- Joined
- Jul 10, 2024
- Messages
- 496
அத்தியாயம் 64
அண்ணியின் அலறலில் ஓடி வந்தான் சரன் வீட்டு போனின் ரிசீவரை அப்படியே போட்டு. போனோ தள்ளாடி விழுந்தது கீழே.
ரேக்கவோ வலிக்கொண்ட மருமகளின் பின்முதுகில் தைலம் தடவி சுடுநீர் ஒத்தடம் கொடுத்தார். ஒரு மணி நேரங்கழிய சின்ன டிக்கியின் முகமோ பழையப்படி இறுக்கத்தை தளர்த்தி மென்மையாகியது.
அவளை வீட்டிலேயே இருக்க சொல்லி ரேக்கா கேட்க,
''ஹுஹும்! நானும் வருவேன்! நான் இப்போ ஓகே அத்தே. பிளீஸ், என்னையும் உங்கக்கூட கூட்டிக்கிட்டு போங்க. இல்லையா, பரவாலே நானே என் ஸ்கூட்டிலே வந்துக்கறேன்!''
என்றவளோ இன்முகங்கொள்ளாது மஞ்சத்திலிருந்து எழ,
''இந்த பஞ்சாயத்தே வேணாம்! எல்லாரும் கிளம்புங்க! போலாம்!''
என்றவனோ இம்முறை அண்ணன் விரனை போல் கட் அண்ட் ரைட்டாக பேசி பெண்கள் இருவரையும் கிளப்பினான் மருத்துவமனைக்கு.
சரன் காரை நிறுத்தியதுதான் குறை, மாமியார் ரேக்காவோடு அரக்க பரக்க மருத்துவமனைக்குள் நுழைந்தாள் சின்ன டிக்கியவள். விரனை முழுசாய் காணும் வரை அந்திகையின் பதைப்பு அடங்கவில்லை.
அட்மிஷன் தாதியர்களின் தகவல்படி ஓடோடி சென்றனர் பெண்கள் இருவரும், சரனோடு மருத்துவமனையின் இரண்டாவது மாடிக்கு.
ஆரஞ்சு பழத்தை சப்புக் கொட்டி உண்டுக் கொண்டிருந்த மகனை பார்த்ததும் ரேக்கவோ நிம்மதி பெருமூச்சு கொண்டார். சரனோ அண்ணனின் காயங்களை கண்ணால் அளந்து குறுக்கு விசாரணை நடத்தினான்.
புள்ளத்தாச்சியோ அப்போதும் ஒரு வார்த்தைக் கூட பேசாது தள்ளியே நின்று அவனை உச்சியிலிருந்து பாதம் வரை கண்டு கண்களில் கண்ணீர் மட்டுமே கொண்டாள். எல்லோரும் பேச ஆசை மணவாட்டி மட்டும் எட்டியே நிற்க வலித்தது விரனுக்கு.
நெருங்கி வந்து அவனை தொட்டுக்கூட பார்த்திடாதவளோ கதவோரமே நின்றுக் கொண்டாள். ரேக்காவிற்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது, மகன் இப்படி கிடக்க மருமகள் இன்னமும் முறுக்கிக் கொண்டு நிற்க.
இருந்தும், வயிற்றில் சுமை கொண்டு நிற்பவளை ஏன் ஏதாவது சொல்லி வைப்பானேன் என்று நினைத்து வாயை மூடிக்கொண்டார்.
இருந்தும், ஆதங்கத்தை வெளிப்படுத்திடாமல் இல்லை மாமியார் மருமகளிடம், கொஞ்சம் முகத்தை காட்டி வார்த்தைகளில் காட்டம் கொண்டு.
''நீ இப்படி நடந்துக்கிறது கொஞ்சுங்கூட நல்லாலோ நிழலிகா! இதுக்காகத்தான் நான் வந்தே தீருவேன்னு ஒத்தக்கால்லே நின்னியா? என்னதான் உனக்கு அவன் மேலே விவாகரத்து விஷயத்துலே கோபம் இருந்தாலுமே, இப்படியா உசுரு பொழைச்சு வந்திருக்கறவன்கிட்டே ஒரு வார்த்தை கூட பேசாமே இருப்பே? நீயே உன் மனசாட்சியே கேட்டுக்கோ எங்கே உன் மனிதாபிமானம்னு!''
பொரிந்து தள்ளியும் அடங்கவில்லை ரேக்காவின் மனக்குமுறல் சின்ன டிக்கி அசராது நிற்க.
''மா!''
என்ற மகனோ தாயை அடுத்த வார்த்தை பேச விடாது வாய் மூடிட வைத்தான்.
ரேக்காவை பொறுத்தமட்டில் தம்பதிகள் இருவருக்குள்ளும் என்னவோ பிரச்சனை. விரனே அதை விவாகரத்து வரை கொண்டுச் சென்றிருக்க, மருமகளோ அதனால்தான் மகனிடத்தில் கோபம் கொண்டு பேசாதிருக்கிறாள். அவ்வளவே, தாயரவர் அறிந்த விடயம். விரன் அப்படித்தான் சொல்லி வைத்திருந்தான்.
யார் என்னே சொன்னாலும் நிழலிகாவின் மௌனத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. சரன் பில் கட்ட நகர, விரனோ நடந்த நிலவரத்தை அறைக்குள்ளிருந்த தாயிடம் தெரிவித்தான். ஓரமாய் நின்ற நாயகியே காதில் விழுந்த செய்தியை மனதில் வாங்கிக் கொண்டாள்.
நேரங்கடக்க விரன் மருந்தின் வீரியத்தில் சற்று துயில் கொண்டான். மாமியாரும் கொஞ்சம் நேரத்துக்கு கண்ணயர்ந்தார். மருமகளை கிளம்ப சொல்ல அவளோ ஆஹ், ஊவென்று எதையும் சொல்லிடாமல் சும்மாவே கிடந்தாள்.
சரனோ தாத்தாவை அழைத்து வர வெளியேறிவிட்டான் மருத்துவமனையிலிருந்து.
நிழலிகவோ இதான் சமயமென்று கரனின் அறையை தேடிச் சென்றாள். கதவை தட்டி அறைக்குள் மேடு கொண்ட வயிறோடு நுழைந்தவளை கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியுற்றனர்.
சின்ன டிக்கியோ அவளை அறிமுகப்படுத்திக் கொண்டாள் அவர்களிடத்தில். கரனோ வந்தவளிடம் குட்டி குஞ்சனின் நிலையை விசாரித்து தெரிந்துக் கொண்டான்.
விரனிடத்தில் ஒத்தை வார்த்தை பேசிடாதவளோ முன் பின் தெரியாத கரனிடத்தில் கண்ணீர் மல்க பேசினாள்.
''உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே! நீங்க அவரே மட்டும் காப்பாத்திக் கொடுக்கலே! மூனு உசுரே காப்பாத்தி கொடுத்திருக்கிங்க! சாகறே வரைக்கும் இதை நானும் என் குடும்பமும் மறக்கவே மாட்டோம்! கடவுள் நீங்க எங்களுக்கு!''
என்றவளோ கையெடுத்து கும்பிட்டாள் கரணை.
''ஐயோ! என்னே நீங்க?! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு!''
என்ற கரனோ சங்கடம் கொண்டான் தாய்மை கொண்டவள் ஆணவனை ஈஸ்வரனோடு ஒப்பிட.
''அதானே, வயித்துலே புள்ளையே வெச்சுக்கிட்டு என்னே பேச்சிது?! இப்படி வந்து உட்காருமா முதல்லே நீ!''
என்ற சந்திரக்கலவோ உரிமையோடு அதட்டினார் நிழலிகாவை.
''நீங்க என்னே சொன்னாலும் சரி, யார் இப்படி சொந்த உயிரே பணையம் வெச்சு மத்தவங்க உயிரே காப்பாத்துவாங்க! நீங்களே சொல்லுங்க!''
என்றவளோ கண்களின் நீரை திசுவால் ஒத்திக்கொள்ள,
''நீங்கதான்! ஐ மீன் உங்களே மாதிரியான பெண்கள்தான்! பிரசவம் அப்படிங்கறதே ஒரு உயிரே புதுசா இந்த உலகத்துக்கு கொண்டு வர நிச்சயமில்லாத வாழ்வா சாவா போராட்டம்தானே! அதை தெரிஞ்சேதானே நீங்களும் அந்த யுத்தத்துக்கு உங்களே பலியாக்க தயாராகறிங்க! சோ, இந்த தாய்மையே விடவா நான் பண்ணுது பெருசு?!''
என்ற கரனோ முறுவலிக்க,
''நான் உங்களே அண்ணன்னு கூப்பிடுவா?!''
என்றவளோ முகிழ்நகை கொண்டு வினவினாள் கன்னங்கள் ஈரங்கொள்ள.
''என் பொண்ணு இப்படி கோழை மாதிரி அழ மாட்டாளே!''
என்ற சந்திரக்கலவோ குரலை செருமிட, அறைக்குள்ளிருந்த மூவருமே சிரித்தனர் அன்றைய பொழுதில் புது பந்தமொன்று நிழலிகா மற்றும் கரனுக்குள் பூத்திருக்க.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 64
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.