What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
496
WhatsApp Image 2024-12-12 at 2.56.52 AM.jpeg

தாழ் திறவாய் ததுளனே! : 2

பணக்காரர்கள் புலங்கும் ஹை கிளாஸ் ரெஸ்டூரண்டன் அதை, பியானோவின் மெல்லிசை அதன் வசமாக்கி இருந்தது.

ஸ்கை டின்னர் தளமோ மங்கலான மஞ்சள் விளக்குகளை விட்டத்தில் கொண்டு மோகன நிலையை குழுமியிருந்த ஜோடிகளுக்கு பரிசாக்கியது.

மேஜைகளின் மீதிருந்த கேண்டல்களோ ரொமாண்டிக் உணர்வை கிளப்பி விட்டு வேடிக்கைக் கொண்டன, வந்தவர்கள் உணவோடு அன்பையும் பரிமாறிக் கொள்ள.

''மட்டன்னா எனக்கு உயிர்! அதுவும் லேம்ப் சோப் சொல்லவே வேண்டாம்!''

சங்க்யா ஆர்வமாய் சொன்னாள், வாயுக்குள் துண்டு போட்ட இறைச்சியை திணித்தப்படி.

''இப்படி வஞ்சகமே இல்லாமே தினமும் சாப்பிட்டா, ஒரேடியா போய் சேர வேண்டியதுதான்!''

ராகன் கீரை தண்டுகளை வெட்டியவனாய் சொல்ல, டாப் மாடலின் முகமோ சட்டென மாறிப்போனது.

''தினமும் சாப்பிட இது என்ன சோறா?! வாரத்துல ஒரு டைம்! அவ்ளோதான்!''

டயட் கொண்டவள் கறாராய் சொல்ல,

''மாசத்துலே ஒரு வாட்டிங்கிற மாதிரி அசால்ட்டா சொல்றீங்க?! நிஜமாவே நீங்க டயட் மெயிண்டன் பண்ற மாடல் தானா?! இல்லே, இந்த ஃபீல்ட்டுலே இருக்கறதுக்காக சும்மா அடிச்சு விடற கேசா?!''

நாயகனுக்கோ வாயில் சனி.

இறைச்சி வெட்டியை கத்தியையும் முற்கரண்டியையும் ஒருசேர பட்டென தட்டில் போட்ட மடவரலோ,

''என்ன பிரச்சனை ராகன் உங்களுக்கு?! ஏன், வந்ததுலேருந்தே என்னே மோக் பண்ற மாதிரியும் ஹெர்ட் பண்ற மாதிரியுமே பேசிக்கிட்டு இருக்கீங்க?!''

''நான் ஒன்னும் அந்த மாதிரியான இன்டென்ஷன்லலாம் பேசலே! உங்களுக்கா அப்படி தோணுது! அதுக்கு நான் என்ன பண்ணே?! நான் கேசுவலாத்தான் பேசறேன்!''

சிறிதளவும் முன்னிருப்பவளின் மனம் கொண்ட வருத்தம் உணரா வகையில் ராகன் அவன் ஜூஸை பருகி சொல்ல, அவனை சில நொடிகளுக்கு இமைக்காது பார்த்து முறைத்த காரிகையோ தலையை வேறெங்கோ பார்த்து திருப்பிக் கொண்டாள்.

''சீக்கிரம் சாப்பிட்டு முடிங்க! கிளம்பலாம்!''

இளைஞன் அவனோ, வந்த வேலை முடிய அணங்கவளை துரிதப்படுத்தினான்.

''ஏன், நாளைக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?!''

இடம், பொருள், ஏவலை கருத்தில் கொண்ட மாதங்கியோ பொறுமையாய் சூழ்நிலையை கையாள நினைத்தாள்.

''இல்லையே! எப்போதும் போலே ஆபீஸ்தான் போகணும்! டெயிலி ரூட்டின்ஸ்தான்!''

''அப்பறம் என்ன, இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டு போலாமே?!''

''அதுக்கென்னே, நீங்க சாப்பிட்டு முடிக்கறே வரைக்கும் இருக்கலாம்! சாப்பிடுங்க நீங்க!''

கடந்த ஒரு மணி நேர பேச்சு வார்த்தையில் இப்போதுதான் ராகனின் வாயிலிருந்து நல்வார்த்தைகள் வந்து விழுவதாய் தோன்றியது வஞ்சி அவளுக்கு.

''உங்களுக்கு டான்ஸ் புடிக்குமா?!''

''ஸ்ரேயா, சிம்ரன்லாம் ஆடினா பார்க்க புடிக்கும்! இப்போ, தமன்னா கூட ரொம்ப நல்ல டான்சார மாறிக்கிட்டு வர்றா! சில மூவ்மெண்ட்ஸ்லாம் பார்த்தா செம்மையா இருக்கு!''

ராகன் அவன் ரசனையை சொல்ல, அவனை கழுகு பார்வை பார்த்த பாவையோ,

''நான் உங்களுக்கு ஆட புடிக்குமான்னு கேட்டேன்?!''

''அதிலெல்லாம் எனக்கு பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லே! மத்தவங்க ஆடினா பார்ப்பேன்!''

''எனக்கு புடிக்குமான்னு கேட்க மாட்டிங்களா?!''

''உங்களுக்கு புடிக்கும்! அதான், இந்த கேள்வியவே நீங்க என்கிட்ட கேட்டிங்க சரியா?!''

ராகன் புத்திசாலியாய் கணிக்க,

''பரவாலையே! சரியா கேஸ் பண்ணிட்டிங்க!''

''சம்பந்தமே இல்லாமே கேள்வி கேட்கறது ஒன்னும் பொம்பளைங்களுக்கு புதுசில்லையே!''

ஒரே போடில் தெய்வகுலத்தை ராகன் நக்கலடிக்க,

''ஹலோ! நான் ஒன்னும் சும்மாலாம் கேட்கலே, சரியா?! நாமே சேர்ந்து டான்ஸ் ஆட போறோம்! அதுக்குத்தான் உங்களுக்கு விஜய் லெவல்லே ஆட தெரியுமா இல்லே, ரஜினி மாதிரி இங்கிட்டு நாலு ஸ்டேப்ஸ், அங்கிட்டு நாலு ஸ்டேப்ஸ் போட தெரியுமான்னு தெரிஞ்சிக்க கேட்டேன்!''

மொத்த தட்டையும் காலியாக்கி, நாப்கினால் வாயை ஒத்தியெடுத்தவள் குண்டை போட,

''அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லே! நானாவது ஆடறதாவது!''

சிரித்தான் ராகன்.

''இங்கென்னே, குத்து பாட்டா போடறான்?! வெறும் மெலடி மியூசிக்! கையே கோர்த்து ஆடறதுலே என்ன பிரச்சனை?!''

''டான்சே பிரச்சனைங்கறேன்! இதுலே கையே கோர்த்து ஆடினா என்னே, காலே தூக்கி ஆடினா என்னே?!''

விடாது வாய் பேசியவளிடம் ராகனும் மல்லுக்கட்டினான்.

''அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லே! நான் மேனேஜ் பண்ண சொல்லி தறேன்! வாங்க!''

வாஞ்சையாக அழைத்தாள் வருங்காலம் அவள்.

''இல்லே, சங்க்யா! வேண்டாம்!''

தவிர்த்தான் விருப்பமில்லாதவன்.

''அட, இதுக்கெல்லாம் போய் பயந்துக்கிட்டு!''

சங்கடம் போக்க முனைந்தாள் கோற்றொடியவள்.

''பயம்லாம் இல்லே! வேண்டாம்!''

தயக்கம் கொண்டான் மனம் போகாதே என்று எச்சரிக்க.

''பயம் தான் உங்களுக்கு!''

கிண்டலாய் நகைத்தாள் நங்கையவள்.

''ம்ம்ச்ச்ச்! நான்தான் பயமெல்லாம் இல்லங்கறேன்லே!''

சமாளித்தான் ஆணவன்.

''அப்பறம் எதுக்கு தயங்கறீங்க?! வாங்க! வந்து ஆடுங்க என் கூட!''

சவால் தொனி கொண்டாள் பொற்றொடியவள்.

''வாங்க!''

எழுந்தவன் ரெடியாகினான் அவளோடு அசைந்தாட.

இருவரும் கைகள் கோர்த்து இசைக்கு ஏற்ப இசைய, பெண்ணவளோ தானாகவே முன் வந்தாள் ராகனோடு இதழ் இணைக்க.

நெருங்கிய நறுதுதலின் செயல் உணர்ந்த உத்தமனோ கலவரங்கொண்டான் உள்ளுக்குள் டப்பா டான்ஸ் ஆட.

கண்கள் மூடி மென்முறுவலோடு அவன் மார் முட்டி தலையை முத்தமிட லாவகமாய் சாய்த்த சங்க்யாவையோ கொதித்தவனாய் பின்னோக்கி தள்ளி விட்டான் ராகன்.

''Sankhya! Behave yourself!''
(சங்க்யா! ஒழுங்கா நடந்துக்கோங்க!)

அவன் ஆவேசத்தில் அதிர்ந்து, அடிகளை பின்னோக்கியவளாய் தடுமாறிய வஞ்சியோ, ஆணவன் உதிர்த்த வார்த்தைகளில் ஆடிப்போனாள்.

''Don't act like third rated cheap whore!''
(கீழ்தரமான வேசியாட்டம் நடந்துக்காதீங்க!)

என்ற ராகனின் குற்றஞ்சாட்டியில் கடுங்கோபம் கொண்ட ஒளியிழையோ,

''மிஸ்ட்டர் ராகன்! வாயே அடக்குங்க! என் பேரண்ட்ஸ் சொன்ன ஒரே காரணத்துக்காகத்தான் நான் இந்த டேட்டிங்கே ஓகே சொன்னேன்! உங்க மேலே ஆசைப்பாட்டோ, அலைஞ்சிக்கிட்டோலாம் வர வேண்டிய அவசியம் எனக்கில்லே! வார்த்தையே அளந்து பேச கத்துக்கோங்க! அதுவும் ஒரு பொண்ணுக்கிட்டே பொது இடத்துலே!''

''மீட் பண்ண ரெண்டு மணி நேரத்துலையே, என்ன பத்தி முழுசா தெரியாமே, கிஸ் பண்ண வந்த உன்னே என்ன, உத்தமின்னா சொல்ல முடியும்?!''

ராகன் நிறுத்தாது எதிரிலிருப்பவள் குணத்தை கூறுபோட,

''உன்னே மாதிரி ஒரு கேவலவாதிய கல்யாணம் பண்ணா பத்தினியா இல்லே, சராசரி பொண்ணா கூட ஒரு நாள் நிம்மதியா வாழ முடியாது! அடிப்படை மரியாதையும் இல்லே! பொண்ணே மதிக்கவும் தெரியலே! உன்னெல்லாம் என்ன லட்சணத்துலே வளர்த்தாங்களோ உங்கம்மா!''

மங்கையவளும் விடாது அவனை வறுக்க,

''பார்த்த உடனே நாக்க தொங்கப்போட்டு, ஒருத்தியே முத்தம் கொடுக்கற அளவுக்கு காஜி முத்தினவனா வளர்களே!''

என்ற ராகனோ, சொன்ன வேகத்தோடு அங்கிருந்து நகர்ந்தான் அவர்களை வேடிக்கை பார்த்த கூட்டத்தை கண்டுக்காது.

சங்க்யாவோ அவமானத்தில் விலோசனங்கள் சிவக்க போகின்றவனையோ வன்மம் கொண்டு நோக்கினாள்.

தாழ் திறந்திடுவான் ததுளன்...
 

Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 2
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top