What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
509
அத்தியாயம் 92

பொழுது புலர்ந்தது.


குருவிகள் கீச்சில் கொண்டன மின்சார சரடுகளின் மீதமர்ந்து.

ஜன்னல் திரைசீலையோ மந்தமான வானிலையின் ஜில்லென்ற குளிர் காற்றில் மெதுவாய் ஆட ஆரம்பித்தது.

கீழ் தளத்திலோ சுப்ரபாதம் கேட்டது.

குஞ்சரியைக் கவனித்துக் கொள்ளத்தான் கேர் டெக்கரே தவிர வீட்டு வேலையை பார்க்கவும் சோறாக்கிக் போடவும் தனித்தனி ஆட்களே. பல வருட எக்ஸ்பீரியண்ட் கைகளே இருவரும்.

''கிட் யேங்! கிட் யேங்!''

புதிதாய் வந்து சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட்டை தேடியதென்னவோ வேலைக்கார கதிஜாதான்.

கதிஜா பேகம். வீட்டு வேலை தொடங்கி தோட்ட வேலை வரை கவனிப்பவர். குஞ்சரியை கடந்த பத்து வருடங்களாக பார்த்தவர். இவர் பார்க்க வளர்ந்தவள்தான் அவள்.

சீனத்தியின் தடயமே தெரியாதிருக்க அவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறை நோக்கி விரைந்தார் பேகம்.

அறையோ முன்கூட்டியே பாவேன்று திறந்து கதிஜாவை வரவேற்றது. நாற்பதை தாண்டியவரின் மனதிலோ சுருக்கென்றது ஒரு குத்தல். உள்ளம் பதைக்க படப்படத்த இதயத்தோடு குடுகுடுவென ஓடினார் மேல் மாடி நோக்கி பேகம் அவர்.

''குஞ்சரி!!''

அலறினார் கதிஜா பேகம் அறையின் வாசலிலேயே நின்றப்படி இருகாதுகளையும் பொத்தி.

தாயில்லாது பொத்தி வளர்க்கப்பட்டவள் இன்றைக்கு ஒரு பொட்டு துணிக்கூட இன்றி கிடந்தாள் தரையில்.

மனது கிடந்து அடித்துக் கொண்டது பேகமுக்கு திட்டிகளில் கண்ணீர் ஆர்ப்பரிக்க. மிடுக்காய் வலம் வந்தவள் ஒன்னும் பாதியாய் போய் சக்கர நாற்காலியில் அமர்ந்த நொடியே வீடு கலையிழந்தது.

இப்போதோ நிர்வாணத்தில் அலங்கோலம் கொண்டிருக்கிறாள் மனையின் இளவரசி கட்டிலுக்கு அடியில் குப்பிறப்படுத்து.

''கடவுளே! ஐயோ!''

என்று கத்திய கதிஜாவோ ஓடினார் வேகமாய் கட்டிலுக்கு உள்ளே பாதி உடலும் வெளியே மீதி உடலும் கொண்டிருந்தவளை நோக்கி.

இழுக்க முடியாது இழுத்தார் கதிஜா கட்டிலுக்கு அடியில் கிடந்தவளின் கையை பிடித்து. வயிற்று புள்ளைக்காரி வேறு என்பதால் கொஞ்சம் எடை கூடியே போயிருந்தாள் குஞ்சரி.

வேறு வழியில்லா கதிஜாவோ பலங்கொண்டு குஞ்சரியின் காலை பிடித்திழுத்து அவளை கட்டிலுக்கு வெளியில் கொண்டு வர முயற்சித்தார்.

ஒருவாரியாய் சமாளித்து வெற்றி பெற்றவரோ சுந்தரியவளின் முதுகை மடியில் கிடத்தி முன் பக்கமாய் திருப்ப ரீசனின் குஞ்சரியவளோ குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்தாள்.

நெற்றியோர காயமோ குருதி காய்ந்து முன் பக்க முடிக்கற்றைகளில் ஒட்டிக் கிடந்தது. அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தாள் குஞ்சரியவள் மிக கொடூரமாய்.

கைகாலெல்லாம் கயிறால் பின்னப்பட்டிருக்க பேதையவள் தாய்மை கொண்ட தேகமோ மெழுகு தொடங்கி சிறுநீர் வரை கொண்டு அர்ச்சிக்கப்பட்டிருந்தது.

''குஞ்சரி! யாருமா! யாருமா உன்னே இப்படி பண்ணா!''

குடலை குமட்டும் வாடையோடு காய்ந்து பிசுபிசுத்தது வஞ்சகர்களின் கைவசத்தில் அவ்வறையே குஞ்சரி வேறு கட்டிலுக்கு அடியில் வாந்தியெடுத்து வைத்திருக்க.

கதிஜா பேகாமிற்கு மேடான வயிற்றில் கை வைக்கும் போதே தெரிந்து விட்டது அசைவற்ற பிஞ்சு எப்போதோ போய் சேர்ந்து விட்டானென்று.

''அல்லா கண்டிப்பா உன்னே இப்படி பண்ணவங்களே சும்மா விட மாட்டான்மா! குஞ்சரி கண்ணே திறந்து பாருமா! பேகம்மா வந்திருக்கேன் பாருமா!''

துக்கம் நெஞ்சை அடைக்க வாயை பொத்தி கதறியவறோ அணங்கவளை மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டார்.

குஞ்சரியும் போய் விட்டாள் என்றுதான் நினைத்தார் கதிஜா முதலில் அவளை கண்ட கோலத்தில். பின் லேசான அசைவை ஆயிழையின் கால் கட்டை விரல் மூலம் பார்த்தவாறே ஓடோடி வந்தார் நம்பிக்கை கொண்டு.

கதீஜாவின் மடியில் கிடந்த குஞ்சரியோ கன்றியிருந்த கண்களை திறக்க முடியாது கிழிந்திருந்த இதழ்கள் வீங்கியிருக்க பேச முடியாது நடைப்பிணமாய் மூச்சை மட்டும் இழுத்திழுத்து விட்டாள்.

கதிஜாவோ கொஞ்சமும் தாமதிக்காது மருத்துவமனைக்கு போனை போட்டார். கூடவே, ரீசனுக்கு அழைக்க அவன் போனோ ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது.

ஆபத்துக்கு பாவமில்லை என்ற கதிஜாவோ அழைத்தார் ரீசனின் நண்பன் வக்கீல் வீர்ரையும் போலீஸ்காரன் கீரன் ஆரழகனையும்.

ஆபத்து அவசரத்துக்கு உதவும் என்று வீர்தான் முன்னரே கொடுத்து வைத்திருந்தான் அவர்களின் எண்களை பணியாளர் கதிஜாவிடம் முன்பொருநாள் அவரை ரீசன் குஞ்சரி தம்பதிகளின் பழைய வீட்டில் சந்தித்திட.

அரைமணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ரீசன் பைக்கிலும் வீர் காரிலும் வந்து சேர்ந்தனர். ரீசன் முன்னரே கதிஜாவிடம் சொல்லியிருந்தான் குஞ்சரியின் அவல நிலையை போன் மூலமாய் படம் பிடித்திட.

சொன்னதை செவ்வென செய்த கதிஜாவோ செத்த குழந்தையை சுமந்திருந்த கர்ப்பிணியின் கட்டுகளை அவிழ்த்து புதியதோர் ஆடையொன்றை அணிவித்து விட்டார்.

மருத்துவமனை ஊழியர்களோ ஸ்ட்ரெச்சரில் தூக்கி கிடத்தினர் குஞ்சரியை தரையிலிருந்து.

அந்திகையின் விரல்களோ தரையில் ரீசனின் பெயரை எழுதி போனது உதிர்ந்த உதிரங்கள் கொண்டு.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்❤️


முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 92
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top