- Joined
- Jul 10, 2024
- Messages
- 288
அத்தியாயம் 102
நிகழ்காலம்
ஒரு சில வேளைகளில் மட்டுமே இழப்பை வேறொன்றால் ஈடுக்கட்டிட முடியும். பல வேளைகளில் இல்லாதவனுக்கு அப்படியான அவசியங்கூட தேவைற்றது என்பதுதான் வேடிக்கையே.
மனைவி கிருத்திகா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலறிந்த டாக்டரோ, புடுங்கியடித்துக் கொண்டு பிரசவ டிப்பார்ட்மெண்ட் நோக்கி ஓடினான்.
பொது மருத்துவமனையாகினும் முதல் தர அறையில் தனியாகத்தான் இருந்தாள் அபலையவள். நடு ரோட்டில் விழுந்து கிடந்த நல்லவளை ரோந்து போலீஸ் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்துப் போயினர்.
ஆனால், பேதையவள் யாரென்ற விபரங்களைக் கண்டுக்கொள்ளத்தான் தாமதமாகி போனது. காரணம், மேடம் அம்போவென்று கிடந்த நேரத்தில் நங்கையவள் பர்ஸை எவனோ அடித்து போய் விட்டான்.
அதே வேளையில், காந்தாரியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி மற்றும் தாலிக்கொடியும் கூட கப்ஸா செய்யப்பட்டிருந்தது.
ஆனால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன ஒரே ஒரு நல்ல விஷயம் யாதெனில், அம்மணியின் பூட்ஸ் காலணியோரம் சீனியரம்மா பதுக்கி வைத்திருந்த ரிவால்வர் திருடப்படாமல் இருந்ததே ஆகும்.
அலைபேசி காரிலேயே மிஸ் செய்யப்பட்டிருக்க, தப்பித்தது எனலாம்.
மருமகன் வர, மாமியார் அறையிலிருந்து வெளியேறிக் கொண்டாள். துணைவியோ குத்துக்கல்லாட்டம் அமர்ந்தவாக்கில் சூப் குடித்துக் கொண்டிருந்தாள், பௌலில்.
குஞ்சரியின் தலை மறைய,
''இப்போ நிம்மதியா உனக்கு?!''
என்ற அகம்பாவ கள்ளியின் ஆக்ரோஷமான அலறலில், மங்கையின் பெட்டொரம் குத்த வைத்திருந்த ஔகத்தோ, ஒரு கணம் திடுக்கிட்டான்.
பெதும்பையவளோ அவனையே முறைத்திருக்க, இறுகிய முகத்தோடு, எதுவும் பேசாத டாக்டரோ, கரு தங்கிய தளிரியலின் வயிற்றை தொட்டு பார்க்க முனைந்தான்.
''தொடாதே! இது படாஸ் குழந்தை!''
என்ற ஆங்கார வள்ளியோ, உக்ரமாய் அடித்து தள்ளினாள் டாக்டரின் கையை.
அனலான பார்வைகள் கொண்டு கோற்றொடியை ஏறெடுத்த ஔகத்தோ,
''இது என் குழந்தை!''
என்றுச் சொல்லி இமைக்காது வெறித்தான் இளம்பிடியாள் அவளை, கை மட்டும் மாயோளின் வயிற்றை உரிமையோடு வருட.
''படுத்தவே நான்! எனக்குத் தெரியும்! இது யார் குழந்தைன்னு! நீ சொல்ல வேணாம் என் குழந்தைக்கு யார் அப்பான்னு!''
என்ற கீத்துவோ, வழக்கம் போல் வார்த்தைகளில் நஞ்சுக்கொள்ள,
''நீ என்ன வேணா சொல்லிட்டு போ! இது என் குழந்தைத்தான்!''
என்ற ஔகத்தோ அழுத்தமாய் சொல்லி வாயடைக்க பார்த்தான் ஒண்டொடி அவளை.
''ஆனா, நீதான் படாஸ் இல்லையே?!''
என்ற கீத்துவோ சிசுவை இழந்த வேதனையில் ஆவேசம் பொங்க கத்தினாள்.
''இங்கப்பாரு கீத்து, நீ சொல்றே மாதிரி இது படாஸோட குழந்தையாவே இருந்திட்டு போகட்டும், அதப்பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லே! ஆனா, ஊர் உலகத்தே பொறுத்த வரைக்கும் நீ என் பொண்டாட்டி! உன்னாலே இந்த பூமிக்கு ஒரு உயிர் வருதுன்னா அதுக்கு நான் மட்டும்தான் பொறுப்பா இருக்க முடியும்! ''
என்றவனோ விருட்டென எழுந்தான் அலுமினிய கட்டிலிலிருந்து.
''நீ உயிரெடுக்கே மட்டும்தான் லாயிக்கி ஔகத்! அதனாலதான் உன் டிவினே (twin) சாக விட்டுட்டு நீ மட்டும் உயிரோட இருக்கே! you are such a selfish pervert! (நீ வக்கிரம் பிடித்த ஒரு சுயநலவாதி!)
என்றவளின் மனசாட்சியற்ற வார்த்தைகளை ஜீரணிக்க முடியா ஔகத்தோ,
''கிருத்தி!''
என்றலறி பொஞ்சாதியின் மீது கொண்ட ஆத்திரத்தை அறையின் பொருட்களில் காண்பித்தான்.
''ஆமாடி! ஆமா! நான்தான் என்கூட இருந்தவனே கொன்னேன்! நான்தான் கொழுப்பெடுத்து நடந்து போய் ரோட்டுலே விழுந்து, என் குழந்தையே கொன்னேன்! நான்தான், ஒன்னா இருக்கும் போது அடுத்தவன் பேரே ஆயிரம் வாட்டி சொல்லி உன் மனசே கொன்னேன்! ஏன் உங்கப்பாவையும் நான்தான் கொன்னேன்னு சொல்லேன்! சொல்லுடி! சொல்லு!''
என்றவனோ ஆக்ரோஷத்தில் அடாவடிகாரியவளை பிடித்து உலுக்க, அகல விரிந்தது விறலியின் கருவிழிகள் ரெண்டும், டாக்டரின் வதனத்தில் அவள் கண்ட மாற்றத்தில்.
அதை கோரமென்பதா இல்லை பேரழகனின் மறுப்பக்கம் என்பதா என்று புரியவில்லை படாஸின் காதலிக்கு.
''பொறந்ததுலருந்தே தனியா கிடந்த எனக்கு, ஒரு குடும்பம் வேணும்னு நினைச்சது தப்பா?! நீ என்னே லவ் பண்ணணும், எனக்காக இருக்கணும், என்ன கல்யாணம் பண்ணணும், இப்படி எனக்காக நான் உன்னே ஆசைப்பட்டது தப்பா?!''
என்றவனின் மரகத பச்சையிலான பிரேட்சனங்களை முதல் முறை பார்த்த ஏந்திழையோ, அவன் புஜங்கள் ரெண்டும் சட்டை கிழிய வெளிவந்து நிற்பதை பார்த்த நொடி, நயனங்களை மூடி அவன் தோள்களை உரசி கழுத்தேறினாள் உள்ளங்கைகளால்.
மூடிய விலோசனங்களோ நாயகியின் சந்தேகத்தை தீர்த்திடும்.
''நான் உன்னே எவ்ளோ லவ் பண்றேன்னு உனக்கு தெரியாது கீத்து! எனக்கு உன்கூட நிறைய குழந்தைங்க பெத்துக்கணும்! உன்னே காதலிச்சிக்கிட்டே செத்து போயிடணும்! கேடி மகன்ற ஒரே காரணத்தாலோ சாதாரணமா கிடைக்க வேண்டிய எதுவுமே எனக்கு அப்படியே கிடைக்கலே! அன்பு உட்பட! ஏங்கறேண்டி கிருத்தி! நீ படாஸ்காக உருகறதுலே ஒரு துளியாவது எனக்காக உருக மாட்டியான்னு!
என்ற ஔகத்தின் கண்ணீர் ஆணவன் மூக்கிறங்கி மெத்தை சரிந்திருந்த முற்றிழையின் முகத்தில் துளிர்க்க, அவன் செவிகளில் விரல் கொண்டு விளையாடிய பைந்தொடியோ,
''படாஸ்! நீ என் படாஸ்தான்! நீ என் படாஸேத்தான்!''
என்று அம்பகங்கள் திறக்கா நிலையில் எதையோ கண்டறிந்த பரவசத்தில் கூச்சல் கொள்ள,
''படாஸ்! படாஸ்! படாஸ்! ஆர்ர்ர்! அவனையே கட்டிக்கிட்டு சாவு!''
என்ற டாக்டரோ வெறிபிடித்தவன் போல், மல்லாக்க கிடந்தவளின் கழுத்தை நெறிக்க, போராடிய போலீஸ்கரியோ, ஏற்கனவே, மருந்து மாத்திரை, டி.சி. என்ற சிகிச்சைகள் மூலம் சோர்ந்து போயிருக்க, இப்போதோ ஔகத்தின் அழுத்தத்தில் மொத்தமாய் மயங்கி போனாள்.
கடுங்கோபம் கொண்ட ஔகத்தோ, இரும்பு கட்டிலை ஓங்கி ஒரு குத்து குத்தி, அது கீழ்நோக்கி உள் சென்று, சுளுக்கு விழுந்த சில்காட்டம் கிடக்க, அவ்வறையிலிருந்து வெளியேறினான் முகத்தை மறைத்தப்படி அவன் கார் நோக்கி பயணித்து.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 102
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.