பகலெல்லாம் உன் சிரிப்பில்
இரவெல்லாம் உன் நினைவில்
நனவெல்லாம் உன் குரலில்
கனவெல்லாம் உன் கைப்பிடியில்
குழலால் முகம் மூடினாய்
மூச்சால் மூர்ச்சையாக்கினாய்
கதுப்பால் கண்ணில் விழுந்தாய்
இதழால் இகல்ந்தாய்
எழுத்தெல்லாம் உன் கதை
கவியெல்லாம் நி(ர்)மலனின் வதை!
💚 கேடி