What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

அத்தியாயம் : 80

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
443
அத்தியாயம் 80

நேரம் போக பைக்கும் போய் கொண்டே இருந்தது. அது ஜோடிகள் இருவருக்கும் கூட மிகப்பிடித்திருந்தது.

ஏதும் பேசாத இருவரின் இடக்கை விரல்கள் மட்டும் என்னென்னவோ பேசிக்கொண்டன காற்றில் பின்னி பிணைந்து விளையாடி.

இருவருக்கும் ஏறக்குறைய எட்டு பத்து வயது வித்தியாசம். ஆனால், ஒருமுறை கூட விசாவை ப்ரீதன் பெரியவன் என்ற நினைப்பில் நடத்தியதே கிடையாது. அவளுக்கு சவுகரியமாகவே நடந்து கொண்டிருக்கிறான்.

அன்று தொடங்கி இன்று வரை ப்ரீதன் மாறவில்லை. விசாவுமே அவன் விஷயத்தில் மாறவில்லை. மற்றவைகள் எல்லாம் மறைந்து போன நினைவுகளாகி ரொம்ப நாளாகியிருந்தது.

“ப்ரீதன்...”
“ஹ்ம்ம்...”

“சாரி...”

“ஹுஹும்...”

என்றவனோ விசிலின் ஓசையில் மன்னிப்பின் காரணம் கேட்க,

“அன்னைக்கு நான் தெரியாமத்தான் அப்படி சொல்லிட்டேன். மன்னிசிருங்க ப்ரீதன். எனக்கு தெரியும் உங்களுக்கு எவ்ளோ வேதனையா இருந்திருக்கும்னு. ஆனா, நான் தெரியாமத்தான் சொன்னேன். சத்தியமா...”

“மனசுல இருக்கறது வாயில வர்றது சகஜம்தானே. அதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம். இதுல உங்க தப்பேதும் இல்ல விசா. நான்தான் அன்னைக்கே சொன்னேனே...”

என்றவனோ மனதைக் கல்லாக்கிக் கொண்டு வார்த்தைகளை உதிர்க்க,
“அப்போ என் மனசுலே இருந்துதான் அந்த வார்த்தை வந்துச்சினு சொல்றீங்களா?”

என்றவளின் குரல் உள்ளே போக, உடலோ தன்னிச்சையாக பின்னோக்கி போனது.

ப்ரீதனோ பைக்கை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் ஆசை நாயகியவளின் விலகலில் மனம் கனக்க.

“என் மனசு முழுக்க வலியும் வேதனையும்தான் இருக்கு. அதைக் கொடுத்தவங்கள என்னால ஒருபோதும் மறக்க முடியாது ப்ரீதன். அடி அப்படி...”

சொன்னவளோ மூடியிருந்த ஹெல்மெட்டுக்குள் சத்தமின்றி அழுகை கொள்ள, திரும்பிய ப்ரீதனோ அவனின் ஹெல்மெட்டை கழட்டி மடியில் வைத்தபடி, மெதுவாய் மங்கையவளின் ஹெல்மெட் கண்ணாடியை மட்டும் மேலேற்றினான்.

தாரகையின் விழிகளோ தாமரையாய் கவிழ்ந்தே கிடந்தன. ப்ரீதனோ மென்மையாய் மாயோளின் தலைக்கவசத்தைக் கழட்டினான். தொப்பி அகல அந்திகையின் கோர குழலோ ஆங்காங்கே சிலுப்பிக் கிடந்தன.

அவைகளைப் பதுசாய் காரிகையின் காதோரம் விலக்கிச் சொருகினான் ப்ரீதன் விரல்களால். விசாவின் நெஞ்சமோ பதைத்துப் புகைந்தது.

பாவையவளின் மடியிலிருந்த கரங்களோ மெதுமெதுவாய் ஓரமிறங்கி பைக்கின் விளிம்புகளைப் பற்றிப் பிடித்தது. நயனங்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் நாயகியவள் உடல் அவளறியாது சிலிர்த்துப் போக.

“விசா, எனக்கு உன்ன அவ்ளோ புடிக்கும். தெரியலே ஏன்னு... என் அம்மா, அக்கா, எல்லாருக்கும் மேலே உன்னப் புடிக்கும். ஏன்? என்ன விடவும்...”

என்றவனோ மலராய் தாங்கிப் பிடித்தான் அலரவளின் பூ முகத்தை. ப்ரீதனின் நெருங்கிய நாசி உஷ்ணத்தில் உண்டானதே விசாவிற்கு கிறக்கமொன்று.

“இதுக்கு அதுதான் பேரான்னு எனக்கு தெரியாது விசா, ஆனா...”

என்றவனின் மூக்கோ சொக்கிக் கிடந்தவளின் நாசி ஒட்டிக் கிடக்க, அளகவளின் அழகு முகத்தை இடைவெளியற்றுப் பற்றி பிடித்திருந்தவனின் செவிகளோ சிவந்து போயின அவனுக்குமே உடலுக்குள் கலக்கம் ஏற்பட.

“எங்க ஆரம்பிச்சு எப்படி முடிக்கறதுன்னு கூட எனக்கு தெரியாது விசா.”

என்றவனின் இதழ்களோ அவனின் வல்லபியாக தகுதி கொண்ட பெதும்பையவளின் அதரங்களை நெருங்க எதிர்ப்புற நெடுஞ்சாலையில் பயணித்த கன்டைனர் லாரியோ ஹார்ன் அடித்து எகிறி நின்ற ஜோடிகளின் பிபியைக் குறைத்து இருவரையும் பிரித்து விட்டது நாசூக்காய்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


 

Author: KD
Article Title: அத்தியாயம் : 80
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top