What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498
WhatsApp Image 2025-01-30 at 2.46.51 PM.jpeg

தாழ் திறவாய் ததுளனே! : 17

''சோரி! நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன்! ஆனா, வர முடியலே!''

அலைபேசியின் மறுமுனையில் வருத்தம் கொண்டாள் சங்க்யா.

''இது கல்யாணதுக்கு வர முடியலங்கற கவலையா இல்லே..''

இதழோரம் குறுநகை கொண்டவனாய் போட்டு வாங்கினான் ஆரோன்.

''கல்யாணத்துக்கு வந்திருந்தா, என்னாகியிருக்கும்னு உங்களுக்கே தெரியும்!''

நக்கல் தொனி கொண்டாள் மாடல் அழகியவள்.

''ஆனா, பரவாலே! உங்க பேரண்ட்ஸ் பார்த்து ஏதாவது ரகளை பண்ணுவான்னு நினைச்சேன்! ஆனா, அப்படி ஏதும் பண்ணாமே அமைதியா இருந்துட்டான்!''

முடிந்து போன தம்பியின் திருமணத்தை பற்றி பேசி சிரித்தான் மூத்தவன், நாடு விட்டு நாடு போனவளிடம்.

''நான் ஒன்னு கேட்கவா?!''

''ஹ்ம்ம்!''

என்றப்படி காரிலிருந்து கீழிறங்கி ரெஸ்டூரண்ட் ஒன்றுக்குள் நுழைந்தான் பெரியவன்.

''எப்படி திடிர்னு ராகனுக்கு மேரேஜ் பண்ணிக்கறே ஐடியா வந்தது?! இது, நிஜமாவே பொறுமையா யோசிச்சு எடுத்த முடிவுதானா இல்லே, என்னாலே ஏற்பட்ட களங்கத்தை போக்கிக்கறதுக்காக அவசரமா எடுத்த முடிவா?!''

மனதைக் குடைந்த கேள்வியை ஆரோனிடம் இறக்கி வைத்த காரிகையோ பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்க,

''நான் திரும்ப கோல் பண்றேன்!''

சீரியஸ் குரல் கொண்டவனோ, அழைப்பை துண்டித்து நேராய் பயணித்தான், அவனுக்கு நேரெதிர் மேஜையில் அமர்ந்திருந்த பெண்மணியை நோக்கி.

அதே சமயம் ஆணவனின் போனோ சிணுங்கியது, சுவா என்ற பெயரோடு. ஆனால், நாயகன் அவனோ அலறிய கைப்பேசியை அமைதியாக்கி நாற்காலியை இழுத்தமர்ந்தான் மாதவர் முன்.

''ஆரோன்!''

அதிர்ந்தவர் அதிர்ச்சியில் வாய் மலர,

''எப்படிமா இருக்கீங்க?!''

என்றவனோ இறுகிய முகம் மாறாது கேட்டான்.

''கோபமா ஆரோன்?!''

குற்ற உணர்ச்சியில் வேள்விக்கொண்டார் சவிதா.

''காரணம் சொல்லிட்டு, காணாமல் போயிருக்கலாம்!''

இரத்தின சுருக்க குத்தலில், தாய் ஸ்தானம் கொண்டவரின் வதனமோ டாலடித்தது.

''என்னவோ ஒன்னு உங்களை ரொம்பவே காயப்படுத்திருக்கின்னு புரியுது! அதை கடந்து போக பழகிக்கணுமோ ஒழிய, ஓடி ஒளிஞ்சிக்க கூடதுமா! ஒருதடவை பழகிட்டோம்னா காலம் முழுக்க பயந்துக்கிட்டே ட்ராவல் பண்ண வேண்டியதாகிடும்மா!''



மகன் சொல்லி முடிக்கவில்லை, அவன் முன் ஆஜராகினர் ஆணவனை பெற்ற ஒளியவன்.

''ஆரோன்?! நீ இங்க என்ன பண்றே?!''

''பா!''

சிறு சர்ப்ரைஸ் என்றாலும், அதை மறைத்து சாதாரணமாகவே நிலையை சமன் செய்துக் கொண்டான் ஆணவன்.

''சாப்பிட்டிங்களா ரெண்டு பேரும்?!''

கேசுவலாக கேட்டு சவிதாவின் அருகில் அமர்ந்தார் நாயகனின் டேடி.

''எனக்கு வேண்டாம்!''

முதிர்கன்னி டக்கென சொல்லி, கைப்பையை திறந்து வெளியில் எடுத்தார் கோப்பு ஒன்றை.

''இந்தாங்க! இதுலே எல்லாம் இருக்கு! நீங்களே என்ன பண்ணணுமோ, அதையெல்லாம் பார்த்து பண்ணிடுங்க! நான் சில காலியான பாண்ட் பேப்பர்ஸ்லே முன்கூட்டியே சைன் கூட போட்டு வெச்சுட்டேன்!''

''இதுக்குத்தான் என்னை வரச்சொன்னியா?!''

ஒளியவனின் குரல் கறார் கொள்ள, புத்திரனோ மௌனமாய் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தான், ஆறிப்போன சுடுநீரை தொண்டைக்குள் இறக்கி.

''நான் நல்லா முடிவு பண்ணிட்டேங்க! இதுக்கு மேலையும் நான் இங்க இருக்கறது சரிப்பட்டு வராது! நான் போறேன்!''

''பைத்தியமா உனக்கு!''

முன்னாள் காதலியிடம் கோப முகம் காட்டிய ஒளியவனை,

''பா!''

மகன் தன்மையாய் தடுக்க,

''நீ கிளம்பு ஆரோன்!''

இம்முறை சவிதாதான் அவனுக்கு கட்டளை பிறப்பித்தார்.

''இதை பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லே!''

சொன்னவனின் விழிகள் மேஜை மேலிருந்த ஃபயிலில் ஏற இறங்கி,

''வீட்டை விட்டு ஏன் போனீங்க?! அதுக்கான காரணத்தை மட்டும் சொல்லுங்க! கேட்டுட்டு நான் கிளம்பறேன்!''

என்றான் உறுதியாய்.

''நீ வேறே ஏன்டா?!''

மகன் தொடுத்த கனைக்கு ஒளியவன்தான் சளித்துக் கொண்டார்.

''ராகனுக்கு என்னை புடிக்காதுன்னு தெரியும்! ஆனா, உங்கம்மாவோட பார்த்டேய் பார்ட்டிலதான் அவன் என்ன எங்க, எப்படி வெச்சு பார்க்கறான்னு தெரிஞ்சது!''

நயனங்கள் தேங்க, பட்டும் படாமலும் சொல்லி, தலை கவிழ்ந்தவரின் விரல்களை ஆசுவாசமாய் பற்றிக் கொண்டார் ஒளியவன்.

''என்ன பண்ணான்?!''

ஆரோன் விடுவதாய் இல்லை. அழுத்தமாய் கேட்டான், மீண்டும்.

''விடுடா! நீ கிளம்பு! நான் வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் சொல்றேன்!''

மூத்தவனை அங்கிருந்து துரத்த பார்த்தார் பெத்தவர்.

''சொல்லுங்கம்மா?! என்ன நடந்துச்சு?!''

குறுக்கே புகுந்த தகப்பனை பொருட்படுத்திடவே இல்லை பெரியவன் அவன்.

''நான் சொல்றேன்டா!''

வேறு வழியில்லாது, மகனின் விடாப்பிடிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஒளியவன்.

கனலியின் பிறந்தநாளுக்கு சவிதாவையும் அழைக்க சொல்லி கணவருக்கு ஆர்டர் போட்டிருந்தார் அவரின் துணைவி.

அதன் பொருட்டு, சவிதாவை வலுக்கட்டாயமாய் விழாவிற்கு வர வைத்திருந்தார் ஒளியவன், என்னதான் பழைய காதலி பலமுறை முன்னாடியே வேண்டாம் என்று மறுத்திருந்தாலும்.

சங்கடத்தில் உள்ளம் கனத்து கிடக்க, ராகனை பார்த்த மாத்திரத்தில் சிரித்த முகம் கொண்ட சவிதாவிற்கு அவனிடமிருந்து கிடைத்த வரவேற்பு என்னவோ காரி துப்பலே.

திட்டிகள் கலங்க, அவன் குணம் அறிந்த காரணத்தால், பெருமூச்சு விட்டப்படி ஓரமாய் ஒதுங்கி நின்றுக் கொண்டார் தனியொருவராய் வஞ்சிக்கப்பட்டவர்.

அந்நேரம் பார்த்து, பணியாளரோ கையிலிருந்த ஜூஸை அவரின் ஆடையில் தவறவிட்டான்.

சம்பவத்திற்கு தூபம் போட்ட கனலியோ, தூரத்திலிருந்து ஓடோடி வந்தார் சவிதாவை நோக்கி பாசாங்கு கொண்டு.

''வந்த உடனே உனக்கு வீட்டுக்குள்ள வரத்தெரியாதா?! இங்க தனியா உட்கார்ந்துக்கிட்டு இருக்கே?! சரி, வா! வா! உள்ளே போகலாம்! ட்ரஸ் மாத்திக்கோ!''

கைப்பற்றி இழுத்து போனார் கனலி ஆரூயிர் தோழியை.

''இல்லே, வேண்டாம்! நான் இங்கையே வாஷ் பேஷன்லே கிளீன் பண்ணிக்கறேன்!''

''அட வா!''

மாளிகைக்குள் நுழைந்தனர் இருவரும்.

''எங்க கூட்டிக்கிட்டு போறே கனலி?! கிட்சன் போகாமே?!''

''வா! வா!''

பிறந்தநாள் பேபியோ, நண்பியை இழுத்துக் கொண்டு போனார் அவரின் படுக்கையறைக்கு.

''இந்தா புடி! இதை போட்டுக்கோ!''

புதிய சுடிதார் ஒன்றை எடுத்து நீட்டினார் கனலி, லேசான நரைகள் கொண்ட சவிதாவிடம்.

''எதுக்கு இதெல்லாம்?! வேண்டாம், வை! வா, நாமே கீழே போகலாம்!''

நெஞ்சு அடைத்தது ஒளியவனின் பழைய காதலிக்கு, அடுத்தவர் படுக்கையறை வாசம்.

''எப்போதான் நீ என்ன மன்னிக்க போறே?!''

சோகமும் குற்ற உணர்ச்சியும் ததும்பிய குரலில், கனலியோ, வெளியேற முனைந்த சவிதாவை வழிமறித்து நிற்க,

''ஆரோனை நான் கையிலே தூக்கும் போதே, நீ கேட்டது உனக்கு கிடைச்சிருச்சு!''

நிரம்பிய நேத்திரங்கள் வழியும் முன் வேறெங்கோ பார்த்து சொன்னார் வாழ்க்கையை பறிகொடுத்த அபலை.

''ஆனா, அவர் இன்னும் என்னை மன்னிக்கலையே! என்ன பண்ணா உன் இடம் எனக்கு கிடைக்கும்னு தெரியலையே?!''

''அவர் கூட இத்தனை வருஷம் வாழ்ந்து, ரெண்டு பிள்ளை பெத்த பிறகு, நீ இப்படி பேசறது தப்பா இருக்கு கனலி!''

விரும்பிய ஒளியவனை உரிமையான மணவாட்டி துச்சமாய் பேச, நெஞ்சம் பொறுக்கவில்லை சவிதாவிற்கு.

''ஆனா, நான் உண்மையேதானே சொல்றேன்! அவர் மனசுலே நீ மட்டும்தானே இருக்கே! அப்போ, இப்போன்னு!''

''உனக்கென்ன பைத்தியமா?! எப்போதான் திருந்த போறே?! வயசு ஏறின அளவுக்கு பக்குவமும் புரிதலும் உனக்கு வரவே இல்லையா?! ஒழுக்கமானவரே ஏன் இப்படி கொச்சைப்படுத்தறே?!''

ஆவேசமாய் சவிதா பொங்க,

''ஆமா! ரொம்பத்தான் ஒழுக்கமானவரு! அதான், உன் பேர்லே வீடு, பணம்னு எல்லாத்தையும் பொண்டாட்டி கணக்கா, ரெடி பண்ணி வெச்சிருக்காரு!''

குலுங்கி அழுத கனலியோ அங்கிருந்து வெளியேறினார் விருட்டென.

பொருட்சார்ந்த சொத்து விஷயங்களை தவறாய் புரிந்து, உறவுகளை துச்சப்படுத்தி போகும் தோழியை வெறித்து பார்த்த சவிதாவோ உடைந்தவராய் மஞ்சத்தில் தொப்பென அமர,

''சீ! நீயெல்லாம் ஒரு பொம்பளையா?! கல்யாணம் பண்ண ஆம்பளைக்கு அலையறே?! அசிங்கமா இல்லே?! எங்கம்மாவே நிம்மதியாவே வாழ விட மாட்டியா?! நான் பொறந்ததுலருந்து பார்க்கறேன், உன்னாலே என் அம்மா அழாதே நாளே இல்லே! நீயெல்லாம் ஏன் இன்னும் உயிரோட இருக்கே?! செத்துதான் தொலையேன்!''

புயலாய் அறைக்குள் நுழைந்த ராகனோ, சென்சார் கட் இன்றி வார்த்தைகளால் சவிதாவை கேவலப்படுத்த,

''ராகன், நீ எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசறே!''

நிலையை எடுத்துரைக்க முயற்சித்தவரை,

''ஏய்! அடிச்சு மூஞ்சி முகரையெல்லாம் உடைச்சிடுவேன்! அங்கையே நில்லு! கிட்ட வர வேலையெல்லாம் வெச்சுக்காதே! ஒழுங்கு மரியாதையா என் அப்பாவோட வாழ்க்கையிலிருந்து போயிரு! அப்படியே உன் இழுப்புக்கு எவனும் கிடைக்காட்டி, வேற மாதிரி மாறி சுத்து! ஆனா, என் அம்மாவோட இடத்தை மட்டும் எடுத்துக்க கனவுலே கூட நினைக்காதே! அப்பறம் உன்னே கொன்னுட்டு ஜெயிலுக்கு போக கூட நான் தயங்க மாட்டேன்!''

என்றவனாய் கையில் பூ ஜாடி ஒன்றை ஓங்கியப்படி வெறுப்பை உமிழ்ந்தவனை உள்ளம் மரித்தவராய் வெறித்தார் சவிதா.

தாழ் திறந்திடுவான் ததுளன்!
 

Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 17
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top