- Joined
- Jul 10, 2024
- Messages
- 509
அத்தியாயம் 23
உணர்ச்சிகளின் பிடியில் சிக்குண்டவளாய் ஹவுஸ் அரஸ்ட்டில் கிடந்தாள் தேரிகா.
வந்திருந்த புதிய அழகி சோக கீதத்தின் முடிவில் காரிகையின் தலையில் குண்டை தூக்கி போட்டிடுவாள் என்று அரிவையவள் கனவிலும் நினைக்கவில்லை.
அதுவும் அதற்கு மிகலின் ரியாக்ஷனும், கவுண்டர்ஸும் ஆணவன் தெரிந்துக்கொள்ள கூடாத ஏதோ ஒன்றை முன்னாடியே அவன் அறிந்துக் கொண்டிருக்கிறான் என்பதை பேதை அவளுக்கு நன்றாகவே உணர்த்தி இருந்தது.
எங்கே எல்லோரையும் எமலோக வெகேஷனுக்கு அனுப்பி வைத்த மிகல், பைந்தொடியின் குட்டு வெளிப்பட அவளையும் மேலுலகம் அனுப்பி வைத்திடுவானோ என்றறொரு பயம் தெரிவை தலை சுற்றிட வைத்தது.
எதை கண்டுப்பிடித்தான் என்பதை விட, எயினியை இனி காப்பாற்றிடவே முடியாதே என்ற அச்சமே அவளிடம் ஓங்கி நின்றது. அதன் விளைவாய், ப்ரஷர் மண்டைக்கேறி மயங்கி சரிந்தாள் சுந்தரியவள்.
நாயகியவளை தூக்கி வந்து மெத்தையில் கிடத்திய ஆளானோ, கண் விழிக்கும் ஒண்டொடியவள் பார்க்கும் வண்ணம் நோட் ஒன்றை எழுதி மேஜை மீது வைத்து அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
ரெண்டு மணி நேர மயக்கத்திற்கு பிறகு இமைகளை விரித்த வல்வியோ தகவல் சொல்லி போனவனின் செயலில் ஒடுங்கி போனாள் உள்ளம் பதறிப்போக.
வெளியில் சென்றிருக்கும் மிகல் பங்களா திரும்பும் வரை மங்கையவள் வீட்டை விட்டு வெளியேறிட கூடாதென்று அவனோடு சேர்த்து எயினியையும் அவன் தூக்கிக் கொண்டு போயிருக்கிறான் என்பதுதான் சங்கதி.
அரக்கன் அவன் கையில் சிக்கியிருக்கும் குழந்தை உயிரோடு திரும்பிடுமா அல்லது பாடையில் வந்திடுமா என்ற அபலையின் நிலையோ பித்து பிடித்தாற்போல ஆனது.
ஐந்து மணி நேரமாய் அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் நடந்த பேடையோ விரல் நகங்களை கடித்து துப்பி பதைப்பிலேயே கிடந்தாள். மிகலுக்கு அழைத்தும் பலனில்லை.
என்னதான் அவன் எதையோ கண்டுபிடித்துவிட்டான் என்று நெஞ்சம் உரைத்தாலும், அதை தெரிந்தது போல் காட்டிகொள்ளாத நுண்ணிடையாளோ சுவர் நோக்கி பயணித்தாள்.
''மிகல் எங்க இருக்க நீ?! ஏன் போன் பண்ணா எடுக்க மாட்டறே?! என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு என்ன புதுசா எயினியை வெளிய கூட்டிக்கிட்டு போயிருக்கே?! அதுவும் நான் இல்லாமே?! அவளுக்கு நேரா நேரத்துக்கு பால் கொடுக்கணும் மிகல்! முதுகை தட்டி ஏப்பம் எடுக்க வைக்கணும்! நீ ஏன் நான் இல்லாமே போனே?! முதல்லே சீக்கிரம் வீட்டுக்கு வா! நீ இதை பார்த்துக்கிட்டு இருப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும்! பிளீஸ், மிகல் போனையாவது எடு!''
என்றவளோ டென்ஷன் கொண்டு கேள்வி கணைகளை ஒருமையில் தொடுக்க, வழக்கம் போல் சேயிழை அவளை ரகசிய வழியில் கண்டுக்கொண்டவனோ முறுவல் கொண்டான் கோதையின் தவிப்பை ரசித்தவனாய்.
இரவு பத்தாக எயினியோடு மாளிகை திரும்பினான் மிகல். வாசற்படியிலேயே காவல் காத்திருந்த காந்தாரியோ, கார் வந்து கதவு திறக்க விருட்டென குழந்தையை அவன் கையிலிருந்து பறித்தாள்.
பிஞ்சின் துணியை விலக்கி உச்சி முதல் பாதம் வரை பரிசோதனைக் கொண்ட பொற்றொடியை கடந்து வரவேற்பறை நுழைந்த மிகலோ,
''பேர் வெச்ச நானே, பரலோகம் அனுப்பிடுவேனா என்னே?!''
என்று வில்லத்தனமாய் கூறி, நக்கல் சிரிப்பொன்றையும் சேர்த்து சிரித்து மேல் மாடி நோக்கினான்.
அவன் வாக்கியத்தை கேட்டவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது. அப்படியே ஓடிடலாமா என்றெண்ணி குழந்தையை மாரோடு இறுக்கியவளோ திரும்பி ஓட்டமெடுக்க பார்க்க, கார் பார்க்கிங் சம்பவத்தின் போது காணாது போன பாடி கார்ட்டோ இப்போது இளம்பிடியாளின் கண் முன் குத்து கல்லாட்டம் வந்து நின்றிருந்தான்.
சந்தேகம் வலுவாக, எல்லாமே பொய்யா என்ற வாஞ்சினியின் உள்ளமோ குமுறி வெம்பியது.
இமைகள் கொண்ட அதிர்ச்சியோ ஏமாற்றத்தில் விரிந்து நிற்க, முன்னாள் பாதுகாவலன் அவனோ குண்டுக்கட்டாய் தூக்கி போய் மாளிகையின் வரவேற்பறையில் நிற்க வைத்தான் தப்பிக்க பார்த்த பெய்வளை அவளை.
''அண்ணி!''
என்ற மிடுக்கான அழைப்போடு மிகலோ ஆடையற்ற தேகத்தை படங்காட்டி,
''எயினியே ரூம்லே விட்டுட்டு மேலே வாங்க!''
என்றிட, ரதியவளோ முடியாதென்று தலையாட்டினாள் ஆர்ப்பரித்த கண்ணீர் போனால் அவள் கதை முடிந்தது என்றுணர்ந்து.
''நிறைய பேசணும் அண்ணி!''
என்ற ஆளானோ எகத்தாள சிரிப்பு கொள்ள, நேற்றுவரை அவளுக்கு பாதுகாப்பாய் இருந்த பாடி கார்ட்டோ இப்போது வலுக்கட்டாயமாக அருணியின் பிடியிலிருந்த குழந்தையை இழுத்து பறிக்க முயற்சித்தான் சம்பளம் கொடுப்பவன் கண்ணால் கட்டளையிட.
முரட்டுத்தனம் கொண்டவனிடமிருந்து எயினியை காப்பற்ற போராடிய ஒளியிழையோ பின்னோக்கி போய் சோபாவில் விழுந்தாள். பாவம், தொக்காய் மாட்டிக்கொண்டவளாள் யோசிக்கவே முடியவில்லை.
''டேய்! விட்றா! என் குழந்தையை விட்றா!''
என்றவளோ எழுந்த வேகத்துக்கு கையில் கிடைத்த கண்ணாடி பூச்சாடி ஒன்றை கைப்பற்றி அவன் பின்னால் ஓடி, கட்டுமஸ்தானின் தலையிலேயே ஒரு போடு போட, மிகலோ உடல் குலுங்க நக்கல் புன்னகை கொண்டான் மாதவளின் செயலை பார்த்து.
பின் மண்டையில் அடி வாங்கிய பயில்வானோ ஏறுமுகம் கொண்டவனாய் கதங்கொண்டு திரும்பி தாரகை அவளை நெருங்க, மிகலோ விசிலடித்தவனாய் ஏதோ காதல் காட்சிக்கு சாட்சியானவன் போல் இதழோரம் வன்ம முறுவல் கொண்டான்.
பேடு அவளோ கையில் கொண்டிருந்த பூச்சாடியால் பாடி கார்ட் கயவனை தாக்க, அவனோ தலை தூக்கி ஏறெடுத்தான் மாடியில் நின்றிருந்த மிகலை கொப்பளிக்கும் சினத்தோடு.
நாயகனோ அசைந்தாடியவனாய் கண்ணசைத்தான் லேசாய் தலையாட்டி ஏதோ கைக்கூலி அவனுக்கு அனுமதி கொடுத்தவனாய்.
பின்னந்தலை ரத்தம் கொட்ட, மானினி அவளின் குரல்வளையை கரத்தால் இறுக்கி நெறித்தான் பெருத்த உடம்புக்காரன் அவன்.
தரையிலிருந்து வானோக்கி மேலேறிய தேரிகாவோ உசுருக்கு போராடி கால்கள் ரெண்டையும் உதறி கைகளால் அவன் பிடியை தளர்த்திட முயற்சித்தாள். அதே சமயம் மனசாட்சியற்ற மிருகமோ அரை மயக்கத்தில் உழன்ற வதூவை தூக்கி சோபாவில் கடாசினான்.
தெம்பற்ற தெரியிழையோ நிலையற்றவளாய் சரிந்து தரையில் விழுந்தாள். கோர சிரிப்பில் அவ்வீட்டை ஆக்ரமித்தவன் எயினியையோ மேல் தூக்கி வீசி பிடித்து விளையாடினான்.
வாய் திறந்து கத்த கூட இயலா புனைகுழலோ கை நீட்டி வேண்டாமென்று சைகை கொண்டாள் உயிர் மருகி மௌன கதறல் கொண்டவளாய்.
மிகலோ விசிலின் ஊடே தலையாட்டியப்படி காலால் தாளங்கொண்டு கீழ் மாடியில் சனிகையவள் படும் பாட்டை புலங்காகிதத்தோட ரசித்தான்.
தேரிகாவோ கைக்கூப்பி மிகலிடம் கருணை பிச்சை கேட்க, உதடுகளை ஈரமாக்கிக் கொண்ட நாயகனோ ஏளன முகிழ்நகையால் தளிரியலின் நெஞ்சை சில்லாக்கினான்.
தரையை முத்தமிட்டு கிடந்த ஏந்திழையோ இடுப்பு வலியை துச்சமாய் கருதி, மெது மெதுவாய் ஊர்ந்து பாதுகாவலனின் கால்களை கட்டிக்கொண்டு ஒப்பாரிக் கொண்டாள் அவனாவது துளி ஈவிறக்கம் கொண்டிடுவான் என்று நம்பி.
ஆனால், விசுவாச நாய் அவனோ தலை தூக்கி அவன் முதலாளியையே பார்த்தான் ஜடமானவனாய்.
மிகலோ இதழோரம் புன்னகை ஒன்று கொள்ள, மதிகெட்டவனோ ஆரணங்கவளை பொருட்படுத்திடாதவனாய் நடையைக் கட்டினான் எயினியின் பின் சட்டையை மட்டும் கையால் பற்றியப்படி ஏதோ பூனைக்குட்டியை தூக்கி போவது போல்.
''மிகல் பிளீஸ்! எயினியை விட சொல்லு மிகல்! பிளீஸ்!''
என்ற வாசுரையோ அவன் காலை இறுக்கமாய் பற்றிக்கொண்டு பளிங்கில் உராய்ந்து அவன் போக்கிலேயே போய் முடிந்தளவுக்கு குரல் கொள்ள, மிகலோ சைகையால் தலையாட்டி ஆர்டர் போட்டான் சீரியஸ் முகத்தோடு சொல் பேச்சை கேட்டு ஆடும் நல்லவனுக்கு.
அங்கிருந்த அறை ஒன்றுக்குள் நுழைந்த குறைக்கா நாயோ காலை உதறித் தள்ளினான் முதலாளியின் காதலி ஓரம் போய் ஒதுங்க.
''ம்மா!''
என்ற அலறலோடு கேபினெட்டின் விளிம்பில் போய் இடித்த வதனியோ ரணம் தாளாது துடிதுடித்து போனாள் உடம்பை குறுக்கி கொண்டவளாய்.
திசன் மிகலோ மேல்மாடி விளிம்பில் கைகளை தொங்கப்போட்டு நின்றவனாய் நடக்கின்ற கூத்தை வேடிக்கை பார்த்தான் இதழோரம் வன்மம் கொக்கலிக்க.
ஆழ்ந்திடு வாழ்ந்திடுவேன்!
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87.15/

Author: KD
Article Title: ஆள்வது நீயென்றால் வாழ்வது வரமே: 23
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.