What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
496
அத்தியாயம் 78

நம்பிக்கை என்ற ஐந்து வார்த்தையில்தான் காதல் மற்றும் கலவியான மூவெழுத்து சொல்லெல்லாம் உயிர் பெற்று காலங்காலமாய் இப்புவியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.

மனிதன் பரிமாண வளர்ச்சியில் உலகை மட்டும் நவீனப்படுத்தவில்லை, மாறாய் அவன் சுயத்தை கூட ஆராய்ச்சியாக்கி பல கேள்விகளுக்கு விடையாக்கிக் கொண்டான்.

கூடவே, வினாக்களை எழுப்பி அவைகளுக்கு இன்னமும் பதில் தேடி அலைந்தும் கொண்டிருக்கிறான்.

இவற்றில் மிக பிரசித்திப்பெற்றது பாலியல் சார்ந்த விஷயங்களாகும். தோண்ட தோண்ட நீர் உறும் கிணறு போல பற்பல விடயங்களை தினமொரு தகவலாய் தந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் டாப்பிக் இதுவாகும்.

அதுவும் இருபாலினர் ஈர்ப்பு என்ற ஒன்றை தவறாக புரிந்துக் கொண்டு அதை கொச்சைப்படுத்தும் கூட்டமே அதிகம்.

சமூகத்தை குற்றஞ்சொல்லி ஒன்றும் ஆவதற்கில்லை. இன்னும் மேம்படாமல் இருக்கும் பகுத்தறிவு, தீட்டின் போது கூட கடவுளை பிராத்திக்கக்கூடாது என்ற பூச்சாண்டியை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கும் அவலமே நம் சமூகம்.

அதே சமயம் சுயத்திற்கு என்ன தேவையென்பதை சரிவர உணர்ந்தாலும் மருத்துவ ரீதியில் அதற்கான தீர்வை தேடி கொள்வதற்கோ அல்லது அதை பகிங்கரமாக ஒப்புக் கொண்டு வாழ்வை வாழும் திராணியோ இன்னும் நம்மில் வாழும் கோழைகளுக்கு வரவில்லை.

பாதிக்கப்பட்டவன் என்செய்வான். நிலையை சொல்ல, உணர்ந்து மதிப்பளிக்க கூடிய நண்பர்களும் குடும்பமும் ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமே வரப்பிரசாதமாய் அமைய.

மற்றவர்களுக்கு எல்லாம் கானல் நீரே. மதிக்க வேண்டாம், சீண்ட வேண்டாம். ஆனால், கேலி கூத்தாவாவது ஆக்கிடாமல் இல்லையா.

அதே வேளையில் ஈர்ப்பையும் காம விருப்பத்தையும் ஒன்றென குழப்பிக் கொள்ளும் ஆட்களே அதிகமே. அதுவும் சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நூறு மருத்துவர்கள் தோன்றி பல கருத்துகளை அள்ளி தெளித்து விடுகிறார்கள் கீபோர்ட் மூலம்.

அவர்களை சொல்லி சிரிக்கும் அதே வேளையில் தலைவலிக்கு கூகளை நம்பினால் கேன்சர் எனும் கொடுமையையெல்லாம் எங்கே போய் சொல்வதாம்.

பைசெக்ஸுவல் என்றால் பார்க்கும் ஆண் பெண் என எல்லாரையும் மேட்டர் பண்ணுவது என்ற தவறானே எண்ணமே அப்படியானவர்களை கீழ்தரமாய் பார்த்திட வைக்கிறது.

இருபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் ஒன்றும் பொத்தம் பொதுவாய் அவர்கள் உறவை வளர்க்க விரும்பும் ஆட்களை தேர்ந்தெடுப்பதில்லை. அதிலும் சில கோற்பாடுகள் உண்டு இப்படியான மனிதர்களுக்கு.

அதுதான் ஆண்மையுள்ள ஆண், பெண்மை நிறைந்த பெண், ஏன் இதுப்போன்ற குணாதிசயங்கள் நிரம்பிய ஆண் பெண் என பேதமின்றியும் அவர்கள் மீது ஆர்வம் கொள்வர் பைசெக்ஸுவல் விருப்பமுள்ளோர்.

திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் பெண் தன்மை கொண்ட மீசை தாடி வைத்த ஆண்கள், கிரப் கட் வெட்டி சோர்ட் பேண்ட் போட்டு ஆணாய் வளம் வரும் பெண்கள், பிறக்கையிலேயே ஆண் மற்றும் பெண் பாலின உறுப்புகளுடன் பிறக்கும் இண்டர்செக்ஸ் மனிதர்கள், ஆண் மற்றும் பெண்ணாகவும் தன்னை உணர்ந்திடும் பிகிண்டர் (Bigender) என்றழைக்கப்படும் ஆட்கள் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவர்களை பைசெக்ஸுவல் வகையிலிருந்து ஒரு படி தள்ளி நிறுத்தி பான்செக்சுவல் (pansexual) என்றழைப்பர்.

ஆண் பெண் என்ற உணர்வுகளுக்கும் சிக்கி தவிக்கும் ஆட்களும் உண்டு. அவர்களில் சிலர் தன்னை ஆணாக வெளிதோற்றத்தில் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் பெண்ணாகவே வாழ்ந்திடுவார். சிறு குறிப்பு, இவர்கள் திருநங்கை வகையில் சேர்ந்திடாதவர்கள்.

அதேப்போல், இப்படியான ஆண் பெண் உணர்வு கூட வாரத்திற்கு வாரம் மாறி மாறி அவர்கள் உடம்பால் ஆணாகவோ பெண்ணாகவோ வாழ்ந்தாலும் உள்ளுக்குள் யாராக வாழ்கிறார்கள் என்ற விடயமே அறிய முடியா நிலையில் கூட சிலர் இருக்கிறார்கள்.

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கூட ஏறக்குறைய 81 நிலைப்பாடுகளை கொண்ட ஆட்கள் நம்மோடு தரணியில் பயணிப்பதை கண்டறிந்து உள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் பற்பல தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவது கூட குறிப்பிடத்தக்கதாகும்.

இதையெல்லாம் படித்து தெளிந்து ஒரு தீர்மானத்திற்கு வருவதற்குள் நமக்கெல்லாம் வயசாகிடும்.

இதில் துரோகம், ஏமாற்றம் என்றெல்லாம் ஒன்றுமே கிடையாது. யாரும் எதையும் தெரிந்தே செய்வதில்லை. அதேப்போல், சில விடயங்கள் எதுவும் திட்டமிட்டு நம்மை இயக்குவதில்லை.

அடுத்த நிமிடம் நிலையில்லா வாழ்க்கையில் திருடியை போலீஸ்காரன் மணந்தால் கூட அது அவரவர் அறத்தையே சாரும். ஞாலம் போற்ற ஒரு நாள் மட்டும் கூத்து காட்டி காலம் முழுக்க ஒண்டிக்கட்டையாக இருக்க யாரும் இங்கு முட்டாள் இல்லை.

காலம் முழுக்க நடிக்க முடியாது. யாராகினும். சலித்திடும். இல்லையேல், பைத்தியம் பிடித்திடும்.

காரணம், இதுவெல்லாம் காகித எழுத்துக்கள் மட்டுமல்ல உசிர் கொண்டிருப்போரின் உணர்வுகள். மனிதர்களை கூட படித்து விடலாம். ஆனால், அவர்களின் உணர்வுகளை உணர்ந்திட ஆத்மார்த்தமான அன்பாலே முடியும்.

நாதானியேல் நினைத்திருந்தால் ஜஸ்மினிடத்தில் உண்மையை எப்போதோ சொல்லி அவளை விட்டு பிரிந்திருக்கலாம்.

இருப்பினும், ஆணவன் உண்மையை மறைத்து அவளோடு புது வாழ்வை தொடங்கியதற்கான காரணம், அவளின்பால் அவன் நேசம் ஆழமானது, இச்சையை விட.

மறைத்தான் என்பதை விட அதை பெரிசாய் கருதவில்லை. ஆனால், சொன்னாள் வருந்திடுவாள் என்ற எண்ணமும் எங்கே விட்டு போயிடுவாளோ தவறான புரிதல் கொண்டு என்ற அச்சமும் இல்லாமல் இல்லை அக்காலத்து நடிகனாக நாதானியேல்.

அதேப்போல் ஒரு கட்டத்திற்கு மேல் அணையை உடைத்த வெள்ளமாய் உணர்வுகள் வெடித்தெழும்ப எல்லாம் தலைகீழாகி போனது ஆணவன் வாழ்வில்.

ஒருக்கால், ஜஸ்மின் இப்படியெல்லாம் நடந்த பின்னாடியும் நாதானியேலுடன் சேர்ந்து வாழ விரும்பியிருந்தால் அவ்வுறவானது பொய்யானதாகவே இருந்திருக்கும்.

நாதானியேல் நினைத்தால் எதுவும் மாறலாம். இல்லையென்றிட முடியாது.

இருப்பினும், சுயத்திற்கு உண்மையாக இருக்கவே ஆணவன் விரும்புகிறான். அதுவே ஜஸ்மினோடு அவன் கொண்ட காதலுக்கு அவன் கொடுக்கும் மரியாதையாகும்.

ஆகவே, வாழ்க்கை வாழ்வதற்கே அதுவும் ஒரு முறை மட்டுமே. அவரவருக்கு பிடித்தாற்போல வாழ்வதில் தவறென்ன இருந்திட போகிறது.

வையம் ஆயிரம் என்னே பத்தாயிரம் கூட பேசும். ஆனால், அவரவர் வயிற்று வலிக்கு அவர்வர்தான் மருந்து உண்ண வேண்டும். மற்றவர்கள் அல்ல.

யாராகினும், எவராகினும், காதலொன்ற ஒன்றான பின் எது எப்படியோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதென்பது தனிப்பெரும்போதை என்பதை எக்காலும் மறுக்க முடியாது.

நாவலாசிரியர் திரிலோ எழுதியிருந்த சிறப்பு கட்டுரையை மென்முறுவல் குறையாது முழுதாய் படித்து முடித்த நிழலிகாவோ நிம்மதி பெருமூச்சு ஒன்றைக் கொண்டாள்.

அண்ணியாரிடம் நேரடியாக சின்ன டிக்கி ஏதும் கேட்டிடவில்லை இப்படி எழுதித் தாருங்கள் தளத்திற்கு என்று.

ஹனிதான் அணுகியிருந்தாள் பிரபல எழுத்தாளிணையை பைசெக்ஸுவல் உறவை முன்னிறுத்தி ஏதாவது ஸ்பெஷல் ரைட் ஆப் கொடுக்க சொல்லி.

சின்னவள் கேட்க பெரியவள் எழுதிக் கொடுக்க இடையவள் கட்டுரையை ஒருமுறை பார்த்து படித்து சரிப்பார்த்து பின் ஒப்புதல் கொடுத்தாள், ஹனிக்கு அதை தளத்தில் பதிவேற்றம் செய்ய.

ஜஸ்மினுக்கும் நாதானியேலுக்கும் கூட சின்னதாய் ஒரு ஆப்டேட் செய்து விட்டாள் விரனின் பத்தினி அவர்களின் பெயர் புதிய கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருப்பதை மரியாதை நிமித்தமாய்.

உயிர் துஞ்சிடுவான் விரன்

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 78
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top