What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
244
அத்தியாயம் 14

வர்மா குகைக்கு வெளியே ஓடினான். கருப்புசாமியை போல் நெஞ்சை நிமிர்த்தி குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அவனின் வாலே எச்சரித்தது. வயமா அவன் தாழ்த்திய அவனின் வாலை வார்னிங் சமிஞ்சையாக வடதும் இடதும் அசைத்தான்.

யாராவது சிக்கினால் தொண்டைக்கறித்தான் என்றெண்ணினான். சிங்கமாவது பந்தாடித்தான் இரையை உண்ணும், புலி அப்படியல்ல சோறு முக்கியம் என்பது போல சாப்பாடுத்தான் முக்கியம் அதற்கு.

ஆட்கள் நடமாட்டம் இல்லை என்பதை சந்தேகத்தோடு உறுதி செய்து குகைக்குள் ஓடினான் வர்மா.

பாறை மீதேறி நின்று உறும்பினான் ஒரு உறும்பு. வீடியோவின் சிரிப்பொலி மிக நெருக்கமாய் கேட்டிட, பாறையிலிருந்து மெதுவாய் கீழிறங்கி பதுங்கினான்.

ஒளிந்து கண்காணித்தான் யாரேனும் இடையூறாய் இருக்கின்றனரா என்று. அவனின் பச்சை விழிகள் ரெண்டும் மிக கூர்மையாய் நோட்டமிட நின்றது வீடியோ சத்தம்.

நிம்மதி கொண்டான் வர்மா. தலையை மேல் தூக்கியவன் திரும்பி பார்த்தான் மிருவை. மீண்டும் உறும்பினான்.

மவராசி அவளோ பாடையில் துயில் கொண்டவளாட்டம் இருந்தாள். பாறையிலிருந்து இறங்கிய வர்மா நடைப்போட்டான் அவளை நோக்கி. மீண்டும் ஒரு மிதி அலைப்பேசியை.

வீடியோ பிளெய் ஆகிட புருவத்தை சுருக்கியவன் தலையை கீழே குனித்து பார்த்தான் ஓடிய படத்தை. முகத்தை சிலிப்பிக் கொண்டவன் விழிகளில் நாயகியும் அவளின் தோழிகளும் இருக்க கண்டான் காணொளியில்.

உற்று, உற்று பார்த்தான் வர்மா போனின் திரையை முன்னங்கையால் அடித்து. அவனின் செயலால் வீடியோ முன்னும் பின்னும் போனது. போர்வேர்ட் ரீவைண்ட் என்றானதில் அம்மணியின் முகத்தில் சுதா போத்தல் நீரை ஊற்றும் காட்சியைக் கண்டான் வர்மா.

டென்சன் ஆகிவிட்டான் வர்மா. போனை காலால் உறும்பி மிதித்தான். என்னவோ காதலியை யாரோ டிஸ்டர்ப் செய்தது போல பீலிங் அவனுக்கு. திரும்பி வேறு பார்த்துக் கொண்டான் மயங்கிக் கிடந்த அபலையை.

அப்போதுதான் கண்டான் வர்மா மூச்சு வாங்கிய பேதையை வீடியோவில். அதைப்பார்த்து ஏதோ புரிந்தவன் போல ஏந்திழை அவளை நெருங்கி காலால் மீண்டும் உதைத்து எழுப்பினான்.

அவள் எழாது இருக்க உறும்பியவன் தலையை வீடியோ பக்கம் திருப்பிட வஞ்சியின் வாயில் ஆஸ்துமா நெபுலைசரை கண்டான். பகினி அவள் அதை தொடர்ந்து இழுத்து பின் சிரிப்பதையும் கண்டான்.

போனை கவ்விக் கொண்டு போய் போட்டான் பொத்தென்று முற்றிழை அவளின் நெஞ்சில் வர்மா. அவளின் உடலுக்கு இடதும் வலதும் போட்டான் கேட்டை அவன் கால்களால்.

போனின் தொடுதிரையை தட்டுகிறான் என்ற பெயரில் அதை கீறி சர்வ நாசமாக்கினான் வர்மா. அதையெல்லாம் தாங்கிக் கொண்ட போனோ மீண்டும் அதே காணொளியை ஒளியேற்றியது.

உறும்பினான் வர்மா சுந்தரியின் கலைந்த கூந்தல் அதிரிட, அவளின் நாசி ஒட்டி மூச்சு விட்டான் வர்மா. அகல விரித்த விழிகளோடு அவளை இமைக்காது வெறித்தான் வர்மா.

ரணம் கொண்ட நெஞ்சோடு புரியா உணர்வில் பதைத்தவனோ சத்தமாகவும் ஆழமாகவும் உறும்பினான். காதை பிளக்கும் ஒலிதான். குழந்தை அழுவது போன்றதொரு மழலை கானம். கீச்சென்ற இனிமையற்ற ஒலியே.

புறங்கையால் அவனின் கலங்கிய பச்சை கண்ணை துடைத்துக் கொண்டான் வர்மா. அவனின் தலை கொண்டு வதனியின் தலையை ஒட்டி அசைத்தான்.

சோகமான சுருதி இறங்கிய உறும்பல் தொடர்ந்திட அவனின் மூளை படுவேகமாய் வேலை செய்தது. மூடி திறந்த கூரிய கண்கள் இமைக்காது விட்டம் பார்த்து உறும்பியவன், அலர் அவளின் கரத்தை பல் படாமல் கவ்வி இழுத்து குகையின் உள்பக்கம் போட்டு ஓடினான் அங்கிருந்து.

வர்மா தேடி ஓடுவது மலரவளின் ஆஸ்துமா நெபுலைசரைத்தான். ஷுட்டிங் நடந்த இடம் நோக்கி பின்னங்கால்கள் பிடரியில் பட தெறித்து ஓடினான் வயமா அவன்.

குறுக்கே எவன் வந்தாலும் கயமாத்தான். வர்மா அவன் ஒரு மணி நேரத்துக்கு 40 மைல் தூரம் பாய்ந்தோடினான். ஏறக்குறைய, 64 கிலோமீட்டரையை சர்வ சாதாரணமாய் கடந்திருந்தான்.

அவனின் எண்ணமெல்லாம் காரிகை அவளுக்கு தேவையான ஆஸ்துமா நெபுலைசரை எப்படியாவது கொண்டு வந்து அவளிடம் சேர்த்திட வேண்டும்.

வெறிக்கொண்டு ஓடிய வர்மாவே அவனின் பூனை இனத்திலேயே அதிபுத்திசாலியான வகையாவான். சிங்கத்தின் மூளையை விட வர்மாவின் மூளையானது 16% மடங்கு பெரியதாகும்.

வீடியோவில் பார்த்த பெயர் தெரியா ஆஸ்துமா நெபுலைசரை நன்றாய் நினைவில் ஏற்றிக் கொண்டான் வர்மா. கூட்டி கழித்து கணக்கு போட்டு அவளின் மூச்சு திணறலுக்கு காரணம் நீரென்றும் பின் மலர்ந்த அவளின் புன்னகை கையிலிருந்த சாதனத்தாலும் என்பதை புரிந்துக் கொண்டான்.

வர்மா ஞாபகத்தில் மனிதனை விட தலைசிறந்தவனே. அவனின் நினைவு மானிடர்களை விட 30 வினாடிகள் அதிகமாகவே நீடிக்கும்.

அலசி ஆராய்ந்து உறும்பியவன் தேடி எடுத்தான் மேடமிற்கு தேவையான ஆஸ்துமா நெபுலைசரை. தேகமெங்கும் காயம் வர்மாவிற்கு. நொறுங்கிய வேனுக்குள் நுழைந்துதான் கண்டெடுத்திருந்தான் வர்மா ஆஸ்துமா நெபுலைசரை.

ரத்தம் செட்டிடும் கீறல்கள் கொண்டு பாய்ந்தோடினான் வர்மா காட்டு வாசிகளின் இருப்பிடம் நோக்கி. எங்கையுமே செக் போஸ்ட் போடவில்லை வயமா அவன்.

பனிமொழியவள் கண்கள் விழிக்கும் வரையில் ஹீரோவுக்கு உயிரே இருக்காது. உறும்பலோடு அவனின் வருகையை அவர்களுக்கு தெரியப்படுத்தி நுழைந்தான் வர்மா காட்டுவாசிகளின் குடில்.

மஸாக முன்னங்கால்கள் நிலம் சறுக்க, புழுதி மணல் பறந்து மறைய மார் நிமிர்த்தி நின்றிருந்தான் வர்மாவாகிய வயமா அவன். உறும்பியவன் பற்கள் இறுக்கியிருந்த நெபுலைசரை கீழே போட்டான்.

மக்கள் நடுங்கி ஒதுங்கி நின்றனர் வர்மாவின் வரவு எதற்காக என்று புரியாது. வாலாட்டி ஓடினான் வர்மா குடிசை குடிலிலிருந்து வெளியாகிய ஆண் ஒருவனை நோக்கி.

வர்மாவிற்கு தெரியும் அவனை. கரடி ஒன்றிடம் சிக்கியவனை மல்லுக்கட்டி சண்டை போட்டு காப்பாற்றியிருந்தான் வர்மா. மூலிகைகள் தேடி போனவனை பலியாக்க பார்த்தது கரடி.

இரை தேடி அலைந்த வர்மாவோ வைத்தியனை காப்பாற்றி அவனுக்கு நண்பனாகி போனான். புலிகள் ஊர் வம்பிற்கு போவதில்லை. வந்த வம்பை விடுவதும் இல்லை. அவ்வளவே. பாதுகாப்பற்ற அச்சம் நிலவுகையில் மட்டுமே அவைகள் மனிதர்களை தாக்கிடும்.

சும்மா மதம் பிடித்து அலைய அவைகள் ஒன்றும் மனித ஜாதி இல்லை. வெறும் ஐந்தறிவு கொண்ட பகுத்தறிவற்ற ஜீவராசிகளே.

உலக நியதி என்னவோ அப்படித்தான் சொல்கிறது. ஆனால், மனிதனுக்கு இருக்கின்ற ஆற்றலை விட எவ்விதத்திலும் பிராணிகள் சளைத்தவைகள் இல்லை. அதுவே, நிஜம்.

காட்டுவாசி டாக்டரின் ப்ரொபெஷனல் ஏதும் வர்மா அறியவில்லை. அவனுக்கு நண்பனான அவனின் உதவி தேவை. கரடியிடம் முட்டி மோதி காயங்கொண்ட வயமா அவனுக்கு ஓரளவு வைத்தியம் தெரிந்த அவன்தான் வைத்தியம் பார்த்தான்.

அதை நினைவில் கொண்டுதான் ஓடோடி இங்கு வந்திருந்தான் வர்மா. அவன் முன்னிலையில் நகர்த்தினான் நெபுலைசரை. அதை அவன் கையிலெடுத்து பார்க்க உறும்பினான் சத்தமாய் வர்மா தலையை வனம் முன்னோக்கி.

காட்டுவாசியின் காலையே சுற்றி சுற்றி வந்து வட்டமடித்தான் வர்மா. அவனோ வாஞ்சையாக வர்மாவின் தலை வருடினான். வர்மாவோ வலிகொண்ட அழுகையான தொனியில் விழிகள் கலங்கி நின்றான் அவன் முன்.

வர்மாவின் தேகத்தில் காயங்களை பார்த்தவன் அவசர அவசரமாக பச்சிலையை இடித்தான். வாலாட்டிய வர்மாவோ தொடர்ந்து உறும்பி அங்கேயே நடையாய் நடந்தான்.

காட்டுவாசியோ இடித்த சாற்றினை வர்மாவின் மீது தடவிட, உடலை உதறி பின்னோக்கினான் வர்மா. அவனுக்கு பொறுமையில்லை. காட்டுவாசி உடனே கிளம்ப வேண்டும். அதுவே வர்மாவின் தேவை.

அதை அங்கிருந்த யாரும் உணரவில்லை. காட்டுவாசி மீண்டும் வர்மாவின் மேனியில் பச்சிலையை தடவிட போக, ஆவேசம் கொண்டவன் ஆணவனை தடுமாறி கீழே விழ வைத்தான்.

நிலத்தில் சரிந்தவனின் கண்களை அடிப்பட்ட பார்வைகள் பார்த்து கூக்குரலில் உறும்பினான்.

புரிந்தது காட்டுவாசிக்கு வர்மாவின் உணர்வு. வர்மாவை சார்ந்த யாருக்கோ காட்டுவாசியின் உதவி தேவை. மௌனமான ஊமை விழிகளே போதுமே மனசின் ரணங்களை விவரிக்க. வார்த்தைகள் அவசியமில்லையே.

காட்டுவாசியின் கையிலிருந்த நெபுலைசரை கவ்வி, முன்னோக்கி பாய்ந்தோடி திரும்பி அவனை பார்த்தான் வர்மா.

கிளம்பினான் காட்டுவாசி கையில் கிடைத்த சில மூலிகைகளை எடுத்துக் கொண்டு, இன்னும் இரண்டு நண்பர்களோடு சேர்ந்து வயமா அவனுக்கு உதவிக்கரம் நீட்டிட.

உறும்பிய வர்மாவோ கலங்கிய கண்களை அவனின் புறங்ககையால் துடைத்துக் கொண்டு எடுத்தான் ஓட்டம்.

ஓடினான் நிறுத்தாத வேகத்தோடு மிருடானியின் வர்மா வாயில் அவளின் நெபுலைசரை கவ்விக் கொண்டு மங்கையவளை எப்படியும் காப்பாற்றிட வேண்டி.

தீவியின் ஆரணியம்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/
 

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 14
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top