- Joined
- Jul 10, 2024
- Messages
- 509
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி ஐந்து
தர்மத்தின் முடிவானது மாபெரும் ரிஸ்க் என்பது குஞ்சரியின் ரீசனுக்கு தெரியும். இருந்தும் அவனால் அதற்கு மேல் எதுவும் செய்திடாதவனாய் இருந்திடாமல் இருக்க முடியவில்லை.
குற்ற உணர்ச்சியில் புழுங்கியவன் தாமதிக்காது அவனின் திட்டத்தினை யாரின் உதவியுமின்றி தனியாளாய் நடத்தி முடித்தான்.
ரெபெக்கா என்றொரு போலி கணக்கை விஜய்காகவே உருவாக்கினான் ரீசன். ஒரு கால் மட்டும் செயலிழந்து போயிருப்பதை போல் கதை சொல்லி அதற்கான மருந்துகளை தாய்லாந்து முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டான்.
விஜய் அவனின் இச்சையைத் தீர்த்துக் கொள்ள தேடினான் ஆடொன்றை வலைவீசி அவனின் பாயார் (buyer) லிஸ்ட்டில். சிக்கியது ஆணவனின் கையில் ரெபெக்காவின் விபரங்கள்.
பெயரே போதையேற்ற ஆள் எப்படியென்று கடலை போட்டிட ஆரம்பித்தான் விஜய் அவனாகவே வாட்ஸ் ஆப் கொண்டு. ரீசனோ இறந்து போன மங்கோலியா அழகி ஒருத்தியின் புகைப்படத்தை அனுப்பி விஜயை நம்ப வைத்தான் அதுதான் ரெபெக்கா என்று சொல்லி.
ரெண்டு வாரங்களுக்கு விஜயின் அலைப்பறைகளை சமாளிக்க முடியாது கடுப்பாகினான் ரீசன். நல்லவேளை இப்போது ஆண் குரலை பெண் குரலாக மாற்றும் வசதிகள் இருப்பதால் ரீசன் தப்பித்தான்.
அவ்வப்போது விஜய் போனில் காம லீலைகள் புரிய அவனுக்காகவே முனகும் ஓசைகளையெல்லாம் பதிவிறக்கம் செய்து அவனுக்கு இசைய வேண்டிய நிர்பந்தத்தில் சிக்குண்டான் ரீசன்.
விஜய் வீடியோ கோலுக்கு அடிப்போட நேரடியாக தாய்லாந்திற்கே வர சொல்லி அவனை அங்கே தனியே வர வழைத்தான் ரீசன்.
ரெபேக்காவை தேடி கடல் தாண்டி வந்தான் விஜய். காத்திருந்தான் அவளுக்காய் பாரில். அவள் வரும் வரை லைட்டாய் மது என்றிருந்தவனின் கிளாசில் அவனறியாது மயக்க மாத்திரையை கலந்தான் ரீசன்.
அரை மணி நேரத்தில் சொர்க வாசல் கண்டவனை குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு போய் செய்ய வேண்டிய காரியங்களை செவ்வென செய்து முடித்தான்.
குஞ்சரிக்கு என்னென்னெ கொடுமைகளை இழைத்தானோ அதையெல்லாம் திரும்பியும் விஜயிற்கே ரிவீட் அடித்தான் ரீசன். கடைசியாய் அவனை விபச்சாரனாய் விலை பேசி முடித்ததோடு சரி, கை கழுவி விட்டுட்டான் ரீசன் அவன் சங்கதியை.
விஜயை ரீசன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே பழிதீர்த்து விட்டான். மகனை காணாது அவனின் குடும்பம் பதறி போய் போலீஸ் பத்திரிகை என்றெல்லாம் ஓடோடி பார்த்து கடைசியில் ஓய்ந்து உட்கார்ந்து விட்டனர்.
போனவனுக்காய் சில காலங்கள் கண்ணீர் விட்ட குடும்பமோ பின் அப்படியே அவனை தலைமுழுகி அவரவர் பிழைப்பை பார்த்திட ஆரம்பித்தனர்.
விஜய் காணாமல் போன நாளிலிருந்து அவன் நண்பர்களின் நுனி மூக்கு கூட மலேசியாவை எட்டி பார்த்திடவில்லை. நாளிதழிலும் குறைக்கொண்ட பெண்கள் கற்பழிக்கப்பட்ட செய்திகள் வரவில்லை.
ஆகவே, லைன் கிளியர் என்று நினைத்த ரீசனோ அவனின் குஞ்சரியோடு முள்ளங்கியை பயிரிட்டு சந்தோஷமாய் காலங்களை கடத்தி வந்தான்.
காய் விளைச்சல் கொள்ள அவைகளை விற்று தீர்த்தவன் வழக்கம் போல் பொஞ்சாதியோடு தாய்லாந்திற்கு சுற்றுலா மேற்கொண்டான் ஏறக்குறைய மூன்றாண்டுகள் கழிய.
அங்கே கண்டான் விஜயின் நண்பர்களை ரீசன் ஆண்டுகள் கடந்து. முடிக்க வேண்டிய காரியம் ஒன்று மிச்சப்பட்டிருக்க அதை அங்கிருந்து கிளம்பிடும் முன்னரே முடித்திட வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொண்டான் ரீசன்.
அவர்களை பின் தொடர்ந்து பாருக்குள் நுழைந்தான் ரகசியமாய். அவர்களின் மதுவில் கலந்தான் ஆந்த்ராக்ஸ் பொடியினை. ஐந்து நாட்கள் கெடு வைத்திருந்தான் ரீசன் அவர்களின் சாவுக்கு.
ஆனால். அவர்களின் இறப்பினை கண் கொண்டு பார்த்திட முடியாதவனாய் குஞ்சரியோடு கிளம்பினான் ரீசன் மீண்டும் மலேசியாவிற்கே மணாளினியவள் ஆசைப்பட.
உடம்பு முடியாமல் போன கயவர்கள் குடியில் ஆந்த்ராக்ஸ் இருப்பதாய் மருத்துவர் சொல்ல கோபங்கொண்ட கள்ளர்கள் விரைந்தனர் பாருக்கு. கண்டுக் கொண்டனர் ரீசனின் தந்திரத்தை கேமராவின் பதிவு காட்சிகள் மூலம்.
விரைந்து வந்தனர் அவனை தேடி மலேசியாவிற்கு ஆணவனின் கதையை முடிக்க. ரீசனின் பழைய வீட்டில் அவனில்லாது போக புது முகவரியும் தெரியாது போக மகள் கீத்துவின் மூலம் அப்பனை தூண்டில் போட்டிட நினைத்தனர் தீயவர்கள்.
சின்னவளோ நயவஞ்சகர்களின் உள்நோக்கம் அறியாது எதார்த்தமாய் கண்ணில் பட்ட மாளிகையொன்றில் பாதுகாப்பு நிமித்தம் நுழைய அங்கே கண்டாள் அவள் டேடி ரீசனையே அரணாய்.
எல்லாம் நன்றாய் போய் கொண்டிருக்க விதி சதி செய்து என்னென்னவோ நடந்து முடிந்து விட்டது.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...

Author: KD
Article Title: அத்தியாயம்: 145
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.