What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஏழு

ஆந்த்ராக்ஸ் கொண்ட ஒவ்வொரு கிளாஸையும் உற்று நோக்கினான் ரீசன். அதிலிருந்த மது என்னவோ ஆணவனின் கண்களுக்கு அன்றைய நாளில் கரைந்தோடிய குஞ்சரியின் கண்மையாகவே தோன்றியது.

மூளைக்குள் அப்போதே அவர்களின் கழுத்தை நெரித்து கொல்லத் தோன்றியது ரீசனுக்கு. இருந்தும், பொறுமை கொண்டான் வளர்ந்தவன் கொஞ்சமேனும் அவர்கள் குஞ்சரியை போல் துன்பத்தை அனுபவிக்கட்டுமே என்று.

அலைபாய்ந்து மனதை அடக்கியவன் மது கிளாசுகளை ஒரு ஓரத்தில் வைத்து அவ்வறையின் மூலைகளிலிருந்த இரு ஏர் ஃப்ரெஷனர் டிஸ்பென்சர்களை நின்ற வாக்கிலே கையுயர்த்தி கழட்டி எடுத்தான்.

அவைகளை பொறுமையாய் பிரித்தெடுத்தவன் அதிலிருந்த வாசனை திரவியத்தில் கலந்தான் மீதமிருந்த இலவங்கப்பட்டை வர்ணங் கொண்ட ஆந்த்ராக்ஸ் வித்துகளை.

நோய்க்கொல்லியது கோகோ நிறத்திலும் சில சமயங்களில் காணப்படும். நிலைத்தன்மையிலும் கூட கோகோ மற்றும் லவங்கையையே ஒத்தியிருக்கும்.

கடமையை முடித்தவன் அங்கிருந்த பஞ்சணையை காண்கையில் குஞ்சரியின் கெஞ்சலும் கதறலும் ஓலமாய் ஒலித்தது கணவனவன் காதுகளுக்குள். வன்ம மூச்சை வெளிக்கொணர்ந்த ரீசன் வஞ்சக புன்னகையோடு அறையிலிருந்து வெளியேறினான்.

அந்நான்கு கயவர்களையும் வி.வி.ஐ.பி. மசாஜ் அறைக்கு கூட்டிப்போக சொல்லி வரவேற்பாளர் பெண் மூலம் தகவல் கொடுத்து அவர்களை மொத்தமாய் சிறப்பு அறைக்கு இடம் மாற்றினான் ரீசன்.

காரணமாய் ஓனருக்கு லக்கி ட்ராவில் பரிசு ஆகவே வி.ஐ.பி. கஸ்ட்டமர்ஸுக்கு எக்ஸ்ட்ரா கவனிப்பு என்று சொல்லிட சொன்னான்.

மசாஜ் தெரபிஸ்ட்டுகள் மாஸ்க் அணிந்திருப்பதால் விஷ வித்துகள் அவர்களை ஒன்றும் செய்திடாது என்பதை அவன் அறிவான்.

எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் முக மாஸ்க்கை கழட்டிடவும் மாட்டார்கள் என்பதையும் ரீசன் நன்கறிவான். காரணம் அவர்களுக்கு தெரியும் அவர்களின் ஒவ்வொரு மூமெண்ட்டும் கேமராவில் பதிவு செய்யப்படுமென்று.

ஆகவே, ஸ்பா தெரபிஸ்ட் ரொம்பவே ஜாக்கரதையாக இருப்பர் அவர்களின் பணியை மேற்கொள்கையில். அதேவேளையில், செண்டரில் தேவையில்லா விடயங்கள் நடக்காமல் இருப்பதை தடுத்திடவும் கேமரா பதிவே உறுதுணையாகும்.

எல்லாவற்றையும் ஆக்சஸ் செய்யும் பர்மிஷன் கொண்ட ரீசன் கேமரா பதிவுகளை அவனின் அலைபேசி வழி பாஸ்வேர்ட் கோட் ஒன்றின் மூலம் லோக் செய்து என்கிரிப்டட் (encrypted) முறையில் அஜய்க்கு அனுப்பி வைத்து அதை நிரந்தரமாக அழித்திட சொன்னான்.

அஜய் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால், ரீசன் சொன்னப்படி ரகசிய கோப்பதை அளித்து விட்டான் நேர்மையாகவே அதை திறந்து பார்த்திடாமலே. அவன் நினைத்திருந்தால் அக்காரியத்தை செய்வதொன்றும் கஷ்டமில்லை இருந்தும் தோன்றவில்லை அவ்வளவே.

வந்த வேலை முடிய மசாஜ் செண்டரிலிருந்து வெளியேறி அவனின் குஞ்சரியை நாடிச் சென்றான் தீனரீசனவன்.

அவனுக்கு தெரியும் ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரானது ஒரு மிகப்பெரிய உயிரியல் போரையே ஏற்படுத்தக்கூடிய வல்லமை பெற்றதென்று. அதுவும் வித்து வடிவத்தில் உபயோகிக்கப்படும் ஆந்த்ராக்ஸ்தான் பேராபத்தென்பதையும் நன்கறிவான் ரீசன்.

ஆராய்ச்சியாளர்கள் அன்றைய காலக்கட்டத்திலேயே ஆந்த்ராக்ஸ்சை 1914 ஆம் ஆண்டு முதல் பயோவார்ஃபேர் மற்றும் உயிரியல் பயங்கரவாதங்களில் பயன்படுத்தப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பால்கனியில் நிலவு பார்க்க ரீசனின் கையில் தவழ்ந்து கிடந்த குஞ்சரியோ,

''டேய் ஜூனியர்.. வாடா உள்ளே போகலாம்.. நாளைக்கு ரெயின்போ பார்க்க இன்னைக்கு ட்ரையல் பார்க்க வேண்டாவா..''

என்றாள் நாணி சிவந்து நயனங்கள் மூடி ரீசனின் கன்னங்களில் முகம் உரச கிறக்கமாய்,

''சீனியர்.. நான் ஒரு நல்ல ஹஸ்பண்டான்னு எனக்கு தெரியலே.. ஒழுக்கமான ஆம்பளையன்னா அதுக்கும் என்கிட்ட பதிலில்லே.. ஆனா.. கீத்துக்கு எப்போதுமே தப்பான ஒரு அப்பாவா இருக்க மாட்டேன்.. அது மட்டும் எனக்கு தெரியும்.. நம்ப பொண்ணே தவறான பாதைக்கு லீட் பண்ணவும் மாட்டேன்..''

என்றவனோ முகிழ்நகை கொண்டு காதலோடு நோக்கினான் குஞ்சரியை.

''ஜூனியர்.. நீ நல்ல புருஷன் மட்டும் இல்லடா.. பெஸ்ட் டேடி.. கீத்துக்கு மட்டுமில்லே.. எனக்குமே.. நீ என்கூட இருக்கற வரைக்கும் எனக்குமே எங்கப்பா இல்லங்கறே கவலையே வராது..''

என்றவளோ மேலும் இறுக்கமாய் அவன் கழுத்து வளைவினை இறுக்கிக் கொண்டாள்.

''நான் ஒரு சாதாரண மனுஷன் சீனியர்.. எனக்கு வேண்டியதெல்லாம் என் குடும்பம் நல்லாருக்கணும்.. என் குடும்பம்.. சந்தோஷமா நிம்மதியா எந்த ஒரு தொந்தரவும் இல்லாமே இருக்க நான் எதுவும் செய்வேன்.. பொண்ணு வெச்சிருக்கறே ஒவ்வொரு அப்பாவும் கோமன் மென்தான்..''

என்றவனோ குஞ்சரியின் நெற்றியில் முத்தம் பதித்தான்.

ரீசனின் குஞ்சரியை கதற கதற ஈவிரக்கமின்றி துகிலுரித்து தும்சமாக்கிய நால்வரும் வி.வி.ஐ.பி. மசாஜ் அறையில் அவர்களுக்கான மதுவை பருகி டிஸ்பென்சர் துப்பிய ஆந்த்ராக்ஸ் கலந்த வாசனையை நுகர்ந்து சாவை கொஞ்சங் கொஞ்சமாய் நெருங்கிட ஆரம்பித்தனர்.

''When karma lands it lands hard! very very hard!''
(கர்மா உங்களை நெருங்கிடும் பொழுது அடி ரொம்பவே பலமாய் இருக்கும்!)

என்ற நீர் குமிழிகளில் கொண்ட கேபினெட் வாசகமோ மொத்தமாய் கரைந்து ஊற்றியது தரையில்.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்...
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 137
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top