- Joined
- Jul 10, 2024
- Messages
- 415
அத்தியாயம் 74
பூட்டியிருந்த மாளிகையின் கதவை திறந்து உள்ளே சென்றாள் விசா. அப்பா தேவேந்திரன் இறந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்திருந்தது.
காலையிலேயே ப்ரீதன் உடன் வர சிவன் சன்னிதானத்தில் மோட்ச விளக்கொன்றை படைத்தது விட்டு நேராய் இங்கு வந்து சேர்ந்திருந்தாள் ஒற்றை பெண்ணவள்.
மருமகனில்லா ப்ரீதனோ அந்திகையவளை அவளின் பழைய பங்களாவின் முன் இறக்கி விட்டு வேலை நிமித்தமாய் கிளம்பியிருந்தான்.
தூசு படிந்த இல்லத்தளவாடங்களை விரல்களால் தொட்டுரசிய தெரிவையவளோ மெதுவாய் கையை அலமாரியின் மீதிருந்த புகைப்படங்களை நோக்கி கொண்டு சென்றாள்.
தேவேந்திரன் விசா என இருவர் இருக்கும் படம் தொடங்கி விசா பெரிய பெண்ணாக வளர்ந்திருந்த படம் கடந்து இறுதியாய் சிரித்திருந்தது மயிலினியின் படம்.
நேத்திரங்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்க மெதுவாய் அப்படத்தை கையிலெடுத்தவளோ நடையை கட்டினாள் வீட்டின் நடு முற்றத்தில் அனாதையாய் கிடந்த ஊஞ்சலை நோக்கி.
அதிலேறி அமர்ந்தவள் சாய்த்துக் கொண்டாள் தலையை ஊஞ்சல் கம்பியினில். கால்களை வசதியாய் நீட்டிக் கொண்டவளோ வலக்கையால் அக்கா மயிலினியின் படத்தை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள்.
இடக்கையோ ஊஞ்சலின் கம்பியினை பற்றி கொண்டிருக்க, நாயகியின் நயனங்களோ மூடிக்கொண்டன அன்றைய சம்பத்தை அசைப்போட்டு பார்த்திட.
முதல் முறை நடந்த கசமுசாவில் உண்டாகாத விசா இரண்டாவது முறையாய் அரங்கேறிய அரங்கேற்றத்தில் அம்மாவாகியிருந்தாள்.
உண்டாகிய கருவை உண்டில்லாமல் ஆக்கிட காரிகையவள் முயற்சிக்க, மங்கையவளின் எண்ணமோ தோல்வியில் முடிந்தது காலம் கடந்து கர்மா அதன் வேலையை செய்ய தொடங்கியிருந்ததால்.
நிலைமை கைமீறும் முன்னே பேதையவளோ போய் நின்றாள் அவளுக்கொரு வழிகேட்டு மானத்தை பறிகொடுத்தவனிடமே. ஆனால், கை வைத்தவனோ உதவ முடியாதென்று கையை விரிக்க வஞ்சிக்கப்பட்ட வதனியோ நியாயம் கேட்டு போனாள் தொட்டவனின் தர்மபத்தினியை தேடி.
ரீசனின் பொஞ்சாதி குஞ்சரியோ விடயம் அறிந்து தாம் தூமென்றிட சின்னவளிடம், ரகசியமாய் விஷயத்தை அடைகாத்தவளோ அடங்கி போகவே பார்த்தாள் குட்டு வேறு யாருக்கும் வெளிப்படாமல் இருக்க குறிப்பாய் அவளின் அப்பா தேவேந்திரன் அறியாதிருக்க.
ஆனது ஆகி போச்சு அவரவர் பிழைப்பை அவரவர் பார்ப்போம் என்று காரணமானவன் கை கழுவ, தன்மானம் இழந்தவளோ ஜனித்த குழந்தைக்கு அப்பனின் இனிஷியலை மட்டுமே வேண்டி நின்றாள்.
பிரச்சனையின் வீரியம் கட்டியவளின் காது கடிக்க, முடிவெடுத்தவளோ சொத்தை கொடுத்து ஆண் வாரிசை சுமந்திருக்கும் சக்காளத்தியை நாட்டை விட்டே போக சொல்லிட அவளில்லம் விரைந்தாள்.
பேரம் பேசினாள் மெத்த படித்த பொண்டாட்டியவள் வைப்பாட்டியாய் ஆக துடித்த முதிர்ச்சியற்ற சின்னவளிடம்.
மானத்துக்கு பணம் ஈடாகுமா என்ற சூடான வாதத்தின் நடுவினில் குஞ்சரியின் கண்களில் பட்டது அலமாரியின் மீதிருந்த மயிலினியின் படம்.
''இவே ஃபோட்டோ இங்க எப்படி!''
ஆடிப்போனாள் ஒருகாலத்தில் ஒரு பாவமும் அறியாத வாய் பேசா அலரவளை துடிதுடிக்க வைத்த காட்சியை எண்ணி.
''இவுங்களே உங்களுக்கு தெரியுமாக்கா..''
அப்போதும் உரிமைக் கொண்டே அழைத்தாள் விசா அக்காவென்று குஞ்சரியை.
''சொல்லு விசா! சொல்லு! சொல்லு! இவே படம் இங்க எதுக்கு இருக்கு! எதுக்கு இங்க இருக்கு! யாரிவே! இவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்!''
என்றவளோ கர்ப்பிணியை உலுக்கியெடுத்தாள் ஆவேசங்கொண்டு.
''அக்கா.. விடுங்கக்கா.. அக்கா..''
பதறி விட்டாள் புள்ளைத்தாச்சியவள் பெரியவள் குலுக்கிய குலுக்கில் வயிற்று பிள்ளை காணாமல் போயிடுமோ என்ற பயத்தில்.
''கேட்கறேன்லே சொல்லித் தொலையேன்! இந்த படம் ஏன் இந்த வீட்டுலே இருக்கு! ஏன்! ஏன்! ஏன்!''
என்ற குஞ்சரியோ அடங்காது போனாள் பேய் பிடித்தவளாட்டம்.
''யாருடி இது! ஆர்ஹ்! யாரு! இது உன் அக்காவா! சொல்லு! இல்லே பிரெண்டா!''
என்றவளின் நறநறத்த பற்களின் வார்த்தைகள் அடுத்த வார்த்தையை உதிர்க்கும் முன்னே சப்பு சப்பென்று விழுந்தது சப்பாத்தி கணக்காய் விசாவின் இரு கன்னங்களிலும் அறைகள்.
''அக்கா! வேணாக்கா! வலிக்குதுக்கா! ஏன்கா அடிக்கறீங்க!''
வலியில் துடித்தவள் பபின்னாக பார்க்க, கொத்தாய் கோமகளவளின் குழலை கையிலிருக்கிய குஞ்சரியோ அவளை சோபாவில் வேகங்கொண்டு தள்ளினாள்.
''அக்கா! விடுங்கக்கா! அக்கா! வலிக்குதுக்கா! மயக்கம் வருதுக்கா! அக்கா!''
நா வறண்டு மூச்சடைக்க, விசாவின் நெயில் பாலிஷ் கொண்ட கால் விரல்களோ தரையை அழுத்தின.
''அன்னைக்கு அந்த சண்டாளி என் ரீசனே சொந்தங்கொண்டாடி அநியாயமா என் கையாலே வாழ்க்கையே இழந்தா! இன்னைக்கு நீயும் அதே தப்பே பண்ணிட்டு என் குடியவே கெடுக்க வந்து நிக்கறே! உனக்கு பாவம் பார்க்கலாம்னு பார்த்தா நீ எனக்கே ஆப்படிக்கே பார்க்கறே! இனியும் உன்னே விட்டு வைச்சா என் ரீசனே என்கிட்டருந்து மொத்தமா பிரிச்சிடுவே!''
என்ற குஞ்சரியின் கரங்களோ குழந்தையை சுமந்திருக்கும் தாயவளின் கழுத்தை நெறித்தது.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 74
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.