What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
288
அத்தியாயம் 101

நிகழ்காலம்


பிரிவில்தான், சில முடிவுகள் தவறென்பதையே மனித மனம் உணர்ந்துக் கொள்கிறது.

பொது மருத்துவமனையின் வார்ட் டிப்பார்ட்மெண்டிலிருந்து கோல் வர, ஓடினான் டாக்டர் ஔகத் சர்வேஷ் குமார், காலை பத்துக்கு பதறியடித்து, பணியை பாதியில் விட்டுவிட்டு.

ஆணவன் உள்ளமோ நேற்றைய செயலை அசைப்போட்டு அவன்பால் கோபங்கொண்டது.

சிஜனை சந்திக்க ஏர்போட் போன கீத்துவோ, அவனோட ஞாழல் இருக்க கண்டு பேச்சை வளர்க்க தயங்கினாள்.

ஆனால், ஜூனியரோ இதை விட்டால் அவளுக்கு வேறு வழியே இல்லை என்பது போல், பொண்டாட்டி பிள்ளையை இருக்கையில் அமர வைத்து, ஓரமாய் தள்ளி வந்து நின்றான், முன்னாள் சீனியர் மேடமிடத்தில் கதைத்திட.

''என்ன கேட்கணும் என்கிட்டே?''

என்றவன் நேரடியாய் விஷயத்துக்கு வர,

''படாஸ்தானே, ஔகத்?!''

என்ற போலீஸ்காரியும் டக்கென கேட்க வேண்டியதை நறுக்கென்று கேட்டாள்.

''யார் சொன்னா?''

என்ற சிஜனோ இதழோரம் நக்கல் புன்னகை கொள்ள,

''அதை விடு! நீ அவனே பார்த்திருக்கத்தானே?!''

''ஆமா, பார்த்திருக்கேன்!''

''உன்னே காப்பாத்தனது கூட படாஸ்னு நீதானே சொன்னே?''

''ஆமா, சொன்னேன்!''

''சரி, அப்போ வா என்கூட ஸ்டேஷனுக்கு!''

என்ற காவல்காரியோ ஜூனியரின் கையைப் பற்றியிழுக்க,

''பார்த்தேன், உயிர் காப்பாத்தே பட்டேன்னு சொன்னேன்னே தவிர, படாஸ்தான், ஔகத்னு நான் சொல்லவே இல்லையே?!''

என்றவனின் பதிலில் சிஜனை முறைத்தவளோ,

''விளையாடாதே சிஜன்! ஒழுங்கா என்கூட கோப்பரேட் பண்ணு!''

என்ற ஆங்காரியோ, அவளுக்கே உரிய பாணியில் அழுத்தமாய் சொல்ல,

''லூசா நீ?! உன்கிட்ட விளையாட வேண்டிய அவசியம் எனக்கென்னே இருக்கு?!''

என்றவனின் கை உதறலில், வாயை குவித்து காற்றூதிக் கொண்ட கெத்துக்காரியோ, இடையை இருக்கரங்களால் இறுக்கியப்படி சில நொடிகள் அமைதியாய் பளிங்குத் தரையில் பார்வைகளை பதித்தாள்.

சாமுண்டேஸ்வரியாய் உள்ளுக்குள் கொதித்துக் கிடந்தவள், சாந்த சொரூபிணியாய் அவளை சமன் செய்துக்கொள்ள சில வினாடிகள் எடுத்துக் கொண்டாள்.

''கீத்து, ஏன் இப்படி உன்னே நீயே குழப்பிக்கறே?! யார் சொன்னா, அவுங்க ரெண்டும் பேரும் ஒன்னுன்னு?!''

என்று சிஜன் சொன்ன நிஜத்தை காதில் வாங்காத தலைகன தாமரையோ,

''ஓகே, சிஜன்! ஐம் ரியலி, ரியலி சோரி! அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்க கூடாது! புத்திக்கெட்டு போய் பேசிட்டேன் ஓகேவா?! சோ, பிளீஸ்! உண்மையே சொல்லு?!''

என்று விடாப்பிடியாய் அவனை நச்சரிக்க,

''நீ எத்தனை தடவே, எப்படி கேட்டாலும், என் பதில் ஒன்னுதான் கீத்து! படாஸ், ஔகத் இல்லே! நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு டைம் வேஸ்ட் பண்ணாதே!''

என்றவன் அங்கிருந்து நகர,

''நீ பொய் சொல்றே சிஜன்! நீ பொய் சொல்றே!''

என்ற அகங்காரியோ, போகின்றவனின் கையை இழுத்து அலறினாள் ஏர்போட் அதிர.

''கீத்து, என்னாச்சு உனக்கு?! ஏன் இப்படி நடந்துக்கறே?! எல்லாம் பார்க்கறாங்க!''

என்ற சிஜனோ அவமானத்தில் முகத்தை இறுக்க,

''நீ பழசே மனசுலே வெச்சுக்கிட்டு என்ன பழி வாங்க பார்க்கறே சிஜன்!''

என்ற கீத்துவோ கட்டுப்பாட்டை இழக்க,

''முட்டாளா நீ?! ஏன், சொன்னா புரிஞ்சிக்க மாட்டறே?! படாஸ், ஔகத் இல்லே கீத்து!''

என்ற ஜூனியரோ பொறுமையற்று சினங்கொள்ள,

''பொய்! பொய்! பொய்! நீ சொல்றே பொய்யை நான் நம்ப மாட்டேன் சிஜன்! நம்ப மாட்டேன்!''

என்றவளின் ஆக்ரோஷம் கண்ணீர் கொண்டது.

''எல்லாரும் என்னே ஏமாத்தறீங்க?! எனக்கு தெரியும்?! நான் நம்ப மாட்டேன்! நம்பவே மாட்டேன்!''

என்று பின்னோக்கியவளோ முதுகு இடித்த மென்மையான தூணை திரும்பி பார்க்க, திடமாய் நின்றிருந்த ஔகத்தோ அம்மணியை கண்டுக்காது,

''நீ முதல்லே கிளம்பு. நான் நாளைக்கு வீட்டுலே வந்து பார்க்கறேன்.''

என்றப்படி அவன் கார் சாவியை தூக்கி வீசினான் சிஜன் நோக்கி.

''ஓஹ், ரெண்டு பேரும் கூட்டு களவாணிகளா?! ச்சை! இது தெரியாமே போய் உன்கிட்டையே வந்து இவனே பத்தி கேட்டேன் பாரு! என் புத்தியே செருப்பாலே அடிக்கணும்! துரோகிகளா!''

என்ற கிருத்திகாவோ, காரி தரையில் துப்பி விட்டு அங்கிருந்து நகர, பார்வையாலே சிஜனிடம் விடைபெற்றுக் கொண்ட டாக்டரோ, அடிகளை முன்னோக்கி போகும் பொஞ்சாதியை நோக்கி வைத்தான்.

''நான், ட்ரைவ் பண்றேன்!''

என்ற ஔகத் கார் சாவியை விடுக்கென்று விறலியின் கரத்திலிருந்து பிடிங்க,

''என்ன பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?! என் நெத்தியிலே இளிச்சவாயின்னு எழுதி ஒட்டிருக்கா?!''

என்றவளோ காருக்குள் ஏறாது, வெளியிலேயே நின்று கூச்சல் கொள்ள,

''உள்ளே ஏறு சொல்றேன்!''

என்றவனோ கார் கதவை திறந்து இடையில் கரமிறுக்கி நின்று பொண்டாட்டியை விழிகளால் மிரட்டினான்.

''என்னே சொல்லே போறே?! நான் படாஸ் இல்லே, அதானே?!''

என்றவளோ, சத்தமாய் பேசி சுற்றி இருப்போரை முகம் சுளிக்க வைக்க, டாக்டரோ மரகத பச்சையான கண்களோடு வல்லபியின் கையை அழுத்தமாய் பற்றி, காருக்குள் தள்ளினான் கதத்தை வார்த்தைகளின்றி வெளிக்காட்டி.

இவ்வளவு நேரம் அடாவடித்தனம் செய்த சேயிழைக்கோ திடிரென்று தலை சுற்றி, குமட்டியது. ஆனால், அந்திகையவளோ வெளிவர பார்த்த வாந்தியை டக்கென விழுங்கிக் கொள்ள, அதுவோ மீண்டும் வயிற்றுக்குள்ளேயே போய் தஞ்சம் கொண்டது.

சிஜன் சொன்ன விஷயம் மூளையை குடைய நகத்தை கடித்து துப்பிய தெரியிழையை திரும்பிப் பார்த்த ஔகத்தோ,

''அங்க முடிஞ்சதுன்னா சொல்லு, என்னது தறேன்! அதையும் கடிச்சு துப்பிடு!''

என்றவன் சொன்னதுதான் தாமதம் என்பது போல, விடுக்கென்று டாக்டரின் கையை பிடித்திழுத்து பாவையோ அவன் விரல்களை ஆக்ரோஷமாய் கடிக்க,

''ஏய்! விடுடி! வலிக்குது! கீத்து!''

என்றவன் அலறலில்,

''ஒழுங்கா உன் வேலையே மட்டும் பாரு! அடுத்த தடவே எதை கடிப்பேன்னு எனக்கே தெரியாது!''

என்றப்படி சீறி, புருஷனின் கரத்தை உதறி, வின்னு வின்னென்று குடைச்சல் கொடுத்த மண்டையை கைகளால் பற்றி, தலையை கீழே குனித்துக் கொண்டாள் கீத்து.

ஔகத்தோ ஒண்டொடியின் குதிரைக் கொண்டையை அங்கும் இங்கும் அசைத்து விளையாட, பட்டென ஏறெடுத்து அவனை கலங்கிய நேத்திரங்களோடு உற்று நோக்கினாள் வதூ அவள்.

''என் கண்ணே பார்த்து சொல்லு, நீ படாஸ் இல்லன்னு?!''

''கண்ணு, என்னே கண்ணு?! முன்னே, பின்னன்னு, நீ எதை காமிச்சாலும் என் பதில் ஒன்னுதான்! நான் படாஸ் இல்லே!''

''அப்போ, நீ யாரு?! சொல்லு ஔகத் நீ யாரு?!''

என்றவளோ கார் ஓட்டியவனின் கையை பிடித்திழுக்க,

''பைத்தியமாடி நீ?! உன் கேள்விலையே பதில் இருக்கு! நான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்! உன் புருஷன்!''

என்றவனோ அழுத்தந்திருத்தமாய் சொல்ல, கொட்டி விட்ட கண்ணீரை அவன் காண விரும்பாத பத்தினியோ, தலையை திருப்பிக் கொண்டாள் ஜன்னலோரம்.

வீட்டாளின் விசும்பல் டாக்டரை ஏதோ செய்ய, வாஞ்சையாய் அவளின் முட்டிக்காலில் உள்ளங்கை பதித்து மென்மையாய் வருடினான் ஔகத்.

ஆளனின் கையை விலக்கியவளோ,

''சிஜன் சொல்றது பொய்யின்னு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்! ஆனா, ஏன் எல்லாரும் இப்படி என்னே முட்டாளாக்க பார்க்கறீங்கன்னுதான் புரியலே!''

என்றுச் சொல்லி வெளிப்புறத்தை வல்வியவள் பார்க்க ,

''கீத்து, பிளீஸ்! உன் படாஸ் புராணத்தே கொஞ்சம் நிப்பாட்டறியா! கேட்கவே எரிச்சலா இருக்கு! முதல்லே, அவன் நான் இல்லங்கறதே ஏத்துக்கோ! அதே மாதிரி நீ அவன் காதலி கிருத்தியும் இல்லே! இந்த ஔகத்தோட பொண்டாட்டி கிருத்திகா! திருமதி ஔகத் சர்வேஷ் குமார்! புரிஞ்சதா?!

என்ற டாக்டரின் கூற்றில், அவன் பக்கம் முகத்தை திருப்பிய நேரிழையே,

''என்னே தொட்டவன் யாரு, தொடறவன் யாருன்னு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லே! படாஸ் காதலியாகவும் சரி, ஔகத் பொண்டாட்டியாகவும் சரி, இந்த கிருத்தியான கிருத்திகாவுக்கு நல்லாவே தெரியும் குடும்பம் நடத்துறது யார் கூடன்னு!''

என்ற மடந்தையோ, சடீரென்று கதவை திறந்து காரிலிருந்து வெளியேறினாள்.

அதுவரைக்கும் ஆயந்தியின் வதனத்தையும் வார்த்தைகளையும் தவிர வேறெதையும் கவனிக்காத டாக்டரோ, அப்போதுதான் உணர்ந்தான் அவன் இவ்வளவு நேரமாய் கதவை லோக் செய்ய மறந்திருந்த சங்கதியை.

சிவப்பு சமிஞ்சை மீண்டும் பச்சைக்கு மாற, சிக்னல் போட்ட காரை மெதுவாய் செலுத்திய வண்ணம் ரோட்டில் அழுகையைத் துடைத்துக் கொண்டு நடைப்போட்ட நாயகியை அழைத்தான் ஔகத்.

''கீத்து, வந்து கார்லே ஏறு!''

''நான் வரலே! நீ போ!''

''இது ஒன்னும் நம்ப வீடில்லே கீத்து! நடு ரோடு! சீன் போடாமே வந்து கார்லே ஏறு!''

என்றவன் வாக்கியத்தில் பொத்துக்கொண்டு வந்தது கோபம் கீத்துவிற்கு. இருந்தும், இப்போதைக்கு கையாலாகாதவளாய் அவளிருக்க, வேண்டுமென்றே ஔகத்தை கடுப்பாக்கினாள் ஊடையவள்.

''நான் என் படாஸ் சொன்னா மட்டுந்தான் கேட்பேன்! நீ சொன்னாலாம் கேட்க மாட்டேன்!''

என்ற விருந்தனையோ நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வீறுநடை போட,

''அப்போ நடந்தே வீடு வந்து சேரு! அப்போதான் உனக்கு புத்தி வரும்!''

என்ற டாக்டரோ, நிஜமாகவே சொல்லியதை போல் செய்து விட்டான், பெதும்பை அவளை தனியே தவிக்க விட்டு வீடு திரும்பி.

பனி கொண்ட சாலையில் தன்னந்தனியாக, இரவு ஒன்றுக்கு மேல் பொடி நடையாய் நடந்து பயணத்தை மேற்கொண்ட மங்கையோ, மீண்டும் குமட்டல் கொண்டு வாந்தியை நடு வீதியில் எடுத்தாள்.

ஆளில்லா இடத்தில் துணைக்கு யாரை அழைத்திடுவாள் ஏந்திழையவள் அவள். தலை சுற்ற, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரிந்த இருபத்தி நான்கு மணி நேர கடையை கண்ட கோமகளோ, முயற்சித்து அடிகளை மெல்லமாய் வைத்தாள் அவ்விடம் நோக்கி போகும் வண்ணம்.

தளிரியல் அவளோ, தள்ளாட்டத்தில் சாலையின் குறுக்கே நடக்க, வேகமாய் வந்த காரொன்றின் ஹார்ன் சத்தம், திடுக்கிட வைத்தது வஞ்சியவளை.

அதிர்ச்சியில் நெஞ்சம் தூக்கிவாரி போட, தள்ளாடிய மெல்லியாளோ அவளைக் கடந்து போன காரின் வேக அதிர்வில் மயக்கங்கொண்டு ஒரு சுற்று சுற்றி, தரையில் குப்பிற விழுந்தாள்.

தார் சாலையில் தலை முட்ட, சதை கிழிந்த வலியை விட, சொடக்கிடும் கணத்தில் வயிற்றுக்குள் சுருக்கென்று உணர்ந்த ரணத்தில்தான் துடிதுடித்து போய்விட்டாள் மாயோள் அவள்.

விலோசனங்கள் ரெண்டும் மேலேறிக்கொள்ள, முதல் முறை ரேவ்வோடு கலவிக் கொண்ட போது கூட இப்படியானதொரு மிடலை அனுபவித்திடாத பைந்தொடியோ, விவரிக்க முடியா ரோதனையில் செத்து பிழைத்தாள்.

அடிவயிற்றில் தொடங்கிய உயிர் பறிக்கும் வேதனையது, வயிற்றை முழுதும் அதன் கட்டுக்குள் கொண்டு வந்து பாடாய் படுத்தியது பாவி மகளவளை.

நெளியவும் முடியாது, எழவும் முடியாது, அரை மயக்கத்தில் சஞ்சரித்திருந்த சீமாட்டியோ, பன்மடங்கு வீரியங்கொண்ட நரகத்தில் உழன்ற வண்ணம், படாஸ் வந்திட மாட்டானா என்று ஏங்கினாள்.

ஈனசுரமான மெல்லிய அழுகையிலான அலறலில், நகங்களை தார் சாலையில் அழுத்தி, அவைகள் பீய்ந்துப்போக, மரண வலியை பெண்மையில் உணர்ந்த கற்பாளின் கருப்பு பேண்ட்டெல்லாம் குருதியில் நசநசத்து போனது.

விழிகளில் கண்ணீர் பெருக்கெடுக்க, சுயநினைவற்ற அனாதையாய் சாலையில் கிடந்தாள் ரீசனின் ஒற்றை கருவேப்பில்லை கொத்து.

முற்றிழையின் மனம் டேடியையும் அவளின் ரேவ்வையும் நிந்திக்க, படாஸோடு வாழ கொடுத்து வைத்திடாத கிருத்திக்கு, அவன் வாரிசை சுமந்து பெற்றிடும் வாய்ப்பும் இல்லாது போனது கட்டிய கணவன் ஔகத்தால்.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 101
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top