- Joined
- Jul 10, 2024
- Messages
- 509
அத்தியாயம் 77
மணி மிகச்சரியாய் நள்ளிரவு பனிரெண்டு பத்து.
குஞ்சரி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தாள். இன்னும் மயக்கம் தெளியவில்லை தெரிவையவளுக்கு.
ரீசனோ நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறிடவில்லை. மருத்துவர் போலீஸ் புகார் கண்டிப்பாக கொடுக்க சொல்லியும் யோசிப்பதாக மட்டுமே சொன்னவன் அது பின்னாளில் அவனுக்கே பிரச்சனையாக வந்து முடியுமென்று மேற்கொண்டு எதையும் செய்திடாமலே இருந்தான்.
பிறகென்னே, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திட வேண்டிய குஞ்சரியை கொண்டு போய் வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தினால் கேள்வி எழுப்பிடாமல் சும்மாவா இருந்திடுவார்கள் காவல்துறையினர்.
குடைந்தெடுத்திட மாட்டார்களா என்னே சந்தேகங்கொண்டு இன்றைய அவளின் இந்நிலைக்கு கட்டியவனோ காரணமென்று பழிப்போட்டு. இருக்கின்ற பிரச்சனையில் இதுவேற என்றெண்ணியவனோ வாயை மூடிக்கொண்டான் சம்பவத்தை பெரிசாக்கிடாமல்.
இருந்தும் நடந்த கூத்தை மோப்பம் பிடித்து வந்து சேர்ந்திருந்தான் இன்ஸ்பெக்ட்டர் கீரன் ஆரழகன். எல்லாம் மினர்வாவின் விசுவாசம்தான். நண்பன் என்பதால் ஒருவழியாய் அவனை பேசி அனுப்பியிருந்தான் ரீசன்.
ஆன்ட்டி ஹீரோ அவனும் பொறுமைக் கொண்டு வழக்கை பர்சனலாக விசாரிப்பதாய் கூறி வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பி போனான் சம்பவ இடத்திற்கு தடயத்தை தேடி துப்பு துலக்க.
நிலைமை கைமீறி போக உடனடியாக மணவாட்டியவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல முனைந்தான் ரீசன்.
''ரீசன் பிளீஸ் புரிஞ்சிக்கோங்க.. உங்க மனைவியே ரேப் பண்ணிருக்காங்க.. திரும்பவும் அதே இடத்துக்கு அவுங்களே கூட்டிக்கிட்டு போறது அவுங்க நிலையே இன்னும் மோசமாக்கிடும்..''
மருத்துவர் மினர்வாவின் எச்சரிக்கை ஏதும் ஆணவன் காதில் விழவில்லை.
''இல்லே டாக்டர்.. நான் நல்லா யோசிச்சிட்டேன்.. நான் என் குஞ்சரியே ஓவர்சீஸ் கூட்டிக்கிட்டு போய் ட்ரீட்மெண்ட் பார்த்துக்கறேன்..''
அங்கிருந்து கிளம்பினால் போதும் எனும் அளவில் பட்டென முடிவை சொன்னான் ரீசன்.
''மிஸ்ட்டர் ரீசன்.. நீங்க உங்க மனைவியே உலகத்துலே எந்த மூலைக்கு கூட்டிக்கிட்டு போனாலும் அவுங்களே குணப்படுத்த முடியாது! காரணம் அவுங்களுக்கு தேவை மருந்து மாத்திரை இல்லே! நீங்க! உங்க அன்பு! பரிவு! ஆறுதல்! நம்பிக்கை! சுருக்கமா சொல்ல போனா உங்க காதல்!''
என்ற மருத்துவரின் பார்வைகளோ ஆணவனை அழுத்தமாய் உள்நோக்கியது.
''நீங்க அவுங்க கூட இருவத்தி நாலு மணிநேரமும் இருக்க வேண்டிய கட்டாயத்துலே இருக்கீங்க ரீசன்.. குஞ்சரியோட உடம்புக்கு மட்டுமில்லே மனசுக்குமே உங்க அரவணைப்பு இப்போ ரொம்ப முக்கியம்.. முடியுமா உங்களாலே..''
என்ற பெண் மருத்துவரோ குஞ்சரியை டிஸ்சார்ஜ் செய்ய தேவையான பாரங்களில் கையெழுத்திட்டார்.
''அதை விட இனி வேறெந்த வேலையும் எனக்கில்லே டாக்டர்.. இவளோட இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க நான் மட்டுமேதான் காரணம்..''
என்றவனோ குஞ்சரியின் தலை மாட்டில் நின்றப்படி பெண்ணவள் கட்டு போட்டிருந்த உச்சந்தலையை மென்மையாய் வருடிக் கொடுத்தான்.
''மனச தளர விட்டுடாதீங்க ரீசன்.. கடவுள்னு ஒருத்தன் இருக்கான்.. கண்டிப்பா குஞ்சரிக்கு நடந்த கொடூரத்துக்கு ஒரு பதில் கிடைக்கும்..''
என்ற மருத்துவரோ மனதிலிருந்தே வார்த்தைகளை உதிர்த்தார் வதனியவளின் சீரழிக்கப்பட்ட நிலையை பரிசோதித்த தாக்கத்திலிருந்து இன்னும் மீளாதிருக்க.
''எப்படி ஒரு குழந்தை நல்லவனா இருக்கறதும் கெட்டவனா இருக்கறதும் அம்மாவோட வளர்ப்போ.. அதே மாதிரித்தான் டாக்டர்.. ஒரு மனைவி நல்லவளா இருக்கறதும் தரமிறங்கி போறதும் அவளோட புருஷன் நடந்துக்கற விதத்துலத்தான் இருக்கு..''
பொஞ்சாதியால் பரலோகம் போனவர்களின் பாவமும் ஆணவனால் வஞ்சிக்கப்பட்ட விசாவின் சாபமும் இப்போது அவனையும் அவன் வதுகையையும் வாட்டியெடுப்பதை நிச்சயமாய் இல்லையென்று சொல்லாது மனப்பூர்வமாய் உணர்ந்திருந்தான் ரீசன்.
''சும்மா கண்டதையும் யோசிச்சு உங்களே நீங்களே குழப்பிக்காதீங்க ரீசன்..''
''இல்லே டாக்டர்.. நான் சரியா இருந்திருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும்.. எனக்கு தெரியும்.. புருஷன் பண்ற தர்ம கணக்கெல்லாம் பொண்டாட்டிக்கு போகும்.. பொண்டாட்டி பண்ற பாவ கணக்கெல்லாம் புருஷன் தலையிலே வடியும்.. அப்படித்தானே எழுதிருக்கு நம்ப புராணத்திலே..''
என்றவனோ அவனறியாது கொட்டி விட்ட கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
''சோரி..''
என்றவனை பார்த்திட பாவமாகத்தான் இருந்தது மினர்வாவிற்கு.
இருந்தாலும் என்செய்ய. அவரவர் கர்மாவை அவரவர் தானே அனுபவித்தாக வேண்டும். இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா என்று பெருமூச்சுக் கொண்டவளோ பாரங்களை நீட்டினாள் ரீசனை நோக்கி.
''ரீசன் நல்லா ஞாபகம் வெச்சுக்கோங்க குஞ்சரியே உங்க சொந்த கன்சன்லத்தான் (concern) இங்கிருந்து கூட்டிக்கிட்டு போறீங்க.. நாளப்பின்னே திடிர்னு அவுங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா நானோ இந்த ஹோஸ்ப்பிட்டலோ எதுக்குமே பொறுப்பேற்காது.. இப்பவே சொல்லிட்டேன்..''
என்ற மினர்வாவோ பேஷண்டின் நிலை கருதி அதன் விளைவை அவனிடத்தில் ஒப்புவித்தாள்.
புரிந்தவன் தலையை ஆட்டியப்படி படுக்கையிலிருந்து ஸ்ட்ரெச்சருக்கு தாதியர்களால் இடம் மாற்றப்பட்ட குலியவளை நெஞ்சுக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு இமைக்காது பார்த்தான்.
ஆம்புலன்சோ ரெடியாகியது குஞ்சரியின் அப்பாவின் மாளிகையை நோக்கி பயணிக்க.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 77
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.