- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
அத்தியாயம் 71
தலையோடு ஊற்றிக்கொண்டு வந்தவளின் தலையில் குண்டு விழுந்தது அலறிய கைப்பேசி கொண்டு வந்த தகவல்.
இன்னும் நிழலிகாவால் ஜீரணிக்க முடியவில்லை காதால் கேட்ட சங்கதியை. அவசர அவசரமாக கிளம்பியவள் ஒரு நொடி மஞ்சத்தில் அமர்ந்தாள்.
விழிகளை இறுக்கமாய் மூடி மேடு கொண்ட வயிற்றை தடவினாள்.
''குட்டி, அம்மா கூட நீ இருக்கணும்! அப்பா கூட அம்மா நான் இருப்பேன்! எப்போதுமே!''
என்றவளோ நேராய் ஜிம் நோக்கினாள்.
விரனை இழுத்துக் கொண்டு ஏர்போட் பயணித்தாள். அதற்குள் வீட்டிலிருந்தப்படியே பிஸ்னஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகளை பெருந்தொகை செலுத்தி ஆன்லைன் மூலமாய் வங்கியிருந்தாள் சின்ன டிக்கியவள்.
''நிழலிகா, எங்கே போறோம்? பிளீஸ், சொல்லு? நானும் அரை மணி நேரமா கேட்கறேன் நீ இப்படி அமைதியாவே இருந்தா என்னே அர்த்தம்?''
க்ரப் காருக்குள் அமர்ந்திருந்தவன் நடக்கும் கூத்து புரியாது தன்மையான குரலிலேயே வினவினாள் வயிற்று புள்ளைக்காரியிடம்.
''நான் சொல்றதே மறுக்காமே செய்வீங்கன்னு நம்ப ஒப்பந்தத்துலே இருக்கு.''
என்றவளோ மென்புன்னகை கொண்டாள். விரனுக்கோ எதோ ஒரு ஏழரையை இழுத்து விட போகிறாள் என்று மட்டும் உள்ளுக்குள் உறுத்தியது.
மேற்கொண்டு எவ்வித கேள்வியும் கேட்காதவன் மெதுவாய் தாழ்த்தி நோக்கினான் ஆணவனின் பார்வைகளை அவன் உயிர் தாங்கியிருக்கும் தாட்டியவள் வயிற்றை.
தொட்டு பார்த்திட ஆசை முண்டியடிக்க, மனமோ ஒரு நிமிடம் நிறுத்தி நிதானித்தது ஆணவனின் நியாயமான ஆசையை எங்கே தடுத்திடுவாளோ தாரமவளென்று.
விரனின் ஏக்கத்தை உணர்ந்தவளோ அவன் கையை உரிமையோடு பற்றி பதித்தாள் பாவையவள் மேடுக்கொண்ட சடரத்தில்.
அம்பகங்கள் நான்கும் ஒன்றை ஒன்று காதலோடு தழுவிக் கொள்ள கட்டிக்கொள்ள கரங்கள் நான்கும் கூட பரபரத்தது. இருந்தும், உறவு சிக்கலில் சிக்குண்டு கிடக்கும் நெருடல் இருவரையும் தள்ளியே வைத்தது.
தந்தையென்ற உணர்வையும் அப்பனாகி போன பெருமையையும் ஊர் மெச்ச சொல்லி தம்பட்டம் அடித்து வாழ்க்கை வேறொரு கோணத்தில் கற்பனை செய்து வைத்திருந்தவனின் கனவெல்லாம் ஒரே நாளில் அவன் நிலை அறிய உடைந்து நொறுங்கியதை எண்ணி விரன் வருந்தாதே நாளே இல்லை.
இந்நேரம் வேறொருத்தியாக இருந்திருந்தால் போடா என்று சொல்லி எப்போதோ கிளம்பி போய் புது வாழ்க்கையொன்றை தொடங்கியிருப்பாள். ஆனால், அவனின் சின்ன டிக்கியவள் அப்படியில்லை என்பது குட்டி குஞ்சனுக்கு நன்றாகவே தெரியும்.
அந்திகையவளுக்கு கணவன் மீது கோபமே தவிர வெறுப்பதும் பெருசாய் இல்லையென்பதையும் அவன் உணர்வான்.
அதற்காக ஆயந்தியின் இளகிய மனதையும் அவன் மீது மடந்தையவள் கொண்ட காதலையும் அவனுக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை விரன்.
எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் என்று எண்ணியவனோ மனைவியவளை அவள் போக்கிலேயே விட்டிருந்தான்.
மென்மையாய் வருடிக் கொடுத்தான் விரன் அவன் உயிர் ஜனித்திருந்த இடத்தை. என்ன நினைத்தாளோ தெரியவில்லை மெல்லியாளவள் விரனின் விரல்களை அவளின் விரல்களோடு மெதுவாய் கோர்த்தாள். சின்ன டிக்கி முகிரத்திற்கு பின்னான காதல் கொள்ளும் செயலிது.
விரனின் விரல்களும் வஞ்சியின் விரல்களும் மென்மையாய் பிண்ணிக்கொண்டன. கதறியது காரிகையின் உள்ளம் அன்றைய இன்பங்களை எண்ணி. தெப்பக்குளம் தளும்ப முகத்தை விடுக்கென்று திருப்பிக் கொண்டாள் புனைகுழளவள்.
வதனியின் உள்ளம் குமுறும் ரோதனையை நகங்களால் கடத்தினாள் விரனுக்குள் சனிகையவள். புரங்கரம் காயங்கொள்ள தெரியிழையின் ரணம் உணர்ந்தான் ஆணவன் குற்ற உணர்ச்சி மேலோங்க.
மௌனமாய் தலையை சீட்டியில் பின்னோக்கி சாய்த்து கண்கள் மூடினான் அவிரன் சிங். ஒன்றாகி போன இருவரின் கரங்களும் இணைபிரியாதே இருந்தது.
சின்ன டிக்கியின் செவியிலிருந்த ஹேண்ட்ஸ் பிரீயோ,
''நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா..''
என்றொலிக்க ஆஷா போஸ்லே மற்றும் ஹரிஹரன் குரலில், பட்டென திரும்பி விரனின் புஜத்தில் முகம் புதைத்தாள் வல்லபியவள், சத்தமில்லா அழுகையில் ஆணவன் தோல் நனைத்து.
''நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா..''
என்ற வரிகளோ பெய்வளையின் காதிலிருந்து சரிந்த ஹேண்ட்ஸ் பிரீ வழி ஒலிக்க, துணைவியவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் விரன, ஒன்றிய இருவரின் விரல்களும் இன்னும் அப்படியே இருக்க பிரியாது.
ஒரு மணி நேர கார் பயணம் நெடுநாட்களுக்கு பிறகு தம்பதிகளை கொஞ்சம் ஒண்டிக்கொள்ள விட்டது.
வாடகைக்காரோ விமான நிலையத்தின் முன் போய் நின்றது. அதிர்ச்சிக் கொண்ட விரனோ பார்வைகளால் வேள்வி கொண்டான் போகும் இடம் எதுவென்று.
''பிலிப்பைன்ஸ்!''
என்றவளோ ட்ரவலிங் பேக்கை கணவனிடத்தில் ஒப்படைத்து அவன் கரத்தை தோதாய் பற்றிக் கொண்டாள்.
''இடுப்பு ஏதும் வலிக்குதா நிழலிகா?''
என்றவன் வாய் மலர்ந்தான் ஆறாவது மாதத்தில் கொஞ்சம் சோர்வாய் உணர சின்ன டிக்கியவள்.
இல்லையென்று தலையாட்டியவளோ முதலில் கொண்ட இதத்தை இப்போதும் எதிர்பார்த்தாள் தொடராது அதுவென்று ஏங்கி தாய்மை அவளை உந்தி தள்ள.
இருவருக்கும் நிறைய பேசிட வேண்டும். அதே சமயம் மௌனமும் வேண்டும்.
பிலிப்பைன்ஸ் என்றதும் விரனுக்கு ஜெர்க்கானது என்னவோ உண்மைத்தான். இருப்பினும், அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
மூன்றை மணி நேர பயணத்திற்கு பிறகு தம்பதிகள் இருவரும் வந்தடைந்தனர் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா சிட்டிக்கு.
''இந்த ஹோட்டல் போகணும்.''
என்றவளோ போனின் தொடுதிரையிலிருந்த தங்கும் விடுதி ஒன்றை காண்பிக்க,
''சரி, போகலாம்.''
என்றவனோ அங்கிருந்த வாடகை காரொன்றில் பயணித்தான் நிழலிகாவோடு அவள் செல்ல கோரிய ஹோட்டலுக்கு.
ஏதாவது கேட்பான் விரன் என்று காத்திருந்தவளுக்கோ ஏமாற்றமே ஆணவன் வாயே திறவாதிருக்க.
அரைமணி நேர பயணத்தில் தங்கும் விடுதியை அடைந்தனர் தம்பதிகள் இருவரும்.
ப்ரீ புக்கிங் செய்த அறைக்குள் ட்ரவலிங் பேக்கை வைத்த அருணியவளோ,
''வாங்க, கொஞ்சம் வெளியே போகணும்.''
''இப்போதானே வந்தோம் நிழலிகா. ஒரு ஒன் ஹவர் கழிச்சு போகலாமே.''
''இல்லே, இப்பவே போகணும்.''
என்றவளோ கதவை திறந்து நிற்க,
''இப்போவாவது நான் தெரிஞ்சிக்கலாமா நாமே இங்க வந்த காரணத்தே?''
என்றவனோ பாரியாள் பக்கமாய் தோள்கள் உரசாது நடந்து வினவினான்.
''ரெண்டு நிமிஷம்.''
என்றவளோ வார்தைகளை ட்ரிம் செய்த கணக்காய் சொல்லி மின்தூக்கியில் நுழைந்து அழுத்தினாள் எண் பதினெட்டை.
முன்பிருந்த கலகலப்போ குறும்போ இருவரிடமும் இல்லை. கடமைக்கு வாழ்வதை போல் ஜோடிகள் இருவரும் இதுநாள் வரை நாட்களை கடத்திக் கொண்டு வருகின்றனர்.
அழுத்தினாள் பெண்டு அவள் நூற்றி பதினெட்டாவது அறையின் கோலிங் பெல்லை.
கதவை திறந்தான் நதானியேல்.
அதிர்ந்தான் விரன்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 71
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.