- Joined
- Jul 10, 2024
- Messages
- 443
அத்தியாயம் 78
மணியோ நள்ளிரவு பனிரெண்டு நாற்பது.
இதுதான் முதல் முறை விசாவிற்கு இப்படியான பைக் பயணம். ப்ரீதனுக்குமே மனசுக்கு பிடித்தவளோடு ராவில் பைக் ரைட் என்பது முதலிரவை போன்ற எக்சாய்ட்மெண்டே (excitement).
இதுவரைக்கும் அனுபவமில்லாத ஆயிழையவளோ ஆணவனின் தோள்களில் கைகளை பதிக்க, ப்ரீதனோ பழக்கமில்லாதவளின் கையை மெதுவாய் இழுத்து அவன் வயிற்றின் மீது வைத்துக் கொண்டான்.
''ஓய் மூக்கு சளி! தப்பா நினைச்சிக்காதே.. ஓட்டும் போது கஷ்டமா இருக்கும் அதான்..''
''தப்பாத்தான் நினைச்சிப்பேன்! ஏன்னா நீ என்னே மூக்கு சளின்னு கூப்பிடறே!''
என்றவளோ விளையாட்டாய் அவன் வயிற்றிலேயே முஷ்டி மடக்கி குத்த,
''ஆர்ஹ்ஹ்! வலிக்குதுடி!''
என்றவனோ நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டான் மடவரல் அவளை வம்பிழுக்கும் சாக்கில்.
''என்னது டீயா!''
''ஆமாண்டி!''
என்றவனின் சிரிப்பில்,
''யாரு உனக்கு இந்த உரிமை கொடுத்தா சொல்லு! சொல்லு! யாரே கேட்டு நீ என்னே டி போட்டே சொல்லு! நான் என்ன உன் பொண்டாட்டியா நீ டி போடே!''
என்ற சேட்டைக்காரியவளோ யுவதியவளின் ஹெல்மட்டை கொண்டு ப்ரீதனின் ஹெல்மட்டை முட்ட,
''ஹேய்! அழகா இருக்கு இந்த ஹெல்மட்! நான் இப்போதான் கவனிக்கறேன்.. எப்போ வாங்கனே!''
என்றவனோ வினவினான் பின்னிருக்கை பேதையின் தலையை அலங்கரித்திருந்த தலைக்கவசத்தை கண்ணாடியை அட்ஜர்ஸ்ட் செய்து.
''வங்கானது இல்லே ப்ரீதன்..''
''அப்பறம்..''
என்றவனோ வளைவில் மிக பத்திரமாய் பாவையவளின் இருக்கரங்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டான் பாதுகாப்பாய்.
''மயிலினி அக்காவோடது.. இன்னைக்கு அங்க போனேனா.. அக்கா ரூம் அலமாரிக்குள்ளே ஒளிஞ்சிருந்ததா.. அதான் தூக்கிட்டு வந்துட்டேன்..''
என்றவளோ இடப்பக்கம் பார்க்க தலையை ப்ரீதனின் முதுகில் ஒட்டிக் கொண்டாள் மானினியவள்.
''சரி விடு.. பழசே நினைச்சு ஜாக்கெட்டை ஈரமாக்கிடாதே மூக்கு சளி!''
என்றவனின் கிண்டலில் அவன் முதுகை ஹெல்மட்டால் முட்டியவளோ வினா எழுப்பினாள்.
''இன்னும் எவ்ளோ தூரம் போகணும் பார்ட்னர் இந்த டிங்கோக்கு சோறு வைக்க!''
''ஏன் ரொம்ப குளிருதா..''
என்றவனோ அவனின் கையுறை கொண்ட விரல்களால் அவளின் கரத்தை அழுத்தமாய் பற்றிக்கொள்ள,
''இல்லன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா.. இப்படி போக ரொம்ப பிடிச்சிருக்கு ப்ரீதன்.. நல்லாருக்கு.. புதுசா இருக்கு.. இன்னைக்கு ஒரு நாள் முழுக்க இப்படியே பைக்லே சுத்தினா நல்லாருக்கும்லே..''
என்றவளோ சைட் கண்ணாடியில் தெரிந்தவனின் முகம் பார்க்க ஹெல்மட்டை மேலேத்தி,
''அதுக்கென்னே.. எங்க போகணும் சொல்லு.. போகலாம்..''
என்றவனோ அவன் ஹெல்மட் கண்ணாடியை மேலேத்திடாமலேயே அவளை ரசித்தான்.
''நிஜமாவா பார்ட்னர்..''
''நீ கேட்டு நான் செய்யாத விஷயம் ஏதாவது இருக்கா..''
''ரொம்ப உரிமை எடுத்துக்கறேன்னா..''
என்றவளோ மெதுவாய் அவளின் கரங்களை அவன் பிடியிலிருந்து விலக்க, அவைகளை இழுத்து ஜாக்கெட்டின் பாக்கெட்டுக்குள் ஒளித்துக் கொண்டான் ப்ரீதன்.
''பயமா இருக்கு ப்ரீதன்..''
என்றவளோ மானசீகமான உணர்ந்தாள் அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பை தாண்டிய புரிதலொன்று உள்ளதென்று.
ஆனால், ஏற்கனவே அடிப்பட்டு வந்தவளுக்கோ காதல் என்றாலே அதுவும் ஆணொருவன் மீது நம்பிக்கையை தாண்டிய அன்பை வைத்திட ரொம்பவே பயமாக இருந்தது.
''எனக்கும்தான்..''
என்றவனோ அன்றைக்கு அந்திகையவள் சொன்ன ஒரு வார்த்தை கொடுத்த ஏமாற்றத்தில் மொத்தமாய் உடைந்த போயிருந்தான். இருப்பினும், நாட்கள் நகர அவனால் விசாவை மனதால் நெருங்காமல் இருந்திட முடியவில்லை.
எவ்வளவு முயற்சித்தாலும் அவளே வந்து குந்திக் கொண்டு பெருந்தொல்லை கொடுத்தாள் ப்ரீதனுக்கு.
வாவென்றும் உரிமையோடு இழுத்தணைக்கவும் முடியாது போவென்று முகத்தில் அடித்தாற்போல சொல்லவும் முடியாது எரிமலை காங்கில் நடப்பதை போலுணர்ந்தான் வயதில் மூத்தவனானவன்.
''உன்கூட இருக்கிறது எப்படி இருக்கு தெரியுமாடா ப்ரீதன்.. அம்மா கங்காரு மடிக்குள்ள பத்திரமா இருக்கறே மாதிரி இருக்குடா..''
''இந்த டா கூட ரொம்ப நல்லாருக்கு.. அடிக்கடி சொன்னா அடியேன் ரொம்ப சந்தோஷப்படுவேன்..''
என்றவன் மனசில் உள்ளதை நாசூக்காய் சொல்ல,
''இதுக்கெல்லாம் பேர் என்னே ப்ரீதன்.. ஏன் இப்படியெல்லாம் தோணுது..''
''தெரியலையே..''
''ஒருவேளே இதான் லவ்வோ..''
என்றவளின் விழிகள் வியப்பில் விரிய,
''இருக்கலாம் போலே..''
என்றவனுக்கோ வெட்கம் பிடிங்கித் தள்ளியது.
''கொஞ்ச நாள் போகட்டும் ப்ரீதன்..''
சொன்னாள் விலோசனங்களை இறுக்கமாய் மூடியப்படி அவனைக் கட்டிக் கொண்ட சின்னவள்.
நேரமாக பழசெல்லாம் கண் முன் வந்து போனது. எவ்வளவோ முயற்சித்தாள் மாயோள் அவள். முடியவில்லை. ஆர்ப்பரித்து விட்டது கண்ணீர்.
''எனக்குள்ளே ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கே ப்ரீதன்.. என்னால இன்னொரு..''
விக்கித்து வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் அருணியவள்.
''விசாகா தேவேந்திரன்.. நாள்.. வருஷம்.. எதுவானாலும் சரி.. என் மனசு மாறாது.. தெரிஞ்சு போச்சு.. தூக்கி சாப்பிட்டே மாதிரியான இந்த உணர்வு.. ரொம்ப ரொம்ப நல்லாருக்கு விசா.. எனக்கு பிடிச்சிருக்கு.. இது எனக்கு வேணும்.. நான் அடம் புடிப்பேன்.. கிடைக்கறே வரை காத்திருப்பேன்.. கடுப்பானுச்சு கடத்திட்டு போய் கண்ட இடத்துலே கடிச்சிடுவேன்!''
என்றவனோ சீரியஸான சிட்டுவேஷனை சிரிப்பாக்கிட, புன்னகைத்தவளோ ஏதும் பேசாது கண்ணாடியை மேலேத்திருந்தவனின் கன்னத்தை செல்லமாய் எக்கி இழுத்து ஆட்டினாள்.
''ஏய்.. விழுந்திட போறே..''
''நீ புடிக்க மாட்டியா..''
என்றவளோ அவன் முதுகில் அழுத்தமாய் ஒட்டிக்கொள்ள,
''இப்படி கேட்டு கேட்டே டெம்ப்ட் ஆக்கு! கடி கன்போர்ம் ஆக போகுது பாரு..''
என்றவனோ மெதுவாய் முனக, கேட்டவளோ கேட்காதவள் போலவே காட்டிக் கொண்டாள்.
ப்ரீதனின் மனம் புரிந்துக் கொண்ட மங்கையவளுக்குள்ளுமே பனி இரவில் வேதியல் மாற்றங்கள் ஏற்பட, அமைதியாய் அவனை கட்டியணைத்துக் கொண்டாள் வஞ்சியவள் விழியோரம் மையெல்லாம் நிம்மதியாய் கரைந்தோட.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 78
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.