- Joined
- Jul 10, 2024
- Messages
- 496
அத்தியாயம் 63
அம்மணி சின்ன டிக்கியின் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட விரனால் ஒரு வாரம் கூட தாக்கு பிடித்திட முடியவில்லை.
இருவருக்கும் நடுவிலிருந்த உருண்டை தலையணையை பறக்க விட்டான் துயில் கொண்டவனாய் நடித்து ஆணவன்.
அவனின் தந்திரத்தை அறிந்தவளோ போர்வையோடு ஹோல் கிளம்பினாள் ரகசியமாய் சிரித்து.
நித்திரை நடிப்பை காண்டினியூ செய்து சோகங்கொண்டான் விரன், எங்கே எழுந்து ஏதாவது பேசவோ தடுக்கவோ போனால் அவனின் குட்டு உடைந்திடுமோ என்ற பயத்தில்.
மறுநாள் நடிப்பிற்கு லீவு விட்டவன் நேரடியாகவே உருண்டை தலையணையை தூக்கி வீச,
''பேச்சு வார்த்தை இல்லன்னு சொன்னது, இதையும் சேர்த்துதான்!''
என்றவளோ உருண்டை தலையணைக்கு பதில் தலையணைகளை கொண்டு இருவருக்கும் நடுவில் தடுப்பு சுவர் அமைத்தாள்.
''ஹலோ, நான் ஒன்னும் ஜிம்மடிக்கறே எண்ணத்துலே தலைகாணி வேணான்னு சொல்லலே! என் பையன் கூட விளையாடணும், பேசணும், அவனே தொட்டு பார்க்கணும்! அதுக்கெல்லாம் இந்த தலைகாணி ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கு! இந்த பாம்பன் பாலம் மட்டும் வேணாவே சின்ன டிக்கி! பிளீஸ்டி! கொஞ்சம் கருணை காட்டேன்! ''
என்றவனின் கரமோ பட்டென சுந்தரியவள் வயிற்றில் பதிய,
''இங்க மட்டும்தான் உங்களுக்கான ஸ்பேஸ்! கை வேறே இடம் போணுச்சு..''
என்றவளோ அழுத்தமாய் கணவனை முறைத்து சொல்ல,
''சத்தியமா எனக்கு எந்த தப்பான எண்ணமும் இல்லே!''
என்றவனோ உள்ளங்கையை பதித்திருந்தான் சின்ன டிக்கியின் உச்சந்தலையில்.
''நம்பறேன்!''
என்றவளோ மல்லாக்க படுக்க கொஞ்சமாய் மேடிற்றிருந்தவளின் வயிற்றை வருடியப்படி கண்கள் மூடினான் விரன்.
வீர வசனம் பேசிவளுக்கோ புருஷனின் மூச்சுக்காற்றில் உடல் அனல் காய்ச்சல் கொண்டது. ஏடாகூடமாய் ஏதும் நடக்கும் முன் அவளாகவே விலகி போக பார்க்க, மவராசன் அவனோ மங்கையவளை விடாது வளைத்து அவன் மாரோடு சேர்த்துக் கொண்டான்.
அவன் பிடியில் கிறங்கிய காரிகையோ கணவனின் வெற்று மார்பில் மழலையாய் புதைந்து உறங்கிப் போனாள்.
இது மட்டுமே வாடிக்கையானது தம்பதிகள் இருவருக்குள்ளும். மற்றப்படி, அவரவர் வேலையை அவரவரே பார்த்துக் கொண்டனர்.
சின்ன டிக்கியின் கர்ப்பத்தை வீடே கொண்டாடியது. ரேக்கா கோவில் குளங்களுக்கு அளவில்லாமல் படியளந்தார். வட்டிக்கார தாத்தாவோ கடனாளிகளுக்கு சிறப்பு தள்ளுபடி செய்தார்.
விரனோ பக்கமிருந்தப்படி பாவையவளை நன்றாய் கவனித்துக் கொண்டான். வெளியூர் பயணங்கள் எதிலிலும் அவன் தலையை விட்டிடவில்லை.
நிழலிகா நிறைமாதம் கொண்டிருக்க வளைகாப்பு நடத்தப்பட்டது அவளுக்கு. குடும்பமே ஆனந்தத்தில் திளைக்க, யார் கண் பட்டதோ தெரியவில்லை, மறுநாளே விரன் பைக் ஆக்சிடெண்டில் சிக்கினான்.
நூலிழையில் உயிர் தப்பினான் குட்டி குஞ்சனவன் நல்லவன் ஒருவனின் சாமர்த்தியத்தால்.
வேகக்கட்டுப்பாட்டை மீறிய விரனின் பைக்கோ விளக்கு கம்பத்தில் இடிக்க போய் இறுதியாய் காரொன்றின் மீது மோதி தரை சரிந்தது. விரனோ பைக் சரிய சறுக்கியவாறே தரையில் தேய்த்துக் கொண்டு போனான்.
நல்லவேளை ஜாக்கெட் அணிந்திருந்ததால் கை கால்களில் மட்டுமே கொஞ்சமான சீராய்ப்புகளையும் தலையில் சின்னதான காயமொன்றையும் கொண்டான்.
மழை நேரமாய் பார்த்து பைக் டயர் செய்த சதிதான் அது. பாவம் விரனை காப்பாற்ற முனைந்த ஓம்காரனுக்குத்தான் அடி கொஞ்சம் பலம்.
அவன்தான் விளக்கு கம்பத்தை இடிக்க போன அவிரன் சிங்கை பேராபத்திலிருந்து காப்பாற்றினான். மாஜி மனைவியான ஹனியை விமானம் ஏற்றிவிட்டு வருகையில்தான் இப்படியான துர்சம்பவம் தலைநகரின் பிரதான சாலையில் நடந்தேறியது.
சீறிப்பாய்ந்து வந்த பைக் நிதானமற்று பயணிக்க எப்படியும் விரன் ஆள் காலியாகிடுவான் என்றுணர்ந்த கரனோ சமயோசித புத்திக்கொண்டு காரை நேராய் கொண்டு போய் செலுத்தினான் விளக்கு கம்பத்தில்.
கரண் அவன் உயிர் கொண்டு, விரனை காப்பாற்றினான். விரனின் பைக் டோட்டல் டேமேஜ். கரனின் கார் முன் பக்கம் முழுசும் காலி.
லேட்டாகியும் விரன் வீடு திரும்பாதிருக்க, அதை நேரடியாய் கேட்காது தலையை சுத்தி மூக்கை தொட்டிருந்தாள் சின்ன டிக்கி வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலம் இப்படி.
''Hello, little Viran's dad.. What time is coming? your son keeps kicking! My back is in so much pain! I need some pampering!
(ஹலோ, குட்டி விரனோடு அப்பா.. எத்தனை மணிக்கு வருவீங்க? உங்கே மகன் உதையா உதைக்கிறான்! முதுகு வேறே சரியான வலியா இருக்கு! என்னே கொஞ்சம் கொஞ்சுங்களேன்!)
சில்லாய் போன அலைபேசியோ அம்மணியின் குறுஞ்செய்தியை பெற்றுக் கொண்டாலும் அதை அதற்குள்ளேயே புதைத்துக் கொண்டது.
சாலை நெரிசலானது. சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ்சோ காயங்கொண்ட இரு ஆண்களையும் மருத்துமனைக்கு கொண்டு வந்து சேர்த்தது.
அதீத ரத்தப்போக்கு கரனுக்கு தலையில் என்னதான் காற்றுப் பை சமயத்தில் வெளியாகி அவனை காப்பாற்றினாலுமே. ஆகவே, அவனுக்கே தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.
செய்தி கேள்விப்பட்ட அவன் மம்மி சந்திரக்கலவோ பதறி ஓடி வர விரனோ சில பல கட்டுகளோடு அடுத்தவனின் தாயாரிடம் மன்னிப்புக் கோரினான் நடந்ததை சொல்லி.
கரணை பெற்ற மனமோ மகனின் செயலை விட்டு போனவளின் பிரிவோடு சேர்த்து முடிச்சு போட்டுக் கொண்டு கலங்கியது.
விரனோ தகவலை சொல்ல சரனுக்கு அழைக்க, அவனோ அண்ணன் எதை செய்ய வேண்டாமென்று சொல்லிட விழைந்தானோ அதையே செய்து தொலைத்தான்.
கர்ப்பிணியான சின்ன டிக்கியோ ஆடிப்போனாள் சங்கதிக்கேட்டு. பதறி எழுந்தவள் காஃபி டேபிளின் விளிம்பில் முட்டிகால் இடித்து தடுமாறி மீண்டும் பின்னோக்கி பெத்தென்று விழுந்தாள் மரக்கட்டையிலான சோபாவிலேயே.
''அம்மா!''
என்றவளின் அலறலில் வீடோ அலறியது.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 63
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.