What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498
அத்தியாயம் 75

அரக்கியாய் மாறியிருந்த குஞ்சரி வயிற்று பிள்ளைக்காரியின் உயிரை கொஞ்சங்கொஞ்சமாய் எடுத்திட ஆரம்பித்திருந்தாள்.

''குஞ்சரி!''

என்ற ஆங்காரமான ஆண்குரல் கொடுத்த தாக்கத்தில் திடுக்கிட்ட வஞ்சகியோ திரும்பி பார்த்தாள் முதுகிற்கு பின் கோபமாய் நின்றிருந்த கணவன் தீனரீசனை.

வந்திருந்தான் புருஷனவன் மனைவியைப் பின் தொடர்ந்து மனையாள் அவளின் பயணம் விசாவின் வீடு நோக்கி பயணிப்பதை போன் ட்ரேக்கரின் மூலம் அறிந்துக் கொண்டு.

எப்போது மதுக்கூடத்தில் நடக்க கூடாத சம்பவமொன்று நடந்து ஆணவனின் வாழ்க்கையை தலைக்கீழாக புரட்டி போட்டதோ அன்றையிலிருந்து அவனின் போனில் பயண சேவை ட்ரேக்கரை இன்ஸ்டால் செய்துக் கொண்டான் ரீசன்.

நல்லவேளை அதன் மூலமாகவே இன்றைக்கு இங்கு வந்து சேர்ந்திருந்தான் நடக்கவிருந்த கொலையை தடுக்கும் விதமாக.

''குஞ்சரி! உனக்கென்னே பைத்தியமா! என்ன பண்ணிக்கிட்டு இருக்கே நீ!''

என்றவனோ மணவாட்டியவளை நோக்கி ஓடிவர, விசாவின் கந்தரத்திலிருந்த இரக்கமற்றவளின் பிடியின் அழுத்தமோ மேலும் கூடியது.

''நான் பைத்தியமா! உன்னையே நினைச்சு நினைச்சு சாக கிடக்கறே நான் பைத்தியமா! அப்போ என்னே கொண்டு போய் மெண்டல் ஹோஸ்ப்பிட்டல்லே சேர்த்திட்டு இவே கூட குடும்பம் நடத்தலாம்னு பார்க்கறியாடா! இந்த சண்டாளி உயிரோட இருந்தாதானே இதெல்லாம் நடக்கும்!''

என்ற குஞ்சரியின் முரட்டுத்தனத்திலிருந்து தப்பிக்க பார்த்த சோதையின் முடிவென்னவோ மயக்கம்தான்.

''குஞ்சரி! என்ன பண்றே நீ! விடு! விசாவே விடு!''

ரீசன் மல்லுக்கட்டினான் கட்டியவளோடு கட்டிலை பங்கு போட்ட கோதையை காப்பாற்றிட.

''விடு குஞ்சரி!''

என்றவனின் பலமான தள்ளலில் தடுமாறிய வல்லபியோ பின்னோக்கி போனாள்.

''நான் விட மாட்டேன் ரீசன் விட மாட்டேன்! என்னே உன்கிட்டருந்து பிரிக்க நினைக்கறே இவளே நான் சாகடிக்காமே விட மாட்டேன்! அந்த கேடு கெட்டே மயிலினியே படுத்தி எடுத்த மாதிரி இந்த படுபாவியையும் பண்ணாத்தான் என் மனசு ஆறும்!''

என்றவளின் பூ பாசி கொண்டு ஓங்கி நின்ற கரத்தை பட்டென பற்றி நிறுத்தினான் ரீசன்.

''விடு ரீசன்.. ஆர்ஹ்ஹ்.. என்னே! விடு! கையே விடு!''

என்றவளோ கணவனின் உடும்பு பிடியிலிருந்து அவளின் மணிக்கட்டை விடுவிக்க போராட,

''கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னே சொன்னே.. திரும்ப சொல்லு..''

பொறுமையாய் ஆணவனின் வாய் கேட்டாலும் முகமென்னவோ இறுகித்தான் கிடந்தது.

''என்னே சொன்னேன்னா! என்னே சொன்னேன்! கையே விடு அந்த நாயே கொன்னாத்தான் நிம்மதின்னு சொன்னேன்! அதுக்கென்னே இப்போ!''

பேரிரைச்சல் கொண்டாள் பாரியையவள்.

''இல்லே வேறே ஒரு பேர் சொன்னே.. அதை சொல்லு..''

ரீசனின் தொனியில் அழுத்தம் கூட, எச்சில் விழுங்கிய குஞ்சரியின் முகமோ வெளிறி போனது.

''இல்லே! இல்லே! நா.. நா.. நான் ஏதும் சொல்லலே! நான் சொல்லலே!''

என்றவளோ அவனின் பிடியிலிருந்து தப்பிக்க முனைந்து உடலை வளைத்து நெளித்தாள்.

''குஞ்சரி.. இப்போ சொல்ல போறியா இல்லையா..''

ரீசனின் கனல் விழிகளும், வலிக்கொடுக்கும் பிடியும் ஒருசேர ஆயிழையவளின் அடிகளை பின்னோக்கிட வைத்தது.

''என்ன சொல்லே.. ஒன்னும்.. ஒன்னும்.. இல்லையே!''

என்றவளோ சோபாவில் விழ, குலியவளை கொலை காண்டில் பார்த்தவனோ ஏதும் பேசாது அவளையே வெறித்தான்.

''அப்.. அப்படி.. பா.. பார்க்.. பார்க்காத ஜூ.. ஜூ.. ஜூனியர்.. நான்.. நான்.. நான் ஏதும் பண்ணலே.. அந்த ம.. ம.. ம.. மயிலினிதான்.. நான்.. உன்னே..''

திக்கி திணறினாள் குஞ்சரி உண்மையை சொல்லிட.

''சொல்லு! என்னே பண்ணே என் அண்ணியே! என்னே பண்ணே!''

என்றவனின் அலறலில் மொத்தத்தையும் கக்கி வைத்தாள் வதுகையவள்.

கதைக் கேட்டு முடித்தவனோ வெகுண்டெழுந்தான்.

''சீ! நீயெல்லாம் ஒரு பொம்பளையா! எப்படிடி உனக்கு மனசு வந்துச்சு இப்படி ஒரு கீழ்தரமான விஷயத்தை பண்ணே!"

"இல்லே ரீசன்.. நான்.."

"வாய மூடிடு! உனக்கு பேச கூட அருகாதை இல்லே! என் அண்ணாவோட வாரிசை அழிச்சு.. எங்க வீட்டு மூத்த மருமகளே பாடையிலே ஏத்தி! ச்சை! என்னே ஜென்மன்டி நீ!"

என்றவனோ ஆத்திரத்தில் முதல் முறை கை ஓங்கினான் குஞ்சரியிடத்தில்.

''எனக்கு தெரியாது ரீசன்! எனக்கு தெரியாது! அது உங்க அண்ணி! உனக்கொரு அண்ணன்! எனக்கு எதுவுமே தெரியாதே! நான் தெரிஞ்சு பண்ணலலயே ரீசன்!''

''என்னடி தெரிஞ்சு பண்ணலே தெரியாமே பண்ணலே! ஒரு பொண்ணே அத்தனை ஆம்பளைங்களே விட்டு ரேப் பண்ண சொல்லிருக்கே இது உனக்கு தெரியாமே நடந்த விஷயமா! சொல்லு! தெரியாமே நடந்த தப்பா! சொல்லு!!''

என்றவனின் நிறுத்தாத அறையில் சோபாவிலிருந்து கீழே விழுந்தாள் குஞ்சரி.

''ரீசன் அதை விட்டுடு ரீசன்! விட்டுடு! அது முடிஞ்சு போச்சு! பழசு நமக்கு வேண்டாம் ரீசன்! பிளீஸ் ரீசன்!''

''ஆர்ர்ஹ்ஹ்!! எப்படிடி விட சொல்றே! எப்படி!''

என்றவனோ தலையை கரங்களுக்குள் பதிக்கி இறுக்கி, எட்டி உதைத்தான் கண்ணாடியிலான காஃபி டேபிளை.

''என் அண்ணன் தீனாவோட காதலிடி அவுங்க! அண்ணிடி எனக்கு! இன்னொரு அம்மாடி! அதுவும் வாய் பேச முடியாத பொண்ணுடி! தப்பா புரிஞ்சிக்கிட்டு சர்வ நாசம் பண்ணிட்டியேடி எங்க குடும்பத்தையே படுபாவி!''

''எனக்கு தெரியாது ரீசன்! தெரியாது!''

"ஒரு வார்த்தே என்கிட்ட கேட்டிருக்கலாமேடி! இன்னைக்கு அத்தனை பேரும் ஒன்னா ஒரே குடும்பமா வாழ்ந்திருக்கலாமே! சின்னாபின்னமாக்கிட்டியேடி சதிகாரி!"

"இப்படிலாம் சொல்லாதடா ரீசன்! கஷ்டமா இருக்குடா!"

என்றவளோ தரையில் கிடந்து தவிக்க,

''அண்ணி கர்ப்பம்னு தெரிஞ்சுதான் அவுங்களே பார்க்க போயிருக்கான் அண்ணா.. போனவன் ஒரேடியா போயிட்டாண்டி பைக் ஆக்சிடெண்ட்லே! நீ அண்ணியே கொன்னுட்டே! நான் அண்ணனே கொன்னுட்டேன்! கொலைக்காரிக்கு கொலைக்காரன் சரியா போச்சு போ!''

என்றவனோ கொட்டிய கண்ணீரை ஆர்ப்பரிக்க விட்டு முகத்தை வலக்கையால் மூடி கதற, தரையில் சுருண்டு கிடந்த குஞ்சரியோ குடுகுடுவென வந்தாள் குழந்தையாய் தவழ்ந்து சோபாவில் அமர்ந்திருந்தவனை நோக்கி.

''இப்படியெல்லாம் பேசாதடா ரீசன்! ஒன்னும் இல்லடா! அதெல்லாம் நடந்து முடிஞ்சிருச்சுடா! முடிஞ்சு போனதே பத்தி நாமே இனி பேச வேணாண்டா! நாமே எப்போதும் போல சந்தோஷமா வாழலாம்டா! என்னே பாரு! ஜூனியர் என்னே பாருடா! ரீசன்!''

நடந்ததெல்லாம் அறிந்த காளையவனோ கதிகலங்கி போயிருக்க குற்ற உணர்ச்சியில் உள்ளமோ குமுறியது.

''உன்னே தாங்கு தாங்கின்னு தாங்கறே அப்பாக்கும் அம்மாக்கும் மட்டும் இது தெரிஞ்சா செத்திடுவாங்க குஞ்சரி! செத்திடுவாங்கே! இத்தனை நாள் உன்கூட குடும்பம் நடத்துனதே நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்குடி!''

என்றவனோ எழுந்து நடையைக் கட்ட,

''ஐயோ! ரீசன்! இப்படியெல்லாம் பேசாதடா! பிளீஸ்! நீ என்னே எவ்ளோ வேணும்னாலும் அடி! உதை! எல்லாத்தையும் நான் வாய் மூடிக்கிட்டு வாங்கிக்கறேன்! ஆனா.. நம்ப லவ்வே மட்டும் தப்பா போட்ரெய் (portray) பண்ணாதே! பிளீஸ்! உன்னே கெஞ்சி கேட்கறேன்!''

என்றவளோ நடந்தவனின் காலை பிடித்துக் கொண்டு முகம் ஒற்றி கதறினாள்.

''என்னடி லவ்! எல்லாமே வெறும் லஸ்ட்! உனக்கு என் மேல இருக்கறது லவ்வே கிடையாது! அன்புக்கு அர்த்தம் தெரிஞ்ச யாரும் இப்படி அடுத்தவங்களே வேதனைப்படுத்தி பார்க்க மாட்டாங்கே!''

''ஏன் ரீசன் இப்படியெல்லாம் பேசறே.. நான் உன் மேல வெச்ச லவ்வாலே தானே இப்படியெல்லாம் பண்ணேன்! இப்போ நீயே என்னே உதாசீனப்படுத்தினா எப்படி! நம்ப காதலே கொச்சைப்படுத்தினா எப்படி! இது அடுக்குமா! சொல்லு ரீசன்! சொல்லு!''

விடாது பிடித்துக் கொண்டு கதறினாள் பல பெரிய தவறுகளை இழைத்த இயமானியவள்.

''சத்தியமா சொல்றேண்டி! என் மனசார என்னைக்குமே நான் உனக்கு துரோகம் நினைச்சதில்லே! எங்கப்பா வேணான்னு சொல்லியும் நீ என் மேலே பைத்தியமா இருந்த ஒரே காரணத்துக்காக கட்டினா உன்னத்தான் கட்டுவேன்னு சொல்லி உன்னதானடி கடைசி வரைக்கும் போராடி கட்டினேன்! அப்படி இருந்தும் கூட நீ எல்லாத்தையும் என்கிட்டருந்து மறைச்சிட்டேல்லே!''

''நீ கூடத்தான் இந்த விசாலே ஆரம்பிச்சு உங்க அண்ணன்.. அந்த மயிலினி வரைக்கும் எல்லாத்தையும் ரகசியமாவே வெச்சுக்கிட்டே.. இப்போதான் சொல்றே! நான் அதையெல்லாம் பெருசுப்படுத்தி இந்த நிமிஷம் வரைக்கும் உன்கிட்டே சண்டே போட்டேனா! அப்போ நீ மட்டும் ஏன்டா முடிஞ்சு போனதுக்காக என்கிட்ட சண்டே போடறே!''

''நான் விசா கூட படுத்ததும் என் அண்ணியே நீ நாராசம் பண்ணதும் ஒன்னாடி! சொல்லு! இதெல்லாத்துக்கும் மேலே அந்த பிஞ்சி உயிரே பரலோகம் அனுப்பினியே அதெல்லாம் என்ன சகிச்சிக்கறே விஷயமாடி!"

என்றவனோ திரும்பிய வேகத்தில் அவனின் காலை பிடித்திருந்த குஞ்சரியின் பின்னந்தலையை கொத்தாய் இறுக்கி கத்தினான்.

''உனக்கு அதெல்லாம் தான் பெருசுன்னா எனக்கு என் காதல் பெரிசு! நீ பெருசுடா! என்னாலே உன்னே யாருக்கும் விட்டு கொடுக்க முடியாதுடா!''

என்றவளோ ஆணவனின் முகத்தை இருக்கரங்களால் ஆரத்தழுவ,

''விசா கூட எல்லை மீறி போனதே நான் ஒரு நாளும் நியாயப்படுத்தினதே கிடையாது குஞ்சரி! ஆனா.. இன்னைக்கு இப்போ சொல்றேண்டி! உன் கூட இத்தனை வருஷம் குடும்பம் நடத்தி எனக்கு கிடைக்காத அத்தனை சந்தோஷத்தையும் அன்னைக்கு எனக்கு விசா கொடுத்தா! நான் கட்டி குடும்பம் நடத்த ஆசைப்பட்ட பொண்ணு அவதாண்டி நீயில்லே!''

''கடவுளே! ரீசன்! அப்படி சொல்லாதடா பிளீஸ்டா! பிளீஸ்! உன்னே கெஞ்சி கேட்கறேன்! இதுக்கு நீ என்னே கொன்னே போட்ருலாம்டா!''

''ச்சீ! வாயே மூடுடி! கையே எடு! உன் கூட படுத்த ஒவ்வொரு நாள் ராத்திரியும் இனி என்னே பொறுத்த வரைக்கும் எவனும் சீண்டாத சீக்கு புடிச்ச வேசி கூட ஸ்பெண்ட் பண்ண நைட்தாண்டி!''

''ரீசன்!!''

என்றலறியவளோ தொடர்ந்தாள்.

''என்ன வார்த்தை சொல்லிட்டடா! உன்னை பைத்தியக்காரி மாதிரி காதலிச்ச பாவத்துக்கு என்னே வேசியாக்கிட்டியேடா! இதுக்கு நான் செத்தே போயிடுவேண்டா! செத்தே போயிடுவேன்!'

''செத்து போ! தயவு செஞ்சு செத்து போயிடு! இல்லாட்டி நாளைக்கு கீத்து என் மேல பாசமா இருக்கான்னு சொல்லி அவளையும் ஆள் வெச்சு சிதைச்சிடுவடி! ஏன்னா நீ தாயா இருக்க கூட அருகதை இல்லாத அரக்கி!''

என்றவனோ குஞ்சரியின் பிடியிலிருந்து காலை உதறித்தள்ள,

"ரீசன்!!"

என்றலறியவளின் நேத்திரங்களோ விசாவை கையிலேந்திக் கொண்டு நடைப்போட்ட ரீசனையே நடைப்பிணமாய் வெறித்தது.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 75
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top