- Joined
- Jul 10, 2024
- Messages
- 509
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி மூன்று
என்னதான் விஜயை காதல் மனைவி குஞ்சரிக்காக ரீசன் பழி தீர்த்திருந்தாலுமே பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை நன்கறிவான். ஆகவே, ஏற்கனவே வாக்குமூலம் ஒன்றினை கீரனுக்காகவே ரெடி செய்து வைத்திருந்தான் ரீசன்.
பின்னாளில் அவன் கைதாகினால் கீரனின் விசாரணைக்கு பெரிதும் உதவும் என்று நம்பியவன் அதை கீத்துவின் பழைய ஹோக்கி ஸ்டிக்கில் ஒளித்து வைத்திருந்தான்.
டேப் போட்டு சுற்றியிருக்கும் ஹோக்கி மட்டையின் ஓரத்து பகுதியில் சிறியதாய் ஒரு மெமரி கார்ட்டை பதுக்கியிருந்தான் ரீசன். அதில் கே.ஆர்.என். என்று எழுதியும் வைத்திருந்தான்.
கீத்துவிற்கு தெரியும் அவள் டேடித்தான் கீரனை அப்படி ஷோர்ட்டாய் ஸ்வீட்டாய் அழைப்பான் என்று. ஆகவே, மகளவள் அங்கிளுக்கு வாட்ஸ் ஆப் தந்தியொன்றை அனுப்பி கீரன் வர அதை அவன் கையில் திணித்தாள்.
வீடு நோக்கியவன் கையில் பீர் கிளாஸோடு அவனின் தனியறையில் குந்திட மடியிலிருந்த மடிக்கணினியோ ரீசனின் வாக்குமூலத்தை படம் ஓட்டிட ஆரம்பித்தது.
காட்சியது இப்படித்தான் இருந்தது.
ரீசன் கடல் நீல வர்ணத்தில் டி- ஷர்ட் அணிந்திருந்தான். லைட் ப்ரவ்ன் பேண்ட். கையிலோ பீர் கிளாஸ். பார்க்கையிலேயே தெரிந்தது அது ஹோட்டல் பால்கனி என்று.
ஊஞ்சலில் அமர்ந்திருந்தவன் மெதுவாய் அசைந்தாடியப்படியே பேசிட ஆரம்பித்தான்.
''ஹாய் மச்சான்..''
என்ற ரீசனோ அவனின் கிளாஸை மேலுயர்த்தி சிரித்துக் கொண்டான்.
''இந்த வீடியோவே நீ பார்க்கும் போது நான் இருப்பேனா இல்லையான்னு எனக்கு தெரியாதுடா..''
என்றவனோ தலையை கீழே குனித்து சில நொடிகள் அமைதிக் கொண்டு பின் மீண்டும் தொடர்ந்தான்.
''ஆன்ட்டி ஹீரோ.. நீ எப்போதுமே வருத்தப்படக்கூடாதுடா .. உன் வேலையிலே உன்னே அடிச்சிக்க ஆளே இல்லே! நீதான் ராஜா! பிளீஸ்.. குஞ்சரி விஷயத்துல நீ தோத்து போயிட்டதா மட்டும் என்னைக்குமே நினைக்காதடா மச்சான்.. ஐ க்னோவ் யூ ட்ரை யூர் லெவல் பெஸ்ட்!''
என்ற ரீசன் சில மிடறுகள் பருகினான் கிளாஸிலிருந்த பீரை. வெட்டவெளியை நோக்கியவன் மெதுவாய் திரும்பி மீண்டும் வீடியோவிற்கு முகத்தை காண்பித்தான்.
''சும்மா பார்த்தாலே வெட்டறே தமிழன்டா நாமெல்லாம்.. என் பொண்டாட்டி மேலே ஒருத்தன் கையே வெச்சா சும்மா விட்றே முடியுமா மச்சான்.. வந்த கோவத்துக்கு வெட்டி போடத்தான் தோணுச்சு.. ஆனா.. நான் ஒரு சாதாரண மனுஷன்டா.. கொலை பண்ற அளவுக்கெல்லாம் இன்னும் பக்குவப்படலே..''
என்றவன் லைட்டாய் புன்னகைத்துக் கொண்டான் பீர் கொண்ட ஐஸ் கிளாஸை லேசாய் சுழட்டி.
''குஞ்சரி என்னே அவுங்க அப்பா இடத்துலே வெச்சிருக்காடா.. ரொம்ப.. ரொம்ப.. உயரமான இடம் அது.. அவுங்க அப்பா இடத்துக்கு என்னாலே போக முடியுமான்னு தெரியலே.. ஆனா.. அதுக்கு நான் கொஞ்சமாவது முயற்சி பண்றது தப்பில்லையே..''
என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாது முகிழ்நகை ஒன்றோடு அவனின் பீர் கிளாஸை மேல் தூக்கி,
''சியர்ஸ் மச்சான்..''
என்று சொல்லி வீடியோ பதிவை முடித்துக் கொண்டான்.
காட்சியில்லா மடிக்கணினியின் தொடுதிரையோ இருண்டிருந்தது. கீரனின் முகம் அதில் தெரிந்தது.
ரீசன் சொல்லிடாமலே புரிந்து விட்டது போலீஸ்காரனவனுக்கு நண்பன் ரகசியமாய் காய்களை நகர்த்தி விட்டானென்று. ஆனால், எப்படியென்றுதான் தெரியவில்லை. அதை கண்டுப்பிடிக்கவும் ஆன்ட்டி ஹீரோவிற்கு விருப்பமில்லை.
மடிக்கணினியின் டச் பேட்டை விரல்களால் உரசிய கீரன் மறுபடியும் வீடியோவை போர்வர்ட் செய்து கடைசி காட்சியில் பிளெய் செய்தான்.
தெரிந்தது மறுபடியும் முறுவல் கொண்ட ரீசனின் முகம். ஆணவனின் கையிலோ பீர் கிளாஸ் மேல் தூக்கியப்படி இருந்தது.
''சியர்ஸ் மச்சான்..''
என்று ரீசன் சொல்ல,
''சியர்ஸ் மச்சான்..''
என்று கீரனும் சொன்னான் கண்கள் குளமாகிடாவிட்டாலும் மனம் அழுகை கொள்ள.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...

Author: KD
Article Title: அத்தியாயம்: 143
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.