- Joined
- Jul 10, 2024
- Messages
- 244
அத்தியாயம் 29
மார்கழி மாதத்தில் கல்யாணம் கட்டிய ஜோடிகளின் கொட்டம் சொல்லிலடங்கா.
காலையில் குட்டி குஞ்சன் மாலையில் சின்ன டிக்கியென்று இருவரின் பாடியும் இவர்களின் லொல்லு தாங்காது தாபத்தில் அடிக்கடி தனிமையில் வாந்தியெடுத்ததுதான் மிச்சம் இணை சேராமலே.
இருந்தும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையென்று அவ்வப்போது தம்பதிகள் இருவரும் அவரவர் இணையருக்கு அவர்களின் லீலைகளை காண்பித்துக் கொண்டேதான் இருந்தனர்.
டிசம்பர் முழுதும் காஜியாய் திரிந்தவர்களின் ரூட்டினில் ஜனவரி வர கூடவே தைப்பூசத்திற்கான கட்டொழுங்கும் அவர்களின் வாழ்க்கை பயணத்தில் முக்கிய புள்ளியாகி போனது.
வருடா வருடம் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது விரனின் பக்தி முத்திய நிலையாகும். கந்தரம் ருத்ராட்சம் கொண்டாலும் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனுக்கான பால் குட காணிக்கையை மனதாரவே செய்திடுவான் விரன்.
ஆகவே, பிப்ரவரியில் வருகின்ற தைப்பூசதிற்கு ஒரு மாத கால அவகாசத்தில் விரன் பக்திமானாகிடுவான். இம்முறையும் ஆணவன் முருகனில் மூழ்கி போக பாவம் சின்ன டிக்கியவள் ஏங்கிப் போனாள்.
இருந்தும் இறைக்கு மதிப்பளித்து அவளின் வாலு தனங்களை சுருட்டி வைத்து விரனோடு சேர்ந்து பூஜைக்கான அவனின் தேவைகளை கவனித்துக் கொண்டாள்.
அவனுக்கான தனியறை பக்கம் கூட அவளின் நிழல் அண்டாது பார்த்துக் கொண்டாள் வஞ்சியவள். அவன் கண்ணில் சிக்காதே அவனுக்கான உணவுகளை தயாரிப்பது தொடங்கி ஆடைகளை மடித்து அலமாரியில் அடுக்குவது வரை எல்லாவற்றையும் ரகசியமாகவே செய்து வந்தாள்.
எங்கே இவளால் சிறு துளியேனும் நேர்த்திக்கடன் செலுத்த நினைப்பவனின் எண்ணத்தில் சலனம் வந்திடுமோவென்று சஞ்சலத்திலேயே அவளின் செயல்பாடுகள் எல்லாம் அவனறியாது நடந்தது.
மருமகளின் அயராத உழைப்பையும் பையனின்பால் கொண்ட அக்கறையையும் கண்ட மாமியாரோ அவளையும் அவனோடு சேர்த்து ஒரு பால்குடத்தை தூக்கிட சொன்னார்.
ஐடியா நல்லா இருக்கவும் கடவுளின் மேல் பாரத்தை போட்டு அவளுமே நேர்த்திக்கடனுக்கு முருகனிடம் ஒரு அப்ளிகேஷன் போட்டு வைத்தாள்.
வேண்டுதலாக விரனின் முன்னெடுப்புகளெல்லாம் வெற்றிக் கொள்ளணும் என்றவளோ கூடவே அவனை போலவே குட்டி சிங் ஒருத்தனையும் வேண்டிக் கொண்டாள்.
தைப்பூசத்துக்கான நாளும் வந்தது. ஜோடியாய் இருவரும் பத்து கேவ்ஸ் மலையேற விரனின் தேவைகளை மட்டுமே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்த அம்மணி அவரின் நலம் காக்க தவறிவிட்டார்.
ஆகவே, பாதி படி ஏறுகையிலேயே மயக்கம் வர கையிலிருந்த பால் குடத்தை தவர விட்டாள் விறலியவள்.
''ஏய்.. ஏய்.. நிழலிகா.. என்னாச்சு..''
என்றவனோ பதறிய வேகத்தில் சரிய பார்த்த மணவாட்டியை தாங்கி பிடிக்க,
''முடியலே விரன்.. மயக்..''
என்றவளோ அவன் நெஞ்சில் துஞ்சி மயங்க,
''நிழலிகா.. ஏய்.. ஏய்.. நிழலிகா..''
என்ற விரனோ அவளுக்காகவே அவன் குடத்தையும் வம்படியாக தவர விட்டான்.
படியெல்லாம் பாலாறு காண ஜோடிகளை படியேற விட்டு பின்னாடி வந்த ஆத்தா ரேக்கவோ ஓடோடி வந்தார் கையில் தண்ணீர் போத்தலோடு.
மருமகளை படியிலேயே அமர்த்தி முகத்தில் தண்ணியை தெளிக்க, தெளிந்தவளோ சூரிய வெளிசத்தைக் கண்டு மீண்டும் கணவனின் மார்பிலேயே முகம் புதைத்துக் கொண்டாள்.
''மா.. கிளம்பலாம்.. ரொம்ப வீக்கா இருக்கா..''
என்றவனோ சைவம் உண்டு இளைத்திருந்திருந்த பொஞ்சாதியை கைகளில் தாங்கி படிகளில் இறங்கினான் வீடு போக.
அண்ணன் அண்ணிக்காக அர்ச்சனை தட்டு வாங்கி வரப்போயிருந்த சரனோ கடைசியில் மொத்த படியையும் ஏறி மலை முருகனிடத்தில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக்கோரி குடும்ப நலனுக்காக அர்ச்சனையும் செய்து வீடு திரும்பினான்.
மயக்கம் கலைய எழுந்த மணவாளியோ பக்கத்தில் குப்பிற கிடந்த விரனை குற்ற உணர்ச்சி கொண்டவளாய் நோக்கினாள்.
அழுகையோ கண்ணின் குளத்தில் இடமின்றி நிரம்பி வழிய ஆணவனின் முழங்கையோ சொதசொதத்து போனது.
''ஏய்.. சின்ன டிக்கி.. என்னடி.. என்னாச்சு.. ஏன் அழறே.. தலை ரொம்ப வலிக்குதா என்னே.. இல்லே காலேதும் சுளுக்கு விழுந்திடுச்சா..''
என்றவனோ மங்கையின் ஒப்பாரிக்கு அவனாகவே காரணம் தேடிட,
''சோரி விரன்.. மயக்கம் வந்து குடம் விழும்னு நான் நினைக்கலே..''
என்றவளோ விரனின் நெஞ்சில் சாய்ந்து சட்டையை இறுக்க,
''சரி விடு.. அதனாலே என்னே இப்போ.. இந்த வருஷம் இல்லன்னா அடுத்த வருஷம்.. இதுக்கெல்லாம் போய் யாராவது அழுவாங்களா..''
என்றவனோ துணைவியவள் தலையை வாஞ்சையாய் வருட,
''நான்தான் ஏதோ தப்பு பண்ணிட்டேன்.. என்னவோ ஒன்னு சரியில்லே.. அதான் கடவுள் என்னோட வேண்டுதலே ஏத்துக்கலே.. இப்படி அபசகுனமா ஆகிடுச்சு..''
என்றவளோ தேம்பினாள் கண்களை திறவாது.
''அதெல்லாம் ஒன்னும் கிடையாது.. நீயா எதையாவது உளறாதே சரியா..''
என்றவனோ பொண்டாட்டியின் வாய்த்தாடையை விரல்களால் பிடித்து லேசாய் ஆட்ட,
''நீங்க தனியாவே நேர்த்திக்கடனே செலுத்திருக்கலாம்.. நான்தான் குறுக்கே புகுந்து நானும் பால் குடம் எடுக்கறேன்னு.. இப்போ.. உங்களையும் சாமிக்கு கடனாளியாக்கிட்டேன்!!''
என்றவளோ அம்பகங்களை கைகளால் தேய்த்து விசும்ப,
''ஒரு வேலே மேட்டர் பண்ணாமே ஜோடியா பால் குடம் எடுத்தனாலத்தான் முருகன் தண்டிச்சிட்டானோ..''
என்றான் விரன் கிண்டலாய் கற்பாள் அவளை சிரிக்க வைக்க பேதையின் அழு மூஞ்சை பார்க்க சகிக்காது.
''அடங்கறியா நீ!! அடங்கறியா!! நான் என்னே சொல்லி வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்.. நீ மேட்டர் பத்தி பேசறியா!!''
என்றவளோ புருஷனின் மேனியை வெறுங்கையால் கொத்துபுரட்டா போட,
''நீ வேணுன்னா முருகனே கேட்டு பாறேன்.. இதான் கதைன்னு சொல்லுவாரு!! புருஷன் வயித்துக்கும் சைவம் உடம்புக்கும் சைவம்னா.. லவ்வர் பாய் சரவணன் சும்மா விடுவாரா உன்னே!! அதான் வெச்சு செஞ்சிட்டாரு!!''
என்றவனோ நக்கலோடு அவனை அடித்த சின்ன டிக்கியின் கரங்களை ஒன்றாக மடக்கி பிடித்து சரித்தான் சுந்தரியவளை மஞ்சத்தில்.
''மனசென்னவோ ஒரு மாதிரியாவே இருக்குடா குட்டி குஞ்சா.. நான்தான் ஏதோ..''
என்றவளின் விழியோரம் மீண்டும் கண்ணீர் துளிர்க்க,
''சாமி காரணம் இல்லாமே எதையுமே பண்ண மாட்டாங்க சின்ன டிக்கி.. கண்டிப்பா ஏதாவது ஒன்னு இருக்கும்.. அது இப்போ நமக்கு தெரியாட்டியும் பின்னாடி தெரியும்..''
என்றவனோ மெதுவாய் மங்கையவள் கண்ணோரங்களை விரலால் துடைத்து நெருங்கினான் சீமாட்டியின் செவியோரம் ரகசியம் சொல்ல.
''முப்பத்தி நாலு முப்பத்தி ரெண்டாச்சு போலே.. சப்புன்னு இருக்குடி பாக்கவே!!''
என்றவனோ கேலி சிரிப்போடு பின்வாங்கி இறுக்கினான் இயமானியவளின் நிதம்பங்களை.
''சீ!! போடா!! இப்போதான் புரியுது குடம் விழுந்து வேண்டுதல் நிறைவேறாமோ போனது உன்னாலதான்னு!!''
என்றவளோ மல்லாக்க கிடந்தவளின் இருப்பக்க தோள்களோடு சேர்த்து அவளை கைகளால் தாங்கியிருந்தவனின் மூக்கை பிடித்தாட்ட,
''அடிப்பாவி!! இவ்ளோ நேரம் நாந்தான் நான்தான்னு கதறனே!! இப்போ என்னான்னா என்னே சொல்றே!!''
என்றவனோ முகத்தை சுருக்கி வைத்தான் ஒரு செல்லக்கடி அவளின் நாசியில்.
''ஆஹ்ஹ்.. பின்னோ இவ்ளோ காஜியா இருந்தா வேறெப்படி சொல்றதாம்.. இன்னும் தைப்பூசம் கூட முடியாலே அதுக்குள்ளே சைஸ்சே பத்தி பேசறே நீ!!''
என்றவளோ விரன் கடித்த மூக்கை கையால் தேய்த்து சொல்ல,
''அப்போ காஜியே நிவர்த்தி பண்ணிடுவோமா..''
என்ற விரனோ தாபம் கொண்ட கரத்தால் பாவையவள் பின் முதுகில் படர,
''ஹ்ம்ம்ம்.. விரன்..''
என்றவளின் சொக்கிய விலோசனங்கள் அடுத்த நொடியே பட்டென திறந்துக் கொண்டது அறைக்கு வெளியில் ரேக்கா மகனின் பெயரை ஏலம் போட.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 29
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.