Admin 1
Member
- Joined
- Sep 22, 2024
- Messages
- 170

பள்ளிக்காலத்தில் உண்டான பழக்கம் ; இன்னுங்குறிப்பிட வேண்டுமெனில் மேல்நிலைப்பள்ளி பயின்ற போது. இருவரும் அடுத்தடுத்த வெவ்வேறு பள்ளிகள்தான்.
எப்போதேனும் வெளியில்
பார்க்கும்போது அளவளாவிக்
கொள்வோம்.
"உன்னை அங்கே பார்த்தேன்; உன் அப்பாவோட போயிட்டு இருந்த! "
உன்னையும் ஒருநாள் பார்த்தேன் ;
அம்மாவோட கடைவாசல்ல
நின்னுட்டு இருந்த! " என வீண்
பேச்சுகளில் பேசத்தவறவிட்ட
சந்திப்புகளில் பேச நினைத்ததை, இப்போதும் பேசாமல் காலம் தாழ்த்திக்கொண்டிருப்போம்.
பெற்றோரிடம் அறிமுகம் செய்து
கொள்ளும் அளவிற்கு நெஞ்சுரம்
இல்லை ; இச்சமுதாயமும் அந்நாளில் இத்தனை பண்பட்டிருக்கவில்லை.
பள்ளிகடந்து கல்லூரியில்
வெவ்வேறாய் தடம் பிரிந்தது;
பயணங்கள் பார்த்தோர்
எல்லாம் மாறின.
"பள்ளிக்காலத்தில் என்னை மட்டும் பார்த்தவள் அடுத்தடுத்து எத்தனை
பேரை கடந்திருப்பாள்? "
"எத்தனை ஆண்கள் அவளுக்கு
கதாநாயகனாய்
தெரிந்திருத்தல் கூடும்? "
திருமணம் என ஒருதினம்
சொன்னாள். வாழ்த்துகள்
சொன்னேன்! அஃது இயல்பு.
"ஆனால் எதற்காக அழுக வேண்டும்?"
இன்றும் தெரியவில்லை.
வருடங்கழித்து பேருந்தில் முன்னே அமர்ந்திருப்பது அவள் போல் கண்ணுக்கெட்டியது.எங்கோ
போகவேண்டிய நான் அவளிறங்கிய நிறுத்தத்தில் இறங்கினேன்.
"இச்சேலையில் அவள் போல்
வேறுயாரால் இத்தனை நயமாய்
நடத்தல் கூடும் ?" அவள்தானென
உறுதி செய்தேன்.
"அழைக்கலாமா?"
"யாரெனக்கேட்டுவிட்டால்
என்ன செய்யக்கூடும்? "
வினாக்கள் பெருகுவதற்கு
முன் அழைத்தேன்!
" கண்மணி !"
" வியந்தபடி திரும்பினாள்! "
இது அவளுக்காய் நானிட்ட
புனைப்பெயர்..
" டேய்! லூசு! "
கண்கள் சடசடவென கண்ணீரைக் கொட்டியது.
இந்த அன்பிற்கு சுற்றம், வையம் குறித்தெல்லாம் கவலையிராது.
கண்ணீரோ கபடச்சிரிப்போ பொதுவெளியாயினும்
கொட்டித் தீர்த்துவிடும்.
" அண்ணா ஒரு லைட் டீ! "
அந்த தேநீர்ச்சுனையில்
நின்றபடிதான் தேநீரருந்த
வேண்டும்.
" மாஸ்டர் ஒரு காபி! "
" டேய் டீ உனக்குதான்! "
" ம்ம்...
காபி உனக்கு சொன்னேன்
கண்மணி! "
" எனக்குமட்டும் தெரியும்படி
அழுதாள் ஏனோ! "
" கழுத்துக்குக்கீழ வெயிட் ஏறிடுச்சு
உனக்கு! "
" ச்சீ...நாயே! "
" தாலியை சொன்னேன் கண்மணி! "
சரி அத விடு!
" நல்லாருக்கயா? "
நல்லாருக்கேன்னு யார் கேட்டாலும்
உடனே சொல்லிடுவேன்!
உன்ட்ட பொய் சொல்ல முடியாது!
நான் மட்டும் பாதுகாத்திருக்க
வேண்டிய அவள்தன்
சோகங்களை பகிர்ந்தாள்.
" சரி! நீ எப்போ கல்யாணம்
பண்ண போற? "
" ரெண்டாம் கல்யாணம் பண்ண
நம்ம ஊர்ல அனுமதி இல்லை
கண்மணி ! "
உன்ன ஸ்கூல் பையனாவே
நெனச்சிட்டு இருக்கேண்டா ! சாரி !
மனைவியின் புகைப்படம்
காட்டினேன்..
" ம்ம்...நல்லாருக்காடா! "
பத்துநிமிடம் இருக்கும் ;
'எண்ணிக்கொள் என்பற்களை'
என கபடமற்றுச்சிரித்தாள்..
"சரிடா!
இந்த ஸ்கூல்ல
தான் ஒர்க் பண்றேன்!
டைமாச்சு ..."
"ம்ம்...போயிட்டு வா!"
"டேய் உன் நம்பர் மாத்திட்டதான!"
"ம்ம்...ஆமா!"
"என் புது எண்ணைத்தான் கேட்கிறாள். அறிவேன் ! "
நலமாயிருந்தாள்
சந்தோஷம் பகிர்வாள் ;
இந்நிலைதனில் கொடுத்து தினம்
அவள் சோகம் தாங்க என்
நெஞ்சில் இல்லை திராணி..
கடகடவேன பேருந்தை நோக்கி
நகர்ந்தேன்.
இச்சந்திப்பை மறக்க நினைக்கிறேன்.
சிரித்துக்கொண்டே இருக்கும் கண்மணிதான் என் மனதில் பதிந்திருக்கிறாள்.
கண்மணிக்கு அழத்தெரியுமென்றே
எனக்கு இன்றுதான் தெரியும்.
எதுவும் கேட்டிடாத இறைவனே !
ஒன்றை கோரிக்கை நிறைவு செய் !
என் பால்ய கண்மணி இனியேனும் நலம்வாழட்டும் !!
எங்கள் இனம்பிரியா உறவு
தொடங்கியதும் தொடர்வதும்
ஏதோவொரு பள்ளி வாசலை பார்த்தபடியேதான்....
❤தாய்க்காதல்❤
Author: Admin 1
Article Title: தாய்க்காதல்❤
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாய்க்காதல்❤
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.