What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498
அத்தியாயம் 77

அடுத்த மூன்று நாட்களில் காற்று தீ போல் பரவியது நதானியேல் மற்றும் ஜஸ்மினின் விவாகரத்து செய்தி உலகமெங்கும்.

பல நாட்டு ஊடகங்கள் தம்பதிகளின் பிரிவினையைத் தோண்டி துழாவ, இருவரும் கருத்து வேறுபாடே என்று சொல்லி தீனிப்போட்டனர் மீடியாவின் பசிக்கு.

நிழலிகா ஒரு புறம் கவலைக்கொண்டாலும் அதுவெல்லாம் விரனின் சோகத்தை பீட் (beat) செய்திடவில்லை.

குற்ற உணர்ச்சியில் ஆணவன் மூன்று நாட்களுக்கு கொலை பட்னியாகவே கிடந்தான் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து ஆகாரம் ஏதும் கொள்ளாமல்.

ஒவ்வொரு முறையும் விரன் எட்டிப்போகத்தான் நினைத்திடுவான் நதானியேலை. இம்முறையும் அப்படித்தான் நினைத்தான், எதையும் கண்டுக்கொள்ளாதவனாய் ஒதுங்கி போய்.

இருப்பினும், மனசாட்சி கேள்வி கேட்க, உள்ளம் சுமந்த வலியை மன்னிப்பு என்ற வாட்ஸ் ஆப் வழி தூது அனுப்பினான் விரன்.

பேரழகனின் செய்தியைக் கண்டவன் போனை போட்டு கதற, விரன் பதற; இருவரும் ஒரு வழியாய் சமாதானம் பேசிட தனியே சந்தித்துக் கொண்டனர்.

விரனை போல் நதானியேல் கூட குற்ற உணர்ச்சியே கொண்டான், அவனால் தம்பதிகளுக்குள் விரிசல் ஏற்பட்டிருக்க.

சொல்லித்தான் நதானியேலுக்கு தெரியணும் என்றில்லை. இருந்தும், இப்படியான எல்லை மீறல்கள் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்திடும் என்பதை ஆணவனோ அவனின் சொந்த வாழ்க்கையில் அனுபவித்திருக்க, விரனின் நிலையை விளக்கிடவா வேண்டும் நடிகனுக்கு.

பல சந்திப்புகள் ஆண்கள் இருவருக்குள்ளும் நடந்தேறியது. இருந்தும், அவர்களுக்குள் எவ்வித கட்டில் உறவும் ஏற்படவில்லை. காரணம், என்னதான் ஆண்கள் இருவரும் பைசெக்ஸுவல் என்ற ஆலமரத்தின் விழுதுகளாகினும் இருவருக்கும் தேவை என்பது வித்தியாசமே.

விரனை பொறுத்த மட்டில் அவனின் பைசெக்ஸுவல் பிரச்சனையானது பிரச்சனையே இல்லாத ஒன்றுதான்.

சராசரியாக ஓர் ஆண் எப்படி பெண்ணொருத்தியைக் கண்டால் ஈர்ப்புக் கொள்வானோ அதே போன்ற உணர்வைத்தான், அதாவது ஈர்ப்பைத்தான் ஓர் ஆணிடத்திலும் உணர்ந்தான் விரன்.

விரனின் ஈர்ப்பு என்பது இருபாலினர் மீதிருக்க, ஆணவன் குடும்ப நடத்த விரும்பியது பெண்ணாகிய நிழலிகாவுடன் மட்டும்தான்.

சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், இனிப்பது ரசிக்க மட்டுமே விரும்பும் விரன் ருசிக்க நினைக்கும் டீ பலகாரம் நிழலிகா மட்டுமே.

ஆனால், நதானியேல் அப்படியல்ல. நடிகனின் பைசெக்ஸுவல் எண்ணமானது ஈர்ப்பைத் தாண்டிய உணர்வாகும். அதாவது, கலவியை எதிர்பார்த்திடும் உணர்வாகும்.

ஈர்ப்பிற்கும், காமம் கொள்ள எத்தனிக்கும் ஆசைக்கும் பைசெக்ஸுவலில் வேறுபாடு உண்டு.

விரன் அவனின் மாற்றங்களை அதீதமாய் உணர்ந்தது திருமணத்திற்கு பிறகான நிலையில்தான். அதாவது, நிழலிகாவோடு சிறப்பான தாம்பத்தியத்தை ஆணவன் கொண்டிருக்கவே ஆண்கள் மீதனான அவனின் ஆர்வம் வெளிவர ஆரம்பித்தது.

ஆனால், நதானியேலுக்கு உண்டான முயங்கல் இச்சையானது அவன் ஜஸ்மினோடு கல்யாண வாழ்க்கையில் ஈடுப்படும் முன்னரே தோன்றியதாகும்.

ஆகவே, இருபாலினர் ஈர்ப்புக் கொண்ட அவிரன் சிங்கின் உணர்ச்சிகள் கூடலுக்கான தேடலைக் கொண்ட நதானியேலால் தூண்டப்பட, சொடக்கிடும் நொடியில் மிக சுலபமாகவே குட்டி குஞ்சனவன் நடிகனின் இழுப்பிற்கு இணைந்து போகும்படியான வேதியல் மாற்றங்கள் அவனுக்குள் ஏற்பட்டு விட்டது.

அதையே சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் பலநாள் நல்லதொரு பார்ட்னர் கிடைக்க வேண்டி தவமிருந்த நதானியேல். இப்படித்தான் நிழலிகாவின் பத்தனன் ஜஸ்மின் புருஷனிடத்தில் சிக்கி சீரழிந்தான்.

இருந்தும், அதற்கு பிறகான அவர்களின் சந்திப்பெல்லாம் வெறும் பேச்சு வார்த்தைகளை மட்டுமே கொண்ட சம்பவங்களாகும்.

என்னதான் குற்ற உணர்ச்சியில் நதானியேல் உழன்றாலும் விரன் தனியே சிக்குகையில் அவனிடத்தில் சில்மிஷம் செய்ய நடிகனவன் தவறியதேயில்லை.

ஆனால், சின்ன டிக்கியின் புருஷனோ கறாராய் எச்சரிக்கைச் செய்தான் நதானியேலை, ஒரேடியாய் டாட்டா காட்டிடுவேன் என்று. கடுப்பாகினான் நதானியேல் அவனின் பருப்பு விரனிடத்தில் வேகாமல் போக.

நட்புறவாகினும் இருவருக்குள்ளும் விரிசல் கொள்ளாத பிரிவின் இடையில் சிறு விலகல் மட்டுமே உருவாகியது.

விரன் அதை ஒரு பெரிய பொருட்டாய் கருதவில்லை. காரணம், அவனுக்குமே அப்படியான ஒரு தனிமை தேவைப்பட்டது நதானியேலிடமிருந்து.

இதற்கிடையில் ஜஸ்மினும் நிழலிகாவும் நல்ல நண்பர்கள் ஆகிப்போனார்கள். நிறைய பேசினார்கள், நேரடி சந்திப்புகள் ஏதுமில்லையென்றாலும் வீடியோ அழைப்பு அவர்களுக்குள் வலுவான பிணைப்பொன்றை உருவாக்கியது.

ஹனி மூலம் பைசெக்ஸுவலுக்கு ஏறக்குறைய பத்து பெயர்கள் இருப்பதைக் கூட தெரிந்துக் கொண்டாள் சின்ன டிக்கியவள்.

குறிப்பாய், பி (bi), ஏசி-டிசி (AC-DC), என்ரோஜீனஸ் (androgynous), கைனாண்ட்ரஸ் (gynandrous), ஹெர்மாஃப்ரோடிடிக் (hermaphroditic), இண்டரசெக்சுவல் (intersexual), மோனிக்குலிங்னஸ் (monoclinous) மற்றும் ஸ்விங் போத் வெய்ஸ் (swings both ways) ஆகும்.

கூடவே, பைசெக்ஸுவல் என்ற விஷயமானது ஈர்ப்பு அல்லது செக்ஸ் தேவை என்ற கோணத்தில் மாறுப்பட்டு கிடக்கும் தகவலைக் கூட ஜஸ்மினிடத்தில் பகிர்ந்துக் கொண்டாள்.

ஆகவே, விரனை இன்னும் முழுசாய் படித்திட விரும்பினாள் நிழலிகா. ஆனால், ஆணவனோ தள்ளியிருக்க புரிந்தவளோ, அவனுக்கான கால அவகாசத்தை எவ்வித மனக்குறையுமின்றி தாராளமாய் தந்தாள் விரன் அவனாகவே அவளிடம் திரும்பி வர.

தம்பதிகளின் வாழ்க்கை இப்படி ஊசலாட, ஜஸ்மினோ மகளோடு சிங்கள் மதராக லைஃபை என்ஜோய் செய்திட ஆரம்பித்திருந்தாள் புதிதாய் ஆரம்பித்திருந்த பட தயாரிப்பு நிறுவனம் வெற்றிகள் சூடி பணம் கொட்டொ கொட்டென்று கொட்ட.

நதானியலோ உலகத்தையே உலுக்கினான் பகிங்கரமான வாக்குமூலம் ஒன்றை டிவிட்டரில் பதிவேற்றம் செய்து.

சின்ன டிக்கியோ அவளின் லைன் கிளியராக சந்தோஷத்தில் தலைகால் புரியாது குதித்தாள் ஆனந்தம் தாளாது.

விரனோ உள்ளுக்குள் நிம்மதிக் கொண்டான் நதானியேல் இப்போதுதான் சரியான ட்ரெக்கில் பயணிப்பதாய் உணர்ந்து.

ஜஸ்மினோ முழுமனதோடு வாழ்த்து தெரிவித்தாள் மாஜி கணவனின் தைரியத்தில் பெருமைக் கொண்டு.

மீடியாவோ விழுந்து விழுந்து கவர் செய்தது தாய்லாந்து தளபதி நதானியேல் உறுதிப்படுத்திய அவனின் பைசெக்ஸுவல் உறவை.

சினிமா உலகம் என்னவோ, நதானியேல் மற்றும் ஆசைத்தீரக் கொஞ்சவா புகழ் அதிமகிழனின் பைசெக்ஸுவல் உறவை பேசும் பெருளாக்கி ஒரு வாரத்திற்கும் மேற்பட்டு புகைந்துக் கொண்டேதான் இருந்தது.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 77
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top