- Joined
- Jul 10, 2024
- Messages
- 468
அத்தியாயம் 19
நிகழ்காலம்
நந்தமூரி சாமியார் ஆசிரமம்
''நீங்க கவலையே படாதீங்க பீட்டர்! இந்த தடவை எந்த சொதப்பலும் இருக்காது! நீங்க நம்பிக்கையா வரலாம், என்னே பார்க்க!''
பூஸ்ட் வார்த்தைகள் கொண்டார் போன் பேசியவர்.
''நான் பொதுவா யாருக்கும் ரெண்டாவது வாய்ப்பு கொடுக்கறது இல்லே பாபு! ஆனா, நீ ஸ்பெஷல்! உன்னாலே நான் லாபம் நிறையவே பார்த்திருக்கேன்! அதனாலதான், நடந்த தப்பே திருத்திக்கறே விதமா உனக்கொரு வாய்ப்பு கொடுக்கறேன்!''
எதிர்முனையோ கணீரென்றே குரலில் அழுத்தம் கொண்டது.
''பீட்டர், நீங்களே சொல்லிட்டிங்க என்னாலே உங்களுக்கு லாபமே அதிகம்னு! அது எப்போதுமே மாறாது! போன தடவை விட்டதையும் சேர்த்தே இந்த தடவை நான் உங்களுக்கு முடிச்சு கொடுக்கறேன்! என்னே நம்புங்க!''
சத்திய வாக்கு கொடுக்கப்பட்டது பொய்யே மூலதனமாய் இருக்கும் உத்தமரால்.
''டைமண்ட் பாபு, மைண்ட்லே வெச்சுக்கோ! சொன்னது சொன்னப்படி நடக்கலே, சுறாக்களுக்கு நீ இறையாகிடுவே!''
என்ற நவநாகரீக உலகின் கொள்ளை கடத்தல் மன்னன் பீட்டரோ எச்சரிக்கை விடுத்து அழைப்பைத் துண்டித்தான்.
*******************************************
நிகழ்காலம்
இன்ஸ்பெக்ட்டர் கதிர்காமனின் போலீஸ் ஸ்டேஷன்
நாற்பது மதிக்கத்தக்க ஒருத்தர் தோளில் துண்டோடு காவல் நிலையத்துக்குள் நுழைந்தார்.
''என்னய்யா, என்ன விஷயம்?!''
ரைட்டர் கேட்க,
''சார், ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி என் பொண்ணே காணோம்னு கேஸ் கொடுத்திருந்தேன்! அது சம்பந்தமா இன்ஸ்பெக்ட்டருக்கிட்ட பேசணும்!''
''கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு! சார் வந்திடுவாரு!''
சொன்னவர் எழுந்து டீ குடிக்க கிளம்பி விட்டார்.
கிழமோ அரை மணி நேரமாய் காத்திருந்து வெறித்தார், சுற்றத்தில் நடக்கின்ற விடயங்களை.
இன்ஸ்பெக்ட்டர் கதிர்காமனோ ஒரு வழியாய் வந்து சேர்ந்தான்.
''என்ன விஷுயம்?! கேஸ் கொடுத்தாச்சா?!''
வினவினான் முதியவரிடம்.
''மூணு மாசத்துக்கு முன்னாடியே கொடுத்தாச்சு சார்!''
''என்ன கேஸ்?! உள்ளே வாங்க!''
என்றவனோ அவரோடு அவன் அறைக்குள் நுழைந்தான்.
''யுவா!''
என்ற கதிரின் குரல் அடங்கும் முன், ஓடோடி வந்தான் சப் இன்ஸ்பெக்ட்டர் அவன் கையில் முதியவர் மகளின் கோப்போடு.
''சொல்லுங்க?! என்ன விஷயம்?!''
''சார், என் பொண்ணு மூணு மாசத்துக்கு முன்னாடி காணாமல் போயிட்டான்னு கம்பளைண்ட் பண்ணிருந்தேன்! அப்போ, வேறே இன்ஸ்பெக்ட்டர் இருந்தாரு இங்க! அவர் அப்பவே சொன்னாரு! நான்தான் கேட்கலே!''
விரக்தியில் சொன்னார் பெரியவர் தோளிலிருந்த துண்டை கீழிறக்கியவராய்.
''என்ன சொன்னாரு?!''
என்ற கதிரோ நோட்டமிட்ட ஃபயிலை மூட,
''என் பொண்ணு எவன் கூடையாவது ஓடி போயிருப்பான்னு! நான்தான் இல்லன்னு சொல்லி சண்டையெல்லாம் போட்டேன்!''
''அவர் ஏதோ டென்ஷன்லே சொல்லிருப்பாரு! மறந்துடுங்க அதையெல்லாம்!''
யுகா சமாதானம் செய்தான்.
''இல்லே சார், அவர் சரியாதான் சொல்லிருக்காரு! என் பொண்ணு இஷ்டப்பட்ட பையனோட, ஓடிதான் போயிட்டா! நேத்து முழுகாம இருக்கறவளை பஸ்லே பார்த்தேன்! புருஷன் கூட எங்கையோ போறா!''
பெருமூச்சு கொண்ட கதிரோ,
''நல்லாருக்காளே?! அது போதும்! கொஞ்ச நாள்லே எல்லாம் சரியாகிடும்! நீங்களும் பேரன் பேத்தியோட ஐக்கியமாகிடுவீங்க! சந்தோஷமா கிளம்பி போங்க! எல்லாம் நல்லதா நடக்கும்!''
என்றவனோ இருக்கையிலிருந்து எழ,
''அதான் சார், கொடுத்த கேஸை வாப்பாஸ் வாங்கிக்கலாம்னு வந்தேன்!''
''அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்! நீங்க இப்போ கிளம்பி பத்திரமா வீட்டுக்கு போங்க!''
என்ற யுகாவின் கையில் கதிரோ சற்று முன் அலசிய கோப்பை கொடுக்க, அதிலிருந்து கீழே விழுந்தது படம் ஒன்று.
அதை யுகா எடுக்கும் முன் பெரியவர் எடுத்து அவன் கையில் கொடுக்க,
''சார் நாமே இன்னும் பத்து நிமிஷத்துலே கிளம்பிடலாம்!''
என்றவனோ படத்தை பெரியவரின் கையிலிருந்து வாங்கியவனாய் போனை நோண்டிய கதிரிடத்தில் கூறி, அப்படத்தை மீண்டும் கோப்புக்குள் வைக்க,
''சார், இது என் பொண்ணு ஃபயில்தானே?!''
என்ற பெரியவரோ குறுக்கிட்டார்.
''ஆமா! அட்சராதானே உங்க பொண்ணு?!''
''அட்சராதான் சார்! ஆனா, அந்த படம் என் பொண்ணு படம் இல்லே சார்!''
என்றவரோ குண்டை தூக்கி போட, கதிரின் முகமோ யுகாவின் பக்கம் திரும்பியது.
''என்ன சொல்றீங்க?! நல்லா பார்த்து சொல்லுங்க இந்த படத்தை!''
என்ற யுகாவோ கோப்பை பெரியவர் முன் திறந்து காண்பிக்க,
''எனக்கு தெரியாதா சார் நான் பெத்த பொண்ணே?! இது என் பொண்ணு இல்லே சார்! என் பொண்ணு கருப்பு சார்! இந்த பொண்ணு சிவப்பா பட நடிகை மாதிரி இருக்கு!''
''உங்க பொண்ணு பேர் என்ன?!''
என்ற கதிரின் கேள்விக்கு,
''அட்சரா!''
என்ற பெரியவரின் பதிலில் யுகாவின் முகமோ காண்டாக, அதே கடுப்போடு இன்ஸ்பெக்ட்டரின் அறையிலிருந்து வெளியேறினான் குழப்பத்திற்கான விடை தேடி சப் இன்ஸ்பெக்ட்டர் அவன்.
**********************************
நிகழ்காலம்
டாக்டர் துவரினி இல்லம்
''ரொம்பத்தான் கோபம் வருது போலீஸ்காருக்கு! தெரபி வாங்க சார்!''
நக்கலடித்தாள் டாக்டர் அம்மையார், ஆணவன் முகம் கொள்ளையர்களை பிடிக்கும் பொருட்டு சப் இன்ஸ்பெக்ட்டரிடம் பேசி இறுகியிருக்க.
ஆனால், அன்போ வெறும் முறுவலை மட்டும் அவளுக்கு பதிலாக்கி பழைய சாம்பாரில் மூழ்கினான்.
''நான் வெச்ச கோழி கறியே சாப்பிட சொன்னா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி நேத்து கொடுத்த சாம்பாரே சப்புக்கொட்டி சாப்படறீங்க?! இதெல்லாம் கொஞ்சங்கூட நியாயமே இல்லே தெரியுமா?!''
என்றவளோ ஏமாற்றத்தோடு சோற்றை பிசைய, விருட்டென வதுகையின் கரம் பற்றி, கோழி குழம்பில் ஊறி குவித்திருந்த அவள் சோற்று கையை அவன் வாயுக்குள் நுழைத்து தனக்குத்தானே ஊட்டிக் கொண்ட அன்போ,
''ஹ்ம்ம்! நல்லாதான் இருக்கு!''
என்றுக் கூறி, அசாலட்டான சம்பவம் ஒன்றை நிகழ்த்திய சுவடே கொண்டிடாதவனாய், ஒரு கரண்டி கோழி கறியை எடுத்து அவன் தட்டில் ஊற்றி மீண்டும் உணவில் ஐக்கியமாக, ஆணவன் செயலில் ஒரு கணம் விக்கித்து தவித்த ஏந்திழையோ, சுயம் திரும்பிய மயிர் கூச்சத்தில் தடுமாற்றம் மறைத்து சகஜமாய்,
''போலீஸ்கார், என்னதிது?!''
என்றப்படி நாணம் ஒளித்து வினவினாள்.
''டேஸ்ட் பார்த்தேன்!''
என்றவனோ புருவம் உயர்த்தி முகிழ்நகை கொள்ள,
''உங்க ஊர்லே இப்படித்தான் டேஸ்ட் பார்ப்பாங்களா சார்?!''
''எல்லாரும் இல்லே! நான் மட்டும்!''
என்றவன் பதிலில் அவனோடு சேர்ந்து வெட்கியவளும் சிரித்தாள் அரை முகம் மறைத்து.
யார் நெருங்க யார் நொறுங்க...
Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 19
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 19
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.