- Joined
- Jul 10, 2024
- Messages
- 244
அத்தியாயம் 15
அமேசான் காடு
குகைக்கு வந்து சேர்ந்திருந்தான் புயல் வேகத்தில் வர்மா. மூச்சிரைக்க அவன் முதலில் சுற்றி வந்து சரிப்பார்த்தது என்னவோ குகையின் உள்பக்கம் அவன் பத்திரப்படுத்தி சென்றிருந்த அவனின் மிருவையே.
வஞ்சியவளை மீண்டும் கால்களால் உதைத்து கூக்குரலில் அங்கே இங்கே பார்த்து உறும்பினான் வர்மா. காட்டுவாசிகள் வரும் வரை காத்திருந்தவன் பார்போமன்ஸ் செய்திட ஆரம்பித்தான்.
படுத்துக் கிடந்த நாயகியின் தலையின் பின்பக்கம் போனான் வர்மா. முன்னாடி வாயால் கவ்வி வந்திருந்த ஆஸ்துமா நெபுலைசரை அவள் பக்கம் போட்டான்.
காரிகையின் முகத்தையோ அவனின் கூரிய நகங்கள் கொண்ட முன்னங்கையால் மெதுவாய் வருடினான் வர்மா.
கவ்வி எடுத்தான் வயமா அவன் கீழே போட்டிருந்த ஆஸ்துமா நெபுலைசரை. பல்லில் இறுக்கியிருந்த அதை மங்கையவள் வாயுக்குள் திணித்திட முனைந்தான் வர்மா அவன்.
பகினி அவளோ அசையாதே இருக்க, கோபம் வந்தது ஹீரோவிற்கு. உறும்பினான் வர்மா விட்டம் பார்த்து.
நேரிழையின் சிரசை வேறு செல்லமாய் தட்டினான் சில முறைகள். எல்லாம் கோற்றொடி அவளை எழுப்பும் எண்ணத்திலேயே.
நங்கையின் தலையை வருடிக் கொண்டே மயங்கிக் கிடக்கும் பேதையவளின் தலையோடு அவனின் தலையையும் ஒட்டிக் படுத்துக் கொண்டான் வர்மா.
காட்டுவாசிகளோ இருபது நிமிடங்களில் வந்து சேர்ந்தனர் குகைக்கு.
அரை டவுசர், ஆங்காங்கே கிழிந்த ஆடை என்று ஒரு மாதிரியான அழகியாக அம்போவென்று படுத்து கிடப்பவளை பார்த்து மூவருக்கும் ஆச்சரியமே. மானிடர்கள் அவர்களின் பாஷையில் பேசிக் கொள்ள எழுந்தான் வர்மா இமைக்காத கூர் பார்வைகள் கொண்டு.
அதில் ஒரு காட்டுவாசியின் பார்வையோ ஏந்திழையின் மீது தவறாக ஊறுவதை கண்ட வர்மா காண்டாகி போனான். உறும்பி அவனை எச்சரித்தான் தீவிரமான பச்சை விழிகள் கொண்டு.
வர்மாவிற்கு பழக்கமான நண்பனோ நேரத்தை தாழ்த்தாது பெண்ணவளுக்கு என்னானது என்று பார்த்திட முனைந்தான்.
வயமாவோ அவனுக்கு வழி விட்டான் வைத்தியம் பார்த்திட. இருந்தும் பக்கத்துலேயே ராஜ நடை கொண்டான் அவர்களின் மீது ஒரு கண் வைத்து.
காட்டுவாசி வைத்தியன் பனிமொழியின் கண்களை திறந்து பார்த்தான். வெளிறி கிடந்தது. வாயை குவித்து பார்த்தான். நா வறண்டு கிடந்தது.
முற்றிழையை தலையை பின்னோக்கி சாய்த்தான் வைத்தியன் அவசரத்தில் டக்கென்று, எங்கே நேரம் கடக்க அவளை காப்பாற்ற முடியாமல் போயிடுமோ என்றெண்ணி.
வர்மாவோ உறும்பினான் திடிரென்று. திடுக்கிட்ட வைத்தியனோ அவன் செயலை நிறுத்தி வர்மாவை பார்த்தான் பதறிப்போய். வைத்தியனின் அவசரம் எதற்கு என்று வர்மாவிற்கு புரியவில்லை.
ஆனால், வாசுரை அவளை அவன் கடுமையாக கையாளுகிறான் என்று மட்டும் உணர்ந்தான் வர்மா. அதான், உறும்பல் ஒன்றை போட்டு அவன் செயலை நிறுத்திட வைத்தான். உறும்பலை தாண்டி வேறு வழியெதையும் புலிப்பையா அவன் அறியவில்லை.
களத்தில் இறங்கினான் வர்மா. எல்லாம் அவனின் ஆளுக்காகவே. அவனின் முன்னங்கையை மானினியின் பின்னங்கழுத்தின் பின்பக்கம் நுழைத்தான் பதுசாய்.
பார்க்கணுமே கண்களை குறுக்கி மிக கவனமாய் அவன் நடத்திய ஸ்லோவ் மோஷன் ஆக்சன் சீக்குவன்ஸை. ரெண்டு கண்கள் போதாது எனலாம்.
மெதுவாய் மேலே தூக்கினான் பாவையவள் கபாலத்தை வர்மா. புலி அவன் கையில் தொங்கியது கூந்தல் காட்டில் வீற்றிருந்த பேடையின் சின்னஞ்சிறு தலை. வர்மாவோ தலைகுனிந்து பார்த்தான் அவளின் பொலிவற்ற முகத்தை.
பைனாக்குலரே தேவையில்லாதவன்தான் வர்மா. அவன் பார்வைகளின் ஆழமும் துல்லிதமும் தொலைதூரத்தில் இருக்கின்ற இரையை கனகச்சிதமாக அவன் கண்ணுக்கு காட்டி கொடுக்கும்.
அப்பேர்பட்டவன் இன்றைக்கு மனதால் கலங்கி உடைந்து நின்றான் மலரவள் வர்மா அவன் கைகளில் தளர்ந்து கிடக்க. நேத்திரங்கள் மூடி திறந்தான் வர்மா.
அவன் விழிகளின் நிக்கிடிங் ஜவ்வு (nictitating membrane) ஆணவனின் நெஞ்சை போலவே அவன் கண்களை வழக்கத்திற்கு மாறாக இன்றைக்கு ஈரப்பதமாக்கி வேடிக்கை பார்த்தது. இஜ்ஜவ்வானது அவன் அம்பகங்களில் தூசி விழாமலும் பாதுகாத்திடும்.
வர்மாவின் மிழிகளுக்கு கண்மணி அவளோ நீல வர்ணத்தில் தெரிந்தாள். காரணம், அவன் பார்வை திறன் வரம்புகளை கொண்டதாகும். ஒரு சில வர்ண ஏற்பிகளை மட்டுமே அவனால் காண முடியும். அதில் நீலம், மந்தமான பச்சை மற்றும்
சிவப்பு அல்லது கருப்பு வெள்ளை நிறங்களே குறிப்பிடத்தக்கதாகும்.
எரிமலை கங்காய் கொதித்து கிடந்த குமரியின் உச்சி தொடங்கி கழுத்து வரை அவளின் தலையை இரு முன்னங்கைகள் கொண்டு வளைத்து பிடித்துக் கொண்டான் வர்மா. என்ன உணர்ந்தானோ, பெதும்பை அவள் முகத்தை நெஞ்சோடு சேர்த்து உரசிக் கொண்டான் இறுக்கி.
மிதமான உறும்பலோடு தொடங்கி ஆயிழையின் முகத்தை முற்றிலும் நாவல் வருடினான் வர்மா. மிக மிக மென்மையாய். அவனுக்கு தெரியும் அவன் நாவின் பலம் மற்றும் பலவீனம்.
இம்முறை வர்மா தோற்றிருந்தான் வலிமையை வெளிக்காட்டிடாது கோதையவளிடத்தில்.
கொஞ்சங் கொஞ்சமாய் கறுப்பழகி அவளின் பிறை நுதல் தொடங்கி விலோசனங்கள் எச்சிலில் குளிக்க, கன்னங்கள் சிவக்க, நாசி இறங்கி சங்கமித்தான் கன்னியவளின் இதழில் அருள்மொழி வர்மா என்று மிருடானியால் செல்லமாய் பெயர் வைக்கப்பட்ட புலிப்பையா அவன்.
ஏறெடுத்து முன்னிருந்தவர்களை ராஜ பார்வை பார்த்தவன் சொல்லாமல் சொல்லி வைத்தான் அணங்கவள் அவனின் சொத்தென்று வாலாட்டி.
அவன் நெற்றியில் உள்ள வடிவமோ அதை ஆணித்தரமாக சொல்லியது அவன் ராஜாவேதான் என்று.
தீவியின் ஆரணியம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 15
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.