What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
496
அத்தியாயம் 73

இரவு மணி பத்து.

குட்டி தீனாவின் பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு அரக்க பரக்க ஓடி வந்தாள் அமரா. கணக்கிட்டிருந்த நேரத்தை தாண்டி நெடுநேரம் கடந்திருந்த பதைப்பு பெண்ணவள் முகத்தில் தாண்டவமாடியது.

வாசலை அடைந்த அந்திகைக்கோ பக்கென்றது வீட்டின் முதன்மையான க்ரில் கேட் பாவென்று திறந்திருக்க. என்னானதோ ஏதானதோ என்று பதறியவளோ அவசர அவசரமாய் இறங்கினாள் காரிலிருந்து.

வீட்டுக்குள் நுழையும் முன் காரிகையின் கண்கள் வாசலில் ரீசனின் காரை கண்ட மாத்திரத்தில் நிம்மதி பெருமூச்சு ஒன்று கொண்டாள்.

விரைந்து மேல் மாடி நோக்கிய நங்கையவளை குஞ்சரியின் அலங்கோலமான அறையே வரவேற்றது.

பொருட்கள் எல்லாம் தரையில் கிடக்க, பதறிய அமராவின் விழிகளோ ஆயிழையவள் தனிமையில் விட்டு போன பேதையை தேடியது. குஞ்சரியின் நவீன மின்சார சக்கர நாற்காலியோ ஒரு ஓரமாய் கவிழ்ந்துக் கிடக்க, அமராவிற்கோ ஒவ்வொரு வினாடியும் பக்கு பக்கென்றது.

யாருமற்ற அறையின் பால்கனி கதவு திறந்திருக்க, அங்கோர் உருவமொன்று நிற்பதை ஓரளவு கண்டுக்கொண்டவளோ டக்கென்று அடிகளை துரிதப்படுத்தினாள் அவ்விடம் நோக்கி.

பால்கனி சுவற்றின் விளிம்புகளை பற்றியப்படி நின்றிருந்தான் ரீசன்.

''ரீசன்! ரீசன்! என்னாச்சு ரீசன்!''

தவித்தவள் கேட்க, ஆணவனோ சும்மாவே நின்றான் பதிலேதும் பேசாது. ஏன் திரும்பிக்கூட பார்த்திடவில்லையே இயமானியவளின் முகத்தை குஞ்சரியின் புருஷனவன்.

''ரீசன்.. உங்களத்தான் கேட்கறேன்! என்னாச்சு! சொல்லுங்க!''

''இன்னும் என்னாகனும்! அதான் மொத்தமா சிதைச்சிட்டிங்களே என் குஞ்சரியே!

என்றவனின் அலறலில் திடுக்கிட்டு போனாள் அமரா.

''ரீசன் என்ன சொல்றீங்க நீங்க.. எனக்கு ஒன்னும் புரியலே.. குஞ்சரி எங்கே.. ஏன் ரூம் இப்படி அலங்கோலமா இருக்கு..''

அமராவின் அலங்கோலம் என்ற வார்த்தையை கேட்ட ரீசனின் கண்களோ கலங்கி ஊற்றின கண்ணீரை.

''என்னாச்சு ரீசன்! சொல்லுங்க குஞ்சரி எங்கே!''

என்றவள் கேட்க, கோபங்கொண்டவனாய் பால்கனியிலிருந்து அறைக்குள் நுழைந்தான் ரீசன் முன்னிருப்பவளை இடித்து தள்ளி.

''ரீசன் பிளீஸ்.. சொல்லுங்க என்னாச்சு குஞ்சரிக்கு.. எங்க குஞ்சரி..''

அறையின் சொந்தக்காரி அங்கில்லாதிருக்க படபடக்கும் இதயம் வேறென்னே நினைக்கும் அவள் தற்கொலைக்கு முயன்றுள்ளாள் என்பதை தவிர்த்து.

அதுவும் அடிக்கடி இப்படி ஏதாவது குளறுபடி செய்வதொன்றும் குஞ்சரிக்கு புதுசில்லை. அவளின் நோய் அப்படி.

''ஒரு ரெண்டு ஹவர் நான் வர லேட்டாச்சு! அதுக்குள்ள பொறுக்க முடியாமே கிளம்பி போய்ட்டிங்கள்ளே!''

என்றவனோ அம்பகங்களில் ஊற்றெடுத்த அருவியை வலக்கை ஷோல்டர் மூலம் துடைக்க,

''ரீசன் தயவு செஞ்சு கொஞ்சம் புரியறே மாதிரி பேசுங்க பிளீஸ்.. நான் வீட்டுக்கு போனதுக்கும் நீங்க லேட்டா வந்ததுக்கும் இப்போ குஞ்சரி இங்க இல்லாமே இருக்கறதுக்கும் என்ன சம்பந்தம்!''

''நீங்க மட்டும் இங்கிருந்து போகாமே இருந்திருந்தா இன்னைக்கு என் குஞ்சரிக்கு இந்த நிலைமை வந்திருக்காது அமரா!''

கத்தினான் சினத்தில் கொலு கொண்டவன்.

''ஐயோ ரீசன் முதல்லே குஞ்சரிக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க!''

''என்ன சொல்லே அமரா! என்னே சொல்லே! நான் வரும் போது எப்படி இருந்தா தெரியுமா என் குஞ்சரி! ஒரு பொட்டு துணி கூட இல்லாமே கட்டில்லே செத்த பிணம் மாதிரி கிடந்தா அமரா என் குஞ்சரி! செத்த பிணம் மாதிரி!''

என்றவனோ கதறினான் தரையில் மண்டியிட்டு மனைவியின் துகிலுரியப்பட்ட ஆடைகளை கையிலேந்தி.

அமராவோ வாய் பொத்தி பேச்சற்று நின்றாள் அதிர்ச்சியில் நடந்தேறிய கொடூரம் அறியாது.

கதறியவனோ வலியோடு மொழிந்தான் வார்த்தைகளை.

''என்னாச்சு ஏதாச்சின்னு நான் கேட்கும் போது கூட என் முகத்தே என் குஞ்சாய் பார்க்கவே இல்லே அமரா! பார்க்க மாட்டேன்னு சொல்லாமே சொல்லி கண்ணே மூடிக்கிட்டா அமரா! உடம்பு முழுக்க காயம் அமரா! டாக்டர் சொல்றாங்க அவளே யாரோ ரேப் பண்..''

முடியவில்லை ரீசனால் மேற்கொண்டு வாக்கியத்தை முடித்திட, அழுகையின் ஊடே பளிங்குத் தரையில் மொத்தமாய் சரிந்து விட்டான் காதலித்து குஞ்சரியை கைப்பிடித்தவன் பொஞ்சாதியின் பாவாடையை முகத்தோடு சேர்த்தணைத்துக் கொண்டு.

''ரீசன் உங்களே எப்படி சமாதானப்படுத்தறதுன்னே எனக்கு தெரியலே.. யார் இப்படி குஞ்சரியே பண்ணிருப்பா.. கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாத மிருகம்! அவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது! நீங்க மனச தளர விட்டுடாதீங்க ரீசன்.. கண்டிப்பா இந்த ஈனக்காரியத்தை செஞ்சவனை கர்மா வெச்சு செய்யும்!''

என்றவளோ தரையில் படுத்துக் கிடப்பவனை மேல் தூக்க முயற்சிக்க,

''அப்போ உங்களே..''

என்ற கேள்வியோடு தள்ளி விட்டான் ரீசன் அவன் தோளிலிருந்த அமராவின் கையை.

''என்ன சொல்றீங்க ரீசன்.. எனக்கு புரியலே..''

''எப்படி புரியும்! உடம்பு முடியாத ஒரு பொண்ணே பார்த்துக்கறதை விட உங்களுக்கு கேலியும் கூத்தும்தானே முக்கியமா போச்சு! நீங்க கூத்தடிக்க போய்தானே இங்க என் பொண்டாட்டி நாசமா போயிட்டா!''

குஞ்சரியின் நிலைக்கு அமரா பக்கமில்லாது போனதே காரணமென்றெண்ணி அவள் மீது பழி சுமத்தினான் ரீசன்.

''ரீசன் என்னே பேசறீங்க நீங்க! கொஞ்சம் மரியாதையா பேசுங்க! எனக்கு புரியுது குஞ்சரிக்கு இப்படி ஆச்சிங்கிற வலி வேதனையிலே நீங்க இருக்கீங்க அதுக்காக என்னையும் என் சார்ந்த விஷயங்களையும் நீங்க தரைகுறைவா பேசறதே என்னாலே அனுமதிக்க முடியாது!''

கூத்து என்றொரு வார்த்தை அமராவை சீறிட வைத்தது ஆணவனிடத்தில்.

''வேலை பார்க்க கை நீட்டி காசு வாங்கிட்டா அந்த வேலையே சரியா பார்க்கணும்! முடியலையா மூடிக்கிட்டு போயிடணும்! காசையும் வாங்கிக்கிட்டு வேலை நேரத்துலே கண்ட இடத்துலே சுத்திக்கிட்டு இப்படி பொறுப்பில்லே இருக்கறே உங்களுக்கு எதுக்கு மரியாதை!''

''என்னே ரீசன் விட்டா ரொம்ப பேசறீங்க! இது நாமே ஏற்கனவே பேசி வெச்ச டைம் ரிலீவ்தான் (time relief)! இந்த ஜோப் ஓகே பண்ணும் போது கூட நான் உங்களுக்கு இந்த ஃபங்க்ஷன் பத்தி அலர்ட் (alert) பண்ணேன்! நீங்களும் அப்போ ஓகேன்னுதான் சொன்னிங்க! மறந்துட்டிங்களா!''

என்றவளின் நினைவூட்டலில் அன்றைய ஒப்புதல்கள் என்னதான் நினைவுக்கு வந்தாலுமே அதை ஓரந்தள்ளி அருணியவளையே குஞ்சரியின் நிலைக்கு காரணமென கருதினான் நொந்து போனவன்.

''நல்ல ஞாபகம் வெச்சுக்கோங்க! நானா ஒன்னும் உங்க பொண்டாட்டியே பார்த்துக்க வறேன்னு சொல்லி கெஞ்சலே! அதை பண்ணது உங்க பொண்டாட்டிதான்!''

என்றவளோ அவளின் வாதத்திற்கான சரியான பாயிண்டை முன்னெடுத்து வைத்தாள்.

''அலட்சியத்துக்கு காரணம் சொல்றிங்களா!''

என்றவனோ விடாது முட்டுக் கொடுத்தான்.

''அலட்சியமா!! எனக்கா!''

பார்வைகளால் முன்னிருந்தவனை எரித்த அமரா தொடர்ந்தாள் அவளின் குமுறல்களை.

''மெண்டலி அன்ஸ்டேபல் பேஷண்டே (mentally unstable patient) டாக்டர் அப்சர்வேஷன் (observation) இல்லாமே வீட்டுலே வெச்சிருக்கறதே தப்பு! அதுவும் வைலண்டா பிவேவ் (violent behave) பண்ணி அடுத்தவங்களே காயப்படுத்தறே மாதிரியான ஒரு அக்ரசீவ் ஹேண்டிகேப்பே (aggressive handicap) எந்த ஒரு செக்யூரிட்டி மெஷர்மெண்டும் (security measurements) இல்லாமே ஈவன் (even) இந்த வீட்டுக்கு கூட ஒரு செக்யூரிட்டி கார்ட் (security guard) அப்பாயிண்ட் (appoint) பண்ணாமே இருக்கற உங்களோட அத்தனை இக்னோரன்ஸையும் (ignorance) சகிச்சுக்கிட்டு இருக்கறே எனக்கு அலட்சியமா!!''

என்றவளின் கொப்பளித்த வார்த்தைகளில் வாயடைத்தே நின்றிருந்தான் ரீசன்.

''தப்பு பண்ணிட்டேன்! ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்! உங்க ரெண்டு பேரோட காதல் என் கண்ணே மறைச்சிடுச்சு! அதான்.. குஞ்சரி என் மேல சுடு தண்ணி ஊத்தின போதும்.. ஹை ஹில்ஸாலே அடிச்ச போதும்.. கண்ணாடி போத்தலோ தூக்கி வீசின போதும்.. ஏன்.. நமக்குள்ள தொடர்பிருக்கின்னு வாய் கூசாமே சந்தேகப்பட்டு என் நடத்தையே அசிங்கமா பேசின பிறகும் அந்த தப்பான பேரோடையே தினந்தினம் இந்த வீட்டுக்கு வந்து உங்க பொண்டாட்டிக்கு நான் சோறாக்கி ஊட்டலே! குளிப்பாட்டி தூங்க வைக்கலே! அவுங்களோட மோஷன் போன டைப்பரே மாத்தலே!''

என்று ஆவேசமாய் கத்திய அமராவிற்கோ விலோசனங்களில் கண்ணீர் நிற்கவில்லை. பொலபொலத்து விட்டது ஆர்ப்பரித்து.

''இன்னைக்கு குஞ்சரிக்கு இப்படி நடந்ததுக்கு நான் பக்கத்துலே இல்லாததுதான் காரணம்ன்னு நீங்க சொன்னா.. மெண்டல் ஹோஸ்ப்பிட்டல்லே இருக்க வேண்டிய குஞ்சரியே வீட்டுலே வெச்சு ட்ரீட்மெண்ட் பார்த்த நீங்களும்தான் இதுக்கு ஒரு காரணம்ன்னு நான் சொல்லுவேன்!''

''அமரா!!''

என்றவனோ அலறலின் முடிவினில் வஞ்சியவளின் முகத்தை நோக்கி கையை உயர்த்தியிருந்தான் அறைந்திடும் தோரணையில். குஞ்சரியை பைத்தியமென்று சொல்லாமல் சொல்லிய அமராவின் மீது கடுங்கோபம் கொண்டான் கட்டியவனவன்.

பயந்து பின்னோக்கியிருந்த வதனியவாளோ,

''உங்க குஞ்சரி.. நான் உங்களே வளைச்சு போட்டுக்கிட்டேன்னு சொல்லி என் நம்பரே கோல் கேர்ள்ஸ் சைட்லே போட்டதும் எனக்கு தெரியும்.. அதை நீங்க காசு கொடுத்து ரீமூவ் பண்ண சொன்னதும் எனக்கு தெரியும்..''

என்றுச் சொல்லி அங்கிருந்து ஓடினாள் கதறியப்படியே.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…


முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 73
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top