What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
490
அத்தியாயம் நூற்றி இருபத்தி எட்டு

நாயகியின் நயனங்களில் துயிலில்லை. இருந்தும் கண்களை மூடியே கிடந்தாள் ரீசனின் குஞ்சரியவள்.

சர்ஜரி நல்லப்படியாக முடிய முதல் வேலையாய் காதல் கணவனை ஓடி சென்று கட்டிக்கொள்ள வேண்டும் என்பதே அவளின் பேராசையாய் இருந்தது.

அப்படி எடுத்த உடனேயே ஓடிடக்கூடாதென்றால் மெதுவாய் நடந்து போயாவது குட்டி பிள்ளையை போல் அவன் மீதேறி அமர்ந்துக் கொள்ள வேண்டும் வஞ்சியவளுக்கு.

நடவாத ஆசைகளை எண்ணி பேரானந்தம் கொண்ட குஞ்சரியின் தேகத்தை சூடு கொண்ட இருக்கரங்களால் மென்மையாய் இறுக்கியணைத்தான் அவளின் காதல் கணவன் போர்வைக்குள் அவளோடு சூழ்ந்து.

''டேய் ஜூனியர்.. நீ நிஜமாவே பிக் போஸ் தாண்டா..''

என்றவளோ தாலி செயின் குத்த திரும்பி வளைத்து கட்டிக் கொண்டாள் ரீசனின் கழுத்தை கைகளால்.

''புடிச்சிருந்ததா..''

என்றவனோ காதலோடு பொண்டாட்டியின் முகம் நோக்க,

''ரொம்ப.. ரொம்ப.. எப்போதுமே இனி இது மாறவே கூடாது ஜூனியர்..''

என்றவளோ கணவனவன் இதழ்களை மயிலிறகாய் வருடினாள் அவளிதழ்கள் கொண்டு.

உதடுகளை விரும்பாது பிரித்தான் ரீசன் மனைவி குஞ்சரி முத்த போதையில் லேடி பீஸ்டாய் மாற ஆரம்பிக்க.

''ஆர்ர்ஹ்ஹ்.. சீனியர் நாமே நம்ப ரெயின்போவே அப்பறம் வெச்சிப்போமா..''

''இல்லே இப்போ வேணும்..''

அடம் பிடித்தாள் ஆயிழையவள் கொஞ்சல் தொனியில்.

''வேணா சீனியர்.. காரணமாத்தான் சொல்றேன்.. ''

என்றவன் மெதுவாய் மணவாட்டியவளை விலக,

''என்னடா காரணம்..''

என்றவளோ சலிப்போடு வினவ,

''அதுக்குத்தான் சீனியர் உங்களே கூட்டிட்டு போக வந்திருக்கேன்..''

என்று சொல்லியவனோ காதல் மனைவியின் நிடலத்தில் முத்தமிட,

''போடா! நீயும் உன் காரணமும்! ஆமா.. கீழே போனியே என்னாச்சு..''

என்றவளோ முகத்தை ஒருபுறமாய் திருப்பிக் கொள்ள,

''கோச்சிக்காதீங்க சீனியர்.. எழுஞ்சு ட்ரஸ் போட்டு என்கூட வாங்க அப்பறம் தெரியும்..''

என்றவனோ சின்னதாய் சில்மிஷம் கொண்டு மனைவிக்கு ஆடைகளை அணிவித்து பின் வீல் சேரில் கூட்டி போனான் மகள் கீத்து இருந்த அறைக்கு.

தாயை பார்த்த மகளும் பெற்றவளை பார்த்த பிள்ளையும் அலறி கட்டிக்கொண்டனர் வருடங்கள் கடந்து சந்திக்க. தாயும் சேயும் அன்பை அளவில்லாமல் பொழிய ஆரம்பித்தனர் கதைப்பேசி.

ரீசனோ அவர்களை தனியே விட்டு விலகினான் அலைபேசியோடு கீழ்தளத்திற்கு. மனம் உறுத்தியது என்னவோ சரியில்லையென்று. ஆனால், அதை சரியாகி அவனால் கணிக்க முடியவில்லை.

நெஞ்சை கையால் தேய்த்துக் கொண்டே சோபாவில் வந்தமர்ந்தவன் அழைத்தான் வாத்தியாரை நேரங்கெட்ட நேரத்தில்.

''ஹலோ..''

கரகரத்தது வாத்தியாரின் குரல்.

''பா.. கீத்து என் கூடத்தான் இருக்கா.. நாளைக்கு வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துடறேன்..''

''என்னது.. கீத்து உன்கூட இருக்காளா..''

என்ற வாத்தியாரே சுவர் கடிகாரத்தை பார்க்க,

''அதெல்லாம் நாளைக்கு வந்து சொல்றேன்பா..''

''என்னவோ போ!''

என்று கடுப்பை வார்த்தையில் காண்பித்தவரோ ரிசீவரை வைக்க போக,

''அப்பா..''

என்றவனோ நிறுத்தினான் அவரை.

''அப்பா.. குஞ்சரி சர்ஜரிக்கு ஓகே சொல்லிட்டா.. இன்னும் கொஞ்ச நாள்லே எழுஞ்சு நடந்திடுவா.. கீத்துவையும் நல்லா பார்த்துப்பா.. இருந்தாலும் நீங்க அவளே விட்டுடாதிங்கப்பா.. அவளே பத்திரமா பார்த்துக்கோங்க.. நான் இருந்தாலும் இல்லன்னாலும்..''

என்றவனின் குனிந்திருந்த தலையோ கீழ் நோக்கியிருக்க ஆணவனின் மிழிகள் துளிர்த்த கண்ணீரோ தரை சொட்டியது.

''டேய்..''

பதைத்தது தந்தையுள்ளம். மகனின் நள்ளிரவு அழைப்பு. சங்கடம் கொள்ளும் பேச்சு. எதுவும் சரியாகப்படவில்லை பெத்தவருக்கு அவன் வேண்டாத பிள்ளையாகினும்.

''சோரிப்பா.. நான் அண்ணன் மாதிரி சரியா படிக்கலே.. வீட்டுலே பார்த்த பொண்ணே கட்டலே.. நீங்க ஆசைப்பட்ட மாதிரியான வேலைக்கும் போகலே.. நான் உங்களுக்கு ஒரு நல்ல பையனாவே இல்லல்லே..''

என்றவனின் குரல் தேங்க,

''டேய்.. ரீசன்.. என்னாச்சு! ஏன் என்னன்னவோ பேசிக்கிட்டு இருக்கே! எங்க இருக்கீங்க எல்லாம்! முதல்லே கிளம்பி வீட்டுக்கு வாங்க!''

''ஒன்னுமில்லப்பா.. உடம்பே பார்த்துக்கோங்க.. அம்மாவே.. ரொம்ப மிஸ் பண்றேன்பா.. என்ன ஆனாலும் குஞ்சரியே விட்டுடாதிங்கப்பா.. நான் இல்லாமே அவே ரொம்ப கஷ்டப்படுவாப்பா..''

என்றவனோ விசும்பல் அடக்கிக் கொள்ள,

''டேய்! என்னடா ஆச்சு உனக்கு! பைத்தியக்காரன் மாதிரி என்னன்னவோ உளறிக்கிட்டு இருக்கே! என்னே தண்ணிகின்னி போட்ருக்கியா!''

''இல்லப்பா.. தண்ணிலாம் ஒன்னும் அடிக்கலப்பா.. சத்தியமா.. நான் நினைக்கலப்பா அண்ணனுக்கு அப்படியாகும்னு.. மன்னிசிருங்கப்பா..''

''ரீசன்! தோளுக்கு மேலே வளர்ந்த பையன்னு கூட பார்க்க மாட்டேன்! வந்தேன் உரிச்சு எடுத்திடுவேன்! சும்மா கண்டதையும் பேசிக்கிட்டு! அவன் விதி முடிஞ்சிருச்சு போய் சேர்ந்திட்டான்! அதுக்கு ஒன்னும் நீ காரணமில்லே! புரிஞ்சுதா! நாளைக்கு காலையிலே டான்னு ஒன்பது மணிக்கெல்லாம் நீங்க மூணு பேரும் நம்ப வீட்டுலே இருக்கணும்! சொல்லிட்டேன்! போன் வெச்சிட்டு போய் படு!''

என்ற அப்பாவோ மகனை அதட்டலான பாசங்கொண்டு கடிந்து போனை வைக்க, ரீசனோ சொல்ல முடியா உணர்வொன்றில் போனை தூக்கி சோபாவில் போட்டு கையால் முகத்தை மூடிக்கொண்டு சத்தமில்லா அழுகையை கொண்டான்.

ஏனோ அவனுக்கு குஞ்சரியை விட்டு பிரியப்போவது போலவே தோன்றியது. நெஞ்சம் தன்னிச்சையாக அடைத்தது. சிந்தனைகள் எல்லாம் எங்கெங்கோ போனது.

பேதையவளை காதல் கொண்ட கணம் தொடங்கி இன்றைய நாள் வரைக்கும் அனைத்தும் கண்முன் வந்து போனது.

கீத்து குட்டியின் செல்ல சிரிப்பு, அம்பாளின் கோப ஊடல், அப்பாவின் வழக்கமான எரிச்சல், மறைந்த அண்ணணின் அக்கறை, அண்ணியாகா மயிலினியின் தலைகோதல், விசாவின் கெஞ்சல், கீரனின் ஸ்டைல், லல்லியின் சிறுபிள்ளைத்தனம், வீரின் நக்கல், அஜயின் உதவி, விஜயின் துரோகம்.

அப்பப்பா ஒரு மாமாங்கமே முடிந்தாற்போன்று பட்டென விழிகள் விழித்தான் ரீசன். வேர்த்து கொட்டியிருந்தது அவனுக்கு. நீண்டதொரு பெருமூச்சு கொண்டவன் போனை ஒரேடியாக ஸ்விட்ச் ஆப் செய்தான்.

பாரமான மனதோடு மேல் மாடி நோக்கியவன் அம்மாவும் மகளும் ஒரே மஞ்சத்தில் உறங்கிக் கிடப்பதை உள்ளம் பூரிக்க கண்டான். மகள் கீத்துவை கையிலேந்திய ரீசன் குட்டியை அவளின் அறையில் கிடத்த விழித்துக் கொண்டாள் அப்பனின் டூப்ளிகேட்.

''என்ன டேடி மம்மிக்கூட மஜாவா! அதான் என்னே கழட்டி விட்டுட்டிங்களா..''

சின்னவளோ தகப்பனின் மூக்கை பிடித்தாட்ட,

''Keeththu.. promise me that whatever happens you won't leave mummy in any circumstances! you should stand with her!''
(கீத்து.. அப்பாக்கு ப்ரோமிஸ் பண்ணிக்கொடு என்ன நடந்தாலும் எந்த சூழ்நிலையிலும் நீ அம்மாவே விட்டுட மாட்டேன்னு! நீ எப்போதுமே அம்மாகூட நிக்கணும்!)

ரீசனின் சீரியஸான முகத்தை இமைக்காது பார்த்தாள் மகளவள்.

''டேடி இருந்தாலும்.. இல்லாட்டியும்.. நீ இருக்கணும்.. எப்போதுமே.. என் சீனியருக்கு நீதான் ஜூனியர்..''

என்றவனோ மகளின் தலைகோத,

''ஐ ப்ரோமிஸ் யூ டேடி.. நான் மம்மியே விட மாட்டேன்! ஐ லவ் யூ போத்!''

என்றவளோ தந்தையவனை எக்கி கட்டிக்கொண்டாள் இறுக்கமாய்.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 128
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top