- Joined
- Jul 10, 2024
- Messages
- 433
அத்தியாயம் 24
கடந்தகாலம்
செரீஸ் ரிசார்ட்
''சீக்கிரம் கழட்டு! மணியாச்சி பார்டிக்கு!''
என்ற மனைவியின் வார்த்தையில் ஹெல்மட்டை கழட்டி அவளுக்கு உதவிய வேதாவோ,
''பார்ட்டியா?! பங்க்ஷன்னு சொன்னீங்க?!''
''என்னவா இருந்தா உனக்கென்னே?! உன் வேலையே பார்த்துக்கிட்டு கிளம்பு!''
தணியாதே இருந்தது இன்னமும் பத்தினியின் சினம். வேதாவும் தவறு அவன்பால் என்பதால் அமைதியையே கடைப்பிடித்தான்.
சுற்றி முற்றி பார்த்து பேதையோ, அவசரமாய் அடிகளை முன்னோக்கி வைக்க, வேதாவும் பைக்கை வளைத்தான், அங்கிருந்து நகர முனைந்தவனாய்.
போன வேகத்திலேயே மீண்டும் திரும்பி ஓடி வந்தாள் பூமகள் அவள்.
''ஏய்! வெயிட்! வெயிட்! இப்போ வீட்டுக்கு போய் என்ன கிழிக்க போறே?! எப்படியும் வெட்டியாதானே இருப்பே! அதுக்கு போகாமே இங்கையே இரு!''
மரியாதை எல்லாம் முன்னாடி போலவே காணாது போய், ஒருமையில் வந்து நின்றது மேடமின் ஆத்திரம் அடங்காது இருக்க.
''ஒரு மணி நேரத்துலே வந்திடுவீங்களா?! எட்டு மணிக்கு எனக்கொரு ப்ரொஜெக் இருக்கு!''
கடிகாரம் பார்த்து வேதா சொல்ல,
''அதெல்லாம் ஒன்னும் போக வேண்டாம்! கோல் பண்ணி நாளைக்கு வறேன்னு சொல்லிக்கோ! ஒழுங்கா இங்கையே இரு!''
''முடியாதுங்க! கஷ்டம்! நீங்க சீக்கிரம் போயிட்டு வாங்க! நான் வெயிட் பண்றேன்!''
''என்ன நீ கிறுக்கன் மாதிரி பேசிக்கிட்டு இருக்கே?! பார்ட்டியே நமக்காகத்தான்! நான் எப்படி போன ஒரு மணி நேரத்துலையே வர முடியும்?!''
''நமக்குத்தான் பார்ட்டியா?!''
என்றவன் தொடுத்த கேள்வியில், அவசரத்தில் உளறியவளோ நாக்கை கடித்துக் கொண்டவளாய்,
''ஆமா! நமக்குத்தான்! உன்னே கட்டின பாவத்தை கொண்டாடத்தான் இந்த விருந்தே! உனக்கு உடம்பு முடியலன்னு சொல்லிட்டேன்! எவன் கண்ணுலையும் பட்டு தொலைச்சிடாதே! அப்படி ஓரமா போய் நில்லு!''
என்றவளோ நிறுத்தம் கொள்ளா ரயில் போல் பேசி அங்கிருந்து கிளம்ப, வேதாவிற்கோ சாதாரண ஒரு கார் விஷயம் இவ்வளவு பெரிய ரகளையை அவர்களுக்குள் எற்படுத்தியதை நினைத்து, எரிச்சல் வந்தது.
''நான் வர வரைக்கும் இங்கையே இரு! சொல்லிட்டேன்! போகாதே! போயிடாதே! நான் இல்லாமே நீ கிளம்ப கூடாது! எத்தனை மணியா இருந்தாலும் நீ இங்கதான் இருக்கணும்! நான் வந்திடுவேன்! நீ போயிடாதே!''
மீண்டும் ஒரு எச்சரிக்கை விடுத்து அப்பெரிய ஆடம்பர ரிசார்ட்டுக்குள் நுழைந்தாள் தாரகையவள்.
*******************************
கடந்தகாலம்
செரீஸ் ரிசார்ட் விருந்து அறை
அட்சரா அடிவாசல் வரைக்கும் வந்த வேதாவிற்கு சீக்கு என்றுக்கூறி விருந்து வைத்த நண்பர்களுக்கு டிமிக்கி கொடுத்திருந்தாள்.
உண்மையை சொல்லப் போனால், அவனோடு கைக்கோர்த்து வரவே விரும்பினாள் வாஞ்சினியவள்.
ஆனால், ஆணவனின் செயல் ஏகத்துக்கு அவள் உள்ளத்தை காயப்படுத்தியிருக்க, வேண்டா வெறுப்பாகவே நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்திருந்தாள்.
ட்ரிங்க்ஸ் ஒருப்பக்கம் போக, சாக்லட் பீஸ் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்த ஜன்னல் வழி கீழே எட்டிப் பார்த்தாள் பேடையவள்.
வேதாவின் பைக் மட்டுமே தெரிய, ஆளை காணாது நேரிழை அவள் விழிகளை அகல விரிக்க,
''ஹாய்! வேதா! வாங்க! வாங்க! அட்சரா உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னா! இப்போ எப்படி இருக்கு?!''
என்ற கேள்வியோடு ஆணவனை வரவேற்றாள் ஷில்பா.
''இருங்க, உங்களுக்கு ஸ்வீட்ஸ் எடுத்திட்டு வறோம்!''
என்ற கத்ரினாவோ தோழி ஷில்பாவோடு சேர்ந்து அங்கிருந்து நகர, கோபங்கொண்ட அந்திகையோ ஜூஸ் கிளாஸ் ஒன்றோடு குடுகுடுவென ஓடினாள் வேதாவை நோக்கி.
''உன்னே யாரு இங்க வர சொன்னா?! கீழேயே இருன்னு தான்னே சொன்னேன்!''
''ஐயோ! நானா வரலங்க! உங்க பிரெண்டு ரொபர்ட்தான் என்னே பார்த்திட்டு கடடாயப்படுத்தி மேலே கூட்டிக்கிட்டு வந்திட்டாரு! நான் எவ்வளவோ சொன்னேங்க! வரலன்னு!''
நிலையை எடுத்து சொன்னான் வேதா, குதிப்பவளின் வாயை அடைக்க.
''அதான், வந்துட்டியே அப்பறம் என்னே?! அவன் கூப்பிட்டானா! இவரு வந்தாராம்! முடியாது, போடான்னு சொல்ல வேண்டியது தானே!''
''என்னங்க பேசறீங்க?! எப்படிங்க அப்படி சொல்ல முடியும்?!''
''இதெல்லாம் வக்கணையா பேசு! ஆனா, மறைஞ்சு எவன் கண்ணுலையும் படாமே நில்லுன்னா மட்டும் நின்னுடாதே!''
என்றவளோ கத்ரினா மற்றும் ஷில்பா இருவரும் அவர்களை நோக்கி வருவதை கண்டு முகத்தை சிரித்தாற்போல மாற்றிக் கொண்டாள்.
''பிரெண்ட்ஸ்! நம்ப அட்சரா ஹஸ்பண்ட் வேதா வந்திருக்காரு! எல்லாரும் ஒரு ஹாய் சொல்லிடுங்க!''
என்ற ஸ்டிவனோ கிளாஸை ஸ்பூனால் தட்டி கூட்டத்தின் கவனத்தை ஈர்த்தான்.
முக்கால்வாசி பேர் வேதாவின் உடையை பார்த்து கிசுகிசு பேசி சிரித்தனர். எல்லாவற்றையும் கவனித்த சேயிழைக்கோ முகம் இறுகிப்போனது.
ஆனால், வேதாவோ எதையும் கண்டுக்காது மென்புன்னகை கொண்டு ஒரு ஓரமாய் நின்று நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்தான்.
ஆண் பெண் பேதமின்று பாதி பேருக்கு மேல் எல்லார் கையிலும் மது விளையாடியது. சிலர் ஆடினர். பலர் ஆங்காங்கே கூட்டம் கூடி பேசி சிரித்தனர்.
கௌஷிக்கோ முகத்தை தூக்கி வைத்து நின்ற அட்சராவை தனியே அழைத்து போனான் பால்கனி பக்கமாய். அவனுக்கு எப்போதுமே அவள் மீது ஒரு மையல் உண்டு.
பொண்டாட்டியோடு ஓரம் போனவனை வேதா கவனிக்காமல் இல்லை. ஒரு கண் வைத்தே இருந்தான் ரோலக்ஸ் வாட்ச் கொண்ட கௌஷிக்கின் மீது.
பிஸ்னஸ் விஷயம் பேசிட போகிறான் என்றெண்ணி பால்கனிக்கு வந்த இளம்பிடியாளோ நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு,
''ஏன் கௌஷிக், போன வாரம் கொடுத்த டிசைன்ஸ்லே ஏதாவது பிரச்சனையா?!''
என்று வினவ,
''இல்லே! இல்லே! அதெல்லாம் ஒன்னுமில்லே! சொல்றேன், என்ன விஷயம்னு! ரெண்டு நிமிஷம்!''
என்ற போதை கொண்ட இன்ஜினியரோ தள்ளாட்டத்தை சமாளித்து ஒருமுறை திரும்பி பார்த்தான் வேதா என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்று.
அவனோ கௌஷிக் பார்ப்பதை உணர்ந்தவனாய் டக்கென தலை திருப்பிக் கொண்டான், சுற்றத்தை வெறிப்பவன் போல்.
அம்பிகா வீட்டு குளவிலக்கோ போன் கேமராவை ஆன் செய்து நகரத்தின் அழகான இரவை காணொளியாய் பதிவு செய்துக் கொண்டிருந்தாள்.
அப்போதென்று பார்த்து, கௌஷிக்கோ பொற்றொடியின் இடையை பின்னிருந்து கட்டிட,
''I'm married! You idiot! take off your hands, bastard!''
(நான் கல்யாணம் ஆனவடா! முட்டாள்! கையே எடுடா!)
என்று ஆவேசமாய் அலறிய மாதங்கியோ, ஓங்கி விட்டாள் ஓர் அறை செவினி கிழிய கௌஷிக்கின் கன்னத்தில்.
அத்து மீறியவனின் செயலில் கதங்கொண்ட வேதாவோ, விருட்டென எழுந்த வேகத்துக்கு அப்படியே நின்றான், பொஞ்சாதியோ கௌஷிக்கின் கன்னத்தில் பளாரென்று நலுங்கு வைத்த காட்சியில்.
''மூஞ்சி மூகறையெல்லாம் பேத்துடுவேன்! ஜாக்கிரதை! என்ன தைரியம் இருந்தா என் புருஷன் இங்க இருக்கும் போதே நீ என்கிட்ட இப்படி நடந்துப்பே?!''
அடிவாங்கி தடுமாறியவனோ பின்னோக்கி போனவனாய் ஓரளவு சுதாரிக்க,
''ஹேய்! ஐம் சோரி ஓகே! ஐம் சோரி!''
''யாருக்குடா வேணும் உன் சோரி?! செருப்பு பிஞ்சிடும் நாயே! ஒழுங்கா இருந்துக்கோ சொல்லிட்டேன்!''
என்ற பொற்றொடியோ பத்ரகாளியாய் அவனை எச்சரித்து கீழே விழுந்த போனை எடுத்துக் கொண்டு விருந்து வளாகத்துக்குள் நுழைந்தாள்.
அதுவரை நடந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வேதாவோ, பங்கஷன் முடிந்து கௌஷிக்கை தனியாய் கவனித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு எதுவும் அறியாதவன் போல் பாசங்கு கொண்டான்.
யார் நெருங்க யார் நொறுங்க...

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 24
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.