- Joined
- Jul 10, 2024
- Messages
- 496
அத்தியாயம் 66
''சொல்றதுலே என்னடி இருக்கு, செய்றதுலதான் இருக்கு!''
இதுதான் அவிரன் சிங்கின் தார்மீக மந்திரம் கட்டிலின் மீது. காதல் கொண்ட கலவியில் காதலை அவன் வெளிப்படுத்தும் விதமும் இப்படித்தான்.
அப்படியான பிரமாஸ்த்திரத்தையே கையிலெடுக்க முடிவெடுத்தாள் ஊடையவள்.
குட்டி குஞ்சனிடத்தில் சின்ன டிக்கிக்கு இருக்கும் காதலை வேறெப்படி வெளிப்படுத்திட முடியும் இதைத்தாண்டி என்றவளின் அன்போ அவளை ரொம்பவே நிதானமாக்கி சிந்திக்க வைத்தது.
நிழலிகா அவளின் தேடலை ஆரம்பித்தாள் விரனிடத்திலிருந்து. பார்சல் எங்கிருந்து வந்ததென்ற தகவலேதும் இல்லாத காரணத்தால் அப்பொருட்களை கொண்டு அதன் விபரங்களையும் விலைகளையும் அலசி ஆராய்ந்து பார்த்தாள் அருணியவள்.
ஆடம்பரங்களின் விலை காந்தாரியின் காதை அடைத்தது. புரிந்தது அவளுக்கு விரனின் ஆண் துணையவன் சாமானியப்பட்டவன் இல்லையென்று. ஆகவே, கண்டிப்பாய் ஜிம்மில் இருக்கக்கூடிய எவனாகவும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தாள் பாரியாள் அவள்.
ஆகவே, தேடலை அடுத்தக்கட்டமாக விரன் பயணம் செய்த ப்ரோஜெக்குகளின் பக்கம் திருப்பினாள் திருமதியவள். கோப்புகளை கணவனின் ஜிம் அட்மின் மூலம் பெற்று கொண்டாள். ஈனமாக அப்பையனுக்கு சிறு தொகையொன்றையும் கொடுத்தாள்.
காரணம், காரியம் ரகசியமானது. ஒருக்கால், விரன் திடிரென்று கோப்புகளின் பக்கம் வந்தால், சிக்குவது அங்கு பணிப்புரியும் பொடியன் மட்டுமல்ல சின்ன டிக்கியும்தான்.
ஆகவே, காதும் காதும் வைத்தாற்போல அவனை எப்படியாவது சமாளிக்க சொல்ல கோப்புகளை அள்ளிக்கொண்டு ஓடினாள் ஒளியிழையவள் மருதாணி கடைக்கு.
மொத்தம் ஆறேழு பெயர்கள் அடிப்பட அவர்களின் விபரங்களை சேகரித்தவள் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அவர்களின் பி.ஏக்.களை பிடித்தாள் அலைபேசி மூலம்.
விரனின் பெயரை தைரியமாய் சொல்லியவள் அவனின் ரெக்கமண்டேஷனில்தான் அழைப்பதாகவும் கதைவிட்டாள். நம்பியவர்களிடம் வாயில் வந்த ஆங்கில வார்த்தைகளை இணைய இதழின் (online magazine) பெயராய் அடித்து விட்டாள் விரனின் தர்மபத்தினி.
அப்படியே, சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக நேர்காணல் செய்ய வாய்ப்பொன்று வேண்டுமென கோரிக்கை வைத்தாள் வாஞ்சினியவள், வரப்போகின்ற சர்வதேச இருபாலினர் தினத்தை முன்னிட்டு.
அவள் அளந்த பொய்களை நம்பியவர்களோ கூடிய விரைவில் பதில் சொல்வதை சொல்லி அழைப்பை கட் செய்தனர்.
எதையுமே திட்டமிடாது ஒரு ஃப்ளோவில் அம்மணியவர் பயணித்திருக்க இப்போதுதான் அதன் வீரியம் புரிந்தது மேடம் நிழலிகாவிற்கு.
உடனடியாக தலைமகளவளுக்கு ஒரு இணைய இதழ் வேண்டும். டொமெய்ன் வாங்கி அவள் பெயரில் ரிஜிஸ்ட்டர் பண்ணுவதெல்லாம் ஒன்றும் அவ்வளவு பெரிய வேலையில்லை.
இருப்பினும், அதிலொரு மாபெரும் சிக்கலிருந்தது. அதுதான் சின்ன டிக்கியவள் முதலில் நேர்காணல் என்ற பெயரில் பொய்யுரைத்த விடயம்.
மலேசியாவை பொறுத்த வரைக்கும் எல்.ஜி.பி.டி. (LGBT) என்ற லெஸ்பியன், கேய், பைசெக்ஸுவல் மற்றும் ட்ரன்ஸ்ஜெண்டர் (lesbian, gay, bisexual, and transgender) ஆகியோருக்கு நாட்டில் எவ்விதமான உரிமைகளும் வழங்கப்படுவதில்லை.
இப்படியான பாலினங்களை மலேசியா அங்கிகரிப்பதில்லை. இவ்வகையான பாலின உறவுகள் மலேசியாவின் சட்டத்துக்கு புறம்பானவையாகும்.
ஆகவே, நாட்டின் அமைதியையும் நற்பெயரையும் சீர்குலைக்கும் வகையில் இத்தகையோர் பொதுவெளியில் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழ்த்தினால், எவ்வித தயவு தாட்சணையுமின்றி உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள். தக்க தண்டனையும் அவர்களுக்கு வழங்கப்படும்.
ஆகவே, நிழலிகா அவளின் தேடலுக்கான முயற்சியை வேறொரு கோணத்தில் கையாள ஆரம்பித்தாள். விளம்பரம் செய்தாள் இணையம் வழி அவசரமாக டிஜிட்டல் காண்டெண்ட் கிரியேட்டர் (digital content creator) வேண்டுமென்று.
சின்ன டிக்கியின் நல்ல நேரம் போல, வேலைக்கான முதல் விண்ணப்பமே பத்து பொருத்தமும் கொண்டு அமைந்தது. அழைத்தாள் ஆயிழையவள் வாய்ப்பை பத்தே நிமிடங்களில் கேட்ச் (catch) செய்து வேலைக்கு ஆப்பிளாய் (apply) செய்தவளை.
ஸ்வர்னிக்கா என்ற பெண்ணோ அவளை அறிமுகம் செய்துக் கொண்டாள் ஏற்கனவே மெடிக்கல் லைன் அனுபவமும் இருப்பதாய் சொல்லி.
பாரிஸ்காரி (Paris) அவளிடம் இணைய இதழில் என்னென்னெ செய்ய வேண்டுமென்று மேலோட்டமாய் சொல்லி நங்கையவள் சம்மதத்தையும் சம்பளத்தையும் பேசி முடிவு செய்தாள் காரிகையவள்.
மத்ததெல்லாம் மின்னஞ்சல் வழி வரும் என்ற சின்ன டிக்கியோ ஹனியாகிய புதுப்பெண்ணை கழட்டிவிட்டு போனை போட்டாள் அண்ணன் கரனுக்கு.
பட்டும் படாமலும் அவனிடத்தில் ஐடி (IT) நண்பர்கள் யாரேனும் வெளியூரில் இருக்கிறார்களா என்று விசாரித்து, அவன் ஆம் சொல்ல; அவர்களில் ஒருவனின் என்னை மட்டும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள் விரனின் இல்லாள்.
குசலம் விசாரித்த கரண் போனை வைக்க அண்ணாவின் நண்பனுக்கு போனை போட்டாள் நாச்சியவள்.
அறிமுகத்துக்கு பிறகான டிஸ்கஷனில் (discussion) மறுமுனையிலிருந்து ஆணோ மொத்தமாய் ஒரு விலை சொன்னான் இணைய தளத்துக்கு தேவையான அத்தனை லொட்டு லொசுக்குகளுக்கும் சேர்த்து.
டெபாசிட்டாக (deposit) பாதி பணத்தை உடனடியாய் அவனுக்கு ஆன்லைன் ட்ரான்ஸ்பர் (online transfer) செய்தாள் ஆட்டியவள். ஆணவனோ தளம் ரெடியாக பத்து நாட்களாகும் என்றான்.
நிழலிகாவோ கிடைத்த பத்து நாள் கேப்பில் நிறைய விடயங்களை தேடி படித்தாள் விரனின் பைசெக்ஸுவல் பற்றிய தகவல்களை.
அதே வேளையில் அவளுக்கு லக் அடித்தது நேர்காணலுக்காக அனுமதிகள் மூவரிடமிருந்து கிடைக்க பெற. கொஞ்சமும் தாமதிக்காதவள் அன்றைய இரவே ஆன்லைன் இன்டர்வியூ செஷனை (online interview session) ஆரம்பித்தாள்.
எல்லாம் நல்லப்படியாய் முடிய கேள்வி பதில்களை ஹனிக்கு அனுப்பி வைத்தாள் விறலியவள்.
பாதி ரெடியாகியிருந்த இணையதளத்தை மெஜந்தா, ஊதா மற்றும் நீல வர்ணங்கள் கொண்டு வடிவமைக்க சொன்னாள் தாட்டியவள் விரனின் இருபாலின சமூகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில்.
மெஜந்தா பட்டை ஒரே பாலினத்தவர் மீதான ஈர்ப்பையும், நீலம் எதிர் பாலினத்தின் மேல் கொண்ட ஈர்ப்பையும் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட ஊதா நிறமோ ஒன்றிணைப்பு என்ற கோட்பாட்டையும் கொண்டதாகும்.
டூ அண்ட் சேய் (Do & Say) என்ற இணையதளம் முழுவதுமாய் தயாராகி முழுக்க முழுக்க பைசெக்ஸுவல் சார்ந்த விஷயங்களை மட்டுமே தாங்கியிருந்தது.
ஹனியின் கையில் பொறுப்பை கொடுத்த நிழலிகாவோ நிம்மதியாய் அடுத்த இருவரை நேர்காணல் செய்தாள் வெப்கேம் (webcam) முன்னாடி அமர்ந்து.
இதுவரை பேட்டியெடுத்த ஐவரில் ஒருவர் கூட சின்ன டிக்கியின் சந்தேகத்துக்கு விடையாகவில்லை.
சரியான ட்ரெக்கில்தான் (track) பயணிக்கிறோமா என்ற குழப்பமோ வந்துவிட்டது யுவதியவளுக்கு ஒரு கட்டத்தில்.
இருப்பினும், மனம் தளராத மடந்தையோ மிச்சமிருக்கும் இருவரையும் குடைந்தெடுத்து விட்டு பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம் என்று பொறுமை காத்தாள் விரனின் பொறுப்பான மணவாளியாய்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 66
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.