What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

அத்தியாயம்: 146 (இறுதி அத்தியாயம்)

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
509
அத்தியாயம் நூற்றி நாற்பத்தி ஆறு: இறுதி அத்தியாயம்

ஒரு சிறந்த மகளுக்குப் பின்னால் எப்போதுமே அற்புதமான அப்பா ஒருவர் இருந்திடுவார்.

குஞ்சரிக்கும் அப்படித்தான். நம்பிராஜனின் இடத்தை ரீசன் எப்போதோ பிடித்து விட்டான். விதி அதை தெரிந்துக் கொள்ளும் முன்பே போய் சேர்ந்துவிட்டான்.

வாழ்கை பரந்து விரிந்த கடலாகினும் அதற்கான ஆயுள் மிகக்குறைவே. ஆகவே, ஆழியதில் நமக்கான அலையை நாம்தான் சரியாக கண்டறிய வேண்டும்.

என்ன எப்போது எப்படி என்று சூட்சமங்கள் நிரம்பிய அதன் பயணம் என்னவோ பிரம்ம ரகசியமே.

குஞ்சரி அடர்ந்த விண்ணில் கடை பரப்பியிருந்த நட்சத்திரங்களை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.

''சீனியர் அந்த ஸ்டார்ட்ஸ் பார்க்கும் போது உங்க முக்குத்தித்தான் ஞாபகத்துக்கு வருது..''

கேட்டது இல்லாத ரீசனின் குரல் இருக்கின்ற குஞ்சரியின் காதுகளில்.

பாத்தோங் கடற்கரை அலைகளோ இதழ்களாய் மானினியவளின் கால்களை முத்தமிட்டு விலகின.

குலியவளோ நெஞ்சோடு இறுக்கியிருந்தாள் ரீசனின் சாம்பல் நிறைந்த குடுவையை.

''ஜூனியர் உனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துலே உன்னே கலக்க விட போறேன்..''

என்றவளோ மெதுவாய் அரலை நோக்கி பயணித்தாள்.

''இதை இந்த கடல்லே கலந்.. கலந்துட்.. டா.. நீ என்னே விட்டுட்டு போயிடுவியாடா ஜூனியர்..''

என்றவளின் குரலோ தழுதழுக்க கால்களோ தள்ளாடின அரியின் மென்மையான அலையில்.

அழுகை சொல்லாமலே காரிகையின் கன்னங்களில் கொலு கொள்ள, விறலியவள் விரல்களோ மெதுவாய் குடுவையின் மூடியினை திறந்து ஆர்கலியில் மிதக்க விட்டது.

''ஐ.. ஐ..''

என்ற குஞ்சரியோ வார்த்தைகளை உதிர்த்திட முடியாது கதறினாள் குடுவையை முகத்தில் ஒற்றிக் கொண்டு.

''சீனியர்.. இந்த ஜூனியர் எப்போதுமே உங்களுக்குள்ளத்தான்..''

என்றவனின் குரல் வல்லபியின் செவிகளில் தேனாய் இனிக்க,

''ஐ.. ஐ.. லவ் யூ.. ஜூ.. ஜூன்.. ஜூனியர்.. தீனரீசன்.. ரீசன்..''

என்றவளோ அழுகையோடு குடுவைக்குள்ளிருந்த ரீசனின் சாம்பலை ஓதவனத்தில் கொட்டி கலந்திட விட்டாள்.

''ரீசன்.. என்னே விட்டுட்டு போயிடே மாட்டியே..''

என்றவளின் கண்ணீர் நெஞ்சிறங்கும் முன்,

''விட்டுடுவேனா சீனியர்..''

என்ற குரலோடு சிரித்த முகமாய் அன்னையவள் புறங்கையோடு அவள் கரம் ஒட்டினாள் கீத்து.

மகளில் மரித்த புருஷன் ரீசனையே பார்த்தது போன்றதொரு உணர்வைக் கொண்ட குஞ்சரியோ மனதில் அவனை நினைத்துக் கொண்டு கணவனின் மொத்த சாம்பலையும் ஜலத்தில் கலக்க விட்டாள்.

ரீசனின் ஓராண்டு நினைவஞ்சலி முடிந்த ஒரு வாரத்திற்கு பிறகு குஞ்சரியும் கீத்துவும் தாய்லாந்துக்கு வந்திருந்தனர் வெகேஷனுக்காக.

கணவனவனுக்கு மிக இஷ்டமான சலதரத்திலேயே அவனின் அஸ்தி கரைக்கப்பட வேண்டுமென்பது அவன் காதல் மணாளினியின் விருப்பமாகும்.

''சீனியர் வறீங்களா.. பசிக்குது..''

என்று வளர்ந்த லேடி ரீசனோ தாயவளை தூரத்திலிருந்து அழைக்க, கடலை வெறித்திருந்த குஞ்சரியோ மகள் பக்கமாய் திரும்பி முறுவலித்தாள் இல்லையென்று.

அம்மாவின் தலையாட்டலில் மகளவளோ தோள்களை குலுக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடினாள் அருகாமையிலிருந்த உணவு கடையை நோக்கி.

காற்றடித்து முகத்தில் படர்ந்த முடிகளை காதோரம் சொருகிக் கொண்ட குஞ்சரியோ பெருமூச்சொன்றொடு கையிலிருந்த பையை இறுக்கியப்படி திரும்பி கரையை நோக்கி நடந்தாள்.

பிறந்தநாள், கல்யாண நாள் என்று எந்த நாளாகினும் ரீசன் இங்கிருப்போருக்கு ட்ரீட் கொடுப்பது வழக்கமாகும். அடிக்கடி வரும் தம்பதிகள் என்பதால் பெரிதாய் யாரும் குறுக்கு விசாரணையெல்லாம் நிகழ்த்திட மாட்டார்கள்.

கடந்த ஒரு வருடமாய் வராதிருந்த ஜோடியில் இன்றைக்கு குஞ்சரியை மட்டும் அங்கு கண்டவர்கள் ரீசனின் இறப்பிற்கு அவர்களின் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர்.

துக்கம் விசாரித்தவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய ரீசனின் தர்மபத்தினியோ அவர்களிடமிருந்து விடை பெற்று தேடினாள் கணவனவனின் வி.வி.ஐ.பி. மெம்பரை.

அப்படித்தான் சொல்லிடுவான் ரீசன் அந்த குறிப்பிட்ட ஜீவனுக்கு உணவு வழங்கும் பொழுதுகளில். ஆனால், பெரும்பாலும் ரீசன் அந்த ஸ்பெஷல் பெர்சனுக்கு ஆகாரம் கொடுக்கையில் வீல் சேர் மகான் என்னவோ ரொம்பவே பிகு பண்ணிக் கொண்டு குஞ்சரியை ஏறெடுத்திடவே மாட்டான்.

ஆனால், இப்போதோ புருஷனின் டுயூட்டியை பொண்டாட்டிவள் செய்ய வேண்டிய கடமையிலிருக்க அருணியவளின் விழிகளோ அலசி தேடி கண்டது இறுதியாய் அதே வீல் சேர் வி.வி.ஐ.பி.யை. ஓடினாள் ரீசனின் குஞ்சரியவள் உயிர் கொண்ட அஜ்ஜடத்தை நாடி.

''ஹாய்.. எப்படி இருக்கீங்க.. என்னே ஞாபகம் இருக்கா..''

என்றவளோ நெருங்கிய உறவை போல் குசலம் விசாரித்து பையிலிருந்த உணவு பொட்டலமொன்றை கையிலெடுத்தாள்.

வீல் சேர் நடைப்பிணமோ ஒற்றை கையால் சக்கரத்தை முன்னும் பின்னும் தள்ளி அங்கிருந்து நகர பார்த்தது பூவையள் முகம் பார்க்காது குரல் கேட்ட அடுத்த நொடியே.

''எங்க போறீங்க.. இருங்க.. இந்தாங்க சாப்பாடு.. ரெண்டும் உங்களுக்குத்தான்.. ''

என்றவளோ தலை குனிந்திருந்தவனின் மடியில் உணவு பொட்டலங்களை வைத்து,

''எப்போதும் நாங்களா வந்து கொடுப்போம்.. இனி ரீசனின் குஞ்சரியா வருவேன்..''

என்று குளமாகிய கண்களோடு கடலை வெறிக்க, பட்டென்று திரும்பி ஏறெடுத்தான் வீல் சேரில் விளங்காத கால்களோடு முடங்கிக்கிடந்த விஜய் அவனுக்கு எதிரே நின்றிருந்த குஞ்சரியின் முகத்தை.

அவனை முடமாக்கிய ரீசனோ வருடத்தில் ஐந்தாறு முறையாவது குஞ்சரியோடு தாய்லாந்து வந்திடுவான்.

அப்படி வருகையில் யாரின் வாழ்க்கையை சீரழித்ததற்காக விஜய் இப்படி நாடிழந்து வீடிழந்து சூனியமான ஒரு ஈன வாழ்க்கையை வாழ்கின்றானோ அக்குஞ்சரியின் கையாலேயே அவனுக்கு போஜனம் கொடுத்து கர்மாவின் பிரதிபலனை கண்முன் காட்டிடுவான்.

பிறப்பால் ஆணாக இருந்தும் செய்த பாவங்களால் இப்போது பிட்டத்துக்கு கீழான பாகங்கள் வெறுமனே கிடக்க கண்டவனும் காட்டுத்தனமாய் விஜயவனை நாளொன்றுக்கு பலமுறை கொடூரமாய் வன்புணர்வு கொண்டார்கள்.

வெறிப்பிடித்தவர்களின் கைவரிசையில் காம சாஸ்திரத்தில் இல்லா அத்தனை வித்தைகளையும் வலியோடும் வேதனையோடும் அனுபவித்து தினம் தினம் உயிரோடு செத்து கொண்டிருக்கிறான் விஜய்.

சிகை மொத்தமாய் சரிக்கப்பட்டவன் குட்டை கவுன் போட்டு, போலி கூந்தல் கொண்டு, முகத்தில் மேக் ஆப் மற்றும் இதழில் லிப்ஸ்ட்டிக் என்று மொத்தத்தில் பெண்ணாய் அலங்கரிக்கப்பட்டு வீல் சேரில் அமர்த்தப்பட்டிருப்பான் தினமும் விடுதிக்கு வெளியில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு.

இரவானால் பிச்சைக்காரனை போல் அவனை தள்ளி வந்து இப்படி பொது பார்வைக்கு கடலோரம் விட்டு விடுவார்கள் சோம்சாயின் ஆட்கள்.

சிலர் பாவப்பட்டு பணமோ உணவோ தந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் விஜய் விபச்சாரனாய் சோம்சாயின் விடுதிக்குள் அடைக்கப்படுவான்.

பேசவும் முடியாது நடக்கவும் முடியாது இருப்பவனால் அங்கிருந்து ஒருபோதும் தப்பித்திடவும் முடியாது அதைப்பற்றி சிந்தித்திடவும் முடியாது காரணம் அதற்கான எவ்வித வழியும் அங்கில்லை.

குறைந்த விலையில் மனசாட்சியற்ற காம கிறுக்கர்களுக்கு மறுவார்த்தை பேசாது சர்வீஸ் கொடுக்கும் ஒரே பாவப்பட்ட ஜீவன் விஜய் மட்டுமே அங்கு. ஆகவே, எப்போதுமே அவன் மேல் ஒரு கண்ணிருக்கும் சோம்சாயின் ஆட்களுக்கு.

வருடங்களாக இந்நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் விஜய் இதுவரை அவன் செய்த அத்தனை பாவங்களையும் நினைத்து வருந்தாத நாளில்லை எனலாம்.

ஒருமுறையாவது அவனால் சீரழியப்பட்ட தாய்குலங்களை பார்த்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தோன்றியது அவனுக்கு. குறிப்பாய், குஞ்சரியின் காலை கழுவி குடித்திட சொன்னாலும் அதற்கெல்லாம் அடிப்பணியும் அடிமையாகத்தான் இருந்தான் விஜய்.

அப்படியாவது அவனின் கொடூரமான ஈன வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைத்திட வேண்டுமென்று இறைவனை பிராத்தித்துக் கொண்டு காத்திருந்தான் ஆணவன் வாய்ப்பொன்று கிடைக்காத என்றெண்ணி.

திருந்திவிட்டான் என்பதை விட எப்போது சாவான் என்ற பயமே அவனை நொடி பொழுதும் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது எனலாம். உடம்பில் எயிட்ஸ் இருக்க மரணம் எப்போது வரும் என்ற பீதியே அவனை பாதி பைத்தியக்காரனாக்கி விட்டது.

காதல் மனைவி குஞ்சரியின் மீது தீனரீசன் கொண்ட காதலானது சாமணியனின் கோபத்தை சாணக்கிய வழியில் வஞ்சம் தீர்க்க வைத்தது.

''நான் கிளம்பறேன் வி.வி.ஐ.பி. சார்.. நீங்க சாப்பிடுங்க..''

என்று அங்கிருந்து நகர்ந்த குஞ்சரியின் கையை படக்கென்று எக்கி இழுத்தான் விஜய்.

''ஆஹ்ஹ்ஹ்!!''

என்றலறிய பாவையோ பயத்தில் தடுமாறி மணலில் விழுந்தாள்.

அலரவளின் மணிக்கட்டினை இறுக்கமாய் பற்றியிருந்த விஜயின் பிடியோ கொஞ்சமும் தளராதிருக்க,

''ஏய்.. விடு!! பிளீஸ் விடு!! கையே விடு!! என்ன வேணும் உனக்கு!! கையே விடு பிளீஸ்!!''

என்றவளோ அவனோடு போராட ஆணவனின் முகம் பார்க்காது, வீல் சேரிலிருந்து பொத்தென கீழே விழுந்தவனோ பின்னோக்கி போன குஞ்சரியை முன்னோக்கி போனான்.

அதற்குள் கூட்டம் கூடிப்போக, விஜயை அடித்திட ஆரம்பித்தனர் அங்கிருந்த சிலர். அவனோ குரலில்லா வார்த்தைகள் கொண்டு கண்ணீரோடு மன்னிப்பு கேட்டான் பிடி விடுப்பட்ட கையை வலியால் நீவிக்கொண்டிருந்த குஞ்சரியின் முகம் பார்த்து.

முயற்சித்தான் விஜய் கத்தவும் கதறவும். பலனில்லை. சத்தமில்லா பிராயச்சித்தம் கொண்டவனோ அவனின் விக்கை கழட்டி வீசி, உதட்டு சாயத்தை அழித்து அவனின் சுயத்தை குஞ்சரிக்கு காண்பிக்க முயற்சித்து மறுபடியும் முன்னோக்கினான் எக்கி தொட ரீசனின் மணவாட்டியை.

''டேய்!!''

என்ற கர்ஜனையோடு ஆவேசமாய் கூட்டத்தை பின் தள்ளி முந்தி வந்த கீத்துவோ,

''தொலைச்சிடுவேன்!!''

என்று சீறி விஜயின் நெஞ்சில் கரம் பதித்து பின்னோக்கி தள்ளினாள் அவனை வீல் சேர் பாதையற்று பயணிக்க.

ஆடிப்போனான் விஜய் ஒரு கணம் ரீசனையே கண்ணெதிரில் கண்டது போல். கீத்துவின் பார்வையும் மிரட்டலும் அவனை வீல் சேரிலேயே சிறுநீர் கழிக்க வைத்தது.

''வாங்க சீனியர்!!''

என்ற கீத்துவோ அவள் அம்மா குஞ்சரியின் கையை இறுக்கியப்படி அங்கிருந்து நடையைக் கட்டினாள்.

விஜயோ வலிப்பு வந்தவனாய் நா வாயோரம் இழுத்துக் கொண்டு போக வீல் சேரிலிருந்து கீழே விழுந்தான் அலையடிக்கும் கடலோரம்.

''மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
கட்டியுருட்டு கால் கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர் வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடு விடு வேலை வெருண்டது ஓட!!''

என்ற கீத்துவோ சனீஸ்வரனிடத்தில் உயிர் பிச்சை கேட்டு இழுத்துக் கொண்டிருக்கும் விஜயை கொல்லும் பார்வை பார்த்தப்படி ஒற்றை விரல் கொண்டு எச்சரித்து தலையை திரும்பினாள் தேவகுஞ்சரியின் மணாளனான தீனரீசனாய்.

இல்லாது போனாலும் லேடி பீஸ்ட் குஞ்சரியை அவளுக்குள்ளிருந்து ஆழும் பிக் பாஸ் அவளின் ரீசன் ஒருவனே.

முற்றும்!
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 146 (இறுதி அத்தியாயம்)
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top