- Joined
- Jul 10, 2024
- Messages
- 288
அத்தியாயம் 46
ஒருவழியாய் சாந்தமாகியிருந்தாள் குஞ்சரி. அவளை அப்படியே நெஞ்சில் போட்டு தலைகோதியவனோ அவளின் இந்நிலையை கண்டு கவலைக் கொள்ளாமல் இல்லாமல்.
''ரீசன்.. நான் தூங்கவா..''
இல்லத்தரசி அவள்தான் கேட்டாள். கணவனவனோ போர்வையை இழுத்து போர்த்தி மனைவியின் முதுகை தட்டினான் அருணியவள் தூங்கிட.
காரிகையின் விடியற்காலை கூத்துக்கு காரணமான டைரியோ கட்டிலுக்கு அடியில் கொக்களிப்பு கொண்டிருந்தது.
தீனவானன், தேவகுஞ்சரியின் புருஷனான தீனரீசனின் அண்ணன். படிப்பிலும் சரி நடத்தையிலும் சரி இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டிடாது.
அண்ணன் அப்பாவின் பேச்சை தட்டிடாத அக்மார்க் நல்லவன். சின்னவனோ அம்மாவின் முந்தானையை வால் பிடிக்கும் அடங்காதவன்.
நன்றாய் படிக்கின்ற தீனவானனுக்கு மேற்படிப்பை வெளிநாட்டில் தொடர்ந்திட பெரும் ஆசை. கெமிஸ்ட்ரி பேராசிரியர் ஆகிட வேண்டுமென்பது அவனின் லட்சியம்.
அதுவும் பிரான்ஸ் நாட்டில் சென்று படித்து பட்டம் வாங்கிடணும் என்பது சிறுவயது முதல் கொண்ட கனவு. அப்பாவைப் போலவே அவனுக்கும் ஆசிரியர் தொழில் மீது அளவுக்கடந்த விருப்பம்.
இருந்தும் என்செய்ய ஆணவனின் ஆசைக்கு பணம் ஒரு தடையாகிப் போனது. மிடில் கிளாஸ் குடும்பத்தால் வெளிநாட்டு கல்லூரிக்கான பெரிய தொகையை திரட்டிட முடியவில்லை. அப்பாவை கடனாளியாக்கித்தான் படிக்கணும் எனும் நிலையை பெரியவன் விரும்பவில்லை.
ஆகவே, தீனவானனவன் மேற்கல்வியை அயல் நாட்டில் தொடர்ந்திட கொண்டிருந்த ஆசையை கைவிட்டு உள்ளூரிலேயே படித்திட ஆரம்பித்தான்.
தம்பியோ அண்ணாவின் காலேஜுக்கு எதிர் காலேஜில் வந்து சேர்ந்தான். முதல் நாளில் ரேகிங் செய்த சீனியர் குஞ்சரி பின்னாளில் அவனை துரத்தி வந்து காதல் செய்த காலமது.
படிப்பே கதியென்று கிடந்த தீனவானனின் நெஞ்சுக்குள்ளும் ஒரு காதல் பூத்தது. பைக் ஒருநாள் மக்கர் செய்ய அன்றைக்குத்தான் முதன் முதலான ரயில் பயணத்தில் பாவையவளை பார்த்தான் ஆணவன்.
இதைத்தான் கண்டதும் காதல் என்பார்கள் போல. மஹாலக்ஷ்மி கணக்காய் கையெடுத்து கும்பிடும் வனப்பில் இருந்தாள் பால் வெள்ளை கலர் சேலை அணிந்திருந்த அனிச்சமவள்.
இடைவரை நீண்டிருந்தது கோர முடி. அதிலோ அதீதமாய் இறுக்கிடாத தொளதொளக்கும் ஜடை. காதிலோ தங்க தேராட்டம் ஜிமிக்கி. இடக்கையிலோ கண்ணாடி வளையல்கள் வலக்கையிலோ கடிகாரம்.
காதோரமோ ரோஜா, குழல் சுற்றியோ மல்லிகை. கைவிரல்களிலோ மருதாணி, கால்களிலோ தூக்கில்லா செப்பல். ஆகமொத்தம் குடும்ப குத்துவிளக்காய் சும்மா கும்மென்று இருந்தாள் இயமானியவள்.
கழுத்திலிருந்த சின்ன தங்க சங்கிலி, நெற்றியிலிருந்த திருநீர் கீற்று, உதட்டின் லைட் ரோஸ் கலர் லிப் க்ளோஸ் என்று ஆயிழையவளை கண்ட நொடியே இன்ச் இன்சாக அளந்து விட்டான் முழுநீள சட்டை கைகளை முழங்கை வரை மடக்கி விட்டு பாக்ஸ் கட்டு ஹேர் ஸ்டைல் கொண்டிருந்த தீனவானனவன்.
ஒருமுறை பார்த்த அம்மணியின் தரிசனம் தினம் காண ஏங்கினான் படிப்பாளியவன். ஆகவே, ரயில் ஸ்டேஷன் வரைக்கும் பைக்கில் வந்து அங்கிருந்து கல்லூரிக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டான்.
அழகு சிலை சுந்தரியோ காளையவன் இறங்கும் அதே ஸ்டேஷனில் இறங்கி பின் அவளின் காலேஜுக்கு நடையைக் கட்டினாள். தம்பி ரீசன் படிக்கும் அதே கல்லூரியில் தாரகையவள் படிக்கக் கண்ட தீனவானனோ அளவில்லா ஆனந்தம் கொண்டான்.
தம்பி ரீசனின் மூலம் மங்கையவளிடத்தில் உறவு வளர்க்க பார்த்தான். அதற்கு முதலில் தம்பியை காக்கா பிடித்திட ஆரம்பித்தான். வேறென்னே பெருசாய் ரீசன் கேட்டுவிட போகிறான் எல்லாம் அண்ணன் தீனவானனின் பைக்கைத்தான்.
அப்பா மகனுக்கு கொஞ்சம் காஸ்ட்லியான பைக்கும் அம்மா புள்ளைக்கு கடமைக்கு ஒரு பைக்கையும் வாங்கிக் கொடுத்திருந்தார் பெத்தவர். ஆனால், ரீசனுக்கு எப்போதுமே அண்ணாவின் பைக் மீதுதான் ஆசை அதிகம்.
எப்போதெல்லாம் கேப் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மவராசன் தீனவானனின் பைக்கை தூக்கிக் கொண்டு பறந்திடுவான். ஆகவே, அண்ணனின் வருங்காலத்தை பற்றிய தகவல்களை திரட்டிட ரீசனுக்கான லஞ்சம் என்னவோ அண்ணாவின் பைக்தான்.
அண்ணன் கேட்டுக் கொண்டப்படி தம்பி ரீசனோ அண்ணியின் வரலாறை கரைத்து குடித்து வர தீனவானனோ ரெடியாகினான் காதல் பரிட்சை எழுதிட.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 46
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.