What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

konjamai saral

  1. Admin 1

    டிங்

    தனிமை யென உணரும்போதே “டிங்”கென வாட்ஸ்அப் நோட்டிபிகேஷனில் வந்துவிடுகிறாய் நீ..
  2. Admin 1

    காதலிப்போம்

    நீ இதற்கு முன் காதலித்திருக்கிறாயா என்பதிலெல்லாம் நாட்டமில்லை எனக்கு.. இருந்தாலும் அழித்துவிடு.. நாம் முதலிருந்து காதலிப்போம்..
  3. Admin 1

    ஞாபகப்படுத்துகிறது

    உன் கண்கள் உன் குரல் என்னை யாருக்கோ ஞாபகப்படுத்துகிறது
  4. Admin 1

    சாபம்

    அவள் ஒளியை அவள் பிரகாசத்தை அவள் பெண்ணம்சத்தை மரியாதை செய்யும் ஆண்மனத்தினைக் காட்டிலும் எவன் வாள்கொண்டு கீறுவானோ எவன் பிரியத்தின் குருதியைப் பருகுவானோ அவனிடமே அன்புக்கு இரந்து நிற்பதுவே காலங்களாய் பெண் கொண்ட சாபம்
  5. Admin 1

    கைக்கொள்ளா பிழை

    நீ என் கைக்கொள்ளா பிழை..
  6. Admin 1

    உன்னிடம் கேட்பேன்

    உன்னை உன்னிடம் கேட்பேன் ஏழு முறையல்ல எழுபது முறையல்ல எல்லா முறையிலும் உன்னை உன்னிடம் கேட்பேன் மண்டியிடுவேன் மன்றாடுவேன் துளி நீரும் பருகாமல் மறுகியுலர்வேன் மரிக்கும் கணத்திலும் உன்னை உன்னிடம் கேட்பேன் கடவுளிடம் கூட அல்ல…
  7. Admin 1

    பெயரிடு கண்மணி

    உன்னோடு நேரம் போக்க உன் அண்மையில் இருக்க உன் தோளுரச உன் பாதம் பற்ற உன் விரிந்த நெற்றியில் அன்பின் முத்தம் பகிர உன்னுடல் வெப்பம் உணர உன் பெண்மையின் நடுக்கம் காண நீ பூசிக்கொள்ளும் வெட்கம் தொட உன்னோடு சேர்ந்து நிலா பார்க்க மழையில் நனைய பயணம் செல்ல இலக்கற்ற பாதையில் முடிவே இன்றி நடந்து...
  8. Admin 1

    நீ போதும்

    நிறைய காதல்களும் நிறைய காமங்களும் எளிதில் எட்டும் நிலைதனில் எனக்கு உன்னை மட்டும்தான் பிடித்திருக்கிறது என்பதற்கு நான் அத்தனை யோக்கியன் என்றர்த்தமல்ல எனக்கும் என் மீத வாழ்விற்கும் நீ போதும் என்றர்த்தம்!
  9. Admin 1

    கேளாய் தேவி

    கேளாய் தேவி நின் தேகம் தொடத் திறந்துகொள்ளத் தயார்நிலையில் தாழ் விலக்கப்பட்டு நான் அறிந்துகொள்ளவே காத்திருக்கும் என்ப்ரிய மர்மம்!
  10. Admin 1

    மன்னிப்பு

    பிழையுணர்ந்து மன்னிப்பு கேட்க நாடி வரும் உன்னை தவிர்த்தபடி புரிந்துகொள்ளாததாக நடிப்பதின் வழி ப்ரியங்களை நிராகரிப்பதின் ப்ரியங்களை வலிசெய்வதின் போதையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் மன்னித்து விடு அன்பின் மனக்குரூரங்கள் அளப்பரியது கண்மணி!
Top