- Joined
- Jul 10, 2024
- Messages
- 288
அத்தியாயம் 11
அமேசான் காடு
நல்லவேளை சால்வை ஒன்றை முன்பே பேக்பேக்கில் திணித்து வைத்திருக்க அதுவே இப்போது உதவியது கோற்றொடிக்கு.
ஷால்லை கையிலெடுத்தவள் அதை நன்றாய் உதறி போட்டாள் தரையில் படுக்கை விரிப்பாய்.
மங்கையின் செயலை பச்சைக் கலர் கண்களின் வழி பார்த்துக் கொண்டே இருந்தான் வர்மா.
''என்ன, ஒரு மார்க்கமா பார்க்கறே?! அடி வேணுமா?!''
அவள் இழுத்து கேட்டும் வர்மா அவன் பார்வைகளை அகற்றவில்லை பெண்ணவளிடமிருந்து.
''நீ வயமாவா இருக்கலாம், வன ராஜாவா கூட இருக்கலாம்! ஆனா, உன்னாலலாம் என்ன வசியம் பண்ண முடியாது! ஏற்கனவே, என்ன தின்ன பார்த்தவன் தானே நீ! மறந்திடுவேன்னு நினைச்சியா?!''
சொன்னவள் வாய் வடது போய் இடது வரை சிலிப்பியது.
பெளர்ணமி நிலவு வானை மட்டும் அல்ல ஆரணியத்தையும் எழில் கொஞ்சிட வைத்தது நிலவொளியில்.
அதனால், டார்ச்சுக்கு இப்போது லீவு விட்டிருந்தாள் நாயகியவள்.
என்ன நினைத்தாளோ வதனியவள் தெரியவில்லை. ஆனால், சால்வையை தூக்கிக் கொண்டு குகைக்கு வெளியில் பரந்திருந்த நிலப்பரப்பு நோக்கி சென்றாள். அங்கே போட்டாள் படுக்கையை.
வர்மாவோ அவனுக்கான ஸ்டைல் கொஞ்சமும் குறையாது பேடை அவள் கொண்ட நாடகத்தையே வெறித்தான் உம்மென்ற முகத்தோடு.
''என்ன நீ, ஆம்பளே மாதிரி வெச்ச கண்ணு வாங்காமே பார்க்கறே?! இதெல்லாம் நல்லாலே வர்மா, சொல்லிட்டேன்! என்னாலலாம் புலியான உன்கூடலாம் குடும்பம் நடத்த முடியாது!''
என்று உளறியவளோ குளிரிய மேனியை கைகள் கொண்டு தேய்த்து சூடேற்றி கொண்டாள்.
வர்மாவோ பிதற்றியவளை இமைக்காது பார்த்து ரசித்தான் முன்னங்கால்களில் வதனத்தை பார்க் செய்து தரையில் பதுங்குவது போல் படுத்திருந்த மேனிக்கு.
''ஹுஹும், உன் பார்வையே சரியில்ல! நீ என்னவோ பிளான் பண்றே வர்மா! நீ நினைக்கறதெல்லாம் நடக்காது! கனவு கண்டு ஏமாந்து போகாதே!'
என்ற அந்திகையோ மெதுவாய் எழுந்து குறுகுறுவென்று அவளையே பார்த்திருந்த வர்மாவை பார்க்க,
''நீ சொன்ன பேச்சை கேட்கறே மாதிரி தெரியலே! உன்ன வைக்க வேண்டிய இடத்துல வெச்சாத்தான் நீ அடங்குவே!''
சொன்னவள் பாதுகாப்பிற்காய் பக்கத்தில் வைத்திருந்த குச்சியை எடுத்து நிலத்தில் கோடு போட்டாள் இருவருக்கும் நடுவினில்.
வர்மாவோ முன்னங்கையால் அவன் தலையை அடித்துக் கொண்டு பற்கள் காட்டி சிரித்தான்.
''ஏய், என்ன கொழுப்பா?! சிரிக்கறே நீ! நான் என்ன குறளி வித்தையா காட்டிக்கிட்டு இருக்கேன்?! என்ன, பைத்தியக்காரி மாதிரி பேசிக்கிட்டு இருக்கேன்னு கிண்டலா இருக்கா உனக்கு?! எனக்கு கூடத்தான் இருக்கு! போயும், போயும் ஒரு புலி உன்கிட்ட போய் புலம்பிக்கிட்டு இருக்கேன்னு! அதுவும் என்ன அடிச்சு தின்ன பார்த்தா புலி உன்கிட்ட! இதைவிட மிகப்பெரிய முட்டாள்தனம் வேறே ஏதாவது இருந்திட முடியுமா என்ன?! முகரையை பாரு! அப்படியே சொருகிட போறேன் குச்சிய கண்ணுலே!''
துன்பப்பட்டு துயரப்பட்ட ஏந்திழையோ இதான் சாக்கென்று ஆதங்கம் மொத்தத்தையும் கடகடவென கொட்டி தீர்த்தாள்.
வர்மாவும் வேறு வழியின்றி சோகம் கவ்விய மூஞ்சியோடு எல்லாவற்றைய கேட்டு கொண்டிருந்தான்.
''ஓகே வர்மா! நடந்தது நடந்து போச்சு! இப்போ நிலையே வேறே! தெரிஞ்சோ தெரியாமலே நாமே பிரண்ட்ஸ் நோட் பிரண்ட்ஸ் அப்படிங்கற ஒரு ரிலேஷன்ஷிப்லே எண்டர் ஆகிட்டோம்! புரிஞ்சதா?! அதனாலே, இது என் ஏரியா! அது உன் ஏரியா! நோ ரூல்ஸ் பிரேக்கிங் ஓகே?!''
அரிவையின் கூற்றில் வர்மாவிற்கோ விருப்பம் இல்லை. ஆகவே, அவனோ கண்டுக்காதவன் போல் விட்டம் பார்த்தான்.
''ஹலோ! நான் பேசிக்கிட்டு இருக்கேன்! இங்க பார்த்தாகொஞ்சம் நல்லாருக்கும்! பிளீஸ்! விபூதி அடிக்காதிங்க பிரெண்ட்!''
சொடக்கு போட்ட பகினி கெஞ்சல் கொள்ள, பாறை மீதிருந்த வர்மாவோ நெட்டி முறித்தவனாய் மிடுக்காக இறங்கி வந்தான் கீழே.
''பரவாலையே! நல்ல பையனாதான் இருக்கே! சொன்ன உடனே புரிஞ்சிக்கிட்டியே! சத்தியமா சொல்றேன் நீ வெத்திலே பாக்கு வெச்சு கூப்பிட்டாலும் நான் அந்த பக்கம் வர மாட்டேன்! நீயும் ஜெண்டல்மேன் மாதிரி இந்த லைனை தாண்டி வரக்கூடாது! டீல்?!''
என்ற ஆரணங்கோ குச்சியை சும்மா அமர்ந்திருந்தவனை நோக்கி டீச்சரை போல் நீட்டி ஆட்டி ஆர்டர் போட,வர்மா அவனோ ஒரே இழு குச்சியை எக்கி.
அவன் செயலை சற்றும் எதிர்பார்த்திடாத சுந்தரியோ, குச்சியோடு கோட்டை அழித்து தடாலென்று அவன் பக்கம் போனாள்.
''அட, எரும மாட்டுக்கு பொறந்த புலியே! விடு என் குச்சியே!''
தடுமாறியவள் கறுவினாள்.
வாயில் குச்சியை கவ்விக் கொண்டிருந்த வர்மாவோ ஒரே பிடுங்கு அதை பலங்கொண்டு.
ஏற்கனவே, முற்றிழை அவளால் முடியவில்லை. உடல் அடித்து போட்டது போலிருந்தது. காயம் கொண்ட காலோடு பயணம் வேறு. பிறகெங்கே, அவனோடு மல்லுக்கட்டுவது.
அதனால், அவன் இழுக்க நிலத்தில் சரிந்தாள் பொத்தென பாவையவள்.
''You idiot!''
(முட்டாள்!!!)
குச்சியை வெற்றிகரமாக பறக்க விட்ட வர்மா நெருங்கினான் கதங்கொண்டு கத்தியவளை.
சினத்தில் அவனை ஒரு முறை முறைத்து ரத்த கசிவு ஏற்பட்ட காலை இறுகப் பற்றிக் கொண்டு இரும்பிட ஆரம்பித்தாள்.
தலை வேறு வின்னு வின்னென்று வலிக்க தொடங்கியது நறுதுதல் அவளுக்கு. தொண்டையோ அடிவாங்கியது தொடர்ந்து இரும்பியதால்.
தீவியின் ஆரணியம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 11
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.