உன் சிகைத் தொட்ட துணியாய்...
மார் படர்ந்த கச்சையாய்..
விழி தீண்டா
நாணம் கண்டு
உச்சி முகர்ந்து..
இதழொத்தி..
மடி சாய்ந்து கண் மூட..
தலை கோதி தூங்க வையடி
என் செல்லமே..
வெட்கங்கொண்ட உன் ஏக்கம்
எனை கிறங்கடிக்குதடி!
என்ன பேச என்ற நீ
இவ்வளவு பேசியதும் எனக்காகத்தானோ!
உந்தன் ஹாய்-யிலிருந்த ஆர்வம்
பின்னடியான வார்த்தைகளில்
குழைய..
கொஞ்சல் வேண்டிய பிஞ்சாய் ஆனாயடியே லது!
என்னவோ ஏதோவென்று
பாசத்தினை பசப்பினாய்
மோகத்தினை மழுப்பினாய்
பிடித்தங்களுக்கு...
இப்போதெல்லாம் என் காலை உன்னோடுதான் விடிகிறது!
இல்லை!
உன் காலோடுதான் விரிகிறது!
நெட்டி முறிக்கும் பவ்வியத்தில்
என் மார் வருடும் உன் விரல்கள்
முறுக்கேற வைக்குதடி!
தெளிந்த நீரோடையாய்
நாளை தொடங்க
நான் நினைக்க
கலங்கிய குட்டையாகவே இருப்போம் வா
என்றழைக்கிறாய் நீ!
என்னசெய்வது உன்...