- Joined
- Jul 10, 2024
- Messages
- 415
அத்தியாயம் 65
மூன்று நாட்கள் கழித்து வீடு திரும்பினான் விரன் மருத்துவமனையிலிருந்து.
ஒரே கட்டில் என்பதால் அவனுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று தடுப்பு சுவருக்கு லீவு விட்டாள் வீட்டாள் அவள்.
ஆனால், விரனோ அம்மணி தூக்கி போட்ட தலையணையை தூக்கி வந்து அதே மஞ்சத்தில் பார்க் செய்தான், அறையிலிருந்து வெளியேறி.
புரியாத பூமகளோ கோபமோ என்றெண்ணி அவனை பின் தொடர, பக்கத்து அறையில் படுக்கையைப் போட்டவன் தியானத்தில் அமர்ந்து விட்டான்.
என்னானது குட்டி குஞ்சனுக்கென்று குலமகளவள் கலக்கம் கொள்ள, ஆணவனின் வெற்றுடல் மார்போ காட்டிக்கொடுத்தது ஆளனின் நெஞ்சில் வீற்றிருந்த ருத்ராக்ஷ மாலையை.
நோ கமெண்ட்ஸ் என்ற பாணியில் தனியாய் வந்து படுத்துக் கொண்டாள் நிழலிகா. அவளை பொறுத்த மட்டில் விரன் பக்திமானாகி விட்டான் அவ்வளவே.
நிஜத்தில், வேதனைக் கொண்டவனின் மனமறியவில்லை பொண்டாட்டியவள்.
இப்படியே போனது ரெண்டு வாரங்கள். விரன் முடிந்தளவுக்கு சின்ன டிக்கியின் முகம் கூட பார்க்காது தவிர்த்தான், எல்லாம் காரணமாகத்தான்.
அடிப்பட்டு கிடந்தவனை ஒப்புக்கு கூட நெருங்கி வந்து பார்த்திடாதவள், முழுதாய் அவனை வெறுத்து ஒதுக்கி விட்டாளென்று எண்ணிக் கொண்டான் விரன்.
குழந்தைக்காக மட்டுமே மங்கையவள் அம்மனையில் ஆணவனை சகித்துக் கொண்டு இருக்கிறாள் என்று வேறு நினைத்துக் கொண்டான் அவனாகவே.
ஆகவே, இதற்கு பிறகு பெண்டு அவளை எக்காரணத்தைக் கொண்டும் தொந்தரவு செய்திடக்கூடாதென்று முடிவெடுத்தான் விரன்.
காரணம், இன்றைக்கு சின்ன டிக்கியவள் இப்படி நடந்துக்கொள்வதற்கு மூலக்காரணமே அவன்தான் என்று விரனே குற்ற உணர்ச்சிக்கொண்டு அவனை தரந்தாழ்த்திக் கொண்டான்.
சுயத்தை வெளிக்காட்டி இன்பம் கொண்டது அவனை போன்றோருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், அவனோடு சுக துக்கங்களை பங்குப்போட்டு வாழ்க்கை நடத்தியவளுக்கு பேரிடித்தானே.
மடவரலவளை குத்தஞ்சொல்லி என்ன இருக்கிறது என்று, அவனாகவே அசிங்கப்படும் முன் மிச்ச மீதி மரியாதையையாவது காப்பாற்றிக் கொள்ள முனைந்தான் விரன் தன்னவளை விலகி.
ஒரே மஞ்சத்தில் படுப்பது எங்கே மாயோளவளுக்கு அசௌகரியமாக இருக்குமோ என்றெண்ணி அதையும் தவிர்த்தவனாய் தனியறையில் படுத்திட ஆரம்பித்தான்.
காதலித்து கரம் பிடித்த மனைவியவளோடு விதவிதமாய் கலவி இன்பம் கொண்டவன் கோமகளவளை தொடாது நிச்சயம் இருக்க முடியாது என்றறிவான். அதற்காகத்தான் ருத்ராக்ஷ மாலையை மாட்டிக்கொண்டான்.
ஜிம்மே கதியென்றானான் கட்டுமஸ்தான ஆணவன். அப்படியே வீட்டுக்கு வந்தால் கூட பூஜை புனஸ்காரம் என்று தெய்வகாரியங்களில் மூழ்கினான். வரவேற்பறையில் அமர்ந்து டிவி பார்ப்பதை முற்றாய் துறந்தான். டைனிங் டேபிள் கலாச்சாரம் மொத்தமாய் மறந்தான்.
தனியாளை ஆகிப்போனான். வெறுமனே நடித்து சிரித்தான். உற்று நோக்க எதையோ பறிகொடுத்தவனாய் காட்சியளித்தான். அதீத மன உளைச்சலில் அவன் இருப்பது ஆணவனின் நடத்தையிலேயே தெரிந்தது.
இன்ஸ்டாகிராம் பதிவுகள் எல்லாம் போதனையால் நிரம்பி வழிந்தது. முன்பிருந்த உற்சாகம் அவனிடத்தில் இல்லையென்பதை விசிறிகள் கூட உணர்ந்திருந்தனர் பொஞ்சாதியை தவிர்த்து.
ரேக்கவோ வீட்டில் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்தார் மகன் விழுந்து வாரியதற்கு மருமகளின் வளைகாப்புதான் காரணமென்று பச்சி சொல்ல.
சின்ன டிக்கியோ கவலைக்கொண்டாள். விரனோ கோபம் கொண்டான். ஐந்தாவது மாதத்திலேயே வளைக்காப்பு கேட்டது ஒரு குத்தமாகி போனது அவர்களின் வீட்டில்.
பூஜை சிறப்பாய் நடந்தேற கரனும் அவன் மம்மி சந்திரக்கலாவும் வந்துக் கலந்துக் கொண்டனர். இரு குடும்பமும் ஒரு குடும்பமாய் ஆனது.
இப்படியான ஒரு நாளில்தான் அவர்களின் வீட்டுக்கு ஒரு பார்சலொன்று வந்தது மிஸ்ட்டர் அண்ட் மிர்சஸ் அவிரன் சிங் என்று பெயரில்.
திரு திருமதி என்று குறிப்பிட்டிருக்க ஊடையவளோ பாக்ஸை திறந்தாள் உரிமையோடு, அது தம்பதிகள் இருவருக்கும் பொதுவானதென்று கருதி.
உள்ளுக்குள்ளேயே பலவகையான சீன மருந்துகள் இருந்தன. கூடவே, பர்ஃபியூம், பர்ஸ், பெல்ட், டி- ஷர்ட், வாட்ச், ஜட்டி, பாக்சர்ஸ் என்று ஆண்களுக்கான ஐட்டங்கள் பல இருந்தன பல்வகையில்.
புரியாது விழித்த ஆயந்தியோ யார் அனுப்புனர் என்று செக் செய்ய, சின்ன டிக்கி குட்டி குஞ்சனின் வீட்டு முகவரியே இருந்தது அதில்.
பேந்த விழித்தவள் குழம்பி சொறிந்தாள் மண்டையை செண்டர் (sender) மற்றும் ரிசீவர் (receiver) இருவருக்கும் ஒரே முகவரி கொடுக்கப்பட்டிருக்க.
சரி யாராக இருந்தால் என்னே, வந்திருக்கும் பொருட்களெல்லாம் விரனுக்கானது என்று சின்ன டிக்கிக்கு நன்றாகவே புரிந்தது.
இருப்பினும், யாரது இப்படி ஜட்டி, பாக்ஸர் வரை புருஷனுக்கு அனுப்பியது என்ற கடுப்போ வதனியின் நாசி நுனியை வேர்த்திட வைத்தது.
அப்படியே, சொந்த புருஷனின் மீது சந்தேகமும் வந்தது, ஒருவேளை இது அவனின் வேலைதானோ என்று மனம் சஞ்சலம் கொள்ள.
பரிசாய் வந்த பொருட்களையெல்லாம் மேஜை மீது வரிசையாய் அடுக்கி வைத்தவள் கண்ணில் சிக்கியது சிறியதொரு வாழ்த்து அட்டை.
அதைக் கையிலெடுத்த சின்ன டிக்கியோ வெள்ளை வர்ண அட்டையதில் ஆங்கில வாழ்த்தென்று இருப்பதைக் கண்டாள்.
ஆனால், அவ்வாக்கியம் முற்று பெறாமலேயே இரு இடங்களை காலியாய் கொண்டிருந்தது இப்படி.
''.... has no .....''
பூர்த்தியாகாத அவ்விரு வார்த்தைகள் என்னவாய் இருக்கும் என்று யோசித்த சீமாட்டியின் மிழிகளின் முன்னோ, அன்பளிப்பாய் வந்திருந்த சிவப்பு வர்ண சட்டை பல்லிளித்தது ''நோ ஜெண்டர்'' என்று ஆங்கில வார்த்தைக் கொண்டு.
கூடவே, ஆடம்பரமான கைக்கடிகாரத்துக்குள்ளிருந்த இதய வடிவமோ மின்னி மிளிர்ந்து மானினியவளின் கவனத்தை ஈர்த்தது.
மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுத்த ஆயந்தியோ அதை கசக்கி பின் விடை தெரியா வாழ்த்தினை முழுமையாக்கினாள் இப்படி.
''Love has no gender''
(காதலுக்கு பாலினம் கிடையாது)
சுருக்கென்றது நிழலிகாவிற்கு.
ஒரு நிமிடம் அதிர்ந்து விக்கித்து விட்டாள் விருந்தனையவள்.
இதை அனுப்பியது கண்டிப்பாய் விரனோடு படுக்கையைப் பகிர்ந்துக் கொண்ட ஆணாகத்தான் இருந்திட முடியும் என்பதை உணர்ந்து வெட்கினாள், நல்ல மனைவியாய் அவளிருக்க தவறியதை எண்ணி.
மலரவளின் சுயநலமான போக்கில் விரனின் நிலையை மறந்திருந்த குற்ற உணர்ச்சியில் கண்ணீர் கொண்டாள் பேதையவள்.
பாலினம் தொடர்பாய் கணவனவன் ஒப்புக்கொண்ட விடயங்களை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாது, இத்தனை மாதங்கள் மனசாட்சியின்றி நடந்துக்கொண்டதை எண்ணி வெம்பினாள் வஞ்சியவள்.
உசுருக்கு உசுராய் காதலித்து கட்டிக்கொண்ட விரனின் மன உணர்வுகளை துச்சமாய் தூக்கி ஓரம் போட்டுவிட்ட நேரிழையின் நெஞ்சை உரல் கொண்டு குத்திட தோன்றியது தெரிவையவளுக்கு.
தாய் கொண்ட துக்கத்தை மகன் உணர்ந்தான் போலும், சின்ன டிக்கியின் வயிற்றுக்குள் வட்டமடித்து ஆறுதல் சொன்னான் விரனின் உதிரமவன்.
உயிர் துஞ்சிடுவான் விரன்
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 65
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.