What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
459
அத்தியாயம் நூற்றி ஒன்பது

அசம்பாவிதங்கள் நினைவுகளாய் மாறியிருந்தாலும் விசா என்னவோ நிம்மதியின்றியே தவித்தாள் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு.

ரீசன் அவன் உயிரை துறந்து இரு உயிரை காப்பாற்றியிருக்க உடலளவில் காரிகையவளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் மனதளவில் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தாள் ப்ரீதனின் குலியவள்.

ரீசனின் இறப்பு காட்சியும் அவனின் கடைசி வார்த்தைகளும் வதனியின் நித்திரையைக் களவாடியிருந்தன.

அனுதினமும் பயம், அழுகை, கவலை, குற்ற உணர்ச்சி என்று அதீத மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாள் விசா. எங்கே வளைகாப்பு வெறுங்காத்தாய் போய் விடுமோ என்று கலக்கம் கொண்டான் ப்ரீதன் தலைமகளின் நிலைகண்டு.

டாக்டர் மினர்வா ஏற்கனவே குஞ்சரி கேஸை பார்த்திருந்ததால் இம்முறை அவருக்கு பழக்கமான மனநல மருத்துவர் ரீனாவிடம் அனுப்பி வைத்தார் விசா ப்ரீதன் தம்பதிகளை கவுன்சிலிங்கிற்காக.

வாரத்தில் ஒரு நாள் டாக்டர் சந்திப்பு கூடவே கர்ப்பிணிக்கு முழு பெட்ரெஸ்ட் என்று விசாவை எங்கும் நகர விடாது வீட்டிலேயே அமர்த்தி கண்ணில் வைத்து பார்த்துக் கொண்டான் ப்ரீதன்.

மனதளவில் நொறுங்கிக் கிடந்தவளுக்கு ப்ரீதன் கணவன் என்ற உறவை தாண்டி எப்போதுமே நல்லதொரு நண்பனாய் ஆறுதல் சொல்லி அரவணைத்துக் கொண்டான்.

வழக்கு விசாரணையில் இருக்க வெளியூர் போக முடியாத போதிலும் ஜோடிகள் இருவரும் உள்ளூரை நன்றாகவே சுற்றி பார்த்தனர். விசாவும் கொஞ்சங்கொஞ்சமாய் ப்ரீதனின் அன்பிலும் கவனிப்பிலும் நடந்தவைகளை மறந்திட ஆரம்பித்திருந்தாள்.

இருந்த போதும், அது ஏனோ திடிரென்று இன்றைக்கு வேலை விடயமாய் வெளியில் போன ப்ரீதன் நெடு நேரமாகியும் திரும்பாத போது அவளை அறியாதொரு பதைப்பை அவளுக்குள் உணர்ந்தாள் உல்லியவள்.

நேற்றுவரை இல்லாத பயம் இன்றைக்கு அவளைத் தடுமாறிட வைத்தது. முதல் முறை தாலி செயினை கையால் இறுக்கினாள் ஊடையவள் தன்னிச்சையாக குஞ்சரியின் அழுகுரல் காதிலும் செயல் கண்ணிலும் நிழலாட.

பதற்றத்தில் கண்ணீர் பொலபொலக்க ப்ரீதன் வந்திடுவான் என்று தெரிந்தாலுமே உள்ளம் பதறி போய் மெத்தையில் சாய்ந்தாள் சீமாட்டியவள். சிந்தையோ சிதறிப் போய் மிழிகளின் முன் கண்டதையும் ஓட விட்டு வாஞ்சினியை பலதையும் யோசிக்க வைத்தது.

குழப்பத்தோடு குழப்பமாய் ஒப்பாரி வைத்தவள் எண்ணம் கலைய வந்தவனோ பேச்சு வார்த்தைகள் நிகழ்த்தி காதல் மனைவி விசாவின் வாயாலேயே அவன் மீது அவள் கொண்ட அளவில்லா காதலின் அதீதத்தை தெரிந்து கொண்டான்.

இதுநாள் வரை சிறியதோர் அச்சம் உள்ளூர ஓரமாய் இருந்தவள், இன்றைக்கு போனால் விட்டிடுவேனா என்று உரிமை கொண்டு அவனிதழில் அவளிதழ் கோர்க்க, ப்ரீதனோ கட்டுக்கடங்கா நேசம் கொண்ட காதல் சுந்தரியவளை அவனதாக்கிக் கொண்டான்.

என்றைக்கும் இல்லா முகிரம் இன்றைக்கு தம்பதிகள் இருவரையும் சிதறடிக்க, தாராளமாய் தந்தவளும் சலிக்காமல் தின்றவனும் சல்லாபம் செரிக்க பஞ்சணையில் ஒருவர் மீது ஒருவர் எல்லாம் துறந்து கிடந்தனர்.

அலைபேசியின் வெளிச்சத்தில் ப்ரீதனின் விரல்கள் மானாகவும் மூக்கு சளியின் விரல்கள் மீனாகவும் உருமாறி ஒன்றோடு ஒன்று முட்டி மோதி இருவரும் சிரிக்க,

“டேய்... நான் ஒன்னு சொல்லவா...”

என்று விசாவே முதலில் ஆரம்பித்தாள் பேச்சை.

“ஒன்னு என்ன ஓராயிரம் சொல்லு... ஆனா எதுவுமே என் காதுல ஏறாது...”

என்ற ப்ரீதனோ மனையாளின் மேனியை சில்மிஷமாய் பார்த்து கண்ணடிக்க,

“பல்லு போற வயசுல பக்கோடா சாப்பிட ஆசைப்படாதீங்க கிழவா!”

என்றவளோ போர்வைக்குள் சுருட்டிக் கொள்ள,

“ஓஹ் நான் கிழவனா? இரு கிழவன் என்ன பண்றன்னு பாரு?”

என்றவனோ பொஞ்சாதியின் இடையை இதழ்களால் பல் படாது கவ்வி கிச்சிலி மூட்டி அவளை திணறத் திணற சிரிக்க வைத்தான் விசா மண்புழுவாய் நெளிந்து துடிக்க.

“ஐயோ! குமரா! என் அழகா! நீ கிழவன்லாம் இல்ல! போதுமா! விட்றா டேய்! பாப்பா வெளிய வந்திடும் போல நீ பண்ற அழிச்சாட்டியத்துல!”

என்றவளோ மூச்சு வாங்க சொல்ல,

“அது! அந்த பயம்! கிழவான்னு சொல்லுவ இனி!”

என்றவனோ முன்னேறி துணைவியின் உச்சியில் இதழ் பதிக்க,

“ப்ரீதன்...”

“ஹ்ம்ம்...”

“ரீசன் குடும்பத்துக்கு ஏதாவது செய்யணும்டா... குஞ்சரிக்காக இல்லாட்டியும் கீத்துக்காகவாவது எதாவது செஞ்சே ஆகணும்...”

“கண்டிப்பா... ஆனா... அத அப்பறம் பார்ப்போம்... இப்போ நம்ப வேலைய பார்ப்போமா?”

“டேய்! இப்போதானடா...?”

என்ற வதுகையின் அதரங்களை பட்டென கவ்விக் கொண்டவனோ மென்மையாய் படர்ந்திட ஆரம்பித்தான் கொடி அவள் உடலில்.

ரீசன் போனதே போனான் விசாவிற்கு காதலித்து கரம் பிடித்த கணவன் ப்ரீதனின் மீதுள்ள காதலை மொத்தமாய் புரிய வைத்து விட்டான்.

பிறக்கும் போதே யாரும் தீயவர்களாக பிறப்பதில்லை. அதுவும் வளரும் குழந்தையின் குணமோ தாயின் வளர்ப்பையே மையப்படுத்தியிருக்கும் என்ற புராணமெல்லாம் இன்றைய காலகட்டத்திற்கு செட்டாகாத விடயமே.

எவ்வளவுதான் பொத்தி பார்த்து பாலூட்டி சீராட்டினாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும். இன்றைய தலைமுறையினரை சுற்றுசூழலும் சுற்றத்தார்களும்தான் வளர்த்து விடுகின்றனர்.

சந்தர்ப்பமும் சூழ்நிலையுமே ரீசனை மற்றவர்கள் பார்வையில் தப்பானவனாக காண்பிக்க அவனின் மரணம் ப்ரீதனை சிந்திக்க வைத்தது.

செத்தவனின் சாவு குஞ்சரி புருஷன் மீது ப்ரீதன் கொண்ட தவறான கணிப்பை ஒத்தி வைத்து அவனிடத்திலிருந்து யோசிக்க வைத்தது. காதல் வலியது என்று புரிய வைத்தது. கட்டியவளை கடைசி வரைக்கும் கைவிடாதவனின் அன்பு மெய் சிலிர்க்க வைத்தது.

அதுவே அன்றைக்கு ப்ரீதன் கொள்ளி போடவும் காரணமானது. கூடவே, குட்டி தினாவின் கையை கீரன் பற்றிட பக்கென்றது பெறாது போன அப்பனானாலும் பெற்றவனுக்காய் மகனவன் சடங்கு சம்பிரதாயத்தில் உழன்றிடப் போகும் நிதர்சனத்தை ஜீரணிக்க முடியாது.

சிறு பிஞ்சின் மனசில் இச்சம்பவத்தைப் பதிய வைக்க ப்ரீதனுக்கு விருப்பமில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பேபி சீட்டருக்கு தெரியாதா எது குழந்தையின் மூளையில் படியும் படியாதென்று.

ஆகவே, குட்டி தினாவின் இப்போதைய தகப்பனாய் மகனுக்கு பதில் ப்ரீதன் பொறுப்பை கையிலெடுத்தான். இரு உயிர்களை காப்பாற்றி ஓருயிரை விட்ட ரீசனுக்கு நன்றி சொல்லத்தான் இயலாது.

ஆனால், அவன் செயலுக்கான மரியாதையைத் தந்திடவாவது ப்ரீதனுக்கோர் வாய்ப்பு கிடைக்க அதையேன் நழுவ விடுவானேன் என்று கெட்டியாய் பிடித்துக் கொண்டான்.

ஆகவே, ஊரான் பிள்ளைகளை ஊட்டி வளர்க்கும் ப்ரீதன் அவன் உயிரான விசாவையும் அவளுக்குள் வாழும் அவனின் உதிரத்தையும் காப்பாற்றிய ரீசனுக்கு உறவுகளைத் தாண்டிய மனிதாபிமானம் மற்றும் நன்றியுணர்ச்சி கொண்டு இறுதி சடங்கில் கடமையாற்றினான்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 109
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top