிய பண்ணை வீட்டுக்கு கீத்துவோடு ஒரு எட்டு போய் வந்தாள் குஞ்சரி.

முள்ளங்கி தொழிலை பெரியளவில் கொண்டு வர உத்தேசித்து அதற்கான ஆட்களை சந்தித்திட வேண்டி கீரனிடத்தில் உதவி கேட்டிருந்தாள் குஞ்சரி. அப்படியே ரீசனின் மதுக்கூடங்களையும் திரும்ப வாங்கிட திட்டம் கொண்டாள் ரீசனின் குஞ்சரியவள்.

அது கொஞ்சமல்ல ரொம்பவே கஷ்டம் என்று கீரன் கூறியும் அது என்னவோ அவன் வார்த்தை ரீசனின் மணவாட்டியிடத்தில் எடுப்படவேயில்லை.

பிடிவாதமாக நின்றாள் சீனியர் அவள் கையை விட்டு போன பார்ஸ் அவளுக்கு திரும்ப வேண்டுமென்று. கீரனோ காத்திருந்து பார்ப்போம் என்ற கணக்கில் அவ்விடயத்தை தலை முழுகியிருந்தான்.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 142
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top