What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
459
அத்தியாயம் நூற்றி ஏழு

நீளும் இரவு குஞ்சரிக்கு ஏக்கத்தை அதிகப்படுத்தியது. ரீசனின் நெஞ்சுக்குள் துஞ்சி கண்கள் மூடி துயில் கொள்ள மனம் கிடந்து தவித்தது.

ரீசனை கல்லூரியில் ஜூனியராய் கண்ட நாள் தொடங்கி அவனை துரத்தி விரட்டி காதலித்த நாட்கள் எல்லாம் அம்பகங்களில் வலம் வர வஞ்சியின் வேதனையோடு கூடிய அழுகை அந்திகையை மேலும் வாட்டியது.

கண்களை முழுதாய் மூடிக்கொண்ட குஞ்சரியின் கால்களில் ஈரத்திரவம் வழிந்திறங்கி தரையில் படர்ந்தது.

“டையப்பர் நிறைஞ்சிருச்சு ரீசன்... யூரின் வெளியாகி சேர்லாம் ஈரமா இருக்கு... வாடா... வந்து மாத்தி விடு... வா... வா... ரீசன்!”

என்றவளின் அழுகையோ மென்று முழுங்கியது வதனியின் குரலை.

“ஏன்டா போன நீ? ஏன் போன? ஏன் உன் குஞ்சரிய விட்டுப் போன? ஏன் போன? நான் எப்படி தனியா இருப்பேன்? யாரு என்ன பார்த்துப்பா? யாரு எனக்கு சோறு ஊட்டுவா? யாரு எனக்கு தலைசீவி விடுவா? யாரு?”

என்றவளோ சுற்றி முற்றி பொருள் தேடி இறுதியாய் விரலிலிருந்த மோதிரத்தைத் தூக்கி விசிறியடித்தாள் ரீசனின் படத்தை நோக்கி.

“யூ செல்ஃபிஷ் இடியட்! நீ மட்டும் போயிட்டல்ல என்ன தனியா விட்டுட்டு! ஏன் போன? ஏன் போன நீ? ஏன் என்ன கூட்டிக்கிட்டு போகல நீ? ஏன்?”

என்றவளோ தலையை பிடித்துக் கொண்டு கதற ஏற்கனவே அழுது வீங்கியிருந்த விறலியவள் முகமோ மேலும் பொதபொதத்தது.

“பொறுப்பிருக்கா உனக்கு? முட்டாள்! அறிவிருக்கா? பாரு! உன் குஞ்சரிய பாரு! நல்லா பாரு! நான் குளிச்சு ரெண்டு நாளாச்சு! உங்கம்மா வந்தாங்க... அமரா வந்தா... ஏன் லல்லி கூட வந்தா... நான் விடலையே! யாரையும் விடலையே! என் ரீசன தவிர வேற யாரும் என்னத் தொட முடியாது!”

அலறினாள் குஞ்சரி விடியற்காலை மூன்றுக்கு.

“டையப்பர் மாத்த இனி அலாரம் வைக்கணும் மறதியா இருக்குன்னு உங்கம்மா சொல்றாங்கடா! தேவையா இதெல்லாம் எனக்கு? சொல்லு தேவையா? நீ இருந்திருந்தா இவங்களுக்கெல்லாம் நான் பாரமா இருந்திருப்பேனா?”

என்றவளோ தலையில் அடித்துக் கொண்டு கதறினாள்.

“டேய் வீணா போன ஜூனியர்! பண்ணாடப் பயலே! நீயெல்லாம் சாவலன்னு யார் அழுதா? இப்ப மேலே போய் என்ன புடுங்கற நீ? அதுக்கு கீழ என்கூடவே இருந்திருக்கலாம்ல!”

கோபம் வந்தது குஞ்சரிக்கு இம்முறை ஆவேசம் கொண்டு கத்தினாள்.

“முடியலடா என்னால! முடியல! நானும் உன்கூடவே வந்துடறேன்டா ரீசன்! என்னையும் உன்கூட கூட்டிக்கிட்டு போ! நான் வரேன்! வந்துடறேன்!”

என்றவளோ வீல் சேர் பொத்தானை அழுத்த அதுவோ பேட்டரியின்றி மூடுவிழா கொண்டது.

“பார்த்தியா இதுகூட நீயில்லாம செத்து போச்சு!”

என்றவளோ வீல் சேரிலிருந்து தரையில் விழுந்தாள் பொத்தென்று அவளின் சிறுநீர் மீதே. தெறித்த சிறுநீர் வாடை பெண்டு அவளை நிறுத்தவும் இல்லை நனைந்த ஆடைகளைத் துடைக்கவும் வைக்கவில்லை.

பாம்பாய் ஊர்ந்து போனாள் குஞ்சரி ரீசனின் படம் இருக்கும் கேபினட்டை நோக்கி.

“நான் வறேன் ஜூனியர்! நான் வறேன்! குஞ்சரிக்கு ரீசன் இல்லாம ஒன்னுமே இல்லடா! நான் வறேன்!”

என்றவளோ குழந்தையாய் கைகளில் எட்டு வைத்து முன்னோக்கி கேபினட்டிடை பற்றி பிடித்து எழுந்தாள்.

மெது மெதுவாய் நத்தையைப் போல் முன்னேறி உதடுகளை மடக்கி பலத்தைத் தேத்தி பிடியை விடாது அடைந்தாள் இறுதியில் கேபினட்டின் மேற்பரப்பை.

“ரொம்ப கஷ்டமா இருக்குடா ரீசன்! புரிஞ்சிக்கோடா!”

என்றவளோ அவன் முகத்தை எட்டி தொட்டு அழ,

“மம்மி...”

என்ற குரல் குஞ்சரியை திரும்பி பார்க்க வைத்தது.

குட்டியவள் நைட்டியோடு கையில் டேடியின் பெரிய உருண்டை தலையணையை கட்டியபடி வந்தாள் அவளின் மம்மி குஞ்சரியை நோக்கி.

“ கீத்து நோ! நோ கீத்து! நோ வராதே! வராதே!”

என்றவளோ ஒருகையை நீட்டி மகளைத் தடுக்க ஒத்துழைக்கா உடலோ சரிந்தது தரையில்.

“மம்மி!”

என்றலறிய கீத்துவோ தரையில் படர்ந்திருந்த குஞ்சரியின் சிறுநீரையெல்லாம் மிதித்தாற்படி ஒடோடி வந்தாள் தாயவளை நோக்கி.

“மம்மி ஆர் யூ ஓகே ரைட்! மம்மி! மம்மி!”

என்ற மழலையோ பெத்தவள் மேலெழும்ப உதவி வினவினாள்.

தலையை மட்டும் ஆட்டிய குஞ்சரியோ கண்ணீர் பொலபொலக்க மகள் கீத்துவின் முகத்தை பார்த்தாள்.

“பிளீஸ் மம்மி... டோண்ட் டூ திஸ் டூ மீ (don't do this to me)! பிளீஸ்!”

என்ற மகளோ அம்மாவின் சிவந்து வீங்கிய கண்ணீர் முகத்தை கைகளால் துடைத்து விட்டாள் கவலையான தொனியில் வேண்டுதலை வைத்து.

குஞ்சரியோ பிஞ்சவளின் உள்ளங்கையை இறுக்கிப் பற்றி தலைகுனிந்து கதறல் கொண்டாள்.

“டேடி உன்னை ஒரு தடவ கூட விடவேயில்லையே மம்மி... நீ மட்டும் ஏன் டேடிய விட்ட...?”

ஒன்பது வயது சிறுமியின் கேள்வியில் முன்னிருந்தவளை ஏறெடுத்த குஞ்சரியின் முகமோ பேயறைந்தாற்போல மகளையே வெறித்தது.

“நான் சொல்லவா...? நீ விடல மம்மி டேடிதான் உன் கைய விட்டுட்டாங்க... டேடி டோல்ட் மீ ஒன்ஸ் (daddy told me once)... எப்போ டேடிக்கு நீங்க என்ன நல்லா பார்த்துப்பீங்கன்னு தோணுதோ அப்போ டேடி என்ன உங்கக்கிட்ட சேஃபா (safe) விட்டுட்டு பீஸ்ஃபுல்லா (peaceful) போயிடுவார்னு சொன்னாரு...”

கீத்துவின் வார்த்தைகளைக் கேட்ட குஞ்சரியோ மகளின் மடியில் முகம் புதைத்துக் கதறினாள்.

“You know mummy even though daddy is gone... but he still in me because I came from him and I'm his little princess Keerthiga Dheenareesaan...”
(உங்களுக்கு தெரியுமா மம்மி... டேடி இப்போ இல்லாம போயிட்டாலும் அவர் எப்போதுமே எனக்குள்ளதான் இருக்காரு. காரணம் நான் அவர்லருந்துதானே வந்தேன்... நான் டேடியோட லிட்டில் பிரின்சஸ் கீர்த்திகா தீனரீசன் தெரியுமா...)

என்றவளோ மடியில் துஞ்சிக் கிடக்கும் குஞ்சரியின் தலையை வருடி தொடர்ந்தாள்.

“so mummy better you care for me well because you're Reesan was in me...”
(மம்மி நீங்க என்ன நல்லபடியா பார்த்துக்கணும் ஏன்னா உங்க ரீசன் எனக்குள்ளதான் இருக்காரு...)

என்றவளோ வாய் பொத்தி சின்னதாய் சிரித்துக் கொண்டாள்.

“and please don't make me upset again mummy...”
(அப்பறம் என்ன கவலைப்படுத்தற மாதிரி மறுபடியும் எதுவும் பண்ணாதீங்க மம்மி...)

என்றவளின் முகத்தை ஏறெடுத்தாள் குஞ்சரி.

“கொஞ்சம் சிரிங்க சீனியர்...”

என்றவளோ அம்மா குஞ்சரியின் கன்னங்களை மெதுவாய் பிடித்தாட்டினாள் விரல்களால்.

தேவகுஞ்சரியோ மகளின் உருவில் கண்டாள் குஞ்சரியின் ரீசனை.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 107
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top