- Joined
- Jul 10, 2024
- Messages
- 509
அத்தியாயம் 64
தீனவானன் இறந்து ஒரு வாரம் கடந்திருக்க வாத்தியாரும் அவரின் குடும்பமும் வேறு இடத்திற்கு மாற்றலாகி போயிருந்தனர்.
எந்த பெற்றோரால் ஜீரணிக்க முடியும் கல்யாணங்கட்டி அழகு பார்த்திட வேண்டிய மகனுக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பிடும் கொடுமையை.
புது இல்லம் வசதியாக இருந்தாலும் யார் மனதிலும் மகிழ்ச்சியில்லை. ரீசனோ பெற்றவர்களின் முகத்தை தலைநிமிர்ந்து கூட பார்த்திடவில்லை.
ஏன் அவனின் பைக்கை கூட அவன் தொடவில்லை. சிலகாலங்கள் அறைக்குள்ளேயே அடைந்துக் கிடந்தான். குஞ்சரியிடத்தில் எதுவுமே அவன் சொல்லிக் கொள்ளவில்லை.
காதலியவள் அறியாது போன அண்ணனவன் தெரியாதவானாகவே இருந்துவிட்டு போகட்டும் என்று தீர்மானித்து விட்டான்.
வாரங்கள் மாதங்கள் ஆகியது. வீட்டை போல் அதில் வசிக்கின்ற முகங்களும் விரிச்சோடியே இருந்தது.
எப்போதுமே அம்மா, அம்மாவென்று தாய் அம்பாளின் வால் பிடித்து அலைபவன் முகம் மட்டுமின்றி அகமும் இறுகி போய்தான் கிடந்தது. குற்ற உணர்ச்சியில் துடித்தவன் பரிகாரம் தெரியாது அல்லாடினான்.
தீனாவிற்கு கொல்லி வைத்த நாளிலிருந்தே அவனுக்கும் அவன் தந்தைக்குமான உறவில் விரிசல் விழுந்தது. இருவரும் பேச்சற்றே போயினர். நடுநிலை சிப்பாயாக அம்பாள் வேடம் பூண்டார்.
இதில் வேடிக்கையாதெனில் தீனவானன் ஒட்டிப்போன பைக்கோ மேஜரான எவ்வித சேதாரமுமின்று காவல் துறையினரால் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டது.
விசாரணையின் முடிவில் அண்ணனின் பைக் மற்றும் ஹெல்மட் உட்பட எல்லாமும் ரீசனிடமே ஒப்படைக்கப்பட்டது. காவல் நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பைக் அக்குடும்பத்தின் சொச்ச நிம்மதியையும் கெடுத்தது.
அண்ணன் இல்லாது போன குறையை அவன் பைக்காவது தீர்க்கட்டும் என்றெண்ணிய ரீசன் அதையே கல்லூரி போக பயன்படுத்தினான். வாரத்துக்கு இருமுறை ஆக்சிடெண்ட் என்ற சம்பவம் தாயின் வயிற்றில் புளியை கரைத்தது.
என்னதான் மிகப்பெரிய விபத்துகள் ஏதுமில்லை என்றாலும் அடிக்கடி ரீசன் வாரி விழுந்து வந்து சேர்வது அம்பாளுக்கு சரியாய் படவில்லை. இருப்பதோ இப்போதைக்கு இவன் ஒருவனே என்ற நம்பிக்கை அச்சத்தை கிளப்பியது தாயிக்குள் அதுவும் மூத்தவன் சனிக்கிழமையன்று உயிர் விட்டிருக்க.
தீனவானனின் பைக்கை தாய் அம்பாள் தலைமுழுக சொல்ல, சொல் பேச்சை கேட்காத மகனோ அவனாகவே ஒருமுறை லாரிக்கு அடியில் சிக்கிட பார்த்த சம்பவம் அவனுக்குமே பீதியை கிளம்பி விட்டிருந்தது.
பித்து பிடித்தவனாட்டம் இருந்தவனை மசூதிக்கு கூட்டி போய் மந்திரித்து விட, கொஞ்ச நாட்களில் பழைய நிலைக்கு திரும்பியிருந்தான் ரீசன்.
சம்பவத்தின் முடிவில் வாத்தியாருக்கு அட்டாக் வந்ததுதான் மிச்சம். சின்னவனிடம் பேசாதிருந்தவர் பதறித்தான் போனார் இருக்கின்ற ஒரே ஒரு கறிவேப்பிலை கொத்து தீனரீசனுக்கும் ஏதாவது ஆகி தொலைந்திடுமோ என்று.
ஆகவே, அவராகவே முன் வந்து சொன்னார் மூத்தவனின் ஆசை பைக்கை விற்க சொல்லி. மறுப்பேதும் சொல்லாத ரீசனோ அப்பைக்கை அப்பாவின் கோரிக்கைப்படி விற்றிட முடிவு செய்தான்.
தனியார் ஆட்களிடம் விற்பதை விட கடையில் விற்பதே மேல் என்று தோன்றியது அனுபவஸ்தனுக்கு. எப்படி ஆணவனால் மறக்கவும் மறுக்கவும் முடியும் ஒரு குறையுமின்றி சர்வீஸ் செய்து ஓட்டி வந்த பைக் சடீரென்று பிரேக் பிடித்திட முடியாது போய் லாரிக்கு அடியில் சரிந்ததை.
கடவுள் புண்ணியத்தில் தப்பித்தது அன்றைக்கு ரீசனின் தலை அண்ணனின் ஹெல்மட்டால். அதன் மேற்பரப்பில்தான் கருப்பு வர்ண பெயிண்ட் கொஞ்சம் வெளியாகி இருந்தது.
சரி செய்ய வேண்டியவைகளை சரிபார்த்த ரீசன் அவைகளை பைக் ரிப்பேர் பார்க்கின்ற கடையொன்றில் விற்றான். அதில் கிடைத்த பணத்தை தூக்கிக் கொண்டு போனான் மயிலினியின் வீடு தேடி கொழுந்தனவன்.
வருங்கால அண்ணியின் வீடு பூட்டிக்கிடக்க அக்கம் பக்கம் விசாரித்தவன் தெரிந்துக் கொண்டான் அண்ணியும் அண்ணனோடு சொர்க்கத்தில் கலந்தாயிற்று என்று. ரீசன் அறிந்தவரை மயிலினி கர்ப்பம், வாத்தியார் மகன் கைவிட்டு விட்டான் என்ற தகவலே.
தீனாவின் சொத்தை விற்று கிடைத்த பணத்தை அப்படியே கொண்டு போய் பத்துகேவ்ஸ் முருகன் கோவில் உண்டியலில் போட்டான் ரீசன்.
தெரிந்தும் தெரியாமலும் அண்ணன் அண்ணி உயிர் போக அவன் காரணமாகி போனதை உணர்ந்தவன் பாவமன்னிப்பை முருகனிடத்தில் வைத்தான்.
தீனரீசனவன், அவன் வாழ்வில் தீனவானன் என்ற செப்டருக்கும் (chapter) சேர்த்தே புள்ளி ஒன்றை வைத்தான்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 64
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.